நண்பர்களே நீங்கள் ஆங்கில திரைப்படங்களை விரும்பி பார்ப்பவரா அத்துடன் அந்த படத்தை பார்த்தவுடன் உடனே உங்கள் கணினி திரையில் அந்த ஆங்கில படத்தின் வால்பேப்பரை தரவிறக்கி உடனே மாற்றிவிடுவீர்களா?? அப்படி என்றால் உங்களுக்குதான் இது அதிகம் உபயோகப்படும்.
இந்த தளத்திலிருந்து நிறைய புதிய ஆங்கில படங்களின் வால் பேப்பர்கள் அனைத்தும் ஒரே தளத்தில் இருந்து தரவிறக்க இந்த தளத்திற்கு செல்லுங்கள்.
மேலுள்ள படங்கள் போல ஆயிரக்கணக்கில் அனைத்து ஆங்கில படங்களின் வால்பேப்பர்கள் இங்கு கிடைக்கும். இணையதள
சுட்டி
ஜிமெயில் குரல் சேவை ஆரம்பித்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் 1,000,000 கால்கள் பேசப்பட்டுள்ளன என்பது இணையம் புழங்குபவர்களிடைய ஆச்சரியப்பட வைத்து வாய் பிளக்க வைத்துள்ளது. இந்த வேகத்தில் சென்றால் கூகிளின் குரல் சேவை ஸ்கைப்பை பின்னுக்கு தள்ளி விடும் என்பது கண்கூடாக தெரிகிறது. கூகிளின் குரல் சேவை பெற மற்றும் மேலும் அறிந்து கொள்ள
சுட்டி
நீங்கள் ஒரு தளத்திற்கு செல்கிறீர்கள் அந்த தளத்தில் மால்வேர் அல்லது ஸ்பைவேர் என்பதை தெரிந்து கொள்ள அந்த இணையத்தளத்தில் நுழையாமல் கண்டுபிடிக்க முடியாது. அப்படி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். இந்த மென்பொருளை யுஎஸ்பி மூலம் எங்கு எடுத்து செல்லலாம்.
மென்பொருளை திறந்தால் URL என்ற பெட்டியில் நீங்கள் நுழைய போகும் தளத்தின் முகவரியை கொடுங்கள். பின்னர் Go என்ற பட்டனை அழுத்துங்கள் இனி கீழுள்ள பெட்டியில் நீங்கள் கொடுத்த தளத்தில் உள்ள லின்க்குகள் அனைத்தும் நல்லவையா அல்லது உங்கள் கணினிக்கு தீங்கு விளைவிக்க கூடியவையா என்று காட்டி கொடுத்து விடும். நல்லவை என்றால் நீல வண்னத்திலும். கெட்டவை என்றால் சிகப்பு நிறத்திலும் இருக்கும்.
நம்மில் நிறைய பேர் சிறப்பு எழுத்துக்களை (Special Character) பார்த்திருப்போம் உதாரணத்திற்கு © இந்த எழுத்துக்கு நாம் Copy Right என்று கூறுவோம். இது அனைவருக்கும் தெரியும். இது போன்ற சிறப்பு எழுத்துக்களுக்கு என்ன பெயர் என்று தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.
இணையதள சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே குழந்தைகளுக்கு கணித பாடம் மட்டும் சில குழந்தைகளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் பிடிபடாது? இதற்கு காரணம் என்னவென்றால் மன திண்மை இல்லாததே காரணம் உதாரணத்திற்கு 2+1 = என்ன வென்று கண்டுபிடிக்க வேண்டும் என்றால் மூன்றில் இருந்து 6 வயது குழந்தைகள் விரல் விட்டு எண்ணி சொல்வார்கள். இதே 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உடனே 3 என்பார்கள் இது எப்படி மனதிற்குள்ளேயே 2 + 1 என்பதை கூட்டி விடை 3 என்று கூறுவார்கள்.
இது பள்ளிக்கூடங்களிலும் நாம் குழந்தைகளுக்கு சொல்லி தருவதாலும் வருகிறது. இதையே குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலம் கணிதம் சொல்லிக் கொடுத்தால் விரைவாக விளையாட்டும் விளையாடுவார்கள் கணிதமும் கற்றுக் கொள்வார்கள். இதற்கு இந்த கணித விளையாட்டு மென்பொருள் உதவுகிறது.
இந்த மென்பொருள் ஒரு சுதந்திர கட்டற்ற மென்பொருள் என்பதால் இன்னும் பலரால் மேம்படுத்தப்படும் என்று திண்ணமாக நம்பலாம். இந்த மென்பொருளை நிறுவி குழந்தைகளுக்கு விளையாட்டாக கணிதமும் கணினியும் சொல்லி தாருங்கள்.
இந்த மென்பொருள் விண்டோஸ் 2000க்கு மேற்பட்ட அனைத்து வெர்சன்களும் ஆதரிக்கும். அத்துடன் லினக்ஸ், மேக் இயங்குதளங்களிலும் இயங்கும்.
மென்பொருள் தரவிறக்க
சுட்டி
குடும்ப மருத்துவர் நம் வீட்டில்
நம் வீட்டில் பெரியவர்கள் மற்றும் வயதானவர்கள் இருப்பார்கள். நிறைய வீட்டில் வயதானவர்களுக்கு என்று தனி மருத்துவ உணவுகள் மற்றும் மருந்துகள் இருக்கும். அது போன்ற மருந்து மருத்துவ உணவு மருத்துவரின் குறிப்புகளை கணினியில் சேமித்து வைக்க இந்த மென்பொருள் உதவும் அத்துடன் மருத்துவரை குறிப்பிட்ட நாளில் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் மற்றும் இன்சூரன்ஸ், அவசர கால தொலைபேசி எண்கள் போன்றவற்றையும் இதில் குறித்து வைக்க வசதி உண்டு.
இந்த மென்பொருளில் எந்த நோயாயின் குறிப்புகளை ஏற்றுகிறீர்களோ அவர்களின் புகைப்படத்தையும் சேமித்து வைக்கலாம். இதன் மூலம் பலதரப்பட்ட நோயாளிகளின் குறிப்புகளை ஏற்றி வைக்கலாம். இந்த மென்பொருளின் பெயர் ஹேடாக். மென்பொருளை தரவிறக்க
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
ஒரு பிடிஎப் கோப்பில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை ஒரு பத்து புத்தகமாக பிரிக்க இது போல பத்து பாகமாக உள்ள பிடிஎப் கோப்புகளை ஒரே கோப்பாக ஒன்று சேர்த்து ஒரே பிடிஎப் கோப்பாக மாற்ற ஒரு ஆன்லைன் தளம் ஐ லவ் பிடிஎப்
ஜிமெயிலில் ஒரு வசதி உள்ளது. அதாவது ஒருவருக்கு தவறுதலாக மின்னஞ்சல் அனுப்பிவிட்டால் பத்து விநாடிகளுக்குள் திரும்ப பெறும் முறை அறிமுகப்படுத்திருந்தார்கள். இதன் மூலம் தவறானவர்களுக்கு தேவையில்லாத மின்னஞ்சலை அனுப்பி நாம் நம் நற்பெயரை களங்கப்படாமல் காக்கப்படுகிறது. இது வெறும் பத்து விநாடிகள் மட்டுமே இருந்து வந்தது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அரை நிமிடமாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது முப்பது விநாடிகள் வரை இந்த மின்னஞ்சல் திரும்ப பெறும் வசதியை நீட்டிக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.
முதலில் உங்கள் ஜிமெயிலில் கணக்கினுள் நுழைந்து கொள்ளுங்கள்.
பிறகு வலது பக்க மூலையில் Settings செட்டிங்க்ஸ் என்பதை கிளிக் செய்யுங்கள்.
அந்த பக்கத்தில் General என்ற பக்கத்தை கிளிக் செய்யுங்கள்.
அதில் கீழே Enable Undo Send என்ற பெட்டியில் டிக் செய்து இருக்கும். அதற்கு கீழே Send Cancellation Period என்பதற்கு நேரே 10 விநாடிகள் என்று இருக்கும். அதை கிளிக் செய்து எத்தனை விநாடிகள் வேண்டும் என்று கொடுத்து விட்டு கீழே சென்று Save Changes என்பதை கிளிக் செய்தால் போதும். உங்கள் தேவைக்கு தேவையான விநாடிகள் வரை உங்கள் மின்னஞ்சலை திரும்ப பெறலாம். ஐந்து விநாடிகள் முதல் முப்பது விநாடி வரை மின்னஞ்சலை திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதியை மேம்படுத்திருக்கிறார்கள்.
நண்பர்களே உங்களுக்கு திகில் மர்மம் பேய் போன்ற வால்பேப்பர்கள் பிடிக்குமா பிடியுங்கள் இங்கு நிறைய பயம் கொடுக்க கூடிய டெஸ்க்டாப் வால்பேப்பர்கள் உள்ளன. சில கீழே இருக்கும் படங்களை சுட்டினால் உங்களை அங்கு அழைத்து செல்லும்.
சில ஹாலோவின் திகில் வால்பேப்பர்கள் இணையதளங்கள்
ஹாலோவின் வால்பேப்பர்கள் சுட்டி1
ஹாலோவின் வால்பேப்பர்கள் சுட்டி 2
திகில் வால்பேப்பர்கள் சுட்டி 3
மண்டையோடு வால்பேப்பர்கள் சுட்டி 4
திகில் சுட்டி 5
திகில் சுட்டி 6
திகில் சுட்டி 7
» Read More...
நண்பர்களே அனைத்து வகை வீடியோ ஆடியோ கோப்புகளையும் நாம் விஎல்சி மீடியா ப்ளேயர் மூலம் கண்டு களித்திருபோம். ஆனால் எப்பொழுதும் ஒரே மாதிரிதான் விஎல்சி ப்ளேயர் இருக்கும். இதை எவ்வாறு நமக்கு பிடித்த ஸ்கின்களை விஎல்சி மீடியா ப்ளேயரில் கொண்டு வருவதை பற்றி இங்கு கூறுகிறேன்.
விஎல்சி மீடியா ப்ளேயர் வித விதமான ஸ்கின்களை கொண்டு வர இங்கு இருந்து ஸ்கின்களை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
சுட்டி
முதலில் தரவிறக்கிய கோப்புகளை விரித்து ( Unzip ) வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு விரித்த கோப்புகளை
C:\Program Files\VideoLAN\VLC\skins என்ற போல்டரில் காப்பி செய்து கொள்ளுங்கள்.
பின்னர் உங்கள் விஎல்சி ப்ளேயரை திறந்து கொள்ளுங்கள். அதில் Tools கிளிக் செய்து வரும் Preference தேர்வு செய்யுங்கள்.
அதில் Interface என்பதனை தேர்வு செய்தால் வலது பக்கம் Use Custom Skin என்பதை தேர்வு செய்து எந்த ஸ்கின் வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இனி உங்களுக்கு பிடித்த ஸ்கின் உங்கள் விஎல்சி வீடியோ ப்ளேயரில்.
எக்ஸல் கோப்புகளை CSV கோப்பாக மாற்ற
உங்கள் எக்ஸல் கோப்புகளை CSV கோப்பாக மாற்ற ஒரு சிறு மென்பொருள் தரவிறக்க
சுட்டி
இந்த மென்பொருள் எக்ஸல் 97, 2000, 2003, 2007 வகைகளை ஆதரிக்கிறது.
ஒரே நேரத்தில் பல கோப்புகளை CSV கோப்பாக மாற்றி தரும்.
இந்த மென்பொருளை நிறுவ உங்கள் கணினியில் டாட் நெட் ப்ரேம் வொர்க் 3.5 எஸ்பி 1 நிறுவி இருக்க வேண்டும். அப்படி நிறுவவில்லையெனில் Dot Net Frame Work 3.5 SP1 இங்கிருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.
சுட்டி
GIF கோப்பிலிருந்து ASCII GIF கோப்பாக மாற்ற
உங்களிடம் .GIF கோப்பை ASCII .GIF ஆக மாற்ற ஒரு சிறு மென்பொருள் இதன் மூலம் சாதராண GIF கோப்பு எழுத்துக்கள் எண்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்களுடன் ASCII கோப்பாக மாற்ற முடியும். பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். தரவிறக்க
சுட்டி இந்த மென்பொருளை நிறுவவும் டாட் நெட் வேண்டும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...