மாயலோகம்

மாயம் :1

கி.மு 7 ஆம் நூற்றாண்டு...

தென் தமிழகம்...

மாமன்னர் கார்வேந்தரின் ஆளுகைக்கு உட்பட்ட மாயபுரி. சுற்றிலும் 7 மலைகள் சூழ நடுவில் ஓரு சிறிய மலையில் அமைந்திருந்தது.
மாயபுரி பெயருக்கு ஏற்ற ஊர் தான் அது, மன்னரது விஞ்ஞான யோசனைகள் செயல் வடிவம் பெறும் இடம்.ஒரு சிறிய கூம்பு ஒன்றை தீ மூட்டி மேல்
நோக்கி செலுத்திக்கொண்டு இருந்தனர் ஒரு பிரிவினர்.இன்னொரு புறம் மனிதனைப்போன்ற அமைப்பினை இரும்பினால் செய்யப்பட்டு அதற்குள் சுருள்
கம்பிகளை ஒரு குறிப்பிட்ட குறுகிய இடத்தினுள் அடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
ஒரு நீண்ட மூங்கிலின் உள் பகுதிகளை நீக்கும் முயற்சியில் 15 பேர் ஈடுபட்டிருந்தனர், இதிலிருந்தே அந்த மூங்கிலின் உயரம் அறியலாம். ஒரு
அறையில் முண்டாசு கட்டிக்கொண்டு ஒரு மனிதர் ஏதோ காய்ச்சி ஊற்றிக்கொண்டிருந்தார் , அருகில் சென்று பார்த்தால் அவர் தான் கார்வேந்தன்.
மன்னர் ஆடி(லென்ஸ்) உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்பொழுது மன்னரின் மதிபோல செயல் படும் மந்திரி அறிவழகன்
மன்னரிடம் சென்று ,

"மன்னா ! நீண்ட மூங்கில் குழல் தயாராகிவிட்டது" என்று கூறினார்.

"நல்லது மந்திரி நானும் உருப்பெருக்கும் ஆடியினை உருவாக்கி விட்டேன் அதன் சூத்திரத்தினை எழுதிவிட்டு வருகிறென்"
என்று மன்னர் பதிலளித்தார்.

சுற்றி உள்ள ஏழு மலைகளிளும் உயரமான கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருந்தன, அவற்றின் ஒவ்வொன்றின் உச்சியிலும் ஓர் ஆடி பொருத்தப்பட்டு
இருந்தது. அந்த ஆடி சுழலும் வகையில் செய்யப்பட்டு இருந்தது, அதனுடன் ஒரு கப்பி மற்றும் அந்த கப்பியுடன் கயிறும் பொருத்தப்பட்டு இரூந்தது.
அனைத்து கயிறுகளும் மாயபுரியில் உள்ள ஓர் இடத்தில் இனைக்கப்பட்டு இருந்தன. நீண்ட மூங்கிலின் இரண்டு முனைகளிலும் இரு வகையான ஆடிகள்
பொருத்தப்பட்டன. இந்த முறைகளை செய்வதற்கே அவர்களுக்கு ஒரு வருடம் பிடித்தது.

மன்னரின் மெய்க்காப்பளான் மந்திரியிடம் கேட்டான்," எதற்கு அய்யா இவ்வளவு பெரிய ஏற்பாடு".

மந்திரி," மன்னருக்கு வெகுநாட்களாக வானத்தினை பற்றிய ஆய்வில் ஈடுபட ஆவல் , அதற்கு ஏற்ப அவரது கனவில் வித்தியாசமான உருவங்கள்
தோன்றி வித்தியாசமான செயல்களை செய்துள்ளன, அவை ஏதோ ஒரு மாய உலகில் வாழ்வது போல தோன்றியுள்ளன எனவே இந்த ஆய்வில்
ஈடுபட்டுள்ளார்" என்றார்.

இரவு பாதி சாமம் முடிந்ததும் மன்னர் மந்திரியை மட்டும் அழைத்துக்கொண்டு அந்த மூங்கில் தொலைநோக்கி பொருத்தப்பட்ட இடத்திற்கு விரைந்தார்.
ஏழு கயிறுகளின் முனைகளை மந்திரியிடம் கொடுத்துவிட்டு மன்னர் தொலைநோக்கியால் ஒவ்வொரு கோபுரமாக நோக்கினார். ஒரு சுற்றி முடிவில் என்னற்ற
அதிசயங்களை கண்டார், ஆனால் அவர் விரும்பிய வித்தியாசமான மனிதர்களை கான இயலவில்லை. மன்னர் இப்பொழுது மந்திரியிடம் வடக்கு
பக்கம் உள்ள கயிற்றினை வலது புறமாக சுழற்ற சொன்னார், அப்பொழுது அவர் கண்ட காட்சி அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதே நேரத்தில்
அவருக்கு பயத்தையும் ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும். அறிவழகனை அழைத்து அதே காட்சியினை பார்க்க சொன்னார், அவரும் பார்த்துவிட்டு
செய்வது அறியாது திகைத்து நின்றார்.அங்கே அவர்கள் கண்ட மனிதர்கள் கூம்பு போன்ற கால்களின் கீழ் பகுதியில் சக்கரம் போன்ற அமைப்பினை
கொண்டிருந்தனர்.அதன் மூலம் அவர்கள் இயக்கம் செய்தனர். ஆனால் பிறபாகங்கள் மனிதர்களை போலவே இருந்தது. அங்கிருந்த உயர்ந்த கட்டிடங்கள்
மற்றும் சீரான சாலைகள் அவற்றில் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்கள், இவைகளே அவர்களின் பிரமிப்புக்கு காரணம்.


மன்னரிடம் அறிவழகன் கேட்டார்," மன்னா இந்த புதிய மாய உலகம் எங்கு இருக்கிறது, இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது".
மன்னர் " மந்திரியாரே! அந்த மாய உலகம் ஆகாயத்தில் எங்கோ ஓர் இடத்தில் இருக்கு, அதனுடைய சரியான தூரம் இதோ கணக்கிட்டு சொல்கிறேன் என்று

மீண்டும் அந்த காட்சியை கண்டு அதன் பிம்மத்தின் தன்மையை ஆராய்ந்தவராய் , வடக்கு ஆடியின் திறன் மூங்கிலின் இரு முனைகளில் உள்ள
ஆடிகளின் திறன் மற்றும் தெரியும் காட்சியின் தெளிவு ஆகியவற்றைக்கொண்டு சிறிய கணக்கு செய்து,

"வடகிழக்கில் 45 கோணம் சாய்வில் 300000 மைல்களுக்கு குறைவில்லாத தூரம்" என்று சொன்னார்.

"வாவ்! நம்ம முன்னோர்களெல்லாம் மிகப்பெரிய அறிவாளிகள் தான்" என்றாள் லாவண்யா சத்தமாக.

மாயம்-2

லாவண்யாவின் சத்தத்தின் விளைவு மூவரும் கிபி 2020 க்கு திரும்பினர்.

இந்த இடத்துல ஒரு மூன்று முக்கியமான கதாபாத்திரங்களின் அறிமுகம் அவசியமாகிறது.

1.சரவணன் : வானவியல் ஆராய்ச்சியில் இறுதி ஆண்டு மாணவன், சென்னை ஐ.ஐ.டி., அதி புத்திசாலி என்பது கூடுதல் தகவல்.

2.லாவண்யா : அதே கல்வித் தகுதி , புத்திசாலி ஆனால் வேகத்தினால் தவறு செய்பவள், சரவணனை அடிக்கடி சீண்டுபவள்.மிகப்பெரிய
பில்லியனர் வீட்டுப்பொண்ணு.

3.சுரேஷ் : அதே கல்வித் தகுதி , ரெம்ப கலாட்டா பார்ட்டி , அவன் இருக்கும் இடம் கலகலப்பாக நகரும்.இவனும் இருவருக்கும் இனையான அறிவாளி.
காதல் ஜோக்குகள் சொல்வதில் மிகத்தேர்ந்தவன்.

மூன்று பேரும் இளம்கலை இயற்பியல் பயிலும் போதே நட்பில் இனைந்தனர். அது இன்று வரை தொடர்கிறது, மூவரது குறிக்கோளும் வானியலில்
இந்தியாவின் புகழை மேலும் நிலை நிறுத்த வேண்டும் என்பது. அதற்காக ஏலியன்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு இருந்தனர்.அது சம்பந்தமாக சுரேஷ்
தன்னுடைய தந்தையின் புத்தக அறையில் தும்மலுக்கு இடையே இந்த வரலாற்று நூலை கண்டுபிடித்தான். 1973 ல் இந்நூலை தமிழாக்கம் செய்திருக்கிறார்
சுந்தரபாண்டியன் என்னும் எழுத்தாளர். நூலின் மூலம் " இண்டியன் ஸ்பேஸ் இன்வென்ஷன்" என்னும் ஆங்கில நூல் அதனை 1890 ல் எழுதி இருந்தவர்
சர் வில்லியம் ஜேம்ஸ் ஹுக். முதலில் ஏதோ கதைபுத்தகம் என்று நினைத்தவர்கள் பிறகு தான் புரிந்து கொண்டனர் அது கதையல்ல நம் பாரம்பரிய
சொத்து என்பதனை.

மாய உலகத்துக்குள்ள போவோம்,

சரவணன் லாவன்யாவை முறைத்துப்பார்த்தான், பிறகு தான் அவள் சூழலின் தன்மை உணர்ந்தாள்.

உடனே "சாரி சரவணன்" என்றாள்.

அவனும் அவளின் போலியில்லாத சாரிக்கு அடிபணிந்து ஒரு புன்னகை பூத்து இயல்பிற்கு திரும்பினான்.

"என்னடா இது எரிமலை மாதிரி மொறைச்சான் ஒரு சாரிக்கு சாரிகிட்ட விழுந்துட்டான்" இது சுரேஷ்.

சரவணனுக்கும் லாவன்யாவுக்கும் இடையில் வெட்கம் அலைமோதியது.

"என்னப்பா ரெம்ப சத்தமா இருக்கு , ராக்கெட் போறதை விட அதிக சத்தமாக இருக்கு" சொல்லிக்கொண்டே கண்ணாடியை தூக்கி தலை மேல் வைத்துக்
கொண்டு ஊர்ந்து வந்துகொண்டிருந்தார் அவர்களின் துறைத்தலைவரும், கைடுமான பேராசிரியர் சிதம்பரம்.

மூவரும் எழுந்து மரியாதை செய்தனர், அவர்களை சைகையால் அமரச்சொல்லிவிட்டு அவரும் அவர்களுடன் அமர்ந்தார். சரவணன் அவரிடம் புத்தகத்தில்
இருந்ததை சுருக்கி விளங்கும் வண்ணம் சொன்னான். அவனின் சொல்லும் திறன் கண்டு பல முறை வியந்துள்ளார் சிதம்பரம், இப்பொழுதும் அப்படியே.

"நானும் இதன் ஆங்கில மூலத்தை படித்துள்ளேன் ஆனால் ஆராய்ச்சியில் ஈடுபட்டதில்லை எனக்கும் ஆசை தான் ஆனால் கல்விப்பணி என்னை கட்டிப்
போட்டு விட்டது" என்றார் சிதம்பரம் வருத்தத்துடன்.

அவரே தொடர்ந்தார் "மேற்கொண்டு என்ன செய்வதாக உத்தேசம்" .

சுரேஷ் " சார் நம்ம யுனிவர்சிட்டியோட சாட்டிலைட் ல ஒரு டிரான்ஸ்பாண்ட் வேணும்னு சொன்னோமே சார்..." என்று இழுத்தான் மரியாதைக்காக.

"ஆங் அதைச்சொல்ல தான் வந்தேன் நம்ம விசி அதுக்கு பெர்மிசன் கொடுத்து மெயில் அனுப்பி இருந்தார் இப்ப தான் எனக்கு வந்தது" என்று
தன்னுடைய மொபைலில் அந்த மெயிலைக்காட்டினார் , நன்றி சொல்லிய மூவரின் முகத்திலும் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது.

" உங்களுக்கு என்னுடைய கண்ட்ரோல் யுனிட்டையும் தரலாம்னு இருக்கேன் " என்றார்.
மூவரின் முகத்திலும் ஆயிரம் வாட் பிரகாசம். மீண்டும் ஒரு முறை நன்றி சொன்னார்கள்.

சரி விசிக்கும் ஒரு நன்றியை சொல்லுங்கனு," மொபைலின் ஒரு பட்டனை தட்டினார் அதிலிருந்து லேசர் கற்றைகள் தோன்றி அந்த இடத்தில் ஒரு
ஸ்க்ரீனை தோற்றுவித்தன, அலுவலக சிசிடிவி கேமராவின் இனைப்பில் அவர்களுடைய வி.சி ஜோசப் தெரிந்தார்.
நான்கு பேரும் வரிசையாக வணக்கம் சொல்லி பின் நன்றி கூறினார்கள். அவரும் அவர்களுடைய புராஜக்ட்டுக்கு வாழ்த்து தெரிவித்து இனைப்பை
துண்டித்தார்.

சிதம்பரம் " உங்களுக்கு தரப்பட்டுள்ள டிரான்ஸ்பாண்டர் மிகவும் சக்தி வாய்ந்தது அதன் அலைவரிசை நம்ம பூமி முழுவதும் கிடைக்கும், மேலும்
பூமியைத்தாண்டி 4000000 மைல்கள் வரை விண்வெளியில் அலைவரிசை கிடைக்கும், எனவே பயன்படுத்தும் போது கவனம் தேவை இதன் சிக்னல்
எக்காரணம் கொண்டும் வெளியில் யாருக்கும் கிடைக்க கூடாது அது நம் நாட்டிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே ஆபத்தானது" என்றார் மிகவும் சீரியஸ்ஸாக.

மூவரும் சரியென்று சொன்னார்கள் விபரீதம் அறியாமல்.

மாயம் சூழ ஆரம்பித்ததை அறியாமல் மூவரும் மகிழ்ச்சியுடன் கிளம்பினர்.

மாயம்-3

லாவண்யா தன்னுடைய லேட்டஸ்ட் மாருதியில்(2020 ல மாருதி தான் டாப்.பிஎம்டபில்யூ, வோல்ஸ்வேகன், மெர்சிடிஸ்லாம் அதுக்கப்புறம் தானாம்)
இருவரையும் அவர்களின் வீட்டில் டிராப் செய்து விட்டு வீட்டுக்கு சென்றாள்.
டின்னரை முடித்துவிட்டு மெத்தையில் சாய்ந்தாள், கையோடு எடுத்து வந்திருந்து " ஏலியன்ஸ் வேர்ல்ட்" என்ற ஆங்கில கதைப்புத்தகத்தை படிக்க ஆரம்பித்தாள்.
2 பக்கம் கூட முழுசா படிக்கவில்லைஅவளுக்குள்ள சரவணன் வந்து டிஸ்ட்டர்ப் செய்தான். ஒரு புன்னகையோட்டு சரவணனுடனான முதல்
சந்திப்பை நினைத்து பார்த்தாள்.

கல்லூரியின் முதல் நாள் அவசர , அவசரமாக கிளம்பியவள் காரில் வேகமாக சென்றாள் பயத்துடன், சிக்னலை கவனிக்க வில்லை சிக்னலுக்காக
காத்திருந்தவர்களையும் கவனிக்கவில்லை கூட்டம் இல்லையென்றாலும் 2 இருசக்கர ஓட்டிகள் இருந்தனர். தன்னுடைய லேட்டஸ் டிவிஎஸ் ஸ்போர்ட்
பைக்கில் சிக்னலுக்காக காத்திருந்தான் நம்ம ஹீரோ. ஒரு ஒரு இஞ்ச்க்கு முன்னால் சகஜநிலைக்கு வந்தவள் விபரீதம் உணர்ந்து பிரேக் போட்டாள்
ஆனால் வண்டி ஒரு இஞ்ச் நகர்ந்து சரவணின் வாகனத்திற்கு மெல்லிய பஞ்ச் கொடுத்தது திடிரென்ற தாக்குதலால் நிலை தடுமாறி சரவணனும் டிவிஎஸூம்
கீழே விழுந்தனர். சரவணனுக்கு காயம் ஏதும் இல்லை(ஏன்னா அதான் காதல் தாக்குதல் ஆச்சே) வண்டியின் ப்யூல் டேங்கில் மட்டும் சிறிய ஓட்டை
அதனால் அழுத்தப்பட்டு இருந்த காற்று வெளியேறியது. (2020 ல அழுத்தப்பட்ட ஹைட்ரஜன் தான் எரிபொருள் , எல்லாம் கிரையோஜெனிக் மாடல்).
வண்டியை விட்டு கீழே இறங்கியவள் லைலா ஸ்டைலில் சாரி மழை பொழிந்தால் , அழகான பொண்ணு சாரி சொன்னா எந்த மடையன் கோபபப்படுவான்
அன்னைக்கு சாரில விழ்ந்தவன் தான் இன்னும் எந்திரிக்கல, அவளும் தான்.

ப்ளாஷ் பேக் முடிந்து இயல்பிற்கு வந்தவள் மொபைலை எடுத்து மைண்ட் ரெககனைஸ்(வாய்ஸ் ரெககனைஸ் மாதிரி) பட்டனை அழுத்தினாள் அதிலிருந்து
ஒரு கண்ணுக்கு தெரியாத ரேடியோ அலைகள் அவளின் மூளையுடன் நேரடி தொடர்புகொண்டு அவள் எண்ணத்தில் சரவணன் இருப்பதை அறிந்து
தன்னிச்சையாக சரவணின் மொபைல் எண்ணிற்கு டயல் செய்தது. அவள் சரவணணை எப்பொழுதும் இப்படி தான் தொடர்பு கொள்வாள் காரணம்னு
அவள் சொல்வது " தன்னுடைய அன்பை அதாவது காதலை தானே சுய சோதனை செய்வதாக" சொல்வாள்.

அடுத்த நொடி சரவனன் அவளின் அறைக்குள், ஆம் மெல்லிய லேசர் கற்றைகள் தோன்றி அறையில் ஸ்க்ரீனை உருவாக்க அதில் சரவணன் தெரிந்தான்
அவனும் மெத்தையிலே(அவன் வீட்டில்) படுத்துக்கொண்டு அவளிடம் பேச ஆரம்பித்தான்.அவள் , அவன் தோன்றிய ஸ்க்ரீனின் அளவை அதிகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு
வெற்றி கண்டாள்.

"ஹாய் லாவண் சாப்பிட்டியா?" சரவணன்

"சாப்டாச்சுடா மை ஸ்வீட் இடியட்" லாவண்யா

" நாளைக்கு கண்ட்ரோல் யுனீட் பத்தி ஒரு ப்ரீஃப் டாக்குமெண்ட் எடுக்கனும்" சரவணன்

"நைட்டுமாடா உன் புத்தி அப்படியே இருக்கு ஏதாவது ரொமாண்டிக்கா பேசுடா" லாவண்

"அதுக்கு இன்னும் நாள் இருக்குடி என் செல்லம்" சரவணன்

இன்னும் நிறைய டயலாக் ஓடுச்சு அதெல்லாம் அவங்க பர்சனல் என்பதால் இதோட நிறுத்திக்கிடுவோம்.

சரவணன் ஒரு வழியாக அவளை பேச்சை மாற்றி புராஜக்ட்டுக்கு கொண்டு வந்தான். உடனே சுரேஷ்க்கு காண்பிரன்ஸ் கால் போட்டு அழைத்தான்.
அவனும் இணைந்தான் ,

"என்ன கடலையெல்லாம் முடிஞ்சதா" சுரேஷ்.

"எங்க சுரே உன் பிரண்டு முரண்டு பிடிக்கிறான்" லாவண்.

"அவன் ஸ்கூல் டேஸ்ல இருந்து அப்படிதான் லாவண் " சுரேஷ்.

"டேய் என்னைப்பத்தி பேசுறதுக்கா காண்பிரன்ஸ் போட்டேன் மேட்டருக்கு வாங்க" சரவணன்.

ப்ரீக்கொண்சி யாருக்கும் தெரியக்கூடாதுனு சிதம்பரம் சார் சொன்னாருல அதை நம்ம மூன்று பேருக்கும் மட்டும் தெரிஞ்ச பாஸ்வேர்ட் மூலமாக கண்ட்ரோல்
செய்வோம்.பயோ பாஸ்வேர்ட் கொஞ்சம் சிக்கலில் விட்டுடும் சோ நாம நியுமெரிக் பாஸ்வேர்ட் வைச்சுக்குவோம்.என்றான் சரவணன்.
இறுதியில் 10J07M29J(10 ஜூன் 07 மே 29 ஜனவரி) மூவரின் பிறந்த நாட்களை குறிக்கும் வண்ணம் அமைத்துக்கொண்டார்கள்.
பைபை சொல்லி சுரேஷை கட் செய்துவிட்டு, ரெண்டு பேரும் கடலையை மீண்டும் ஆரம்பிச்சாங்க "சாப்டீயாடி " னு தொடங்கி பாதி இரவு கழியும் வரை.
அரை குறை மனதுடன் இருவரும் போனை வைத்துவிட்டு நிம்மதியாக தூங்க சென்றனர், இவர்களின் முழு உரையாடலும் ஓர் இடத்தில் பதிவாவது அறியாமல்.

மாயம்-4


காலையில் மூவரும் துறைத்தலைவரின் அறையில் சந்தித்தனர். சிதம்பரமும் சரியான நேரத்தில் அங்கிருந்தார். இன்று கண்ட்ரோல் ரூம் மற்றும்
சேட்டிலைட்டின் டிரான்ஸ்பாண்டரின் இயக்கம் மற்றும் அது சார்ந்த பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்க நினைத்திருந்தார்.

கண்ட்ரோல் ரூமை நான்கு பேரும் அடைந்தனர்.
அதில் உள்ள அனைத்து மெசின்களும் 3 பேருக்கும் நல்ல பரீட்சியமே, முன்னரே அவர்கள் சிதம்பரத்திடம் கற்று வைத்திருந்தனர். ஒவ்வொரு மெசின்
பற்றியும் சிறிய பார்மல் விளக்கம் கொடுத்தார். கடைசியாக தன்னுடைய ப்ரீப்கேஸிலிருந்து ஒரு மெசினை எடுத்தார் அது கைக்கு அடக்கமாக சில பட்டன்கள்
மற்றும் இன்புட் மற்றும் அவுட் புட் போர்ட்டுகளுடன் காணப்பட்டது. மூவரும் ஆர்வமுடன் அதனை கண்டனர், லாவண்யா உடனடியாக," சார் இது
என்ன புதுசா இருக்கு". சிதம்பரம் சிரித்துக்கொண்டே "இது என்னுடைய 25 வருட உழைப்பில் மாணவர்களுக்கு அடுத்து உருப்படியாக உருவாக்கியது.
என்று சொல்லி சிரித்தார்.இதற்கு நான் வைத்துள்ள பெயர் ஆஸ்ட்ரோ சைன்(Astro Sign).இது சேட்டிலைட்டுடன் இனைந்து செயலாற்றக்கூடியது.இதில் என்ன
ஸ்பெஷல் என்றார் .இதன் மூலம் நான் சங்கேத மொழிகளை பல கோடி மைல்களுக்கு செலுத்தலாம்.இது கணினி மற்றும் குறைந்தபட்சம் 3ஜி உள்ள
செல்லிடப்பேசியுடன் இனைந்து செயலாற்ற கூடியது."

ஆஸ்ட்ரோ-சைனின் செயல்முறை பற்றி விளக்கம் அளித்தார் .இறுதியாக,"உங்களுக்கு அனைத்து உதவிகளும் என்னிடம் எப்பொழுதும் கிடைக்கும்" என்றார்.
மூவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர்.

"சேட்டிலைட் கண்ட்ரோல் எப்படி செய்யப்போறீங்க பயோ பாஸ்வேர்ட்டா இல்லை நியுமெரிக்கா இல்லை அல்பபேட்டா" கேட்டு சிரித்தார்
சிதம்பரம்.
"எது சார் பெஸ்ட்" சரவணன்

மூவரின் முகத்தையும் ஒரு முறை பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே," நீங்க தான் ஏற்கனவே டிசைட் செய்துட்டீங்களே உங்க பிறந்தநாளைக்கொண்டு" என்றார்
தடாலடியாக.

மூவருக்கும் ஆச்சரியம் மற்றும் பயம் ஏற்பட்டது.

"சார்..........." என்றனர் ஒரு சேர,

"இனிமேலாவது இது சம்பந்தமான அனைத்து விசயங்களையும் மிகவும் பாதுகாப்பாக கேண்டில் செய்யுங்க" என்றார் சிதம்பரம்.

"சாரி சார் இனிமேல் தவறு நேராமல் பார்த்துக்கிறோம்" என்றாம் சுரேஷ் பவ்யமாக.

சரவணன் மூளை உடனடியாக கணக்குப்போட்டது எப்படி நடந்தது என்று இதில் மிகப்பெரிய சிக்கல் இருக்கு என்பதை மட்டும் உடனடியாக உணர்ந்தான்.

சுரேஷும் , லாவண்யாவும் சிதம்பரத்தின் ஸ்பை வேலையை நினைத்து பெருமை மற்றும் ஆச்சரியப்பட்டனரே தவிர எதனால் நேர்ந்தது என்று யோசிக்கவில்லை.

சேட்டிலைட்டின் கண்ட்ரோலை அவர்கள் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர், அது அவர்களுக்கு கஷ்டமான காரியமே இல்லை
எளிதா அகப்பட்டுக்கொண்டது.

முதல் சிக்னலை அனுப்பி அதை லாவணின் லேப்டாப்பில் ரிசீவ் செய்தான். மூவருக்கும் மகிழ்ச்சி ஆனால் சரவணன் மட்டுக் கொஞ்சம் நெர்வர்ஸாக
இருந்தான்.

அன்று சனிக்கிழமை என்பதால் மூவரும் சீக்கிரம் கிளம்பினர். கிளம்பும் போது கல்லூரியின் வாகனம் நிறுத்தும் இடத்தில் சரவணன் தனித்தனியாக இருவரிடமும்
ஹோட்டல் தீம் வேர்ல்ட்க்கு வரச்சொன்னான்.

"அப்பாடி இன்னைக்காவது புத்தி வந்துச்சேனு " வாய் வரை வந்ததை சொல்லாமல் நிறுத்த்திக்கொண்டு சிரித்தாள்.

மூவரையும் மாய வலை சுற்ற ஆரம்பித்து 4 மணி நேரம் ஆச்சு.
மாயம்:5

இரவு 8:00 மணி.
ஹோட்டல் தீம் வேர்ல்ட்.

மூவரும் ஆஜர் , அங்கே சுரேஷை கண்டது லாவணுக்கு முகத்தில் இறுக்கம் ஏற்பட்டது.

டிஸ்கொத்தே அறையில் நுழைந்தனர், தனி ஒரு டேபிளை ஏற்கனவே புக் செய்திருந்தான் சரவணன்.
டிஸ்கொத்தேவுக்கு இன்னும் நேரம் இருப்பதால் மெல்லிய இசை(??) ஒலித்துக்கொண்டிருந்தது.

சரவணன் அவனுடைய வால்யூமை குறைவாக வைத்துக்கொண்டு பேச தொடங்கினான்," நாம் 3 பேரும் கண்காணிக்கப்படுகிறோம்"

சுரேஷுக்கும், லாவணுக்கும் ஆச்சரியம் மற்றும் பயம் ஏற்பட்டது.

சரவணன் தொடர்ந்தான்," நாம் இனி இது சம்பந்தமாக பேச நம்முடைய மொபலை மாற்ற வேண்டும் இனைய இனைப்பு இல்லாத சாதாரண மொபைல்
3 பயன்படுத்துவோம்".

"அந்த மொபைலுக்கு எங்க போறது" லாவண்

"கவலை வேண்டாம்", கையோடு எடுத்து வந்த மொபைலைக்கொடுத்தான் இருவரிடமும்.

"இதில் புதிய சிம்கார்ட் போடப்பட்டுள்ளது நம்ம 3 பேரோட நம்பர் மட்டும் பதியப்பட்டுள்ளது, மேலும் 3 பேரைத்தவிர யாருடனும் நாம நினைத்தால்
கூட இந்த எண் மூலம் பேச முடியாது"சரவணன்.

சுரேஷை பார்த்து கண்ணடித்து " இப்ப தெரியுதா இந்த இடியட்டை நான் ஏன் காதலிக்கிறேனு" சொன்னாள் லாவண்யா.

சரவணன் தன்னுடைய 3ஜி மொபலைலில் ஏதோ அதிர்வை உணர்ந்து எடுத்து பார்த்தான், ஒரு ஈமெயில் வந்திருப்பதாக காட்டியது.

ஓப்பன் செய்து பார்த்தான் ஒன்னுமே புரியல " அ,க,ட்,ர்,க்,ச்" மற்றும் சில கிராப்(graph) இப்படி இருந்தது, அவனுடைய புருவங்களின் சுருக்கம் பார்த்து சுரேஷ் எட்டிப்பார்தான்
அவனுக்கும் குழப்பம்.

அடுத்தடுத்து இதே போல வரிசையாக வரத்தொடங்கியது, மூவருக்கும் பயத்தில் அறையின் ஏ/சி யை தாண்டி வியர்க்க தொடங்கியது.

லாவண்யா வாங்கி பார்த்து அந்த ஈமெயிலின் ஐபி பார்த்தாள், அதை வைத்து எங்கிருந்து வந்துள்ளது என்று அறிய முயற்சி செய்தாள் , அது சென்னை ஐ.ஐ.டி
முகவரி காட்டியது.

"நம்ம காலேஜ் ஐபி காட்டுதுப்பா" லாவண்யா சொன்னாள்

"தேங்க்யூ டியர்" என்று கண்ணடித்து மொபைலை பறித்தான்.

"சாரிப்பா நான் தான் ஆஸ்ட்ரோ-சைன்னை இதோட லிங்க் செய்து வைத்தேன் மறந்துட்டேன்," சரவணன்.

இப்ப தான் மூன்று பேருக்கும் மூச்சே வந்தது...

"சரி இந்த சிக்னலுக்கு அர்த்தம் என்ன?" கேட்டான் சுரேஷ்

மொபைலை வாங்கி அந்த செய்திகளை தன்னுடைய ஈ-மெயில் முகவரிக்கு பார்வேர்ட் செய்தான் சுரேஷ் விபரீதம் அறியாமல்.

"ஆஸ்ட்ரோ சைனின் சிக்னல்கள் இப்பொழுது தமிழில் மட்டுமே இருக்கு, இதனால் தமிழ் சிக்னல் வந்தால் மட்டுமே நமக்கு சிதம்பரம் சார் கொடுத்த
சிக்னல் டேபிள் யுஸ் ஆகும்,வேறு மொழினா நமக்கு சரியான அர்த்தம் கிடைக்காது, ஆனா நமக்கு எந்த குறிப்பிட்ட இடத்திலிருந்து வருதுனு கண்டுபிடிக்கலாம்,
அதாவது எந்த திசையில் எத்தனை கி,மீ இருந்து சிக்னல் என்று தெரிவிக்கும்" விளக்கம் கொடுத்தான் சரவணன்.

"நாளைக்கு சிக்னல் லாங்க்வேஜை உலகத்தில் உள்ள எல்லா பிரபலமான மொழிகளிலும் செட் செய்யனும்" சுரேஷ்

"டேய் இப்ப தாண்டா உருப்படியா ஒரு யோசனை சொல்லிருக்க" சரவணன்

"சரி ஒரு பீர் ஆர்டர் செய்" சுரேஷ்

"அப்ப எனக்கு " லாவண்யா

"உனக்கு சாம்பைன் வேணுமா" சுரேஷ்

"ம்ஹூம் எனக்கு இது தான் வேணும்" பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சரவணனை கைகாட்டினாள்

மூவரும் சத்தம் போட்டு சிரித்தனர்.

சுரேஷ் நாசூக்காக ஒரு பீரை கையில் பிடித்துக்கொண்டு கூட்டத்தில் மிதந்து மறைந்து போனான்.

கண்களின் மொழி அங்கு ரீங்காரமிட்டது.

மாயம் : 6

சரவணின் வீடு

இரவு 12.30

கணினியுடன் தனது செல்பேசியை ப்ளூடூத்மூலமாக இனைத்து சிக்னலுடன் வந்த கிராப்பை கணினிக்கு மாற்றுகிறான்.
இந்த சிக்னலை பார்க்கும் போது அவனுக்கு ஒலி அலைகள் போன்று தோன்றியது. எனவே ஆடியோ எடிட்டரை ஓப்பன் செய்து அந்த சிக்னலை
ஆய்வு செய்கிறான் அவன் நினைத்தபடியே அது சாதாரன கிராப் அல்ல அது ஒலி அலைகளே, சரவணனுக்கு மகிழ்ச்சி.

ஒலி கோப்பை இயக்கி , இயர் போனை கணினியுடன் இனைந்து காதில் மாட்டும்போது அவன் கேட்க்கும் வார்த்தைகள் அவனுக்கு ஆச்சரியம்
உண்டாக்குகிறது , ஆம் அனைத்தும் சுத்தமான தமிழ் அதிலும் பழைய திரைப்படங்களில் கேட்க்கும் ஸ்லாங்க். பாதி வார்த்தைகள் அவனுக்கு
புரியவில்லை.

இது வேற்று கிரக சிக்னலா அல்லது சிதம்பரம் சார் விளையாடுகிறாரா என்று அவனுக்கு குழப்பம்.இரண்டு நாளைக்கு முன் சுரேஷிடம் இருந்து பெற்ற
அந்த "இண்டியன் ஸ்பேஸ் இன்வென்சன்" புத்தகம் ஞாபகம் வந்தது.அதை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தான் அவனுக்கு பல விசயங்கள் புரிய ஆரம்பித்தது
சில விசயங்களில் குழப்பம் ஆரம்பித்தது.அப்படியே தூங்கிப்போனான்.

நேரம் இரவு 1:30

கணினியிலிருந்து செல்லிடப்பேசியை பிரிக்க மறந்து தூங்கிப்போனான் சரவணன்.

கணினியும் , செல்லிடப்பேசியும் தானாக இயங்க ஆரம்பித்தது ஆடியோ எடிட்டரில் இருக்கும் அந்த வேவ்கிராப்பிலிருந்து சில மாற்றங்கள் அவை
கோடிங்காக உருப்பெற்று தானாக கம்பைல் செய்து இயங்க ஆரம்பித்தது. கணினி மற்றும் செல்லிடப்பேசியின் எல்லா மென்பொருட்களிலும் அந்த இனம்
அறியா வேவு(ஸ்பை) மென்பொருள் ஆக்கிரமித்திருந்தது. சரவணின் மூளைக்கு செய்திகள் பறந்தன அவன் தூக்கத்திலே மயக்கம் அடைந்தான்.

பின்னர் அந்த மென்பொருளில் இருந்து கட்டளைகள் செல்லிடப்பேசிக்கு பறந்தன, செல்லிடப்பேசியிலிருந்த லேசர் ஒளிக்கற்றைகள் சரவணனை கேப்சர்
செய்தன, பின்னர் அவை அப்படியே மேலெழுந்து ஒரு உருவம் வரைய ஆரம்பித்தது அதில் சரவணின் கண், மூக்கு என்று நுழைத்தது, அது தான் நகல் சரவணன்.
நகல் சரவணன் கையில் மொபலை எடுத்தான், தெரியாமல் மைன்ட் ரெககனைஸ் பட்டனை அழுத்தினான் ரேடியோ அலைகள் நகல் சரவணின் மூளையை தேடியது
நிலைமையை உணர்ந்து சரவணனை நோக்கி மொபலை நீட்டினான் நகல். லாவணின் எண்ணிற்கு டயல் செய்தது , அவள் மறுமுனையில் ஆச்சரியத்துடன்
போனை எடுத்து "ஹலோ சொல்லுடா ஸ்வீட் இடியட்" என்றாள்,

நகல் என்ன சொல்வதென்று அறியாமல் "வணக்கம்" என்றான்.

அவள் குழப்பத்துடன் "என்னடா புதுசா" என்றாள்.

உடனடியாக மொபைலை கட் செய்து வெளியேறியது நகல் சரவணன்.சரவணின் மயக்க நிலையையும் நீக்கி மறைந்தது.

குழம்பிய லாவண்யா மீண்டும் அவனை தொடர்பு கொண்டாள், தூக்க கலக்கத்தில் போனை எடுத்து

"ஹலோ ஹூ ஸ் ஆன் தி லைன்" என்றான் பெயரை பார்க்காமல்.

அவள் " ம் நான் தான் டா லூசு ஏன் போன் செய்து வணக்கம் சொல்லி கட் செய்த" என்றாள்

அவன் திடுக்கிட்டு அவளை மேலும் குழப்பாமல் " சாரி டியர் சும்ம விளையாண்டேன், பை பை குட் நைட்" சொல்லி போனை வைத்தான்.

டயல் நம்பர் லிஸ்ட் பார்த்தால் 1:33 க்கு ஒரு தடவை லாவணுக்கு டயல் செய்யப்பட்டு இருந்தது அதுவும் மைண்ட் ரெககனைஸ் மூலமாக.

அதிர்ச்சியில் உறைந்தான். அவனது இரவு தூக்கம் அன்று பலியானது.

இந்த அனைத்து வேலைகளையும் அமைதியாக இளம் புண்ணகையுடன் செய்து கொண்டிருந்தான் இருபத்தைந்தாம் கார்வேந்தன்.

மாயம் : 7

அதே இரவில் சுரேஷின் மூளையும் சிறப்பாக வேலை செய்ய ஆரம்பித்தது, தன்னுடைய கம்ப்யூட்டரை இயக்கி இன்பாக்ஸில் உள்ளவற்றை
ஹார்ட் டிஸ்க்கில் சேமித்தான். ப்ரீக்கொன்சி ஃபைண்ட்டர் 11.0 ஈ.எக்.ஸி யை க்ளிக் செய்து இயக்கினான். சிக்னல்களை ஆய்வு செய்தான் சில நொடிகளே
பிரமித்து போனான், அனைத்து சிக்னல்களையும் மொழிபெயர்த்து எழுத்துக்களாக தரவல்லது ப்ரீகொன்சி ஃபைண்ட்டர். அவனுக்கு கிடைத்தது கோர்வையான
தமிழ் எழுத்துக்கள். மேலும் இந்த சிக்னல்கள் கடந்து வந்துள்ள தொலைவு சரியாக 450735 கி.மீ வடகிழக்கு. ஆச்சரியத்தில் உறைந்து போனான் ,
பூமி தோன்றிய போது தோன்றியது தமிழ் மொழி என்று தமிழின் பெருமை அடிக்கும் தமிழாசிரியரான அவனது தந்தையை பல முறை கிண்டல்
அடித்துள்ளான். இன்று பூமியை தாண்டி தமிழ் உள்ளதை கண்டவுடன் ஆச்சர்யமே ஏற்பட்டது.

அவனுக்கு கிடைத்த சங்கேத வார்த்தைகளை ப்ரிண்ட் அவுட் செய்து தூங்கி கொண்டிருந்த தந்தையை எழுப்பினான்,

"டாட் ப்ளீஷ் வேக்கப், ஐ நீட் அ அர்ஜண்ட் சொலுசன்" சத்தமாக போனில் அழைத்தான் தந்தையை

"என்னடா இந்த நேரத்தில்" இது ராமச்சந்திரன் சுரேஷின் தந்தை

"அப்பா தமிழில் சந்தேகம்"

ஆவலுடன் எழுந்தார்

அவன் காட்டிய பேப்பரில் இருந்த எழுத்துக்களை ஆராய்ந்தார், பின்னர் திகிலுடன் அவனைப்பார்த்து

"இந்த செய்யுள் எப்படி உனக்கு வந்துச்சு, இதில் உள்ள தமிழ் அப்ராக்ஸ்மேட்டா கி.மு 10 ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது இது இப்பொழுது யாருக்கும் புரியாத மொழி
இதன் விளக்கம் காலையில் சொல்றேன் , நான் கொஞ்சம் ரெபர் செய்யனும்" என்றார் இயல்பாக இருப்பது போல காட்டிக்கொண்டு.

"ரெம்ப தேங்க்ஸ் டாட், செய்யுள்னா என்ன டாட்" என்றான் சுரேஷ்

இந்த எழுத்துக்கள் கிடைத்த முறை பற்றி சுருக்கமாக சொன்னான்.

"நீ போய் தூங்குடா, காலையில பேசலாம்"

"குட் நைட் டாட்"

நேரம் இரவு 1.33

சரவணனுக்கு போன் செய்தான் எந்த சத்தமும் இல்லை ஸ்விட்ச் ஆப் மெசேஜ் கூட இல்லை.

பானுவிற்கு போன் செய்து கடலை போட்டுவிட்டான்.

பானு யாருனா அவனோட கேர்ள் பிரண்டில் ஒருத்தி, தம்பி ஒரு மேக்னெட் பெண்கள் விசயத்தில்.

கம்ப்யூட்டரை ஆப் செய்துவிட்டு சந்தோஷமாக தூங்க சென்றான்.

ராமச்சந்திரன் தான் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தார்.

மீண்டும் மீண்டும் அந்த எழுத்துக்களின் அர்த்தமே வந்தது.

"நிலையில்லா வாழ்வோடு
நிலையற்ற புவி மீது
நிற்கும் மானிடரே
மதியோடு செயல்பட்டால்
மறு உலகம் அழைக்கும்
ஆய்வோடு அழை
வடகிழக்கு 452789.67 ஒலி அலைக்கு"

அர்த்தம் எழுதியவர் அந்த பேப்பரையே வெறித்துக்கொண்டிருந்தார்.

மாயம்:8

காலையில் எழுந்தவுடன் பல்துலக்க பிரஷ் எடுக்கும் சுரேஷ் அன்று முதல் வேலையாக நேராக தந்தையின் அறைக்கு சென்றான்,
இரவு முழுவதும் தூக்கமில்லாத்தால் அப்பொழுது தான் கண்ணயர்ந்திருந்தார் ராமச்சந்திரன். தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்து திரும்பியவனின்
கண்களில் அந்த அர்த்தம் எழுதிய பேப்பர் அகப்பட்டுக்கொண்டது.அதை கையில் திணித்து இடத்தை காலி செய்தான்.

வேகமாக கிளம்பி மற்ற இருவரையும் கல்லூரிக்கு வரச்சொல்லிவிட்டு இவனும் புறப்பட்டான் மகிழ்ச்சியோடு.அதிர்ச்சிகள் அறியாதவனாய்.

காலை 9:00 மணி

மூவரும் கண்ட்ரோல் ரூமில் கலந்தனர்,

"என்னடா சுரேஷ் காலங்காத்தால இப்படி அவசரமா வரச்சொல்லிருக்க " லாவண்யா

சுரேஷ் அவளைப்பார்து கண்ணடித்து சிரித்துக்கொண்டே பேச ஆரம்பித்தான்,

"நேற்று சரவணனுக்கு வந்த எல்லா சிக்னலையும் என்னுடைய மெயிலுக்கு பார்வேர்ட் செய்தேன், வீட்டில் போய் அதை எல்லாம் இறக்கி என்னிடம்
இருக்கும் ப்ரீக்கொண்சி பைண்டர் சாப்ட்வேரில் நுழைத்து ப்ரீக்கொண்சியை கோடிங்காக மாற்றினேன், கிடைத்த கோடிங்கை பார்த்து மகிழ்ச்சியும்
ஆச்சரியமும் ஏற்பட்டது காரணம் அந்த சிக்னலின் பேஸ் லாங்குவேஜ் தமிழை அடிப்படையாக கொண்டது, ஸோ தமிழன் பூமிக்கு அப்பாலும்
வாழ்கிறான் என்று ஆச்சரியம் வந்திடுச்சு ஆனா ஒரு வருத்தமும் ஏற்பட்டது"

"என்ன வருத்தம் சுரேஷ் " உண்மையாகவே வருத்தத்துடன் கேட்டாள் லாவண்யா

"அந்த தமிழ் வார்த்தைகள் எனக்கு புரியவில்லை அது ஏதோ செய்யுள் அமைப்பாம்" தொடர்ந்தான் சுரேஷ்

" நம்ம வீட்டுல தான் ஒரு புலவர் இருக்காறே னு அப்புறம் தான் யோசனை வந்துச்சு பாவம் தூங்கிட்டு இருந்தா டாடியை எழுப்பி ஆன்சர் கேட்டேன்
அவரும் என்னிடம் கேட்டார் இது எப்படி கிடைச்சதுனு எனக்கு மறைக்க தெரியவில்லை அதனால் அவரிடம் ஆராய்ச்சி பற்றி சொல்லி விட்டேன்
அவர் காலையில் எழுதி வச்சிருந்தார் எடுத்துட்டு வந்துட்டேன் " என்று சொல்லி நிறுத்தியவன் அந்த பேப்பரை மந்திரவாதி போல நாளு சுற்று சுற்றி
சரவணன் கையில் கொடுத்தான்.

படித்து முடித்த சரவணன் அதை லாவண்யா கையில் கொடுத்தான்

" நான் இவ்வளவு கஸ்டப்படல, அந்த ப்ரீக்கொண்சி பாக்க ஆடியோ வேவ் க்கிராப் மாதிரி இருந்தது ஆடியோ எடிட்டரில் தூக்கிப்போட்டு அதன் தலையில்
தட்டினேன் பொல பொல னு உளறிருச்சு" சரவணனும் அதே செய்யுளை எடுத்துக்காட்டினான்.

அவனே தொடர்ந்து " எனக்கு எல்லா வார்த்தைகளுக்கும் அர்த்தம் புரிந்தது ஆனால் கடைசி வரிமட்டும் என்னனே புரியல, இப்ப தான் தெரியுது
அது அத்தனையும் தமிழ் நம்பர்ஸ் என்று" சொல்லி முடித்து சுரேஷ்க்கு கை கொடுத்து கேண்டீனை நோக்கி நகர்ந்தார்கள்.

ஆர்டர் செய்துவிட்டு சரவணனை வம்புக்கிழுத்தாள், "டேய் இன்னைக்கு பீச் போவோம்டா" என்றாள்

அவனும் ஏதோ ஒரு யோசனையில் இருந்தவன் தலையாட்டினான் , என்னடா இவன் இன்னைக்கு உடனே ஒத்துக்கிட்டான் அப்படினு நினைக்கும் போது
சரவணன் தொடர்ந்தான் , " இன்னொரு முக்கியமான விசயம் பேசனும் மறந்துட்டேன் இன்னைக்கு ஈவ்னிங்க் 6 ஓ க்ளாக் ரெண்டுபேரும் மெரினா வந்திடுங்க
அங்க தான் கூட்டம் இருக்கும் நம்மளையும் கண்டுக்க மாட்டாங்க" .

"நான் எதுக்குடா அங்க நந்தி மாதிரி " என்றான் கிண்டலாக சுரேஷ்


மாயம் : 9

பூமிக்கு நாலு லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மாயலோகம்.

மாயலோகம் பற்றி ஒரு சின்ன அறிமுகம்

வானுய்ர்ந்த கட்டிடங்கள் , தெளிவான நகரங்கள் குறிப்பிட இடைவெளியில் அமைக்கப்பட்ட கட்டிடங்கள் நகரின் அனைத்து பாதைகளும் ஓரே நீள
அகலத்தில் இருக்கின்றன. அனைத்து கட்டிடங்களின் உயரங்களும் அகலங்களும் ஒரே அளவு. இரண்டு சூரியன்கள் ஒரு நிலவு. இரண்டு சூரியன்களில்
ஒன்றே இயற்கை மற்றொன்று செய்ற்கை. காரணம் மாயலோகத்தில் பகல் என்பது கிடையாது எனவே அவர்கள் செய்ற்கையாக ஒரு சூரியனை உருவாக்கி
கொண்டனர், இரவில் தோன்றும் நிலவும் பகலில் காணப்படும் இயற்கை சூரியனும் ஒன்றே. காரணம் பூமியைப்போல சுழல்வதில்லை மாயலோகம்.

மாயலோகத்தில் மொத்தம் 111 நகரங்கள் எங்கு சென்றாலும் இதே தோற்றத்தினை தான் காண முடியும். அங்கு 1111 கிராமங்கள் உள்ளன. கிராமங்களின்
முக்கிய தொழில் மாயர்களை உருவாக்குவது. மேலும் விவரங்களை நம்ம ஆட்கள் அங்கு போகும் போது பார்ப்போம்.

----

மாலை 5 மணிக்கு சரவணன் தன்னுடைய பைக்கில் லாவண்யா வீட்டுக்கு முன் வந்து நின்று கொண்டு மொபைலில் அவளை வெளியே வரச்சொல்லி
சொன்னான், அவளுக்கு ஆச்சர்யம் அவளை பின்னாடி உட்கார வைத்து வண்டியை செலுத்த ஆரம்பித்தான்.

"என்னடா ஆச்சு இன்னைக்கு வண்டில என்னை உட்கார வச்சிருக்க" அவனை பின்னால் இருந்து கட்டிக்கொண்டு கேட்டாள்.

"சும்மா தான் " என்றான்

அவர்களுக்கு முன்பே பீச்சின் ஸ்டாண்டில் சுரேஷ் ஒரு பொண்ணுடன் வெயிட்டிங்.இவர்களை பார்த்தவுடன் அவளிடம் போன் நம்பர் வாங்கி கொண்டு
விடை கொடுத்தான் அவளுக்கும் அது வரை இருந்த காதலுக்கும்.

லாவண்யாவை பார்த்து, " என்னால நம்ப முடியல" என்றான் சுரேஷ் இருவரையும் ஒரே பைக்கில் பார்த்ததால்.

அவளும் கண்ணடித்து ஷோல்டரை தூக்கி ஆச்சரியத்தை வெளிப்படுத்தினாள்.

சரவணன் , " யாருடா அந்த பொண்ணு , புதுசா இருக்கா"

" ஆமா இப்ப தான் ஒரு 5 நிமிசத்துக்கு முன்னால பார்த்தேன் , அவளும் பார்த்தாள் கிட்ட போயி பேசினேன், ஓக்கேவாயிடுச்சு" சொல்லி கண்ணடித்தான்
சுரேஷ்

"மச்சக்காரண்டா நீ ! ம் நானும் தான் இருக்கேனே " இது சரவணன்

அடிக்க கையை ஓங்கினாள் லாவண்யா பயப்படுவது போல் நடித்தான் சரவணன்.

அதிகமாக ஆள் இல்லாத இடமாக பார்த்து தேர்வு செய்து உட்கார்ந்தார்கள்,கொறிப்பதற்கு சில பாக்கெட் உணவுகளை சுரேஷ் வாங்கி வந்தான்.

சரவணன் பேச்சை ஆரம்பித்தான்,

"சுரேஷ் நீ கொடுத்த புக்கை முழுசா படிச்சேன் அதுல நம்ம நாட்டுல கண்டுபிடிக்கப்பட்ட ஸ்பேஸ் இன்வென்ஷனில் நாம 3 பேரும் படிச்ச அந்த 14 வது
அத்தியாத்தில் உள்ள கார்வேந்தனின் கண்டுபிடிப்புகள் தான் பெஸ்ட் , இதை எழுதியவருக்கு சிறிய அளவே ஆதாரம் கிடைத்துள்ளது காரணம்
மாயபுரி நகரம் முழுவதுமாக எரிந்து போனது தான். இந்த சின்ன தகவல்களும் மந்திரியின் வம்சாவளியினரிடமிருந்து தான் கிடைத்துள்ளது. நகரம்
முழுவதும் எரிந்து போனாலும் அங்கு மனிதர் இருந்ததிர்கான அடையாளங்களே காணப்படவில்லையாம், அதாவது தீயில் கருகிய உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இது தான் ஆச்சரியமான செய்தி. அந்த ஊரில் மன்னரின் அரண்மனை , மந்திரியின் வீடு மற்றும் முக்கிய ஆட்சியாளர்கள் மற்றும் சில சேவகர்கள்
குடியிருப்பு இவைதான் இருந்திருக்கின்றன. ஆனால் மலையில் உள்ள காடுகளுக்கு எந்த சேதமும் இல்லை"

இருவருக்கும் ஒரே கேள்வி கேட்டனர் , " இப்போது அந்த ஊரின் பேரு என்ன? அந்த ஊரு எக்ஸாக்ட்டா எங்க இருக்கு?"

சரவணன், " அந்த இடம் தென் தமிழகம் என்று தெளிவாக தெரிகிறது மன்னரின் பெயரை ஆராய்ந்ததில் மதுரைக்கு தெற்கே வாழ்ந்த மன்னன் என்று தெரிகிறது,
அந்த ஊரின் தற்போதைய இடம் திருநெல்வேலியின் அருகில் இருக்கலாம், ஏன்னா மதுரைக்கு தெற்கேனா அதிகமான மலைகள் உள்ள பகுதி கன்னியாகுமரி
மாவட்டம் எனவே நெல்லை சுற்றுப்பகுதியில் கட்டாயம் இருக்கனும்னு நினைக்கிறேன். ஆனா இப்ப உள்ள பேரு என்னனு தெரியல, அதைப்பத்தி ஏதாச்சும்
ஐடியா கிடைக்குமானு தான் இங்க கூப்பிட்டேன்".

சரவணனின் அறிவுக்கூர்மையை இரண்டுபேரும் வியப்புடன் நோக்கினார்கள்.

"இது சம்பந்தமாக நாளைக்கு லைப்ரேரி போயி தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகத்தில் பறக்கும் தட்டுக்களையோ அல்லது விசித்திரமான பொருட்களையோ
வானில் கண்டது சம்பந்தமான ஆதாரங்கள் ஏதாச்சும் கிடைக்குதானு பார்ப்போம், அதை வச்சும் அந்த ஊரை கண்டுபிடிக்கலாம்" முடித்தான் சரவணன்.

"ஓக்கே நாம போவோம் ரெம்ப லேட் ஆச்சு" லாவண்யா அவனுடன் பைக் சவாரி செய்வதற்காக அச்சாரம் போட்டாள்.

சுரேஷ் ரெண்டு பேருக்கும் பைபை சொல்லி ஏதாச்சும் மாட்டுதானு நோட்டம் விட ஆரம்பிச்சான்.

மாயம்-10

காலையிலே லைப்ரேரியில் 3 பேரும் குழுமினர்.

லைப்ரேரியனை கேள்விகளால் துளைத்து கொண்டிருந்தனர். அவரும் சளைக்காமால் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.

3 வரும் தனித்தனியே பிரிந்து சென்று தேட ஆரம்பித்தனர் , இறுதியில் 5 புத்தகங்களையும்,10 செய்தி தாள்களின் கட்டிங்கையும் தேர்ந்தெடுத்தனர்.
மூன்று பேரும் அதைக்கொண்டு ரெபர் செய்ததில் நெல்லை அருகே சேவல் மலை என்ற இடத்தை இறுதி செய்தனர்.
அங்குதான் அதிகபட்சம் 7 தடவை பறக்கும் தட்டை பார்த்ததாக பதிவாகியுள்ளது. மேலும் அந்த ஊரினை சுற்றி 7 மலைகள் இருக்கின்றன.
பெயர் காரணம் பற்றி பேச்சு வந்தது,

"மாயபுரிக்கும் சேவல் மலைக்கும் ஒரு ஒற்றுமையும் இல்லையே" லாவண்யா

சுரேஷ் ஒரு புத்தகத்தை தூக்கி நீட்டினான், " தமிழக பெயர்களின் வரலாறு"

அதில் நெல்லை மாவட்டத்தை தேர்வு செய்து சேவல் மலையின் பேர் காரணத்தை படித்தான்.

"ஆங்கிலேயர்கள் 7 மலைகள் இருப்பதால் இந்த ஊருக்கு செவன் மவுண்ட் என்று பெயரிட்டு அழைத்தனர் அச்சொல்லே பின்னர்
மருவி சேவல் மலை என்றாகியது, ஆனால் அந்த ஊரின் ஆதிப்பெயர் தெரியவில்லை."

சரவணன் தீர்க்கமாய் சொன்னான், " கட்டாயம் அந்த ஊராக தான் இருக்கும், சோ நாம அங்க போயி கொஞ்சம் ரெபர் செய்யலாம் ஏதாச்சும்
உருப்படியான ஆதாரம் கிடைக்கலாம்."

"எப்ப போகலாம்",சுரேஷ் உடனே தலையாட்டினான்.

"நாளைக்கே கிளம்பலாம்" சரவணன்

"நான் வர முடியாது" இது லாவண்யா

"ஏன் " கவலையாக சரவணன்

"கொஞ்சம் பெர்சனல்" கண்ணடித்தாள்

"சுரேஷ் நாளைக்கு என்ன ப்ளான்னு நைட் போன் செய்யுறேன்" சரவணன்

பை சொல்லி கலைந்தனர்.

சுரேஷ் வீட்டிற்கு சென்று மேப் தயார் செய்தான். அந்த ஊருக்கு போகும் வழிகள் பற்றி கொஞ்சம் இனையத்தில் தேடி சேகரித்தான்.

இரவு சர்வணன் சுரேஷூக்கு போன் செய்தான். ப்ளான் இறுதி செய்தார்கள். சுரேஷின் தந்தையின் காரில் செல்வதாக முடிவு செய்தார்கள்.
என்ன என்ன வேண்டுமென பட்டியல் இட்டனர். எல்லாம் தயார் செய்தனர்,கூடவே அவர்களின் இதயத்தையும் தயார்படுத்த மறந்திருந்தனர்.

நம் நண்பர்கள் யாராவது இந்த கதையை தொடர தயாரக இருந்தால் தொடரலாம். நன்றி

இந்த கதையை எழுதியது மணி என்பவர் அவர் ரொம்ப நாட்களாக முத்தமிழ் மன்றத்தில் பதிவுகள் எழுதி வருகிறார். அவருக்கு மிக்க நன்றிகள்

1 ஊக்கப்படுத்தியவர்கள்:

Karthikeyan Rajendran said...

பல வருடங்கள் கழித்து படிக்கும் போதும் திகிலாக உள்ளது, ப்ளீஸ் இந்த கதையின் முடிவை தயவு செய்து சொல்லுங்கள்.

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை