நண்பர்களே யுஎஸ்பி ட்ரைவ் மற்றும் யுஎஸ்பி சம்பந்தப்பட்ட பொருட்களை
நிறுத்துவதற்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். இது ஒரு
திறந்த நிலை மென்பொருள் என்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது. அத்துடன் இது
விண்டோஸ் அனைத்திலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.. இதை
இன்னும் மேம்படுத்த நினைப்பவர்கள் இவர்கள் தளத்தில் இருந்து Source Code
எடுத்து மாற்றங்கள் செய்தும் கொள்ளலாம். இந்த மென்பொருள் வெறும் 1
எம்பிக்குள் அடங்கிவிடும். அத்துடன் இது ஒரு போர்ட்டபிள் மென்பொருளாகும்.
இந்த மென்பொருளின் பெயர் USB Disk Ejector இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
இன்று மொபைல் போன்கள் இல்லாதவர்களை பார்ப்பது அரிதான ஒன்றாக இருக்கும்
நேரத்தில் இதுவரை வெளிவந்த மொபைல் போன்களில் தவிர்க்க முடியாத இடத்தை
பிடித்த மொபைல் போன்கள் குறித்த வரலாற்று தகவலகள் இந்த புகைப்படத்தில்
உள்ளது. இதில் 1973ல் வெளிவந்த மொபைலில் இருந்து தற்பொழுது வெளியான
எல்ஜியின் 3டி ஸ்மார்ட் போன் வரை பட்டியலிடப்பட்டுள்ளது. 1999ல் வெளி
வந்த 3210 மொபைல் எனக்கு பிடித்த மாடலாகும்.
இப்பொழுதுதான் பயர்பாக்ஸின் உலாவி புதுப்பிக்கப்பட்டு Firefox 8.0
வெளிவந்தது. அதற்குள் அடுத்த பதிப்பு வெளியிட தயாராகி வருகிறது பயர்பாக்ஸ்
நிறுவனம். அடுத்த Firefox 9.0 பீட்டா வெர்சனை உபயோகித்து பார்க்க சுட்டி இது ஒரு பீட்டா வெர்சன் என்பதினை மனதில் கொண்டு தரவிறக்கம் செய்து உபயோகப்படுத்தவும்.
நவம்பர் பதினைந்து என் வாழ்வில் மறக்கவே முடியாத நாள் நான் மிகவும்
எதிர்பார்த்த விசயம் நடந்தேறிய நாள் அன்று என்ன நாள் என்று நினைக்கீறீர்கள்
போன வருடம் நவம்பர் 15 2010 அன்று எனக்கு பெண் குழந்தை வடிவில் தேவதை
அவதரித்த நாள் ஆம் என் பெண்ணின் முதல் வருட பிறந்தநாள் நண்பர்களின்
ஆசிர்வாதமும் வாழ்த்துக்களும் என் பெண்ணை இந்த உலகில் தைரியத்துடன்
மகிழ்ச்சியுடனும் வாழ வைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அண்ணனும் தங்கையும் எவ்வளவு மகிழ்வாக இருக்கும் புகைப்படம் இவர்களுக்காகவே என் அனைத்து கஷ்டங்களையும் தாங்கும் பக்குவம் வந்துவிட்டது.
படங்களை பெரிதாக பார்க்க கிளிக் செய்து பார்க்கவும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே தீபாவளிக்கு எல்லாரும் புதிய துணிகள் பட்டாசுகள் வாங்கியாச்சா
குழந்தைகளை பத்திரமாக பட்டாசுகளை வெடிக்க சொல்லுங்க. தீபாவாளியன்று வெடி
வெடிக்கும் பொழுது மேற்கொள்ள வேண்டிய பாதுகப்பு வழிமுறைகள் கீழே
கொடுத்துள்ளேன் அதன்படி பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுங்கள். இனி
பதிவுகள்
நீங்கள் உங்கள் பழைய நண்பருக்கோ உறவினருக்கோ மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள்.
அந்த மின்னஞ்சல் அனுப்பிய அடுத்த் நிமிடம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே
அனுப்பிய மின்னஞ்சல் முகவரி தவறேன்று திரும்ப வந்து விட்டால் என்ன
செய்வீர்கள். அப்படி வராமல் இருக்க முடிந்தவரை பழைய மின்னஞ்சல்
உபயோகிக்கும் முன் இந்த வலைத்தளம் சென்று இந்த முகவரி வேலை செய்கிறதா என்று
தெரிந்து கொள்ளுங்கள்.
எந்த ஒரு மின்னஞ்சல் முகவரியும் சுலபமாக வேலை செய்கிறதா என்று கண்டறிய
வலைத்தளச் சுட்டி
டாம்ப் ரைடர் என்ற விளையாட்டினையும் அதன்பிறகு வந்த படத்தினையும் யாரும்
மறக்க முடியாது. அந்த விளையாட்டின் உயர்தர வால்பேப்பர்கள் (High
Resolution Wallpapers) உங்களுக்காக சில Tomb Raider Game Wallpapers
நீங்கள் உங்கள் கணினியில் ஒரு போல்டர் உருவாக்கி வைத்திருக்கிருக்கிறீர்கள்
அந்த போல்டரில் ஆயிரக்கணக்கான எம்பி3 பாடல்கள் அல்லது கோப்புகள்
இருக்கிறது இந்த ஆயிரக்கணக்கான கோப்புகளின் பெயர்களை பிரிண்ட் எடுக்க
வேண்டுமானல் நீங்கள் ஒவ்வொரு கோப்பின் பெயரையும் நோட்பேடில் டைப் செய்து
அதை பிரிண்ட் எடுக்க வேண்டும். இதையே நீங்கள் டாஸ் மோடில் சுலபமாக செய்ய
முடியும். எப்படி என்றால்
Start மெனு கிளிக் செய்து அதில் ரன் கட்டளையை தேர்வு செய்யுங்கள்.
அதில் தோன்றும் பெட்டியில் CMD என்று டைப் செய்து என்டர் செய்யுங்கள்.
பிறகு எந்த போல்டர் வேண்டுமோ அந்த போல்டருக்குள் சென்று dir > print.txt
அல்ல்து உங்களுக்கு பிடித்தெ பெயர் கொடுத்து பிரிண்ட் எடுங்கள் முடிந்தது.
ஆனால் இதில் உங்களால் எட்டு எழுத்துக்கள் உள்ள கோப்புகளின் பெயர்கள்
முழுதாக கிடைக்கும் அதற்கு மேல் இருந்தால் 12345678~.exe இப்படிதான்
இருக்கும்.
இதை விண்டோஸில் சுலபமாக இந்த மென்பொருள் மூலம் தெளிவாகவும் பிரிண்ட் எடுக்க முடியும்..
அதற்கு இந்த மென்பொருளை உபயோகியுங்கள்.
சுட்டி
போன வருட தீபாவளிக்கு வெளியூரில் இருந்ததால் பதிவு போட இயலவில்லை. அதற்கு முந்தைய வருடம் தீபாவளிக்கு வெளியிட்ட பதிவு
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். பாதுகாப்பான தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்.
» Read More...
நண்பர்களே இன்டிப்ளாக்கரின் 2வது கலந்துரையாடல் சென்னையில் Hyatt Residency
Hotel ல் கோலகலமாக நடந்து முடிந்தது. அங்கு என் கேமரா மொபைல் மூலம்
எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
தமிழ்பதிவர்கள் ஜாக்கிசேகர், அடலேறு, கேபிள்ஷங்கர், அதிஷா, யுவகிருஷ்ணா, வலைமனை சுகுமார் சுவாமிநாதன் போன்ற பல பதிவுலக ஜாம்பாவான்கள் மத்தியில் நானும் கலந்து கொண்டேன் என்பதில் பெருமையாக இருக்கிறது.
நல்ல மாலை உணவும் கலந்து கொண்ட பதிவர்கள் அனைவருக்கும் ஒரு இலவச டி ஷர்ட்
வழங்கிய இன்டிப்ளாக்கர்கும் TATA Grande நிறுவனத்தினர் அவர்களுக்கும்
நன்றி. இந்த விழாவில் சென்னை பதிவர்கள் மட்டுமல்லாமல் பெங்களூர்,
ராஜஸ்தான், டெல்லி போன்ற வட நாட்டு பதிவர்களும் கலந்து கொண்டது
இன்டிப்ளாக்கரின் ஒற்றுமையை காட்டுகிறது.
புதிய தமிழ் பதிவர்கள்
www.indiblogger.in
சென்று தங்களை ரெஜிஸ்டர் செய்து கொண்டால் அடுத்த முறை கலந்துரையாடல்
ஏற்பாடு செய்யும் பொழுது இன்னும் அதிகமான தமிழ் பதிவர்களை இன்டிப்ளாக்கர்
கலந்துரையாடலில் காண முடியும்.
படங்கள் அனைத்தும் என்னுடைய மொபைல் Nokia 5130 Xpress Music மூலம் எடுக்கப்பட்டது.
நன்றி மீண்டும் வருகிறேன்.
» Read More...