யுஎஸ்பி கருவிகளை பாதுகாப்பாக நிறுத்த மற்றும் கூகிள் நோட்புக் இலவசமாக பெற

நண்பர்களே இப்பொழுது அனைவராலும் உபயோகிக்க கூடியது பென் ட்ரவை எனப்படுவது.  இந்த பென் ட்ரைவை நிறைய பேர் சரியாக கையாளுவதில்லை.  பென்ட்ரைவை முறையாக நிறுத்தாமல் கணினியில் இருந்து எடுப்பதால் உங்கள் பென்ட்ரைவில் வைத்துள்ள டேட்டாக்கள் எடுக்கமுடியாமல் போகலாம்.  அல்லது உங்கள் பென்ட்ரைவே செயலழிந்து போகலாம்.

இதனால் என்ன ஆகும் முக்கிய அலுவலக கோப்புகளின் பேக் - அப் அதில் வைத்திருப்போம்.  இதனால் அவசர அவசரமாக பென் ட்ரைவை உருவும் போது பென்ட்ரைவ் செயலிழந்து போய்விடும் அபாயம் உள்ளது. 

உங்கள் கணினியில் உபயோகிக்கும் எந்த ஒரு யுஎஸ்பி கருவியையும் பாதுகாப்பாக நிறுத்த இந்த மென்பொருள் உதவிடும்.  மற்ற மென்பொருள்களை காட்டிலும் இதில் பயன்கள் அதிகம்.   அப்படி என்ன பயன்கள் உள்ளது இந்த மென்பொருளில்.  இந்த மென்பொருளில் நீங்கள் ஒரு பென்ட்ரைவினை செருகியிருக்கீர்கள் என்றால் அந்த பென்ட்ரைவில் எவ்வளவு மீதம் இடம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.  பென்ட்ரைவின் பெயரை மாற்றிக் கொள்ளும் வசதி.   ஒரே நேரத்தில் அனைத்து யுஎஸ்பி கருவிகளை நிறுத்தும் வசதி.  இது போன்று நிறைய வசதிகள் உண்டு.
 
இந்த மென்பொருள் ஒரு சட்டரீதியான மென்பொருள்.  அதாவது மென்பொருளை தயாரித்து வெளியிட்ட நிறுவனமே இலவசமாக கொடுக்கிறது.  இதற்கு நீங்கள் ஒரு படிவத்தினை பூர்த்தி செய்தால் போதும்.  இந்த படிவத்தில் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும்.  தேவை எனின் உங்களுடைய சந்தேகங்களை கீழுள்ள பெட்டியில் டைப் செய்து அனுப்பினால் அந்த கேள்விக்கான விடையை உங்களுக்கு மின்னஞ்சல் செய்வர்.   இந்த படிவத்தினை பூர்த்தி செய்த அடுத்த ஐந்தாவது நிமிடம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இந்த மென்பொருளின் உரிமத்தினை உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.  ஆனால் இந்நிறுவனம் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 7 வரை மட்டுமே கொடுத்திருந்தனர்.  ஆனால் இப்பொழுதும் கூட தரவிறக்க வழி செய்திருக்கின்றனர்.

மென்பொருளின் உரிமம் பெற சுட்டி

மென்பொருளை தரவிறக்க சுட்டி



ஐ கேர் கோப்புகளை மீட்டெடுக்கும் மென்பொருள்

ஐகேர் கோப்புகளை மீட்டெடுக்கும் கருவி குறித்து சில மாதங்களுக்கு முன்பு ஒரு பதிவில் கொடுத்திருந்தேன்.  அந்த மென்பொருள் இப்பொழுதும் இலவசமாக தர முடிவு செய்து தருகிறார்கள்.  முந்தைய ஐகேர் குறித்த பதிவின் சுட்டி

இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

மென்பொருளை தரவிறக்கி நிறுவிய பின் Activate பட்டனை அழுத்தி CG7332343A7XEOUD3EHH4AIL2WSB4G9F  இந்த சீரியலை கொடுத்திடவும்.  சீரியலின் முன்னே பின்னே ஸ்பேஸ் எதுவும் கொடுக்கவேண்டாம்.  இணையத்தின் வழியாக உங்கள் ஆக்டிவேசனை உறுதி செய்யப்படும்.  இந்த ஆக்டிவேசன் கோடு டிசம்பர் 25 அதாவது வருகிற கிறிஸ்துமஸ் வரை மட்டுமே செயல்படும்.   அதற்கள் ஆக்டிவேசன் செய்தால் மட்டுமே உங்களுக்கு முழு வெர்சனாக செயல்படும்.

உங்களுக்கு பிடித்த வால்பேப்பர்கள் தரவிற்க்க இலவச தளங்கள் உங்களுக்காக ஐந்து

நேசனல் கிராபிக் வால்பேப்பர்கள் தளம் மிக அருமையான தளம் இது

விண்டோஸ் தீம்ஸ் குறித்த தளம் இதுவும் நிறைய வால்பேப்பர்களை தன்னகத்தே கொண்டது

வால்பேப்பர் ஸ்டாக்

நாஸா விஞ்ஞான பிரியர்களுக்கான இலவச வால்பேப்பர்கள் தளம்.

போர்ஸ்ச் /  Porche  கார்களின் அணிவகுப்பு வால்பேப்பர்கள்.

வால்பேஸ் இந்த தளத்தில் 350000 மேற்பட்ட வால்பேப்பர்கள் கொண்டது




கூகிளினால் வழங்கப்படும் இலவச நோட்புக்

அமெரிக்காவில் உள்ள தமிழர்களுக்கு ஒர் அரிய வாய்ப்பு இலவச கூகிள் குரோம் ஒஎஸ் கொண்ட நோட்புக் இலவசமாக வேண்டுமா.  கூகிள் நிறுவனத்தினர் இந்த அரிய வாய்ப்பினை ஏற்படுத்தி தந்திருக்கின்றனர்.  இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த படிவத்தினை பூர்த்தி செய்தால் போதுமானது.  அத்துடன் மிக முக்கியமான விஷயம் நீங்கள் கட்டாயம் அமெரிக்காவில் குடியிருந்தால் கூகிள் குரோம் நோட்புக் பெற வாய்ப்பு உள்ளது.  அவர்கள் மிகவும் குறைந்த அளவிலான நோட்புக் மட்டுமே தருவதாக கூறியுள்ளனர்.  உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் உங்களுக்கு கிடைக்கும்.

படிவத்தினை பூர்த்தி செய்ய சுட்டி

இந்த நோட்புக்கின் படங்கள் கீழே


 உங்கள் ஓட்டுக்கள் என்னை பலபேருக்கு அறியச்செய்யும் தமிழ்மணம் தமிழிசில் திரட்டிகளில் ஒட்டு போடுங்கள்.  உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டமிடுங்கள்.  உங்கள் உறவினர்களுக்கும் இந்த தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

அவுட் போஸ்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி மற்றும் புதிய முகம் கொண்ட டொரண்ட் கிளையன்ட்

நண்பர்களே நம் கணினியில் ஆன்டிவைரஸ் வேண்டும் என்றால் முதலில் நம் கணினியில் குறைந்த பட்சம் 512 எம்பி நினைவகம் வேண்டும் அதோடு ப்ரோஸசர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மேல் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நம் கணினியில்  ஆன்டிவைரஸால்  வேலை செய்ய இயலும் 512 எம்பி நினைவகம் நம் பென்டியம் 4 வகைகளில் மட்டுமே அப்கிரேடு செய்ய இயலும் அதோடு அந்த வகை கணினிகளுக்கு மட்டுமே நினைவகங்கள் மார்கெட்டுகளிலும் கிடைக்கிறது அப்பொழுது பென்டியம் 3 மற்றும் அதற்கு முந்தைய கணிகளில் விண்டோஸ் எக்ஸ்பி நிறுவி விட முடியும் ஆனால் ஆன்டி வைரஸ் நிறுவினால் உங்கள் கணினியில் நினைவகத்தை மேம்படுத்துங்கள் என்று பிழைச்சொல் வரும்.  சரி இது போன்ற பயனர்களுக்காகவே ஒரு ஆன்டி வைரஸ் உள்ளது.  அதுவும் ஒரு வருட சட்டரீதியான இலவச உரிமத்துடன் தந்தால் யாராவாது வேண்டாம் என்று சொல்வீர்களா?  யாரும் சொல்ல மாட்டீர்கள்.  இன்னும் பென்டியம் 3 வகை கணினிகள் உபயோகிக்கும் நண்பர்களையும் வாசகர்களையும் எனக்கும் உங்களுக்கும் தெரியும்.
அவர்களுக்காக இந்த மென்பொருள்.   இந்த மென்பொருள் மற்ற ஆன்டி வைரஸக் காட்டிலும் சிறப்பாக செயல்படுகிறது என்பதை மற்ற ஆன்டிவைரஸுடன் சோதித்து பார்க்கப்பட்டதில் இது மிகவும் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மென்பொருள் நிறுவ உங்கள் கணினியில் குறைந்தது 450 மெகாஹெர்ட்ஸ் உள்ள ப்ரோஸசர், 256எம்பி நினைவகம்,  200எம்பி கொள்ளளவுக்கு மேற்பட்ட வன் தட்டு வேண்டும்.  விண்டோஸ் எக்ஸ்பி அதற்கு மேற்பட்ட அனைத்து விண்டோஸ்களிலும் சிறப்பாக செயல்படும்.

இந்த மென்பொருளை தரவிற்க்க சுட்டி


டொரண்ட் வழியாக திரைப்படங்கள் தர விறக்குவோம் அதற்கு நாம் ஒவ்வொரு தடவையும் இணைய உலாவியை திறந்து அதன் வழியாக டொரண்ட் தேடுபொறி வழியாக நமக்கு தேவையான திரைப்படங்களை தேடி அதன் பிறகு அதை தரவிறக்குவோம்.  சில நேரங்களில் அந்த திரைப்படங்களின் தரம் நன்றாக இருக்காது.
 
இவை அனைத்தையும் ஒரே மென்பொருள் வழியாக தேடவும் உயர்தர திரைப்படங்களை தரவிறக்கவும் இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாகவும் சுலபமாகவும் உள்ளது உபயோகித்து பார்த்ததில் மிகவும் பிடித்து போன மென்பொருளாக எனக்கு ஆகிவிட்டது.  இந்த மென்பொருளை நீங்கள் உபயோகித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு  மென்பொருளை தரவிறக்க சுட்டி    இந்த மென்பொருளின் பெயர் ZButterfly.




உங்கள் ஊக்கமே எனக்கு சிறந்த மருந்து இன்ட்லியில் ஓட்டும் பதிவில் பின்னூட்டம் இட்டால் இன்னும் சிறப்பாக எழுத ஊக்கமாக இருக்கும்.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

பிடிஎப் கோப்பிலிருந்து வேர்ட் கோப்பிற்கு மாற்ற மென்பொருள் நிறைய மென்பொருட்கள் உங்களுக்காக

நண்பர்களே உங்களிடம் உள்ள பிடிஎப் கோப்புகளை வேர்ட் கோப்பிற்கு மாற்ற மிகவும் சுலபமான மென்பொருள்  PDF TO Word Converter  இந்த மென்பொருள் சட்டரீதியான மென்பொருள் பாக்ஸாப்ட் நிறுவனத்திலிருந்து வெளி வந்துள்ளது இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே செல்லவும் சுட்டி


உங்கள் கணினியில் உள்ள Vulnerable அதாவது தீங்கு நிரல்கள் மற்றும் பழைய மென்பொருட்கள் காலவாதியான மென்பொருட்கள் மூலம் சில நேரங்களில் உங்கள் கணினி பாதிக்க  வாய்ப்பு உள்ளது அந்த மாதிரி நேரங்களில்  இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணினியை ஆராய்ந்தால் உங்கள் கணினியில் Vulnerable மென்பொருட்கள் மற்றும் கோப்புகளை கண்டறிந்து நீக்கிவிடும்.  இந்த மென்பொருள் பிசிவேர்ல்ட் மற்றும் ஜிடிநெட் பத்திரிக்கை நிறுவனத்தினர் பரிந்துரைத்துள்ளனர்.  மிகவும் வேகமான மற்றும் சுலபமான மென்பொருள் இது ஒவ்வொரு கணினியிலும் இருக்க வேண்டியது என்று கூறியுள்ளார்கள். இந்த மென்பொருளின் பெயர் பிஸிசெக்யூனியா இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி  


இந்த நேரத்தில் ஒரு முக்கிய விஷயத்திற்காக பாரட்ட வேண்டியது உள்ளது.  அதுதான் மைக்ரோசாப்ட் நிறுவனம் துவக்கப்பட்டு சரியாக இந்த வருடத்தோடு 25 வருடம் முடிகிறது.  விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்துதான் விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.  இப்பொழுது விண்டோஸ் 7 வெளியிடப்பட்டு சக்கை போடு போடுகிறது.  அத்துடன் இவர்கள் வெளியிட்ட விண்டோஸ் எம் இ மற்றும் விண்டோஸ் விஸ்டா மட்டுமே தோல்வியுற்றது.

விண்டோஸ் முதல் பதிப்பின் படம் கீழே


அடுத்த மாதம் டிசம்பர் மாதம் கிறிஸ்தவ நண்பர்கள் மட்டுமல்ல உலகெமே எதிர்பார்க்கும்  நன்னாள் கிறிஸ்து அவதரித்த தினம் வர போகிறது.  அனைவரும் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு கட்டாயம் ஒரு பரிசு கொடுப்பீர்கள் பரிசின் மேலே லேபிள் கடைகளில் கிடைக்கும் இருந்தாலும் இந்த வலைத்தளத்தில் இருந்து எடுத்து ஒட்டி பாருங்களேன்  கிறிஸ்துமஸ் லேபிள் எடுக்க சுட்டி


 

நீங்கள் படிக்கும் பதிவு நாலு பேரிடம் செல்ல வேண்டுமென்றால் கட்டாயம் அனைத்திலும் ஒட்டு போடுங்கள் உங்களை போல பலரும் தமிழில் தொழில்நுட்பத்தையும் அரிய வலைத்தளங்களையும் அறிந்து  கொள்ளட்டும்.   ஆகையால் கட்டாயம் ஒட்டு போடவும்.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

மால்வேர்களை கண்டுபிடிக்க காஸ்பர்ஸ்கையின் சட்டரீதியான சூப்பர் மென்பொருள்

நண்பர்களே முதலில் ஒரு நல்ல செய்தி எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.  15-11-2010 திங்கட்கிழமை அன்று இரவு 8:50 க்கு பிறந்தது.  குழந்தை பிறந்தது ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனையில் மிக அருமையான கவனிப்புகள் அரசு மருத்துவமனையில்.  என் மனைவிக்கு பனிக்குடம் ஞாயிறு இரவு 11:30 மணிக்கு உடைந்து விட்டது. அது அவருக்கு தெரியவில்லை.  பனிக்குடம்தான் உடைந்திருக்கிறது என்று  என்  மனைவிக்கு பனிக்குடம் உடைந்திருகிறது என்று தெரிந்தவுடன் பக்கதிலுள்ள தனியார் மருத்துவமனையில்தான் முதலில் சேர்த்தேன் அவர்கள் சிசேரியன் தான் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். 

உடனே என் மனைவி செவிலி தோழி ஒருவர் உடனே ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று கூறினார்.  உடனே நானும் மதியம் ஒரு மணிக்கு மருத்துவமனியில் சேர்த்து விட்டேன்.  அவர்களும் சிசேரியன் தான் செய்ய வேண்டும் என்று கூறினாலும்  அது கடைசி கட்டம் என்றும்  முதலில் உங்கள் மனைவிக்கு இயற்கையான பிரசவ வலி வர மருந்துகள் தருகிறோம் என்று அழைத்து சென்றார்கள். 

அது போல மருந்துகள் கொடுத்த பின் இயற்கையான பிரசவ வலி இரவு 8 மணிக்கு வந்து 8:50 என் பெண் இந்த பூமியில் அவதரித்து விட்டாள்.  மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  இந்த நேரத்தில் என்னுடைய சக பதிவர்கள் செய்த உதவி மிகவும் பெரியது நம் நண்பர் வேலன்  நலம் பெற பிரார்த்திப்போம் வாருங்கள் என்று ஒரு பதிவிட்டு என் குழந்தையும் மனைவியும் நலம் பெற பிரார்த்தித்தார்கள்  இந்த நேரத்தில் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இனி இன்றைய பதிவிற்கு போவோம்.

நம் கணினியில் மால்வேர்கள் வந்தால்  நீங்கள் செய்ய வேண்டியது உடனே இந்த தளத்திற்கு சென்று இந்த மென்பொருளை தரவிறக்குங்கள்.  இந்த மென்பொருள் உங்கள் கணினியை ஸ்கேன் செய்து எங்கு மால்வேர்கள் மற்றும் சந்தேகத்துக்குரிய மால்வேர்கள் இருந்தாலும்.கண்டுபிடித்து கொடுத்துவிடும்.  இந்த மென்பொருள் காஸ்பர்ஸ்கை நிறுவனத்தினரால் தரப்படுவதால் இந்த மென்பொருள் மிகவும் நம்பிக்கையானது.  மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருள் குறித்த வலைப்பக்கம் சுட்டி

உங்களிடம் உள்ள மைக்ரோசாப்ட் வேர்ட் 6.0 முதல் 2010 வரை உள்ள கோப்புகளை மைரோசாப்ட் நிறுவாமல் வெறும் விவர் வழியாக பார்க்க இந்த  Viewer உங்களுக்கு உதவும்.  இதே போல் இவர்கள் எக்ஸல் கோப்புகளை பார்க்கவும் ஒரு மென்பொருள் தந்துள்ளார்கள்.

மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் எக்ஸல் கோப்புகளை வெறும் விவர் வழியாக பார்க்க மற்றும் பிரிண்ட் எடுக்க மட்டும் இதை பயன்படுத்தலாம். மென்பொருள் தரவிறக்க சுட்டி

சில பல விளம்பரங்களை கிளிக் செய்யுங்க நீங்க படிக்கீறீங்க அதுக்கு நாங்க ரொம்ப உழைக்கிறோம் எங்கள் உழைப்பிற்கு உங்களால் முடிந்த கூலி கொடுக்கலாமே. விளம்பரங்களை கிளிக் செய்யுங்க  அதோட ஓட்டும் போட்டுங்க..


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை