நண்பர்களே தினமும் வேலையில் பளு அதிகரித்த நிலையில் வாரம் ஒரு பதிவு போடுவது என்பது குதிரைக் கொம்பாகிப் போகி விட்டது. அதனால் புதிய பதிவுகளுக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவுதான் நமது புதிய தளம் நிலைத்திருக்க உதவ போகிறது. இதற்காக செய்ய வேண்டியது சில உதவிகள் மற்றும் ஆதரவுக்கரம் மட்டுமே இது என்னுடைய வேண்டுகோள் மற்றும் விண்ணப்பமும் கூட. கணிணி பற்றி புதியதாக தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு இந்த தளத்தை சுட்டிக் காட்டுங்கள். நம் வலைத்தளம் பற்றி தெரிந்தவர்கள் புதியவர்களுக்கு கூறுங்கள். அத்துடன் மற்ற திரட்டிகளிலும் ஒட்டு போடுங்கள். கூகிளில் விளம்பரங்கள் தமிழ் வலைப்பதிவிற்கு கொடுப்பதே கிடையாது. அவர்களை போன்ற சில இந்திய நிறுவனங்கள் நம் தமிழ் வலைப்பதிவிற்கு விளம்பரங்கள் தந்து உயிர் கொடுத்து வருகின்றனர். அதனால் படிக்க வருகிற அனைவரும் ஒரு விளம்பரத்தையாவது கிளிக் செய்து படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனால் எங்களை போன்ற சிறு வலைப்பதிவருக்கும் ஏதோ வருடத்திற்கு ஒரு முறை வருமானம் பெற வாய்ப்பு ஏற்படுகிறது. உங்களால் எங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கிடைப்பதால்தான் தரமான பதிவுகளை தர முடிகிறது
அனைத்து வேலைகளையும் ஒரே மென்பொருளில் செய்தால் என்ன விதமான பலன்கள் கிடைக்கும். நேரம் மிச்சமாகும். வன் தட்டுகளில் இடம் மிச்சமாகும். அத்துடன் ஐகான் அதிகமாக இடத்தை அடைத்துக் கொள்ளாது.
நான் இங்கு குறிப்பிட போகும் மென்பொருள் என்னென்ன வேலைகள் செய்யும் என்று முதலில் தெரிந்து கொள்வோம்.
யூட்யூபில் இருந்து வீடியோக்களை தரவிறக்கலாம்.
யூட்யூபில் இருந்து தரவிறக்கிய வீடியோக்களை MP3 அல்லது iPOD மற்றும் iPhone PSP வகைகளுக்கு மாற்றலாம்.
யூட்யூபிற்கு நேரடியாக தரவேற்றலாம்.
எந்த ஒரு வீடியோவையும் டிவிடி ஆக மாற்றலாம்.
எந்த ஒரு வீடியோவையும் .FLV கோப்பாக மாற்றலாம்.
3gp கோப்பிலிருந்து வேறு வீடியோ கோப்பாக மாற்றலாம்.
எந்த ஒரு வீடியோவையும் MP3 ஆக மாற்றலாம்.
எந்த ஒரு வீடியோவிலிருந்து JPG படமாக மாற்றலாம்.
ஆடியோ மாற்றியும் இணைந்து இருக்கிறது.
டிவிடி வீடியோ மற்றும் ஆடியோ எரிக்கும் வசதி
டிவிடி டிகிரிப்ட் செய்யும் வசதி
வீடியோ தலைகீழாக இருந்தால் நேராக மாற்றும் வசதி (Rotate & Flip)
இத்தனை வசதியும் ஒரே மென்பொருளில் இருந்தால் கட்டாயம் குறைந்தது 50 டாலராவது கேட்பார்கள் நிறுவனத்தினர். ஆனால் இவர்கள் முற்றிலும் இலவசமாக அளிக்கின்றனர். இதன் Free Studio. ஆனால் மென்பொருளில் தரவிறக்க அளவு 30 எம்பி மட்டுமே இதன் வசதிகளை பார்க்கையில் தரவிறக்கலாம். நேரடியாக தரவிறக்க சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...