கணிதம் கற்றுக் கொள்ள மென்பொருள் இலவசமாக மருத்துவ மென்பொருள் இலவசமாக

நண்பர்களே குழந்தைகளுக்கு கணித பாடம் மட்டும் சில குழந்தைகளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் பிடிபடாது?  இதற்கு காரணம் என்னவென்றால் மன திண்மை இல்லாததே காரணம் உதாரணத்திற்கு  2+1 = என்ன வென்று கண்டுபிடிக்க வேண்டும் என்றால் மூன்றில் இருந்து 6 வயது குழந்தைகள் விரல் விட்டு எண்ணி சொல்வார்கள்.  இதே 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உடனே 3 என்பார்கள் இது எப்படி மனதிற்குள்ளேயே 2 + 1 என்பதை கூட்டி விடை 3 என்று கூறுவார்கள். 

இது பள்ளிக்கூடங்களிலும் நாம் குழந்தைகளுக்கு சொல்லி தருவதாலும் வருகிறது.  இதையே குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலம் கணிதம் சொல்லிக் கொடுத்தால் விரைவாக விளையாட்டும் விளையாடுவார்கள் கணிதமும் கற்றுக் கொள்வார்கள்.  இதற்கு இந்த கணித விளையாட்டு மென்பொருள் உதவுகிறது.


இந்த மென்பொருள் ஒரு சுதந்திர கட்டற்ற மென்பொருள் என்பதால் இன்னும் பலரால் மேம்படுத்தப்படும் என்று திண்ணமாக நம்பலாம். இந்த மென்பொருளை நிறுவி குழந்தைகளுக்கு விளையாட்டாக கணிதமும் கணினியும் சொல்லி தாருங்கள். 


இந்த மென்பொருள் விண்டோஸ் 2000க்கு மேற்பட்ட அனைத்து வெர்சன்களும் ஆதரிக்கும்.  அத்துடன்  லினக்ஸ், மேக் இயங்குதளங்களிலும் இயங்கும்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி

குடும்ப மருத்துவர் நம் வீட்டில்


நம் வீட்டில் பெரியவர்கள் மற்றும் வயதானவர்கள் இருப்பார்கள். நிறைய வீட்டில் வயதானவர்களுக்கு என்று தனி மருத்துவ உணவுகள் மற்றும் மருந்துகள் இருக்கும்.  அது போன்ற மருந்து மருத்துவ உணவு மருத்துவரின் குறிப்புகளை கணினியில் சேமித்து வைக்க  இந்த மென்பொருள் உதவும் அத்துடன் மருத்துவரை குறிப்பிட்ட நாளில் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் மற்றும் இன்சூரன்ஸ்,  அவசர கால தொலைபேசி எண்கள் போன்றவற்றையும் இதில் குறித்து வைக்க வசதி உண்டு.

இந்த மென்பொருளில் எந்த நோயாயின் குறிப்புகளை ஏற்றுகிறீர்களோ அவர்களின் புகைப்படத்தையும் சேமித்து வைக்கலாம்.  இதன் மூலம் பலதரப்பட்ட நோயாளிகளின் குறிப்புகளை ஏற்றி வைக்கலாம்.  இந்த மென்பொருளின் பெயர் ஹேடாக்.   மென்பொருளை தரவிறக்க சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஜிமெயிலின் மேம்படுத்தபட்ட சிறப்பு வசதி மற்றும் திகில் வால்பேப்பர்களின் இணைய தளங்கள்

ஒரு பிடிஎப் கோப்பில் உள்ள ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை ஒரு பத்து புத்தகமாக பிரிக்க இது போல பத்து பாகமாக உள்ள பிடிஎப் கோப்புகளை ஒரே கோப்பாக ஒன்று சேர்த்து ஒரே பிடிஎப் கோப்பாக மாற்ற ஒரு ஆன்லைன் தளம் ஐ லவ் பிடிஎப்



ஜிமெயில் மின்னஞ்சல் திரும்ப பெறும் வசதி

ஜிமெயிலில் ஒரு வசதி உள்ளது.  அதாவது ஒருவருக்கு தவறுதலாக மின்னஞ்சல் அனுப்பிவிட்டால் பத்து விநாடிகளுக்குள் திரும்ப பெறும் முறை அறிமுகப்படுத்திருந்தார்கள்.  இதன் மூலம் தவறானவர்களுக்கு தேவையில்லாத மின்னஞ்சலை அனுப்பி நாம் நம் நற்பெயரை களங்கப்படாமல் காக்கப்படுகிறது.  இது வெறும் பத்து விநாடிகள் மட்டுமே இருந்து வந்தது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அரை நிமிடமாக மாற்றப்பட்டுள்ளது.  அதாவது முப்பது விநாடிகள் வரை இந்த மின்னஞ்சல் திரும்ப பெறும் வசதியை நீட்டிக் கொள்ளலாம்.  இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.

முதலில் உங்கள் ஜிமெயிலில் கணக்கினுள் நுழைந்து கொள்ளுங்கள்.  

பிறகு வலது பக்க மூலையில் Settings செட்டிங்க்ஸ் என்பதை கிளிக் செய்யுங்கள்.

அந்த பக்கத்தில் General என்ற பக்கத்தை கிளிக் செய்யுங்கள்.

அதில் கீழே Enable Undo Send என்ற பெட்டியில் டிக் செய்து இருக்கும்.   அதற்கு கீழே Send Cancellation Period என்பதற்கு நேரே 10 விநாடிகள் என்று இருக்கும்.  அதை கிளிக் செய்து எத்தனை விநாடிகள் வேண்டும் என்று கொடுத்து விட்டு கீழே சென்று Save Changes என்பதை கிளிக் செய்தால் போதும்.  உங்கள் தேவைக்கு தேவையான விநாடிகள் வரை உங்கள் மின்னஞ்சலை திரும்ப பெறலாம். ஐந்து விநாடிகள் முதல் முப்பது விநாடி வரை மின்னஞ்சலை திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதியை மேம்படுத்திருக்கிறார்கள்.

நண்பர்களே உங்களுக்கு திகில் மர்மம் பேய் போன்ற வால்பேப்பர்கள் பிடிக்குமா பிடியுங்கள் இங்கு நிறைய பயம் கொடுக்க கூடிய டெஸ்க்டாப் வால்பேப்பர்கள் உள்ளன. சில கீழே இருக்கும் படங்களை சுட்டினால் உங்களை அங்கு அழைத்து செல்லும்.



சில ஹாலோவின் திகில் வால்பேப்பர்கள் இணையதளங்கள்


ஹாலோவின் வால்பேப்பர்கள் சுட்டி1


ஹாலோவின் வால்பேப்பர்கள் சுட்டி 2


திகில் வால்பேப்பர்கள் சுட்டி 3


மண்டையோடு வால்பேப்பர்கள் சுட்டி 4


திகில் சுட்டி 5


திகில் சுட்டி 6


திகில் சுட்டி 7



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ASCII அனிமேட்டர் மற்றும் VLCல் ஸ்கின் மாற்றுவது எப்படி?

நண்பர்களே அனைத்து வகை வீடியோ ஆடியோ கோப்புகளையும் நாம் விஎல்சி மீடியா ப்ளேயர் மூலம் கண்டு களித்திருபோம்.  ஆனால் எப்பொழுதும் ஒரே மாதிரிதான் விஎல்சி ப்ளேயர் இருக்கும். இதை எவ்வாறு நமக்கு பிடித்த ஸ்கின்களை விஎல்சி மீடியா ப்ளேயரில் கொண்டு வருவதை பற்றி இங்கு கூறுகிறேன்.

விஎல்சி மீடியா ப்ளேயர் வித விதமான ஸ்கின்களை கொண்டு வர இங்கு இருந்து ஸ்கின்களை தரவிறக்கிக் கொள்ளுங்கள். சுட்டி 

முதலில் தரவிறக்கிய கோப்புகளை விரித்து ( Unzip ) வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு விரித்த கோப்புகளை C:\Program Files\VideoLAN\VLC\skins என்ற போல்டரில் காப்பி செய்து கொள்ளுங்கள்.

பின்னர் உங்கள் விஎல்சி ப்ளேயரை திறந்து கொள்ளுங்கள். அதில் Tools கிளிக் செய்து வரும் Preference தேர்வு செய்யுங்கள்.


அதில் Interface என்பதனை தேர்வு செய்தால் வலது பக்கம் Use Custom Skin  என்பதை தேர்வு செய்து எந்த ஸ்கின் வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். 


இனி உங்களுக்கு பிடித்த ஸ்கின் உங்கள் விஎல்சி வீடியோ ப்ளேயரில்.

எக்ஸல் கோப்புகளை CSV கோப்பாக மாற்ற

உங்கள் எக்ஸல் கோப்புகளை CSV கோப்பாக மாற்ற ஒரு சிறு மென்பொருள் தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருள் எக்ஸல் 97, 2000, 2003, 2007 வகைகளை ஆதரிக்கிறது.

ஒரே நேரத்தில் பல கோப்புகளை CSV கோப்பாக மாற்றி தரும்.


இந்த மென்பொருளை நிறுவ உங்கள் கணினியில்  டாட் நெட் ப்ரேம் வொர்க் 3.5 எஸ்பி 1 நிறுவி இருக்க வேண்டும். அப்படி நிறுவவில்லையெனில் Dot Net Frame Work 3.5 SP1 இங்கிருந்து தரவிறக்கி கொள்ளுங்கள். சுட்டி



GIF கோப்பிலிருந்து ASCII GIF கோப்பாக மாற்ற


உங்களிடம் .GIF கோப்பை ASCII .GIF ஆக மாற்ற ஒரு சிறு மென்பொருள் இதன் மூலம் சாதராண GIF கோப்பு  எழுத்துக்கள் எண்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்களுடன் ASCII கோப்பாக மாற்ற முடியும்.  பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். தரவிறக்க சுட்டி  இந்த மென்பொருளை நிறுவவும் டாட் நெட் வேண்டும்.





நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

வீடியோ கன்வெர்டர் மற்றும் AMR to MP3 கன்வெர்டர் இலவசமாக

ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஹிட்ஸுகளையும், 500க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

 நண்பர்களே உங்களிடம் உளள் புகைப்படங்களின் பிண்ணனியை நீக்க வேண்டும் என்றால் உங்களிடம் போட்டோஷாப் அல்லது அதற்கு இணையான மென்பொருள் வேண்டும்.  அந்த மென்பொருட்களும் காசு கொடுத்துதான் வாங்க வேண்டிதான் இருக்கும்.   புகைப்படங்களில் உள்ள பிண்ணனியை நீக்க என்று தனியாக ஒரு சிறு மென்பொருள் உள்ளது .  அதன் பெயர் பிக்ஸர் கட் அவுட் - Picture Cut Out இந்த மென்பொருள் மூலம் உங்களிடம் உள்ள புகைப்படங்களின் பிண்ணனியை சுலபமாக நீக்கலாம்.  இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 போன்ற இயங்குதளங்களில் இயங்கும்.

பிக்ஸர் கட் அவுட் - Picture Cut Out மென்பொருள் தரவிறக்க சுட்டி


மீண்டும் ஒரு இலவச வீடியோ கன்வெர்டர்

எந்த ஒரு வீடியோ கோப்பையும் AVI கோப்பாக மாற்றலாம்

எந்த ஒரு வீடியோ கோப்பையும் MP4 கோப்பாக மாற்றலாம்

எந்த ஒரு வீடியோ கோப்பையும் WMV கோப்பாக மாற்றலாம்

எந்த ஒரு வீடியோ கோப்பையும் மொபைல் 3GP கோப்பாக மாற்றலாம்

எந்த ஒரு வீடியோ கோப்பையும் DVD கோப்பாக மாற்றலாம்

எந்த ஒரு வீடியோ ஆடியோ கோப்பையும் MP3 கோப்பாக மாற்றலாம்


வீடியோ கோப்பை டிவிடியாக மாற்றிய பிறகு நேரடியாக டிவிடி (DVD Burn) தட்டில் எழுத முடியும்

இவ்வளவு வேலை செய்யும் மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.

அதுதான் Freemake Video Converter இந்த வீடியோ கன்வெர்டரை தரவிறக்க சுட்டி

சுட்டி கொடுக்க மறந்துவிட்டேன் தவறு திருத்திய வால்பையனுக்கு நன்றி அருண்

உங்கள் மொபைலில் நீங்கள் உங்கள் குழந்தைகளின் குரல் அல்லது உங்களுக்கு பிடித்தவர்களின் குரல்கள் போன்றவற்றை ரெகார்ட் செய்து வைத்திருப்பிர்கள்.  அந்த கோப்புகள் அனைத்தும் பார்த்தால் நம் கணினியில் கேட்க முடியாது ஏன் என்றால் அது AMR கோப்பாகும்.  இந்த AMR வகை கோப்புகள் முதன் முதலி சோனி எரிக்சன் நிறுவனம் தான் கண்டுபிடித்து தங்கள் மொபைலில் பயன்படுத்தி வந்தனர். பின்னர் அனைவரின் பயன்பாட்டிற்கும் இந்த வகை கோப்பினை தந்தனர். இந்த வகை கோப்புகளை MP3 ஆக மாற்ற,  MP3ல் இருந்து AMR ஆக மாற்ற உங்களுக்கு இந்த சின்னஞ்சிறு மென்பொருள் உதவும் மென்பொருள்தரவிறக்க சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை