நிறைய மென்பொருட்கள் மற்றும் குறும் மென்பொருட்கள் உங்களுக்காக

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 250க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே தினமும் ஒரு புதிய தொழில்நுட்பம் வெளிவந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.  அந்த வியப்பு அடுத்த புதிய தொழில்நுட்பம் வரும் வரை மட்டுமே. இது வரை மடிக்கணிணி உபயோகப்படுத்தும் பொழுது மடிக்கணிணி பின்னே என்ன இருக்கிறது என்னவென்று தெரியாது ஆனால் இப்பொழுது கண்டுபிடித்திருக்கிற மடிக்கணிணி சாம்சங் நிறுவனத்தினரின் புதிய கண்டுபிடிப்பு திரைக்கு பின்னே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். அதாவாது Transparent Laptop இது குறித்த படங்கள் கீழே


கூகிள் நிறுவனத்தினரின் பெரிய வலைத்தள முகவரிகளை சிறியதாக சுருக்கும் முறை இப்பொழுதுதான் வெளியிடப்பட்டது அதற்கான நெருப்பு நரி உலாவி ஆடு ஆன் தரப்பட்டுள்ளது. தரவிறக்க சுட்டிஇசை பிரியர்களுக்கான மென்பொருள் இதோ உங்களுக்கான மென்பொருள். இந்த மென்பொருளின் பெயர் LMMS (Linux MultiMedia Studio) இந்த மென்பொருள் மூலம் நீங்கள் வைத்திருக்கும் பாடல்களை எடிட் செய்யலாம்.  Beats மற்றும் Baseline  போன்றவற்றை உருவாக்கலாம்.  Fruity Loops ப்ரொஜெக்ட் கோப்புகளை தரவிறக்கி மாற்றம் செய்யலாம்.  இது போன்ற எண்ணற்ற செயல்களை செய்யக்கூடியது.  இது போன்ற ஒரு மென்பொருள் வாங்க வேண்டுமானல் குறைந்த பட்சம் 15,000 வரை செலவழிக்க வேண்டும்.  FruityLoop Studio, Apple's Garage Band, Logic Studio, Beat Machine Pro போன்ற மென்பொருளுக்கு சவால் விடக்கூடியவையாக உள்ளாது.  அது மட்டுமில்லாமல் இந்த மென்பொருள் விண்டோஸ் மற்றும் லினக்ஸ், மேக் போன்ற இயங்குதளங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இது ஒரு திறந்த நிலை மென்பொருள் என்பதால் இன்னும் தரம் உயர்த்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.  மென்பொருள் தரவிறக்க சுட்டிLan நெட்வொர்க் உள்ள அலுவலகங்களில் நிறைய வன் தட்டுகளை ஷேர் செய்து வைத்து இருப்பார்கள் அது போன்ற நெட்வொர்க்கில் எவை எவை ஷேர் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய இந்த மென்பொருள் உதவுகிறது. Class B, Class C போன்ற ஐபி முகவரிகளிலும் தேடித்தருகிறது.  மென்பொருளை தரவிறக்க சுட்டி


நீங்கள் தரவிறக்கும் மென்பொருள் முப்பது நாள் வரை மட்டுமே செயல்படும்.  இதை ஒரு வருடம் வரை சட்டரீதியாக நீட்டிக்க நேரடியாக இங்கே செல்லுங்கள் சுட்டி இங்கு உங்கள் பெயர் முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் இரண்டு நாட்களில் உங்களுக்கு Serial Key உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள். 

உங்கள் கணிணியின் திரை பிக்சல்களை கண்க்கீடு செய்ய இந்த தளம் உதவுகிறது சுட்டி இது இணையம் வழியாக கணக்கீடு செய்ய. இதையே உங்கள் கணிணியில் இணைய இணைப்பு இல்லாமல் போர்ட்டபிள் மென்பொருள் மூலம் அறிந்து கொள்ள போர்ட்டபிள் மென்பொருள் தரவிறக்க சுட்டி

தெனாலி படத்தில் கமலஹாசன் தெனாலி படத்தில் கமல் சொல்லுவாரே எலியைப் பார்த்தால் பயம் புலியைப் பார்த்தால் பயம் அதைப் பார்த்தால் இதைப் பார்த்தால் பயம் என்று அடுக்கிக் கொண்டு போவார் அந்த பயங்களுக்குப் போபியா என்று பெயர் இது போன்ற போபியாக்கள் எத்தனை உள்ளன அதன் வகைகள் என்னவென்று தெரிந்து கொள்ள இங்கு செல்லுங்கள் சுட்டி  அப்படி இல்லை என்றால் கீழே படத்தை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.மீண்டும் புதிய பதிவுகளுடன் புதிய மென்பொருட்களுடன் விரைவில் சந்திக்கிறேன்.


நன்றி மீண்டும் வருகிறேன்

4 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை