நண்பர்களே அனைத்து வகை வீடியோ ஆடியோ கோப்புகளையும் நாம் விஎல்சி மீடியா ப்ளேயர் மூலம் கண்டு களித்திருபோம். ஆனால் எப்பொழுதும் ஒரே மாதிரிதான் விஎல்சி ப்ளேயர் இருக்கும். இதை எவ்வாறு நமக்கு பிடித்த ஸ்கின்களை விஎல்சி மீடியா ப்ளேயரில் கொண்டு வருவதை பற்றி இங்கு கூறுகிறேன்.
முதலில் தரவிறக்கிய கோப்புகளை விரித்து ( Unzip ) வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு விரித்த கோப்புகளை C:\Program Files\VideoLAN\VLC\skins என்ற போல்டரில் காப்பி செய்து கொள்ளுங்கள்.
பின்னர் உங்கள் விஎல்சி ப்ளேயரை திறந்து கொள்ளுங்கள். அதில் Tools கிளிக் செய்து வரும் Preference தேர்வு செய்யுங்கள்.
அதில் Interface என்பதனை தேர்வு செய்தால் வலது பக்கம் Use Custom Skin என்பதை தேர்வு செய்து எந்த ஸ்கின் வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இனி உங்களுக்கு பிடித்த ஸ்கின் உங்கள் விஎல்சி வீடியோ ப்ளேயரில்.
எக்ஸல் கோப்புகளை CSV கோப்பாக மாற்ற
உங்கள் எக்ஸல் கோப்புகளை CSV கோப்பாக மாற்ற ஒரு சிறு மென்பொருள் தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருள் எக்ஸல் 97, 2000, 2003, 2007 வகைகளை ஆதரிக்கிறது.
ஒரே நேரத்தில் பல கோப்புகளை CSV கோப்பாக மாற்றி தரும்.
இந்த மென்பொருளை நிறுவ உங்கள் கணினியில் டாட் நெட் ப்ரேம் வொர்க் 3.5 எஸ்பி 1 நிறுவி இருக்க வேண்டும். அப்படி நிறுவவில்லையெனில் Dot Net Frame Work 3.5 SP1 இங்கிருந்து தரவிறக்கி கொள்ளுங்கள். சுட்டி
GIF கோப்பிலிருந்து ASCII GIF கோப்பாக மாற்ற
உங்களிடம் .GIF கோப்பை ASCII .GIF ஆக மாற்ற ஒரு சிறு மென்பொருள் இதன் மூலம் சாதராண GIF கோப்பு எழுத்துக்கள் எண்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்களுடன் ASCII கோப்பாக மாற்ற முடியும். பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். தரவிறக்க சுட்டி இந்த மென்பொருளை நிறுவவும் டாட் நெட் வேண்டும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...

























