உங்கள் வீடியோ கோப்பை டிவிடியாக மாற்ற எளிய வழி ~ கணிணி மென்பொருட்களின் கூடம்
வாங்க வாங்க பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடமும் சொல்லுங்க அப்படியே பின்னூட்டம் இடுங்கள்

கணிணி மென்பொருட்களின் கூடம்

கணிணி மென்பொருட்களின் கூடம்

Aug 11, 2009

உங்கள் வீடியோ கோப்பை டிவிடியாக மாற்ற எளிய வழி

நண்பர்களே நீங்கள் வைத்திருக்கும் எந்த ஒரு வீடியோ கோப்பாக இருந்தாலும் அதை டிவிடி கோப்பாக மாற்றுவது எப்படி என்பதை இன்று படிப்படியாக விளக்குகின்றேன்.



அதற்கு இந்த மென்பொருளை இங்கு இருந்து தரவிறக்கிக் கொள்ளுங்கள்

மென்பொருள் தரவிறக்கம் சுட்டி


இந்த மென்பொருளை சாதாரண மென்பொருள் நிறுவிக் கொள்ளுங்கள்.

பிறகு இந்த மென்பொருளை திறக்கவும்.

மென்பொருள் திறந்தவுடன் உங்களுக்கு உதவி செய்ய இங்கெல்லாம் அணுகலாம் என்று போட்டு அதில் மூன்று  பெட்டிகள் கொடுத்திருப்பார்கள்.  அதற்கு கீழ் CLOSE என்று போட்டு இருப்பார்கள்.  அதை தேர்வு செய்யவும்.



பின்னர் வலது பக்கம் Add Title என்பதை தேர்வு செய்யவும். ஒரு விண்டோ திறக்கும் நீங்கள் வைத்திருக்கும் வீடியோ கோப்பு எங்கு உள்ளது என்பதை தேர்வு செய்யவும்.  (இதில் Drag & Drop வசதி உண்டு).


நீங்கள் கொடுக்கும் வீடியோ கோப்பு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.  (உதராணத்திற்கு WMV, AVI, 3gp போன்று கலந்து கொடுக்கலாம்.)

இதில் முதலில் எது ப்ளே ஆகவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை மேலே கொண்டு செல்ல வலது பக்கம் Move Up என்பதனை தேர்வு செய்து மேலே கொண்டு சென்று முதலில் வைய்யுங்கள்.

எந்த இடத்தில் டிவிடி சேமிக்க வேண்டும் என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


பிறகு Project Settings என்பதனை தேர்வு செய்யுங்கள்

அதில் இடது பக்கம் General, Video, Audio, Playback, Burning என்று நான்கு வகைகள் இருக்கும். 

அதில் General என்பதை தேர்வு செய்தால் நீங்கள் உருவாக்கும் டிவிடிக்கு பெயர் கொடுக்கலாம்.

உங்கள் டிவிடி அளவை மாற்றிக் கொள்ளலாம். அதாவது 4.8ஜிபி அல்லது டிவிடி டூயல் லேயர் 7.2 ஜிபி என்று தேர்வு செய்து கொள்ளலாம்.  நிறைய புழக்கம் டிவிடி 4.8 ஜிபிதான் அதனால் நீங்கள் 4.8 ஜிபி என்று தேர்வு செய்து கொள்ளுங்கள்.

Video என்பதில் உங்கள் NTSC என்பதை தேர்வு செய்யுங்கள்.


Audio என்பதில் தேவையானால் 100% என்பதில் இருந்து கூட்டிக் கொள்ளுங்கள்.


Burning என்பதில் நீங்கள் டிவிடியாக எரிக்க போகிறீர்களா அல்லது வெறும் டிஸ்க் இமேஜாக சேமித்து பிறகு தனியாக எரிக்க போகிறீர்களா என்பதை தேர்வு செய்யவும்.



பிறகு Accept என்பதை தேர்வு செய்தால் மெயின் விண்டோவிற்கு வந்து விடும். 


பிறகு அதில் மேலே Create DVD என்பதை தேர்வு செய்தால் போதும்.



உங்கள் வீடியோ டிவிடியை தயாரிக்க ஆரம்பித்து விடும்.

டிவிடி தயாரிக்கும் போது உங்களுக்கு போரடிக்கமால் இருக்க வலது பக்கம் உள்ள Entertain me என்பதை தேர்வு செய்தால் Tetris Game தொடங்கும் அதில் நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கலாம் டிவிடி தயாரிக்கும் வரை.



 நன்றி மீண்டும் வருகிறேன்.

உங்கள் ஒட்டுக்கள தமிழிலிசிலும் தமிழ்10 மற்றும் தமிழ்மணத்திலும் ஒட்டளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். சில விளம்பரங்களை கிளிக் செய்து என்னை வாழவைக்க உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.


3 ஊக்கப்படுத்தியவர்கள்:

வால்பையன் said...

எனக்கு எந்த விடியோ பைலாக இருந்தாலும் அதை 3ஜிபி பைலாக மாற்றும் சாப்ட்வேர் தேவை தல

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வடிவேலன்,

வாழ்த்துகள் உங்களுக்கு கிரீடம் விருது கிடைத்ததிற்கு.

டிவிடி மாற்றி நல்ல தகவல் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

இனியன் said...

அய்யா!"ஒரு வீடியோ ஃபைலை DVD ஆக மாற்ற"... படித்தேன்.படத்தோடு விளக்கியமைக்கு நன்றி.ஆனால், Encoder priyarity ல் High என்பதே இல்லை.மற்றும் Burninging ல் burn project to disk என்பதில் tick ஏற்படுத்த முடியவில்லை create iso image என்பது மட்டுமே tick செய்ய ஏதுவாக உள்ளது.இவற்றை சரி செய்ய வழி சொல்லவும்.

கீழே வரும் விளம்பரத்தை ஒரு கிளிக் செய்யுங்கள்

Related Posts Widget for Blogs by LinkWithin

இவர்களுக்கும் உதவுங்கள்

நீங்கள் எதாவது நிகழ்ச்சியோ (அ) விசேடமோ கொண்டாடினால் மீதமாகும் நல்ல நிலையில் உள்ள உணவுகளை 1098 (இந்தியாவில் மட்டும்) என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டீர்கள் என்றால், அவர்களே வந்து அதை பெற்றுக் கொண்டு செல்வார்கள். இல்லை என்றால் நீங்களே ஒரு உதவும் அமைப்புக்களுக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிடுங்கள் உங்கள் மீதமாக்கும் உணவு ஒருவரை வாழவைக்கும் உண்மையை உலகுக்கு புரிய வையுங்கள்.

இவர்களையும் கவனியுங்கள்

  • கும்மு கும்மி வாழ்த்தலாம் வாங்க! - *நிஜப்பெயர்: தென்கரை பாலன், கீழக்குகரை சூலன் இப்படி ஏதோ ஒன்று* *புனைப்பெயர்:* நாட்டாமை *வயது:* இன்றோடு 60 (அனுஜன்யாவுக்கு நான்கு வயது இளையவர்) *தொழில்:* ந...
    1 hour ago
  • தங்க(மணி)மொழிகள் - முன்குறிப்பு : தயவுசெய்து பெண்கள் எஸ்கேப்பாகி விடுங்கள். டேமேஜ் கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்கும், அப்புறம் கோபத்தில் என்னை டேமேஜ் ஆக்கிவிடாதீர்கள்.! சமீபத்தில் ...
    1 day ago
  • புரட்டும் வடிவில் மென்புத்தகங்கள் - மென்புத்தகங்களை Pdf வடிவில் படிக்கும் போது சீக்கிரமே அலுப்பு தட்டிவிடுகின்றது. சிலர் மென்புத்தகங்களை சேகரிப்பதோடு சரி. வாசிப்பது என்னமோ அபூர்வம் தான்.சிலர்...
    1 day ago
  • குவியல்!..(24.11.09) - வரும் வெள்ளிக்கிழமை(27.11.09)நண்பரும் பதிவருமான லவ்டேல் மேடியின் திருமணம் ஈரோட்டில் நடக்க இருப்பது யாவரும் அறிந்ததே!, நண்பரும் தனக்கு தெரிந்த வரை அனைவருக்கும...
    1 day ago
  • டணால் தங்க விலை! - இந்த இந்தியாக்காரங்களுக்கும் மட்டும் ஏன்தான் தங்கம் மேல இவ்ளோ ஆர்வம்? இதற்கான காரணத்தை ஆராய வரலாற்றின் பக்கங்களை ‘லைட்டாக’ புரட்டிப்பார்க்க வேண்டும். சி...
    1 day ago
  • pls help chennai friends...நீங்களோ, உங்கள் நண்பர்களோ முடிந்தால் உதவலாமே... - pls help chennai friends...அவர்கள் பார்வையற்ற மாணவ சகோதரர்கள். Visually Challenged Students. இவர்கள் தேர்வு எழுத பார்வையுள்ள யாரேனும் படித்துக் காட்ட வேண்ட...
    1 week ago
Get paid To Promote at any Location