நண்பர்களே இப்பொழுதெல்லாம் அனைத்தும் கணினி மயம் வீட்டிலிருந்தபடியே வங்கி பரிவர்த்தனை, மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம் இது போன்று அனைத்து கணினி வழியாக மேற்கொள்ளும் பொழுது சில நேரங்களில் நம் கணினி வழியாக பணம் பரிவர்த்தனை செய்து இருப்போம் பிறகு சிறிது நாட்களுக்கு பிறகு நம் பணம் நம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கும். இவ்வாறு நடப்பது எதனால் சில நேரங்களில் நமது ஆன்டி வைரஸ் மென்பொருள் சரிவர இயங்கமால் தடைப்பட்டிருக்கும் காலங்களில் ஏதாவது ஒரு இணையத்தளம் வழியாக நம் கணினிக்கு கீலாகர் மென்பொருள் நிறுவப்பட்டிருக்கும். இதன் வேலை என்ன தெரியுமா. நம் கணினியில் நாம் தட்டச்சு செய்யும் அனைத்தையும் ஒரு காப்பி எடுத்து அனுப்பிக் கொண்டிருக்கும் இதை நிறுவிய நபருக்கு இதனால்தான் நாம் வங்கி பரிவர்த்தனை செய்தவுடன் நம் வங்கி கணக்கின் முழு தகவல்களையும் சேமித்து அதன் மூலம் அவர்கள் நம் கணக்கிலிருந்து பணம் எடுத்து விடுவார்கள். இது போல நடக்காமல் இருக்க ஆன்டி கீ லாகர் மென்பொருள் உபயோகிக்கலாம். இதற்கான சட்டரீதியான இலவச மென்பொருள் Zemana நிறுவனத்தினர் தருகிறார்கள். இந்த சட்டரீதியான இலவச சலுகை எத்தனை நாள் நீடிக்கும் என்று தெரியவில்லை இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கும் என்று தெரிகிறது. முடிந்தவரை தரவிற்க்கிக் கொள்ளுங்கள்.
மென்பொருளை நேரடியாக தரவிறக்க
சுட்டி
மென்பொருளை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இணைய தள
சுட்டி
ஒலி ஐகான் மாற்ற
உங்கள் கணினியில் ஒலியை குறைக்கும் ஐகான் விண்டோஸில் இணைந்து வரும் ஒரே மாதிரி பார்த்து போரடித்து போயிருக்கும் .
இணையத்தள
சுட்டி
இந்த வலைத்தளத்தில் நமக்கு தேவையான ஐகானை தேர்ந்தெடுத்து அந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவினால் போதும். உங்கள் ஒலியை குறைக்கும் ஐகான் விண்டோஸில் மாறியிருக்கும்.
விண்டோஸ் சிடி கீ சிடிக்குள்ளே இருக்கிறது
உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி சிடி ஒரிஜினல் இருக்கிறது அதனுடைய ப்ரோடக்ட் ( சிடி) கீ தொலைந்துவிட்டதா கவலை வேண்டாம். அதை மீட்டெடுக்க எளிய வழி உள்ளது. அந்த விண்டோஸ் சிடியை வேறொரு சிஸ்டத்தின் சிடி ட்ரைவில் போடுங்கள். பிறகு மை கம்ப்யூட்டர் சென்று அங்கு அந்த சிடியை எக்ஸ்ப்ளோரர் வழியாக திறக்கவும். பிறகு அதற்குள் i386 போல்டரினுள் சென்று Unattend.txt என்ற கோப்பினை திறக்கவும் பிறகு அந்த கோப்பின் கீழே கடைசியாக செல்லுங்கள் அங்கு அந்த சிடிக்கான கீ இருக்கும் குறித்துக் கொண்டு உபயோகப்படுத்துங்கள். ( இந்த குறிப்பு ஏற்கனவே எழுதி ட்ராப்டில் இருந்தது இன்று காலை தினமலரில் பார்த்தவுடன் ஞாபகம் வந்து இன்றைய பதிவுடன் சேர்த்துவிட்டேன்.)
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே இன்று விளையாட்டு மென்பொருள் தருகிறேன். சட்டரீதியான இலவசமான மென்பொருள் என்பது இதன் சிறப்பு. இதன் சலுகை எத்தனை நாள் நீடிக்கும் என்பது தெரியாது. அதனால் கூடுமானவரை உடனே தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
Ferrari Virtual Race - பெர்ராரி விர்ச்சுவல் ரேஸ்
விளையாட்டு மென்பொருள் தரவிறக்க
சுட்டி
உங்கள் கணிணியில் உள்ள வலை உலாவிகளில் தேவையில்லாமல் நிறைய டூல்பார்கள் நிறுவப்பட்டிருக்கும் உதாரணத்திற்கு யாகூ கூகிள் போன்ற டூல்பார்கள். இதனால் நமக்கு பயன் இருந்தாலும் சில குறைகளும் உள்ளது. மானிட்டர் திரை மிகவும் சிறியதாக இருக்கும் இதனால் நம் படிக்கும் வலைத்தளங்கள் குறைவான அளவிலே தெரியும். இது போன்ற டூல்பார்களை நீக்க வேண்டுமென்றால் அந்த வலை உலாவி திற்ந்துதான் நீக்க வேண்டும். அவ்வாறு வலை உலாவியை திறக்கமாலே டூல்பாரை நீக்க இந்த மென்பொருள் உபயோகப்படும். இந்த மென்பொருளின் அளவு வெறு 507 கேபி மட்டுமே. மென்பொருள் தரவிறக்க
சுட்டி
சில நேரங்களில் உங்கள் சிடி/டிவிடி ட்ரைவை திறக்க முயற்சி செய்தால் திறக்காமல் அடம் பிடிக்கும் அப்பொழுது என்ன செய்வது. சில நேரங்களில் Eject பட்டன் பழுதடைந்து இருக்கலாம். அதனால் உங்கள் கணிணி My Computer திறந்து அதில் சிடி/டிவிடி ட்ரைவ் மீது வலது கிளிக் செய்து Eject செய்யுங்கள். அப்படியும் வரவில்லையெனில் உங்களிடம் ஜெம்கிளிப் உள்ளதா அதை கீழுள்ள படம் போல் நேராக நீட்டிக் கொள்ளுங்கள் உங்கள் சிடி/டிவிடி ட்ரைவில் திறக்கும் பகுதி அருகிள் ஒரு துளை இருக்கும் அதில் உள்ளே விட்டு சிறிது அழுத்தம் கொடுத்து அழுத்தினால் திறந்து விடும். மறுபடியும் உபயோகப்படுத்திய பிறகு அதில் ஏதாவது ஒரு உபயோகமில்லாத சிடி போட்டு வைத்தால் அடுத்த முறை சுலபமாக திறந்து விடலாம்.
ரீப்ரொபைலர் - Reprofiler
உங்கள் கணினியில் சில நேரம் இரவு வெகுநேரம் வரை கஷ்டப்பட்டு உழைத்து பதிவு அடித்து காலையில் வெளியிடலாம் என்று உங்கள் My Documents போல்டரில் சேமித்து வைத்திருப்பீர்கள். காலையில் வந்து கணினியை ஆன் செய்தால் எப்பொழுதும் போல உள்ளே போகும் ஆனால் டெஸ்க்டாப் மற்றும் மை டாகுமென்ட்ஸ் அனைத்தும் காணாமால் போயிருந்தால் என்ன செய்வீர்கள். அடடா எல்லாம் போச்சே என்ன வைரஸ் வந்ததோ என்று தான் நினைப்பீர்கள். நான் என்ன செய்தேன் தெரியுமா முதலில் என்னுடைய கணினியின் சி ட்ரைவை திறந்தேன். பிறகு அங்கு Documents and Settings திறந்து பார்த்தால் என்னுடைய பெயரிலேயே இரண்டு போல்டர்கள் திறந்து பார்த்தால் தற்போது உள்ளே நுழைந்து இருக்கும் போல்டர் ஒன்று இன்னொன்று நம்முடைய காணமால் போன உண்மையான போல்டர் ஒன்று. அந்த போல்டரை எப்படி மீட்டெடுத்து நம் கணினி நம்முடைய லாகினுக்கு கொண்டு வர இந்த மென்பொருள்
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே கணிணி வாங்குகின்ற அத்தனை பேரும் உண்மையான மென்பொருளை காசு கொடுத்து வாங்குவதில்லை எல்லாமே உடைக்கப்பட்ட மென்பொருள் அதாவது Cracked Softwares மட்டுமே உபயோகபடுத்துகின்றனர். அது அந்த நிறுவனத்திற்கு எவ்வித இழப்புகளை ஏற்படுத்தும் ஆனால் அவர்களாகவே சில நேரங்களில் இதை தடுப்பதற்காக ஒரு நாள் அலல்து ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் என்று வருடத்தில் ஒரு முறையாவது அந்த மென்பொருளை முழு உபயோகத்துடன் கூடிய மென்பொருட்களை இலவசமாக அளிக்கின்றனர். அந்த நேரம் தெரிந்தால் எத்தனை பேர் அதை தரவிறக்கி உபயோகபடுத்துவார்கள் அதன் மூலம் அந்த மென்பொருள் அவர்களுக்கு திருப்தி அளித்தால் ஏதாவது மென்கொடை அளிக்க மாட்டார்களா என்று ஒரு எதிர்பார்ப்புதான்.
அது போலதான் எந்த மென்பொருள் புதியதாக தெரிந்தாலும் படித்தாலும் அது நம் தமிழ் மக்களுக்கு பயன்படட்டுமே என்று முடிந்தவரை உபயோகப்படுத்தி அவர்களுக்கு பதிவுகள் மூலமாக தெரிவித்து வருகின்றேன். ஆனால் இது வரை ஒரு வரும் கொடை அளித்ததில்லை என்பது வேறு விஷயம் ஆனால் குறைந்த பட்சம் ஒரு பின்னூட்டம் என்ற ஊக்கத்தையாவது அளிக்கலாம். ஆனால் அது கூட அளிக்க தயங்குவது ஏன்? என்று புரியவில்லை. இனியாவது படிக்கின்ற நண்பர்கள் கொஞ்சம் விளம்பரங்களை அழுத்தியும் பின்னூட்டங்களை வாரி வழங்கியும் என்னை உற்சாகப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்படுகிறது.
சரி விடுங்கள் எனக்கு ஒவ்வொரு பதிவின்போதும் புலம்புவது வாடிக்கையாக்கி விட்டார்கள். நாம் பதிவிற்கு போவோம். இன்றும் Professional பதிப்புகள் இலவசமாக வழங்குகிறார்கள் ஒ & ஒ நிறுவனத்தினர் அவர்களுக்காக நாம் ஒரு ஓ போடுவோம். அவர்கள் வழங்கும் மென்பொருட்கள் கீழே
O&O Defrag Professional 11
உங்கள் வன் தட்டுக்களை சீராக பராமரிக்க இந்த மென்பொருள் மாதம் ஒரு முறை டிபிராக் செய்தால் நன்றாக் வேலை செய்யும். உங்கள் வன் தட்டில் Bad Sector உருவாகமால் தடுக்க முடியும்.
இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளுக்கான இலவச உரிமம் பெற இங்கே சுட்டி
இங்கு சென்று உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண். நீங்கள் வசிக்கும் நாடு கொடுத்தால் போதும் அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள்ளாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மென்பொருளின் உரிமம் எண் உங்களுக்கு வழங்கப்பட்டு விடும்.
O&O CleverCache 6 Pro
இந்த மென்பொருள் நம்ம CCleaner மாதிரிதான் அதை விட இன்னும் கொஞ்சம் மேம்படுத்தப்பட்டது. இதுவும் மிகவும் உபயோகமான மென்பொருள் உங்கள் கணிணியி டெம்ப் பைல்கள், டைரக்டரிகள், குக்கீஸ், போன்றவை அனைத்தும் நீக்க இது உபயோகப்படும்.
மென்பொருள் தரவிறக்க சுட்டி
(Get the License Link ) உரிமம் பெற இணைய சுட்டி
O&O Safe Erase 2 Pro
இந்த மென்பொருள் உங்கள் கோப்புகளை யார் கைக்கும் கிடைக்காமல் டெலிட் செய்ய உபயோகப்படும்
மென்பொருள் தரவிறக்க சுட்டி
(Get the License Link ) உரிமம் பெற இணைய சுட்டி
விண்டோஸின் உள்புகு திரையை எளிதில் மாற்ற
உங்கள் விண்டோஸ் உள்புகு திரையை மாற்ற இந்த மென்பொருள் மிகவும் பயன்படும்.
மென்பொருள் தரவிறக்க சுட்டி
பத்து எம்பி அளவுள்ள ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் வேண்டுமா உங்களுக்கு இங்கே செல்லுங்க சுட்டி
இது ஒரு லினக்ஸ் அடிப்படையாக இயங்குதளம்
டைனிகோர் லினக்ஸ்
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே சாதரணமாக நீங்கள் டெலிட் செய்யும் கோப்புகள் நேரடியாக உங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லும் அந்த மாதிரி செல்ல வேண்டாம் என்றால் நீங்கள் சில மாற்றங்கள் செய்தால் போதும் நேரடியாக ரீசைக்கிள் பின்னுக்கு செல்லாமல் நீக்கப்படும்.
முதலில் உங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள Recycle Bin ல் வலது கிளிக் தேர்வு அதில் பிராப்பர்டிஸ் தேர்வு செய்யுங்கள். அங்கு "
Do not move files to the Recycle Bin. Remove files immediately when deleted” என்று ஒரு வாசகத்திற்கு முன் ஒரு பெட்டி அதை கிளிக் செய்து விட்டு கீழே Apply OK என்று தேர்வு செய்து வெளியேறுங்கள். இதன் மூலம் நீங்கள் இனி டெலிட் செய்யும் கோப்புகள் ரீசைக்கிள் பின்னில் சேமிக்கப்படாது.
ஒரு வருடத்திற்கான ட்ரென்ட் மைக்ரோ ஆன்டி வைரஸ் தொகுப்பை இலவசமாக சட்டரீதியாக தரவிறக்க இங்கே செல்லுங்கள்
சுட்டி
மேலுள்ள படத்தில் கூறியுள்ள படி எந்த இயங்குதளம் மென்பொருள் வேண்டுமோ தரவிறக்கி பயன்படுத்தலாம். இதற்காக எந்த ஒரு ரெஜிஸ்ட்ரேசன் மற்றும் பணம் எதுவும் கிடையாது.
விளம்பரச் சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...