நண்பர்களே DJUV என்று ஒரு கோப்பு உள்ளது தெரியாதவர்கள் இங்கு போய் தெரிந்து கொள்ளலாம். சுட்டி
இது ஒரு .jpeg போன்ற ஒரு கோப்பு வகையாகும். இதனுள் மிகவும் அதிகமாக உயர்திறன் மிக்க புகைப்படங்களை மிகவும் சிறிய கோப்பாக்கி சுருக்கி வைத்து காட்டும் கோப்பாகும். இன்னும் இதை பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள் சுட்டி
உங்கள் புகைப்படம் மற்றும் பிடிஎப் கோப்புகளை DJUV கோப்பாக மாற்ற இங்கே செல்லுங்கள் சுட்டி
சரி ஜேபிஜி கோப்பை டிஜுவி கோப்பாக மாற்றியாகி விட்டது இதை எப்படி திறந்து பார்ப்பது இதற்கு உதவ வருகிறது இந்த மென்பொருள் சுட்டி இது ஒரு திறந்த நிலை கட்டற்ற மென்பொருளும் கூட என்பது இதன் சிறப்பு.
உங்களிடம் ஒரு எம்கேவி வகை வீடியோ கோப்பு இருக்கிறது. தரவிறக்கும் போது பாதியிலேயே நின்று விட்டுவிட்டது அல்லது பழுது ஆகிவிட்டது திறக்க வில்லை என்ன செய்யலாம் இங்கு சென்று இந்த மென்பொருளை தரவிறக்கி நேரடியாக இயக்குங்கள். இதை நிறுவ வேண்டிய அவசியமில்லை. அந்த பழுது ஆன எம்கேவி கோப்பை Drag and Drop மவுஸால் இழுத்து கொண்டு வந்து விடுங்கள். இந்த மென்பொருள் பழுது பார்த்து கொடுத்து விடும். இதுவும் ஒரு திறந்த நிலை கட்டற்ற மென்பொருளும் கூட என்பது இதன் சிறப்பு. மென்பொருள் சுட்டி
7 ஊக்கப்படுத்தியவர்கள்:
தமிழிஸ்ல சேர்த்துட்டிங்க போல!
மிக்க நன்றி, எனக்கு மென்பொருட்கள் பற்றி முதலில் அ, ஆ கூட தெரியாது, உங்கள் பதிவு படிக்க ஆரம்பித்த பின்புதான் எனக்கும் இதை பற்றிய ஆர்வம் மேலோங்கியது
சிலநாட்களுக்குமுன் திரு சைபர்சிம்மன் தனது பதிவுகள் அப்படியே பிறர் வலைத் தளங்களில் பதிவு செய்யப்படுவதைப் பற்றி எழுதியிருந்தபோது அதை வன்மையாகக் கண்டித்தவர்களில் நீங்களும் ஒருவர். ஆனால், நீங்கள் இடும் பதிவுகள் பல ஆங்கிலத்தில் வரும் தொழில்துட்ப பதிவுகளின் தமிழாக்கம்தானே! அவற்றைத் தமோழில் நீங்கள் தருவதைக்கூடப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஆந்த ஆங்கிலப் பதிவுகளுக்கு நீங்கள் நன்றி கூடச் சொல்வதில்லயே! அதுவும் அந்தப் பதிவுகளில் உள்ள படங்களைக்கூட உங்கள் பதிவுகளில் அப்படியே பயன்படுத்தும்போது! உதாரணமாக இன்று நீங்கள் வெளியிட்டிருக்கும் இந்த DJVU பதிவு இன்று வந்திருக்கும் www.tothepc.com பதிவின் நகல்தானே!
நிச்சயம் வெள்ளோட்டம் பார்ப்போம்
நன்றி.
அன்புடன்
கிருஷ்ணா
http://rvkrishnakumar.blogspot.com/
அனானி சொல்வதைப் பற்றி கவலைப் பட வேண்டாம்.
வெட்டி ஓட்டுவதற்கும், உங்கள் பாணியில், மொழியில் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
எதையுமே ஒருவர் கண்டுபிடித்து ( Invent ) அதை மட்டுமே எழுதுவதென்பது முடியாத காரியம்.
எழுதியதில் அவரின் பங்களிப்பு இருப்பது அவசியம்.
ஆனாலும் அவர் சொல்வதைப் போல் reference கொடுத்தல் நல்லது தான், ஆனால், அது கட்டாயமில்லை.
அன்புடன்,
கிருஷ்ணா
http://rvkrishnakumar.blogspot.com/
வடிவேலன் அண்ணா,
எனக்கு ஒரு உதவி தேவை.என்னிடம்
DJUV என்று ஒரு கோப்பு உள்ளது. அதை
ஒரு PDF கோப்பாக இலவசமாக மாற்றும் மென்பொருள் தேவை.
அன்புடன்,
செல்வன்
(Norway)
செல்வன்,
எந்த கோப்பிலிருந்தும் pdf மாற்றுவது சுலபம். virtual printer ஐ நிறுவி அதை print செய்யவும்.
விவரங்களுக்கு எனது இடுகையைப் பார்க்கவும்.
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்