அனைத்து பதிவர்களும் உஷார் பதிவுகள் மட்டுமல்ல வலைத்தளமும் திருடப்படுகிறது

நண்பர்களே இதுவரை 370 பதிவுகளுக்கு மேல் பதிவிட்டிருக்கிறேன்.  பாலோயர்களும் 500க்கு மேல் தொடர்கிறார்கள்.  அலெக்ஸா மதிப்பு பட்டியலும் மேலே சென்று கொண்டிருக்கிறது.  ஹிட்ஸ் இரண்டு லட்சத்தை தொடர போகிறது.  என்று நினைத்துக் கொண்டிருக்கையில் திங்கள் காலை 9:30 மணி அளவில் சூர்யா கண்ணன் தொலைபேசுகிறார். 

சூர்யா கண்ணன்
: வணக்க்ம் சார் என்ன சார் ஆச்சு உங்க தளத்திற்கு?

நான்  : ஏன் எனக்கு தெரிந்து இதுவரை ஒன்றுமில்லையே? ஏன் என்ன ஆச்சு பிரச்சனையா கண்ணன்?

சூர்யா கண்ணன்
:  இல்ல உங்க வலை தளத்தை ஒபன் செய்ய முடியலை அதான்???

நான் :  என்ன எர்ரர் வருது?

சூர்யா கண்ணன்:  உங்கள் தளம் ரிமூவ் செய்யப்பட்டுள்ளது என்று வருகிறது.

நான் :  அப்படியா?? (வாய்விட்டு சிரிக்கிறேன்)  அப்படி எல்லாம் இருக்காது கண்ணன்.

சூர்யா கண்ணன்:  இல்லை சார் நிஜம் தான் நீங்க வேணும்னா திறந்து பாருங்கள் என்றார்

நான்:  நான் ட்ரைவிங்கல இருக்கேன் நீங்களே ஒபன் பண்ணி பாருங்க என்று என் பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம் கொடுக்கிறேன்.

சூர்யா கண்ணன்:  வெரிபிகேசன் கோடு கேட்கிறது.  கொடுக்கட்டுமா

நான் :  ம்ம் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு பார்த்துவிட்டு கூப்பிடுகிறேன் என்றார்.

பிறகு கூப்பிட்டு பரவாயில்லை பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்தீர்கள் இல்லை என்றால் உங்கள் கூகிள் அக்கவுண்ட் அனைத்தும் கண்டமாயிருக்கும் என்றார்.   பாஸ்வேர்ட் மாற்றிவிட்டேன் அதை SMS செய்கிறேன்

அப்புறம் அலுவலகத்திற்கு வந்து என் மெயில் ஐடியை திறந்து பார்த்த பிறகுதான் விபரீதம் புரிந்தது.  என் மெயில  ஐடியை ஹேக் செய்து என் ஐடி வழியாக என்னிடம் உள்ள அனைத்து மின்னஞ்சல் முகவரிகளுக்கும் ஆபாச மெயில்கள் அனுப்ப பட்டிருந்தது.  அதற்கு ரிப்ளை வேறு எப்பா தாங்க முடியல எல்லாரும் என்ன அசிங்க அசிங்கமா திட்டி வேற மெயில் அனுப்பியிருந்தாங்க.  ஒரு நண்பி செருப்பு பிஞ்சிடும்னு வேற மெயில் அனுப்பிருந்தாங்க.  என்ன பண்றது எல்லாம் என் நேரம் நினைச்சி போய்க்கிட்டு இருக்கறேன்.

இவ்வளவு விளக்கமா ஏன் சொல்றேனா என் வலைத்தளம் திருட்டு போச்சி ஆனா மீட்டுட்டேன் இதற்கு காரணம் நண்பர் சூர்யா கண்ணன் மற்றும் முத்துவேல் தான்.  முத்துவேல் தொடர்பு கொள்ள வேண்டும் உங்கள் செல்பேசி எண் தரவும்.

நண்பர்கள் பதிவர்கள் பிளாக்கர்கள் அனைவரும் ஒரு பேக் - அப் மற்றும் மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை உங்கள் பாஸ்வேர்டை மாற்றுங்கள். 


(ஆபாச மின்னஞ்சல் வர நான் காரணம் அல்ல எந்த ஒரு கபோதியோ என் வெப்சைட் ஹேக் பண்ணிட்டான் அவன் மட்டும் கிடைச்சான் அவன ஒரு கேள்வி நான் அந்த அளவு என்னடா சம்பாதிச்சிட்டேனு கேட்பேன்.  இதன் மூலமா வர வருவாய் என் பத்து நாள் பெட்ரோல் செலவுக்கு மட்டுமே சரியாக இருக்கிறது.  இந்த நிலையில இத ஏன் பண்ணேனு ஒரு கேள்வி மட்டுமே.  இருந்தாலும் இவன் மூலமா நாமளும் இந்த உலகத்தில ஒரு பிரபல பதிவர் என்ற அடையாளம் நிலை நிறுத்தப்பட்டிருப்பதால் மன்னித்து விடுவோம்.)


என் வலைத்தளம் திருடப்பட்டது பிரான்ஸ் என்ற நகரத்தில் இருந்து ஏன் என்றால் நான் ஜிமெயில் உபயோகித்த பிறகு அங்கிருந்து  உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.  அதை நிரூபிக்கும் படம் மேலே

செப்டம்பர் 1 எனது பிறந்த நாள் உங்கள் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களுக்காக தலை வணங்கி நிற்கின்றேன்.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

இணையதளத்தில் மால்வேர் லின்குகள் கண்டறிய மற்றும் ஹாலிவுட் திரைப்பட வால்பேப்பர்கள்

நண்பர்களே நீங்கள் ஆங்கில திரைப்படங்களை விரும்பி பார்ப்பவரா அத்துடன் அந்த படத்தை பார்த்தவுடன் உடனே உங்கள் கணினி திரையில் அந்த ஆங்கில படத்தின் வால்பேப்பரை தரவிறக்கி உடனே மாற்றிவிடுவீர்களா??  அப்படி என்றால் உங்களுக்குதான் இது அதிகம் உபயோகப்படும்.  

இந்த தளத்திலிருந்து நிறைய புதிய ஆங்கில படங்களின் வால் பேப்பர்கள் அனைத்தும் ஒரே தளத்தில் இருந்து தரவிறக்க இந்த தளத்திற்கு செல்லுங்கள்.
 


மேலுள்ள படங்கள் போல ஆயிரக்கணக்கில் அனைத்து ஆங்கில படங்களின் வால்பேப்பர்கள் இங்கு கிடைக்கும். இணையதள சுட்டி


ஜிமெயில் குரல் சேவை ஆரம்பித்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் 1,000,000 கால்கள் பேசப்பட்டுள்ளன என்பது இணையம் புழங்குபவர்களிடைய ஆச்சரியப்பட வைத்து வாய் பிளக்க வைத்துள்ளது.  இந்த வேகத்தில் சென்றால் கூகிளின் குரல் சேவை ஸ்கைப்பை பின்னுக்கு தள்ளி விடும் என்பது கண்கூடாக தெரிகிறது.  கூகிளின் குரல் சேவை பெற மற்றும் மேலும் அறிந்து கொள்ள சுட்டி

நீங்கள் ஒரு தளத்திற்கு செல்கிறீர்கள் அந்த தளத்தில்  மால்வேர் அல்லது ஸ்பைவேர் என்பதை தெரிந்து கொள்ள அந்த இணையத்தளத்தில் நுழையாமல் கண்டுபிடிக்க முடியாது.  அப்படி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.  இந்த மென்பொருளை யுஎஸ்பி மூலம் எங்கு எடுத்து செல்லலாம். 

மென்பொருளை திறந்தால் URL என்ற பெட்டியில் நீங்கள் நுழைய போகும் தளத்தின் முகவரியை கொடுங்கள்.  பின்னர்  Go என்ற பட்டனை அழுத்துங்கள் இனி கீழுள்ள பெட்டியில் நீங்கள் கொடுத்த தளத்தில் உள்ள லின்க்குகள் அனைத்தும் நல்லவையா அல்லது உங்கள் கணினிக்கு தீங்கு விளைவிக்க கூடியவையா என்று காட்டி கொடுத்து விடும்.  நல்லவை என்றால் நீல வண்னத்திலும். கெட்டவை என்றால் சிகப்பு நிறத்திலும் இருக்கும்.


நம்மில் நிறைய பேர் சிறப்பு எழுத்துக்களை (Special Character) பார்த்திருப்போம் உதாரணத்திற்கு © இந்த எழுத்துக்கு நாம் Copy Right என்று கூறுவோம்.  இது அனைவருக்கும் தெரியும்.  இது போன்ற சிறப்பு எழுத்துக்களுக்கு என்ன பெயர் என்று தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.  இணையதள சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

கணிதம் கற்றுக் கொள்ள மென்பொருள் இலவசமாக மருத்துவ மென்பொருள் இலவசமாக

நண்பர்களே குழந்தைகளுக்கு கணித பாடம் மட்டும் சில குழந்தைகளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் பிடிபடாது?  இதற்கு காரணம் என்னவென்றால் மன திண்மை இல்லாததே காரணம் உதாரணத்திற்கு  2+1 = என்ன வென்று கண்டுபிடிக்க வேண்டும் என்றால் மூன்றில் இருந்து 6 வயது குழந்தைகள் விரல் விட்டு எண்ணி சொல்வார்கள்.  இதே 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உடனே 3 என்பார்கள் இது எப்படி மனதிற்குள்ளேயே 2 + 1 என்பதை கூட்டி விடை 3 என்று கூறுவார்கள். 

இது பள்ளிக்கூடங்களிலும் நாம் குழந்தைகளுக்கு சொல்லி தருவதாலும் வருகிறது.  இதையே குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலம் கணிதம் சொல்லிக் கொடுத்தால் விரைவாக விளையாட்டும் விளையாடுவார்கள் கணிதமும் கற்றுக் கொள்வார்கள்.  இதற்கு இந்த கணித விளையாட்டு மென்பொருள் உதவுகிறது.


இந்த மென்பொருள் ஒரு சுதந்திர கட்டற்ற மென்பொருள் என்பதால் இன்னும் பலரால் மேம்படுத்தப்படும் என்று திண்ணமாக நம்பலாம். இந்த மென்பொருளை நிறுவி குழந்தைகளுக்கு விளையாட்டாக கணிதமும் கணினியும் சொல்லி தாருங்கள். 


இந்த மென்பொருள் விண்டோஸ் 2000க்கு மேற்பட்ட அனைத்து வெர்சன்களும் ஆதரிக்கும்.  அத்துடன்  லினக்ஸ், மேக் இயங்குதளங்களிலும் இயங்கும்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி

குடும்ப மருத்துவர் நம் வீட்டில்


நம் வீட்டில் பெரியவர்கள் மற்றும் வயதானவர்கள் இருப்பார்கள். நிறைய வீட்டில் வயதானவர்களுக்கு என்று தனி மருத்துவ உணவுகள் மற்றும் மருந்துகள் இருக்கும்.  அது போன்ற மருந்து மருத்துவ உணவு மருத்துவரின் குறிப்புகளை கணினியில் சேமித்து வைக்க  இந்த மென்பொருள் உதவும் அத்துடன் மருத்துவரை குறிப்பிட்ட நாளில் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் மற்றும் இன்சூரன்ஸ்,  அவசர கால தொலைபேசி எண்கள் போன்றவற்றையும் இதில் குறித்து வைக்க வசதி உண்டு.

இந்த மென்பொருளில் எந்த நோயாயின் குறிப்புகளை ஏற்றுகிறீர்களோ அவர்களின் புகைப்படத்தையும் சேமித்து வைக்கலாம்.  இதன் மூலம் பலதரப்பட்ட நோயாளிகளின் குறிப்புகளை ஏற்றி வைக்கலாம்.  இந்த மென்பொருளின் பெயர் ஹேடாக்.   மென்பொருளை தரவிறக்க சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஜிமெயிலின் மேம்படுத்தபட்ட சிறப்பு வசதி மற்றும் திகில் வால்பேப்பர்களின் இணைய தளங்கள்

ஒரு பிடிஎப் கோப்பில் உள்ள ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை ஒரு பத்து புத்தகமாக பிரிக்க இது போல பத்து பாகமாக உள்ள பிடிஎப் கோப்புகளை ஒரே கோப்பாக ஒன்று சேர்த்து ஒரே பிடிஎப் கோப்பாக மாற்ற ஒரு ஆன்லைன் தளம் ஐ லவ் பிடிஎப்



ஜிமெயில் மின்னஞ்சல் திரும்ப பெறும் வசதி

ஜிமெயிலில் ஒரு வசதி உள்ளது.  அதாவது ஒருவருக்கு தவறுதலாக மின்னஞ்சல் அனுப்பிவிட்டால் பத்து விநாடிகளுக்குள் திரும்ப பெறும் முறை அறிமுகப்படுத்திருந்தார்கள்.  இதன் மூலம் தவறானவர்களுக்கு தேவையில்லாத மின்னஞ்சலை அனுப்பி நாம் நம் நற்பெயரை களங்கப்படாமல் காக்கப்படுகிறது.  இது வெறும் பத்து விநாடிகள் மட்டுமே இருந்து வந்தது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அரை நிமிடமாக மாற்றப்பட்டுள்ளது.  அதாவது முப்பது விநாடிகள் வரை இந்த மின்னஞ்சல் திரும்ப பெறும் வசதியை நீட்டிக் கொள்ளலாம்.  இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.

முதலில் உங்கள் ஜிமெயிலில் கணக்கினுள் நுழைந்து கொள்ளுங்கள்.  

பிறகு வலது பக்க மூலையில் Settings செட்டிங்க்ஸ் என்பதை கிளிக் செய்யுங்கள்.

அந்த பக்கத்தில் General என்ற பக்கத்தை கிளிக் செய்யுங்கள்.

அதில் கீழே Enable Undo Send என்ற பெட்டியில் டிக் செய்து இருக்கும்.   அதற்கு கீழே Send Cancellation Period என்பதற்கு நேரே 10 விநாடிகள் என்று இருக்கும்.  அதை கிளிக் செய்து எத்தனை விநாடிகள் வேண்டும் என்று கொடுத்து விட்டு கீழே சென்று Save Changes என்பதை கிளிக் செய்தால் போதும்.  உங்கள் தேவைக்கு தேவையான விநாடிகள் வரை உங்கள் மின்னஞ்சலை திரும்ப பெறலாம். ஐந்து விநாடிகள் முதல் முப்பது விநாடி வரை மின்னஞ்சலை திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதியை மேம்படுத்திருக்கிறார்கள்.

நண்பர்களே உங்களுக்கு திகில் மர்மம் பேய் போன்ற வால்பேப்பர்கள் பிடிக்குமா பிடியுங்கள் இங்கு நிறைய பயம் கொடுக்க கூடிய டெஸ்க்டாப் வால்பேப்பர்கள் உள்ளன. சில கீழே இருக்கும் படங்களை சுட்டினால் உங்களை அங்கு அழைத்து செல்லும்.



சில ஹாலோவின் திகில் வால்பேப்பர்கள் இணையதளங்கள்


ஹாலோவின் வால்பேப்பர்கள் சுட்டி1


ஹாலோவின் வால்பேப்பர்கள் சுட்டி 2


திகில் வால்பேப்பர்கள் சுட்டி 3


மண்டையோடு வால்பேப்பர்கள் சுட்டி 4


திகில் சுட்டி 5


திகில் சுட்டி 6


திகில் சுட்டி 7



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ASCII அனிமேட்டர் மற்றும் VLCல் ஸ்கின் மாற்றுவது எப்படி?

நண்பர்களே அனைத்து வகை வீடியோ ஆடியோ கோப்புகளையும் நாம் விஎல்சி மீடியா ப்ளேயர் மூலம் கண்டு களித்திருபோம்.  ஆனால் எப்பொழுதும் ஒரே மாதிரிதான் விஎல்சி ப்ளேயர் இருக்கும். இதை எவ்வாறு நமக்கு பிடித்த ஸ்கின்களை விஎல்சி மீடியா ப்ளேயரில் கொண்டு வருவதை பற்றி இங்கு கூறுகிறேன்.

விஎல்சி மீடியா ப்ளேயர் வித விதமான ஸ்கின்களை கொண்டு வர இங்கு இருந்து ஸ்கின்களை தரவிறக்கிக் கொள்ளுங்கள். சுட்டி 

முதலில் தரவிறக்கிய கோப்புகளை விரித்து ( Unzip ) வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு விரித்த கோப்புகளை C:\Program Files\VideoLAN\VLC\skins என்ற போல்டரில் காப்பி செய்து கொள்ளுங்கள்.

பின்னர் உங்கள் விஎல்சி ப்ளேயரை திறந்து கொள்ளுங்கள். அதில் Tools கிளிக் செய்து வரும் Preference தேர்வு செய்யுங்கள்.


அதில் Interface என்பதனை தேர்வு செய்தால் வலது பக்கம் Use Custom Skin  என்பதை தேர்வு செய்து எந்த ஸ்கின் வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். 


இனி உங்களுக்கு பிடித்த ஸ்கின் உங்கள் விஎல்சி வீடியோ ப்ளேயரில்.

எக்ஸல் கோப்புகளை CSV கோப்பாக மாற்ற

உங்கள் எக்ஸல் கோப்புகளை CSV கோப்பாக மாற்ற ஒரு சிறு மென்பொருள் தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருள் எக்ஸல் 97, 2000, 2003, 2007 வகைகளை ஆதரிக்கிறது.

ஒரே நேரத்தில் பல கோப்புகளை CSV கோப்பாக மாற்றி தரும்.


இந்த மென்பொருளை நிறுவ உங்கள் கணினியில்  டாட் நெட் ப்ரேம் வொர்க் 3.5 எஸ்பி 1 நிறுவி இருக்க வேண்டும். அப்படி நிறுவவில்லையெனில் Dot Net Frame Work 3.5 SP1 இங்கிருந்து தரவிறக்கி கொள்ளுங்கள். சுட்டி



GIF கோப்பிலிருந்து ASCII GIF கோப்பாக மாற்ற


உங்களிடம் .GIF கோப்பை ASCII .GIF ஆக மாற்ற ஒரு சிறு மென்பொருள் இதன் மூலம் சாதராண GIF கோப்பு  எழுத்துக்கள் எண்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்களுடன் ASCII கோப்பாக மாற்ற முடியும்.  பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். தரவிறக்க சுட்டி  இந்த மென்பொருளை நிறுவவும் டாட் நெட் வேண்டும்.





நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

வீடியோ கன்வெர்டர் மற்றும் AMR to MP3 கன்வெர்டர் இலவசமாக

ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஹிட்ஸுகளையும், 500க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

 நண்பர்களே உங்களிடம் உளள் புகைப்படங்களின் பிண்ணனியை நீக்க வேண்டும் என்றால் உங்களிடம் போட்டோஷாப் அல்லது அதற்கு இணையான மென்பொருள் வேண்டும்.  அந்த மென்பொருட்களும் காசு கொடுத்துதான் வாங்க வேண்டிதான் இருக்கும்.   புகைப்படங்களில் உள்ள பிண்ணனியை நீக்க என்று தனியாக ஒரு சிறு மென்பொருள் உள்ளது .  அதன் பெயர் பிக்ஸர் கட் அவுட் - Picture Cut Out இந்த மென்பொருள் மூலம் உங்களிடம் உள்ள புகைப்படங்களின் பிண்ணனியை சுலபமாக நீக்கலாம்.  இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 போன்ற இயங்குதளங்களில் இயங்கும்.

பிக்ஸர் கட் அவுட் - Picture Cut Out மென்பொருள் தரவிறக்க சுட்டி


மீண்டும் ஒரு இலவச வீடியோ கன்வெர்டர்

எந்த ஒரு வீடியோ கோப்பையும் AVI கோப்பாக மாற்றலாம்

எந்த ஒரு வீடியோ கோப்பையும் MP4 கோப்பாக மாற்றலாம்

எந்த ஒரு வீடியோ கோப்பையும் WMV கோப்பாக மாற்றலாம்

எந்த ஒரு வீடியோ கோப்பையும் மொபைல் 3GP கோப்பாக மாற்றலாம்

எந்த ஒரு வீடியோ கோப்பையும் DVD கோப்பாக மாற்றலாம்

எந்த ஒரு வீடியோ ஆடியோ கோப்பையும் MP3 கோப்பாக மாற்றலாம்


வீடியோ கோப்பை டிவிடியாக மாற்றிய பிறகு நேரடியாக டிவிடி (DVD Burn) தட்டில் எழுத முடியும்

இவ்வளவு வேலை செய்யும் மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.

அதுதான் Freemake Video Converter இந்த வீடியோ கன்வெர்டரை தரவிறக்க சுட்டி

சுட்டி கொடுக்க மறந்துவிட்டேன் தவறு திருத்திய வால்பையனுக்கு நன்றி அருண்

உங்கள் மொபைலில் நீங்கள் உங்கள் குழந்தைகளின் குரல் அல்லது உங்களுக்கு பிடித்தவர்களின் குரல்கள் போன்றவற்றை ரெகார்ட் செய்து வைத்திருப்பிர்கள்.  அந்த கோப்புகள் அனைத்தும் பார்த்தால் நம் கணினியில் கேட்க முடியாது ஏன் என்றால் அது AMR கோப்பாகும்.  இந்த AMR வகை கோப்புகள் முதன் முதலி சோனி எரிக்சன் நிறுவனம் தான் கண்டுபிடித்து தங்கள் மொபைலில் பயன்படுத்தி வந்தனர். பின்னர் அனைவரின் பயன்பாட்டிற்கும் இந்த வகை கோப்பினை தந்தனர். இந்த வகை கோப்புகளை MP3 ஆக மாற்ற,  MP3ல் இருந்து AMR ஆக மாற்ற உங்களுக்கு இந்த சின்னஞ்சிறு மென்பொருள் உதவும் மென்பொருள்தரவிறக்க சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

அலுவலகத்தில் இருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள எளிய வழி

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 496க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி 

நண்பர்களே உங்கள் வீட்டு கணினியில் உள்ள கோப்புகளை அலுவலக கணினியில் இருந்து கொண்டு பார்ப்பது எப்படி இதற்கு டீம் வீவர் வழியாக பார்க்கலாம் என்று கூறுவீர்கள்.  சரிதான் ஆனால் டீம் வீவர் திறந்து வைத்து அதில் வரும் ஐடி மற்றும் கடவுச் சொல் கொடுத்தால்தான் எதிர்ப்பக்கம் உள்ள கணினியை பார்க்க முடியும்.  ஆனால் இந்த மென்பொருள் மூலமாக எதிர்ப்பக்கம் உள்ள கணினி ஆன் செய்திருந்தால் மட்டும் போதும் இதை எப்படி செய்வது என்று சொல்கிறேன்.

இதற்கு தேவை ஒரு ஜிமெயில் ஐடி மற்றும் ஜிப்ரிட்ஜ் மென்பொருள்

முதலில் ஜிபிரிட்ஜ் மென்பொருளை இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.  சுட்டி


பின்னர் இந்த மென்பொருளை உங்கள் வீட்டில் உள்ள கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

நிறுவிய பிறகு உங்கள் கணினியில் உங்களுடைய ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் கேட்கும்.  கொடுங்கள் பிறகு AutoStart மற்றும் Remember me என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள் வேண்டும் என்றால்.

AutoStart தேர்வு செய்தால் விண்டோஸ் ஆன் செய்த பிறகு தானாகவே ஜிபிரிட்ஜ் அப்ளிகேசன் திறக்கும்.

Remember me என்பதை தேர்வு செய்தால் உங்கள் ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் நினைவில் வைத்திருக்கும்.

இந்த இரண்டையும் தேர்வு செய்வது நல்லதே.

பிறகு உங்கள் கணினியில் இது போல டாஸ்க்மேனஜரில் அமர்ந்து கொள்ளும்.

இது போல இரண்டு பக்கமும் செய்து கொள்ளுங்கள்.



அடுத்து நீங்கள் எந்த கணினியை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களோ அந்த கணினியில் டாஸ்க்மேனஜரில் அமர்ந்துள்ள  ஜிப்ரிட்ஜில் வலது கிளிக் செய்து அதில் Show GBridge என்பதனை தேர்வு செய்யுங்கள்.

பிறகு DesktopShare என்பதனை கிளிக் செய்தால் அதில் வரும் Configure GBridge DesktopShare (VNC) என்பதனை கிளிக் செய்யுங்கள்


அங்கு முதலில் Allow என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து இரண்டாவது பெட்டியில் Allow after Verify DesktopShare password (use built-in VNC server)  என்ற பட்டனை தேர்வு செய்தால் கீழே ஒரு கடவுச்சொல் பெட்டி திறக்கும் அங்கு நீங்கள் ஒரு புது கடவுச்சொல் கொடுத்துக்கொள்ளுங்கள். ( உ.ம் - 12345@12345) பிறகு ஒகே பட்டனை அழுத்தி வெளி வாருங்கள்.

 அடுத்து உங்கள் எதிர்ப்பக்கம் உள்ள கணினியில் ஜிப்ரிட்ஜ் திறந்து அதில் உங்கள் வீட்டுக் கணினியில் கொடுத்த ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் கொடுத்தால் உங்கள் வீட்டுக் கணினியை உங்கள் ஜிபிரிட்ஜில் உள்ள MyComputers பகுதியில் தெரியும்.


அந்த கணினியை வலது கிளிக் செய்து  Access Gbrige builtin VNC என்பதனை தேர்வு செய்யுங்கள் இப்பொழுது கடவுச்சொல் கேட்கும் நீங்கள் அந்த கணினியில் கொடுத்த ஒரு கடவுச்சொல் கொடுத்தீர்கள் அல்லவா ( உ.ம் - 12345@12345)  அதை இங்கே கொடுங்கள் முடிந்தது.


இது போல செய்ய ஜிபிரிட்ஜ் மென்பொருள், ஜிமெயில் ஐடி, இரண்டு பக்கமும் இணையம் இருந்தால் போதும்

இந்த மென்பொருள் மூலம் ஜிமெயில் நண்பர்களுக்கு அழைப்பு அனுப்பி கூகிள்சாட் செய்ய முடியும்.

இரண்டு கணினிகளுக்கு இடையே Sync செய்ய முடியும்.


ஜிபிரிட்ஜ் மென்பொருள் தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருள் மூலமாக நிறைய பயன்கள் உண்டு நீங்களும் முயற்சித்து பாருங்களேன்.

ஜிபிரிட்ஜ் குறித்த விக்கிபீடியாவின் விரிவான பதிவு சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

மவுஸை லாக் செய்ய பென்சில் இப்பொழுது பேனாவாக இன்னும் நிறைய

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 495க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி 
 
நண்பர்களே குழந்தைகள் இல்லாத வீடு கிடையாது என்பது போல கணினி இல்லாத வீடு கிடையாது என்பதும் நிரூபணம் ஆகி வருகிறது.  அவ்வாறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் அந்த குழந்தைகள் கணினியின் மவுசை அப்படி இப்படி ஆட்டி அனைத்தையும் கிளிக் செய்து ஒரே ரகளை செய்வார்கள் அப்பொழுதுதான் சிறிது நேரம் ஒரு பதிவு போடலாம் என்றால் தங்கமணி கூப்பிடுவார்கள்.  அந்த நேரத்தில் நம் குழந்தைகள் மவுசை வைத்து அனைத்தையும் ஒரு கோலம் செய்து விடுவார்கள்.  இது போல அவர்கள் செய்யாமல் இருக்க ஒரு சிறு மென்பொருள் மூலம் உங்கள் மவுஸை கிளிக் செய்வதை தடுக்கலாம்.  இதன் பெயர் Kids Key Lock இதை தரவிறக்க இங்கே செல்லுங்கள் சுட்டி

உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்ய மற்றும் கணினியை லாக் செய்ய பாஸ்வேர்ட் செய்ய போன்ற வேலைகளை Ctrl + Alt + Del கீகளை அழுத்தி செய்வோம்.  இந்த கீகள் அழுத்தும் போது வரும் கணினி ரீஸ்டார்ட் மற்றும் இது போன்றவைகளை மறைக்க இந்த மென்பொருள் உபயோகப்படுகிறது.  இதன் மூலம் Ctrl + Alt + Del அழுத்தினால் வெறும் டாஸ்க் மேனஜர் அல்லது ரீஸ்டார்ட் அல்லதுஅ கணினி லாக் செய்வது போன்றவற்றை மட்டும் கொண்டு வர முடியும். மென்பொருள் தரவிறக்க சுட்டி


கணினியில் தற்காலிக கோப்புகள் இணையத்தில்  பயன்படுத்தும் பொழுது உருவாகும் கோப்புகள் நிறைய வேலைகளை செய்வது CCleaner என்பது இது மிகவும் உலகளவில் அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாகும்.
webAtom என்ற நிறுவனம் நிறைய அப்ளிகேசன்களின் தற்காலிக கோப்புகளை நீக்கும் வண்ணம் சிறு மென்பொருளை அளித்துள்ளது.  இந்த மென்பொருளை தரவிறக்கிய பிறகு அதை திற்ந்து கொள்ளுங்கள் அதில் Download Latest Updates என்பதனை கிளிக் செய்தால் புதிய அப்ளிகேசன்கள் வசதி மேம்படுத்த்ப்படும்.  மென்பொருள் தரவிறக்க சுட்டி
நேரடியாக மென்பொருளை தரவிறக்க சுட்டி
கூகிள் குரோமில் எந்த ஒரு ஹிஸ்டரியும் சேமிக்காமல் வலைத்தளத்தை பார்வையிட இன்கோகினோடோ மோடு என்று உள்ளது.  சாதரண வலைத்தளங்கள் பார்வையிடும் பொழுது நம் விரும்பும் தளம் மட்டும் தானாகா இன்கோகினோடோ மோடு செல்ல இந்த கூகிள் குரொம் எக்ஸ்டென்சன் உபயோகப்படும்.  சுட்டி இந்த எக்ஸ்டென்சன் பெயர் ஆட்டோநிடோ என்று பெயர்.


குறிப்பிட்ட அப்ளிகேசன்கள் மட்டும் இயங்கமால தடுக்க வேண்டுமா நாம் விரும்பும் பொழுது  மட்டும் அதை இயக்க வேண்டுமா.  இந்த மென்பொருளை உபயோகப்படுத்தி நீங்கள் இயங்கமால தடுக்க வேண்டிய மென்பொருளின் .EXE கோப்பை இந்த மென்பொருள் வழியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்  ( உ.ம். utorrent.exe)  பிறகு அதை Block பட்டனை அழுத்துங்கள்.  வேண்டாம் என்றால் அந்த அப்ளிகேசனை UnBlock செய்துகொள்ளுங்கள்.  UnBlock செய்வதற்கு பாஸ்வேர்ட் கொடுத்து வைக்கலாம்.  சுட்டி


கூகிள் குரோமில் திற்ந்து வைத்துள்ள ஒரு தளம் தானாக புதுப்பித்துக் கொள்ள (Refresh) செய்ய ஒரு சிறு எக்ஸ்டென்சன் மூலம் முடியும்.  இந்த எக்ஸ்டென்சன் நிறுவிய பிறகு அதில் உங்களுக்கு 5 செகண்டுகுகள் முப்பது நிமிடங்கள் வரை தானாக ரெப்ரெஷ் செய்து கொள்ளுமாறு அமைத்துக் கொள்ள முடியும்.  எக்ஸ்டென்சனை நிறுவ சுட்டி



இதையே பயர்பாக்ஸ் உலாவியில் செய்ய இந்த ஆடு ஆனை உபயோகப்படுத்தவும் சுட்டி








 லிக்விட் பென்சில் வரபோகிறது.  அதாவது இதுவரை மரத்தில் செய்யப்பட்ட அதனுல் கிராபைட் வைத்த்து செய்யப்பட்ட பென்சில் உபயோகித்த நாம் இனி பால்பாய்ன்ட் பேனா போல உள்ள கிராபைட் லிக்விட் பென்சில் வர போகிறது.  இந்த பேனாக்கள் செப்டம்பர் 2010ல்  இருந்து கடைகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஷார்பி என்ற நிறுவனம் இதை தயாரித்து வெளியிடுகிறது.  இது இந்தியாவில் எப்பொழுது என்று தெரியவில்லை.  இருந்தாலும் விரைவில் இந்தியாவில் கிடைக்கும். இது குறித்த மேலதிக செய்திகளுக்கு சுட்டி  இந்த பென்சில் விரைவில் அனைத்து பள்ளிக் குழந்தைகளின் பொருட்கள் வாங்கும் லிஸ்டில் சேரும் என்பதில் ஐயமில்லை.



   
இதுவரை 496 பாலோயர்கள் பின் தொடர்கின்றனர். மிகவும் சந்தோசமாக இருக்கிறது விரைவில் 500வது பாலோயர் நம்மை பின் தொடர போகிறார். அவர்  யார் என்பது தெரியவில்லை?.  ஐநூறாவதாக சேரும் பாலொயருக்கு சிறப்பு பரிசு வழங்கலாம் என்று இருக்கிறேன்.  என்ன பரிசு என்று நினைக்கிறீர்க்ளா???.  mediaraptor மென்பொருள் அவருக்கு லைசென்ஸுடன். ஐநூறாவதாக சேரும் நபர் செய்ய வேண்டியது அவர் சேர்ந்தவுடன் தன் மெயில் ஐடியில் இருந்து நம் இணையதளத்தை பற்றி என்ன நினைக்கிறார் என்று முடிந்தால்ல் ஒரு பத்து வரிகளுள் எழுதி அனுப்பினால் போதும்.  அதை அடுத்த பதிவில் வெளியிடப்படும். அத்துடன் அவர் ஏதாவது வலைப்பதிவு செய்து வந்தால் அவர் வலைப்பதிவின் லின்க் அத்துடன் அனுப்பவும்.
 அந்த MEDIARAPTOR மென்பொருள் குறித்த மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்லுங்கள்.   சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை