நண்பர்களே உலகின் முதல் யுஎஸ்பி மானிட்டர் (Monitor) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பெருமையை கொண்ட நிறுவனம் வன்தட்டுக்கள், டிவிடி ட்ரைவ்கள், மானிட்டர், டிவி, குளிர்சாதன பெட்டி போன்ற எண்ணற்ற வன் பொருட்கள் மற்றும் வீட்டு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனமான சாம்சங் நிறுவனம்தான். பழைய் முறை போன்ற VGA, DVI, HDMI போன்றவையும் இதில் இணைக்கப்பட்டிருக்கும்.
நீங்கள் உங்களுக்குப் பிடித்த தளங்களை புக்மார்க் (BookMark) செய்வீர்கள். அதுவே ஒரு மென்பொருளில் செய்தாலும் அப்படித்தான். உங்களுக்கு பிடித்த தளங்களை வரிசை படுத்தினால் உதராணத்திற்கு ஷாப்பிங் தளங்களை ஷாப்பிங் மாலுக்குள்ளும், வீடியோ தளங்களை தியேட்டரினுள்ளும் வைத்தால் எப்படியிருக்கும் நினைத்துப் பாருங்கள். அதற்கு உதவுகிறது இந்த மென்பொருள் பேவரிட்ஸ்டவுண் (Favourites Town) . பார்ப்பதற்கே கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. மென்பொருள் தரவிறக்க சுட்டி
விண்டோஸ் XP உபயோகிப்பவர்கள் விண்டோஸ் 7 போல பார்டர்கள் அமைக்க ஆசைப்படுபவர்களுக்கு இந்த மென்பொருள் சுட்டி
நீங்கள் யாருக்காவது பரிசு தர நினைக்கிறீர்களா அதற்கு முன் இந்த தளத்தினுள் நுழையுங்கள் நீங்கள் என்ன வாங்கலாம் என்று உங்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காகவே இந்த தளம் சுட்டி
படிக்கின்ற நண்பர்கள் அனைவரும் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறுங்கள் இந்த வலைப்பூ வளர உதவியாக இருக்கும். உங்கள் ஒட்டுக்களையும் குத்துங்கள். அதுமட்டுமல்லாமல் படிக்கும் நண்பர்கள் பிடித்திருந்தால் விளம்பரங்களையும் கிளிக் செய்யுங்கள். இதுவரை ரீடரில் படித்து வருபவர்களுக்கும் நன்றி..
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...