நண்பர்களே பயாஸ் BIOS என்ன என்றால் அனைவருக்கும் தெரிந்திருக்கும். கணிணி ஆன் செய்தவுடன் இதன் வழியாக தான் POST Power on Self Test நடக்கும் அதாவது சுய பரிசோதனை செய்து விட்டு கணிணி பூட் ஆகும். இந்த சுய பரிசோதனையின் போது அனைத்தும் சரியாக இருந்தால் ஒரு பீப் சத்தம் வந்து விட்டு கணிணி திரை தெரிய ஆரம்பிக்கும். இரண்டு பீப் சத்தம் வந்தால் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம் இது போல் ஒவ்வொரு பீப் சத்தத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு. பயாஸ் உருவாக்குவதில் மொத்தமே மூன்று நிறுவனங்கள்தான் இவர்களிடம் இருந்து வாங்கிதான் தங்கள் மதர்போர்டில் பொருத்துகிறார்கள். அந்த நிறுவனங்கள் ஒன்று ஐபிஎம், பீனிக்ஸ், ஏஎம்ஐ மட்டுமே. இது போன்ற பீப் சத்தங்கள் வந்தால் என்ன அர்த்தம் எல்லோருக்கும் தெரியாது கணிணி வல்லுநருக்கு மட்டுமே புரியும். அனைவருக்கும் புரியும் வண்ணம் மிக அருமையாக விளக்கமாக ஒரு மென்பொருளில் கொண்டு வந்துள்ளனர். அந்த மென்பொருள் சுட்டி
நீங்கள் புதிய விஎல்சி ப்ளேயர் நிறுவி இருந்தால் இந்த வசதியை நீங்களும் உபயோகப்படுத்தலாம்.
டிவிடி ரிப் செய்ய முடியும்.
முதலில் Media என்பதனை தேர்வு செய்து அதில் Convert / Save என்பதை தேர்வு செய்யுங்கள். பிறகு Disk டேபை தேர்வு செய்து கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு தேவையான டைட்டிலை தேர்வு செய்து உங்களுக்கு தேவையான பெயரை கொடுத்து Start என்பதை கிளிக் செய்யுங்கள் முடிந்தது.
கூகிளின் நிறுவனத்தின் அதிகாரபூர்வமற்ற கூகிள் குரோம் ஒஎஸ் வெளிவந்துள்ளது.
இந்த மென்பொருளை நிறுவுவதும் உபயோகப்படுத்துவதும் உங்கள் விருப்பமே எக்காரணத்தை முன்னிட்டும் எங்கள் நிறுவனம் இதற்கு பொறுப்பேற்காது.
தரவிறக்க
சுட்டி
உங்கள் கணிணி ஆன் செய்து எவ்வளவு நேரம் ஆனது என்பதை தெரிந்து கொள்ள இந்த மென்பொருள் உதவும் அது மட்டுமில்லை உங்கள் கணிணியை எந்த தேதியில் எந்த நேரத்தில் அணைக்க வேண்டும் என்பதை இந்த மென்பொருள் மூலம் செட் செய்து கொள்ளலாம். மென்பொருள்
சுட்டி
இந்த பதிவுகள் அனைவரையும் சென்றடைய உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். அது மட்டுமில்லாமல் சில விளம்பரங்களை கிளிக் செய்தால் இன்னும் உதவியாயிருக்கும் நண்பர்களே.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே இலவசமாக அதுவும் சட்டரீதியான லோகோ உருவாக்க வேண்டுமா? லோகோ உருவாக்க வேண்டுமெனில் உங்களிடம் ஒரு லோகோ மென்பொருள் வேண்டும். ஆனால் லோகோ மென்பொருள் வாங்க வேண்டுமெனில் கையிலிருந்து காசு செலவழிக்க வேண்டும். காசு செலவழிக்க இயலதாவர்கள் தேவையில்லாமல் நச்சு நிரல்கள் நிறைந்த வலைத்தளத்திற்குள் சென்று உடைக்கப்பட்ட மென்பொருட்களை தரவிறக்குவார்கள். அவர்களுக்காக மட்டுமல்ல அனைவருக்கும் உதவும் ஒரு சிறந்த இலவச சட்டரீதியான லோகோ மேக்கர். தரவிறக்க சுட்டி
நம்மால் யூட்யூபிலிருந்து படத்தை தரவிறக்கத் தெரியும். அந்த தளத்திலிருந்து ஒலியை மட்டும் எம்பி3 ஆக தரவிறக்க தெரியும். ஆனால் நம்மிடம் உள்ள எம்பி3 கோப்பை எப்படி யூட்யூப் தளத்தில் பதிவேற்றுவது. அதற்கு ஒரு வழி உண்டு. உங்களிடம் உள்ள எம்பி 3 கோப்பினை இந்த தளத்தினுள் உள்ளீடு செய்யுங்கள். அதற்கு முன் நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து இருக்க வேண்டும். பிறகு இவர்களின் தளத்தினுள் ஏதாவது ஒரு ஜேபிஜி கோப்பினை தரவேற்றுங்கள். பின்னர் உங்கள் எம்பி3 கோப்பினை தரவேற்றுங்கள். முடிந்தது உங்கள் எம்பி3 கோப்பு உங்கள் யூட்யூப் கணக்கினுள் ஏற்றப்பட்டிருக்கும்.
இணையத்தள
சுட்டி
மாயா, 3டி ஸ்டூடியோ மேக்ஸ், ப்ளேன்டர், கொலடா போன்ற மென்பொருட்களில் உருவாக்கப்பட்ட கோப்புகளை பார்க்க இந்த மென்பொருள் உதவும். இந்த மென்பொருள் மூலம் பார்க்க முடிந்த கோப்புகளின் எக்ஸ்டென்சன்கள் OBJ, 3DS, STL, OFF 3D, COLLADA மற்றும் 3DXML
இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை மென்பொருள். அது மட்டுமில்லாமல் இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் மேக் கணிணிகளிலும் இயங்ககூடியது.
மென்பொருள் தரவிறக்க
சுட்டி
அனைவருக்கும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே நம் எடுத்த புகைப்படங்களை மிகவும் கிரியேட்டிவிட்டியாக உருவாக்க யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் அது போன்று மிகவும் அழகானதாக்க உருவாக்க போட்டோஷாப் தெரிந்திருக்க வேண்டும் என்று கவலைப்பட வேண்டாம். போட்டோஷாப் தெரியாதவர்கள் கூட இந்த மென்பொருள் கொண்டு சில கிளிக்குகள் மூலம் மாற்றலாம். மென்பொருள் சுட்டி
பலவகையான பவர் பாயிண்ட்களை உருவாக்கி நமது வேலை திறமையை கொள்கைகளை திட்டங்களை தெரிவிக்க பெரிதும் உதவுவது மைக்ரோசாப்ட் பவர் பாயின்ட் மட்டுமே அதில் உள்ள டெம்ப்ளேட்டுகளை சிலருக்கு பிடிக்காது. அவர்களுக்கு சில புதிய டெம்ப்ளேட்டுகள்
வலை மனை
சுட்டி
வலை மனை
சுட்டி
வலை மனை
சுட்டி
வலை மனை
சுட்டி
வலை மனை
சுட்டி
வலை மனை
சுட்டி
சிநெட் என்ற நிறுவனம் அனைவரும் தெரிந்த வலை மனையைக் கொண்டது. இந்த நிறுவனம் ஆயிரக்கணக்காண மென்பொருட்களை தன்னகத்தே கொண்டது. இவர்கள் ஒவ்வொரு மென்பொருளையும் தரமானவையா என்றும் வைரஸ், மால்வேர், ஸ்பைவேர் போன்ற தீங்கு நச்சுநிரல்கள் உள்ளவையா என்றும் சோதித்து அவர்கள் அதை பற்றி ஒரு கட்டுரை எழுதி வெளியிடுவார்கள். அத்துடன் அவர்கள் எழுதிய மென்பொருள் குறித்த கட்டுரையில் அந்த மென்பொருளுக்கான தரவிறக்கம் தருவார்கள். இது போல் தரப்படும் ஒவ்வோரு மென்பொருளையும் நிறுவிய பிறகு அப்டேட் செய்ய மறந்து விடுகின்றனர் உபயோகிப்பாளர்கள். அதனால் அவர்கள் ஒரு வழி செய்துள்ளனர். அதாவது நீங்கள் நிறுவிய மென்பொருள்கள் புதிய பதிப்பா என்று சோதித்து அறிய வழி செய்துள்ளனர் அவர்கள் தளத்தில். இதன் மூலம் நாம் சுலபமாக நாம் நிறுவிய மென்பொருட்கள் தரமானவையா என்று தெரிந்து கொள்ளலாம். தேவையானால் புதிய பதிப்புக்கு மாறிக் கொள்ளலாம். வலை மனை
சுட்டி
இந்தியாவில் உள்ள பின்கோடுகளை தெரிந்து கொள்ள இலவசமாக ஒரு தளம்
சுட்டி
யூட்யுபிலிருந்து GIF கோப்பிற்கு மாற்ற உதவும் தளம்.
சுட்டி
இந்த தளத்தினுள் சென்று உங்களுக்குத் தேவையான யூட்யூப் முகவரியை காப்பி செய்து கொள்ளுங்கள் பின்னர் இந்த தளத்தினுள் இதை இடவும் பின்னர் CREATE என்பதை தேர்வு செய்யுங்கள். அவ்வளவுதான் இனி உங்கள் யூட்யூப் வீடியோ GIF கோப்பாக மாற்றப்பட்டிருக்கும் தரவிறக்குங்கள்.
படித்து பிடித்திருந்தால் ஒரு பின்னூட்டமும் இட்டால் மிகவும் உற்சாகம் பிறக்கும் நண்பர்களே.
நன்றி மீண்டும் வருகிறேன்.
» Read More...
நண்பர்களே உங்கள் கோப்புகளை ஒரு புகைப்பட கோப்பினுள் அடைக்க சிறு மென்பொருள். இந்த மென்பொருளை நிறுவி இதை இயக்கினால் Input என்ற இடத்தில் நீங்கள் எந்த போல்டரில் உள்ள கோப்புகளை மறைக்க போகீறீர்களோ அந்த போல்டரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு எந்தெந்த கோப்புகள் வேண்டுமோ அதை செலக்ட் செய்து கொள்ளுங்கள். Output என்ற இடத்தில் என்ன புகைப்பட பெயர் வேண்டுமோ தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். பாஸ்வேர்டு கொடுப்பதாக இருந்தால் கொடுத்துக் கொள்ளுங்கள் கடைசியில் Hide ME என்ற பொத்தானை அழுத்துங்கள் முடிந்தது. உங்கள் கோப்புகள் இனி நீங்கள் தேர்ந்தெடுத்த புகைப்படத்தினுள் மறைக்கப்பட்டிருக்கும். இது ஒரு திறந்த நிலை மென்பொருளும் கூட. மென்பொருள் சுட்டி
வேலைப்பளு அதிகம் இருப்பதால் நிறைய எழுத முடியவில்லை நிறைய மென்பொருட்கள் உள்ளன. அதை வெகு விரைவில் தொடர்ந்து எழுதுகிறேன். அதுவரை உங்கள் ஆதரவுகளை தருமாறு வேண்டிக் கொள்கிறேன்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே சிலர் மட்டுமல்ல எல்லோருமே நினைக்கும் விஷயம் நம் கணிணியில் நம் மட்டுமே எதையும் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.ஏன் என்றால் யாரவாது தெரியாமல் உங்கள் கணிணியில் உள்ள கோப்புகளை அழித்து விடலாம். அல்லது பெயர் மாற்றம் செய்யலாம். நமக்கு தெரியாமல் அவர்களுடைய பென் ட்ரைவில் காப்பி செய்து எடுத்து செல்லலாம். இது போன்று நேராதிருக்கு உங்கள் நண்பர் அல்லது குழந்தைகளிடம் கணிணியை வேலை செய்ய கொடுக்கும் பொழுது இந்த மென்பொருளை ஆன் செய்து விடுங்கள் போதும். இதையெல்லாம் அவர்களால செய்யவே முடியாது.
என்ன செய்ய முடியாது கணிணியில்
1. Stops Cut - கட் செய்ய முடியாது
2. Stops Paste - பேஸ்ட் செய்ய முடியாது
3. Stops Copy - காப்பி செய்ய முடியாது
4. Stops Delete - டெலிட் செய்ய முடியாது
5. Stops Copy To - காப்பி டூ என்று வேறொரு ட்ரைவிற்கு மாற்ற முடியாது
6. Stops Move to - வேறொரு இடத்திற்கு மாற்ற முடியாது
7. Stops Send To - வேறோரு இடத்திற்கு அனுப்ப இயலாது
8. Prevents renaming - பெயர் மாற்றம் செய்ய முடியாது
9. Disables Task Manager’s End Process button - டாஸ்க் மேனஜரில் என்ட் ப்ரோசஸ் பட்டனை உபயோகிக்க முடியாது.
மென்பொருளை நிறுவிய பிறகு அதில் உங்களுக்கு என்று ஒரு சார்ட்கட் கீ உருவாக்க முடியும் உதராணத்திற்கு Ctrl + Shift + p என்று கொடுத்தால் போதும் உங்கள் மென்பொருள் உயிர் பெற்று விடும். பின் அதே கீகளை அழுத்தினால் போதும் நின்று விடும்
மென்பொருள்
சுட்டி
மைக்ரோசாப்ட் வேர்ட் டெம்ப்ளேட் கோப்புகள் பெற சில இணையத்தளங்கள்
வலைத்தளச் சுட்டி
வலைத்தளச் சுட்டி
உங்கள் தட்டச்சு வேகத்தை இன்னும் அதிகப்படுத்த ஒரு மென்பொருள். இந்த மென்பொருளில் நீங்கள் தட்டச்சு செய்து பழிகினால் உங்கள் தட்டச்சு வேகம் இன்னும் மெருகேறும். இதில் நீங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்து உள்ள டெக்ஸ்ட் கோப்புகளை Import அதை தட்டச்சு செய்து பழகலாம். இந்த மென்பொருளை நிறுவ வேண்டிய அவசியமில்லை நேரடியாக இயக்கலாம்.
மென்பொருள்
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே நான் ஏதாவது படம் வாங்கினால் முதலில் அதை ரிப் செய்து கணிணியில் சேமித்து வைத்துவிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பேன். ஏன் என்றால் படத்தை ரிப் செய்தால் கணிணியில் இடம் அடைக்காமலும் இருக்கும் அத்துடன் டிவிடியின் தரம் குறையாமாலும் இருக்கும் அதனால்தான் RIP செய்வேன்.
அதற்கு எப்போழுதும் நான் Winx DVD Rip என்ற மென்பொருளையே பயன்படுத்தி வருவேன் அது காசு கொடுத்து வாங்கியது. அந்த மென்பொருளை அந்த நிறுவனத்தினர் செப்டம்பர் 15ல் இருந்து செப்டம்பர் 30 வரை அரை மாதம் இலவசமாக தருகின்றனர். நேரடியாக தரவிறக்கிக் கொள்ளலாம்
விண் எக்ஸ் டிவிடி ரிப் தரவிறக்க சுட்டி
இனிமேல் பேஸ்புக்கில் உங்கள் மெயில் ஐடி முழுவதும் கொடுத்து நுழைய தேவையில்லை @ முன்னால் இருக்கும் ஐடி மட்டும் கொடுத்து நுழையலாம்.
உங்கள் போட்டோக்களை கையால் வரைந்த ஒவியம் போல் மாற்ற இந்த தளம் உதவும்.
சுட்டி
ஏவிரி வலை நிறுவனம் ஆன்லைனில் ஒலி கோப்புகளை எடிட் செய்ய வலைமனை ஆரம்பித்திருக்கிறார்கள். ஐந்து நிமிடக் கோப்புகளை மட்டுமே எடிட் செய்ய இயலும்.
வலைச்சுட்டி
நீங்கள் பிறந்து எத்தனை வருடங்கள் ஆனது தெரியும் நாட்கள் கூட கணக்கு போட்டு விடலாம். ஆனால் எத்தனை மணி நேரம் நிமிடங்கள் நொடிகள் எவ்வாறு இவ்வளவு பெரிய கணக்கை போடுவது இதற்கு உதவுகிறது. வயது கணக்கு மென்பொருள் AGE Calculator மென்பொருள்
சுட்டி
சிலர் ஒவ்வொரு முறையும் கோப்புகள் திறக்கும் பொழுது Recent Documents என்ற இடத்தில் சேமித்து வைக்கும். இதை நீக்க நாம் டாஸ்க் பாரில் ஏதாவது ஒரு இடத்தில் வலது கிளிக் செய்து அதில் பிராப்பர்டிஸ் தேர்வு செய்து அதில் Start menu தேர்வு செய்து அதில் Customize தேர்வு செய்து அதில் Clear என்ற பொத்தானை அமுக்கி நீக்குவோம். அதையே ஒரு கிளிக் செய்து நீக்க இந்த மென்பொருள். இந்த மென்பொருளை நிறுவிய பிறகு Start > Programs > Blast Documents சென்று இந்த ஷார்ட்கட்டினை Quick Launchல் இழுத்து விடுங்கள் போதும். பிறகு ஒவ்வொரு முறையும் Quick Launchல் Blast Documents கிளிக் செய்வதன் மூலம் Recent Documents நீக்கப்படும். மென்பொருள்
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே நிறைய வேலைகள் உங்களுக்கு சில டிப்ஸ்கள் மட்டும் இன்று
உங்கள் கணிணியில் விண்டோஸ் எக்ஸ்பி நிறுவியிருந்தால் Start மெனு கிளிக் செய்து அதில் Run என்பதை தேர்வு செய்யுங்கள்
அதில் ஒரு புள்ளி Dot வைத்து என்டர் தட்டினால் நீங்கள் எந்த யூசராக நுழைந்தீர்களோ அதன் போல்டர் திறக்கும்.
இரண்டு புள்ளி வைத்தால் டாக்குமென்ட்ஸ் அன்ட் செட்டிங்க்ஸ் Documents and Settings போல்டர் திறக்கும்.
மூன்று புள்ளி வைத்து என்டர் தட்டினால் My Computer மை கம்ப்யூட்டர் திறக்கும்.
வெறும்
\ பேக் ஸ்லாஷ் கொடுத்து என்டர் தட்டினால் உங்களுடைய C ட்ரைவ் திறக்கும்.
படங்களை பார்த்தால் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
கணிணியில் பழக ஆரம்பித்த விளையாட்டுகளில் முதல் விளையாட்டு Mario மற்றும் Dave என்பதுதான் இது இரண்டும் எனக்கு மிகவும் பிடிக்கும். இது போன்ற விளையாட்டுகளை இன்றும் விரும்பி விளையாடி வருகிறார்கள் என்பதுதான் முக்கிய விஷயம். அவர்களுக்காக தரவிறக்க பழைய டாஸ் விளையாட்டுக்களை தரவிறக்க சில இணையத்தளங்கள்.
Abandonia
Dos Museum
Wikipedia Dos Games
Remain Play
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே இன்று சர்வதேச எழுத்தறிவு தினம் படிக்கத் தெரிந்தவர்கள் தெரியதாவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். உங்களுக்கு தெரிந்தவைகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். 1965ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி தெஹ்ரான் நகரில் உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம் மகாநாட்டில் உலகளாவிய ரீதியில் எழுத்தறிவின்மையால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமுகமாக பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு நாளாக அனுசரிக்க வேண்டும். அனைவருக்கும் எழுத்தறிவு தின வாழ்த்துக்கள்.
நாம் யூட்யுபிலிருந்து தரவிறக்கும் வீடியோ கோப்புகள் முழு படங்களை பிரித்து தரவிறக்கம் செய்து இருப்போம். அதை தனித்தனியாக பார்த்தால் படம் பார்த்த மாதிரி இருக்காது. அதற்கு என்ன செய்வது அனைத்து வீடியோ கோப்புகளையும் ஒன்று சேர்க்க வேண்டும். அதற்கு மென்பொருள் காசு கொடுத்து வாங்க வேண்டுமே. அதுவும் அதிகமாக இருக்குமே. இலவசமான மென்பொருள் இருக்க கவலை ஏன் பிடியுங்கள் இந்த மென்பொருளை கொண்டு யுட்யுப் மட்டுமல்ல FLV1, VP6F, H264 இது போன்ற பார்மெட்டுகளையும் ஒன்று சேர்க்க முடியும். முழு வீடியோவாக சேர்த்த பிறகு வீடியோ தரமும் நன்றாகவே இருக்கிறது. இந்த மென்பொருளை நிறுவ தேவையில்லை நேரடியாக இயக்கலாம். மென்பொருள் தரவிறக்க சுட்டி
கூகிள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் நிறுவ ஆன்லைனில் இணையத்தில் இருந்து தான் நிறுவ வேண்டும் என்று பலர் நினைத்துக் கொண்டுள்ளனர் இணையம் இல்லாத கணிணியில் கூட குரோம் நிறுவலாம். அதற்கு இணைய நிலையத்திற்கு சென்று அங்கு இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கிக் கொள்ள வேண்டும். அதை ஒரு யுஎஸ்பி பென் ட்ரைவில் சேமித்துக் கொண்டு இணையம் இல்லாத கணிணியில் நிறுவ வேண்டியதுதான். இதன் மூலம் இந்த ஒரு கோப்பைக் கொண்டு பல கணிணியில் குரோம் நிறுவலாம்.
ஆப்லைன் இன்ஸ்டாலர் கூகிள் குரோம்.
சுட்டி
நெருப்பு நரி உலாவி உபயோகிப்பவர்கள் இந்த் ஆடு ஆன் மூலம் பிஎஸ்என்எல் அகண்ட அலைவரிசை இணையம் உபயோகிப்பவர்கள் எவ்வளவு தரவிறக்கம் மற்றும் தரவேற்றம் செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம். ஆடு - ஆன்
சுட்டி
AVI வீடியோ கோப்பு தரவிறக்கி கொண்டிருக்கும் பாதியேலேயே இணையம் விட்டு போய் விடும். அந்த கோப்பு ரிப்பேர் ஆகிவிடும். அந்த கோப்பினை இயக்கி படம் பார்க்க இயலாது. அப்படியே இயங்கினாலும் உங்களால் முன்னால் பின்னால் ஒட்ட இயலாது அது போன்ற கோப்புகளை இந்த சிறிய மென்பொருள் மூலம் சரி செய்ய முடியும். மென்பொருள்
சுட்டி
நண்பர்கள் அனைவரும் சில பல விளம்பரங்களை கிளிக் செய்து எனக்கு உதவும்படி கேட்டுக் கொள்கின்றனர்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே உங்கள் கணிணியில் வைத்திருக்கும் எழுத்துருக்களை காண்பதற்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த மென்பொருள் வெவ்வேறு அளவுகளில் உங்கள் எழுத்துருவை காண்பிக்கிறது. இந்த மென்பொருளில் உங்கள் எழுத்துருவை Bold, Italics, Underline செய்தால் எப்படியிருக்கும் என்பதையும் இதன் மூலம் பார்க்க முடியும். மென்பொருள் சுட்டி
நீங்கள் இணையம் வழியாக அடிக்கடி தரவிறக்கம் செய்யக்கூடியவரா அதுவும் முக்கியாமாக கீழ்கண்ட தளங்களில் அடிக்கடி தரவிறக்கம் செய்பவரா
Bitroad.net, DepositFiles.com, EasyShare.com, FileFactory.com, Hotfile.com, Klurk.com, Letitbit.net, Load.to, MegaUpload.com, Rapidshare.com, SendSpace.com, Uploading.com and zShare.net அப்படியென்றால் உங்களுக்குதான் பிடியுங்கள் இந்த மென்பொருளை
சுட்டி
படிக்கும் அனைவருக்கும் ஒர் வேண்டுகோள் தாங்கள் சில பல விளம்பரங்களை கிளிக் செய்தால் இன்னும் நிறைய உற்சாகம் கிடைக்கும் நண்பர்களே உதவுங்கள்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே வேலை பளு காரணமாக இரண்டு நாட்களாக கடைப்பக்கம் வர முடியவில்லை என்ன ஆனாலும் சரி ஒரு பதிவு போட்டு விடுவோம் என்று இன்று உடனே வந்து விட்டேன்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தினர் விண்டோஸ் 7 இன்னும் முழுமையாக வெளியிடவில்லை அதற்குள் விண்டோஸ் 8 ன் வேலைகளை ஆரம்பித்து விட்டனர். 2012 மத்தியில் வெளிவரும் என்று தகவல்.
விஎல்சி மீடியா ப்ளேயரின் புதிய பதிப்பு 1.0 வெளிவந்து விட்டது. இதில் நிறைய குறைகள் களையப்பட்டு வெளிவந்துள்ளது. தரவிறக்கி நிறுவி செயல்படுத்தி பாருங்கள். விஎல்சி தரவிறக்க சுட்டி
விஎல்சி இணையத்தளம் சுட்டி
பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவ்களை இந்த முறையில் பார்மெட் செய்து பாருங்கள் கட்டாயம் கைமேல் பலன் கிடைக்கும்.
முதலில் ஸ்டார்ட் மெனு Start Menu கிளிக் செய்யுங்கள்.
ரன் Run தேர்வு செய்யுங்கள். அந்த பெட்டியில் CMD என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள்.
பிறகு
Format/x J: என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள். இதில் J: என்பது உங்கள் யுஎஸ்பி ட்ரைவின் எழுத்தாகும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...