நண்பர்களே நாம் வீட்டில் சில நேரங்களில் சில பதிவுகளை படிக்கும் போது யாராவது வந்து பார்த்துவிடுவார்களோ என்ற பயத்துடனே படித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி பார்த்து விட்டால் உடனே அந்த விண்டோவை மூடி விடுவார்கள் (அல்லது) கணிணியை அணைத்துவிடுவார்கள். அதற்குப் பதில் ஒரே கிளிக்கில் வேற டெஸ்க்டாப் திறந்தால் எப்படி இருக்கும். என்று நினைப்பவர்களுக்காக இந்த மென்பொருள் தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருளின் பெயர் -
டபுள் டெஸ்க்டாப்
மென்பொருளின் அளவு - 205 கேபி மட்டுமே
புகைப்படங்கள் இல்லாமல் வலைத்தளங்கள் திறக்க
சில நேரங்கள் சில வலைத்தளங்களை திறக்கும் போது மிகவும் மெதுவாக திறக்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதை தவிர்க்க உங்களுக்கு அந்த வலைத்தளத்தில் உள்ள புகைப்படங்கள் திறக்க வேண்டாம் என்று நினைத்தால் சுலபமாக செய்யலாம். அத்துடன் டயல் அப் இணைய இணைப்பு உபயோகபடுத்துபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
நெருப்பு நரி உலாவி உபயோகிக்கும் பயனாளர்கள் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.
நெருப்பு நரி உலாவி திறந்து அதில் Tools கிளிக் செய்து பின்னர் அதில் Options தேர்வு செய்து அதில் Content என்ற டேபை தேர்வு செய்யுங்கள். அதில் Load Images Automatically என்பதில் டிக் மார்க் எடுத்து விடுங்கள். பின்னர் OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.
இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிப்பவர்கள் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6 ஆம் பதிப்புக்கு மேல்
இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் திறந்து அதில் Tools கிளிக் செய்து அதனுள் Internet Options தேர்வு செய்து பின்னர் Advanced Tab என்பதனை தேர்வு செய்யுங்கள் கீழே கட்டத்தில் Multimedia என்பதற்கு கீழே Show Pictures அதன் நேரே பாக்ஸில் டிக் மார்க் எடுத்து விடுங்கள். பின்னர் OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.
ஆப்பிள் சபாரி உலாவி உபயோகிப்பவர்கள்
சபாரி திறந்து வைத்துக் கொள்ளுங்கள் மெனு கிளிக் செய்து அதில் Preferences தேர்வு செய்யுங்கள் பின்னர் மேலே Appearance என்பதனை கிளிக் செய்யுங்கள் அதில் Display images when the page opens. என்பதனை டிக் எடுத்து விடுங்கள் முடிந்தது பின்னரொ OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.
இனி உங்கள் உலாவியில் எந்த வலைத்தளம் திறந்தாலும் படங்கள் மட்டும் தோன்றாது.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே நம்மிடம் நிறைய கோப்புகள் இருக்கும் அதை நேரடியாக ஜிமெயிலில் சேமிக்க இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளை தரவிறக்கி சாதரணமாக நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் மென்பொருளை திறந்து உங்கள் ஜிமெயில் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகியவற்றை கொடுக்கவும். ஒகே கொடுங்கள் பின்னர் Exit கிளிக் செய்து வெளியேறுங்கள். ஒரு சிறிய ஐகான் ஒன்று உங்கள் டாஸ்க் மேனஜரில் அமர்ந்திருக்கும். பின்னர் எந்த கோப்புகள் வேண்டுமோ அதை ரைட் கிளிக் செய்து Backup 2 Email என்பதனை கிளிக் செய்தால் உங்கள் அஞ்சல் முகவரிக்கு நேரடியாக அந்த கோப்பை அப்லோடு செய்துவிடும். ுங்கள் கோப்பு 10 எம்பிக்கு மேல் இருந்தால் அதை தானாகவே Split செய்து அப்லோடு செய்துவிடும்.
இந்த மென்பொருளின் சிறப்பம்சம் ஜிமெயில் மட்டுமல்லாமல் எல்லாவகை மெயிலும் ஆதரிக்கும் திறமை படைத்தவை. உதராணம் யாகூ, ஹாட்மெயில், ரெடிப்மெயில் போன்றவை சில
இதில் ஜிப் செய்யும் வசது உண்டு.
நேரடியாக போல்டரை தரவேற்றலாம்.
SSL SMTP செட்டிங்ஸ் மாற்ற முடியும்.
Default ஆக மெயில் என்று ஒன்று வைத்துக் கொண்டு இரண்டாவது மூன்றாவது என்று அஞ்சல் முகவரிகள் கொடுக்கலாம்.
மென்பொருள்
சுட்டி
» Read More...
நண்பர்களே நாம் தினமும் ஒரு கோப்பை தரவிறக்கம் செய்வோம். அதை ஒரு போல்டரில் போட்டு வைப்போம். பிறகு பார்க்கலாம் படிக்கலாம் என்று ஆனால் அதை அத்தோடு மறந்துவிடுவொம். பிறிதொரு நாளில் அதே கோப்பை இணையத்தில் மறுபடியும் தரவிறக்கி வேறு ஒரு போல்டரில் இதே போன்று போட்டு வைத்து விட்டு மறுபடியும் மறந்துவிடுவோம். இதுபோல் எண்ணற்ற கோப்புகள் உங்கள் கணணியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இவ்வாறு இரண்டு அதற்கும் மேற்பட்ட கோப்புகளை கண்டுபிடிக்க இந்த மென்பொருள் பயன்படுகிறது.
சிலர் அதற்குதான் எத்தனையோ Duplicate Finder கள் உள்ளதே எனலாம்.
இதில் உள்ள சிறப்பு விஷயங்களே இதனை தனித்துக் காட்டுகிறது. இது தேடித்தரும் கோப்புகள் புகைப்படம், வீடியோ, டெக்ஸ்ட், போன்ற கோப்புகளை அந்த மென்பொருள் வழியாக ப்ரிவியு பார்க்கும் வசதி இதனிடம் மட்டுமே உண்டு. அத்துடன் உங்கள் கணணி மட்டுமல்லாமல் நெட்வொர்க், யுஎஸ்பி ட்ரைவ், பிளாப்பி, எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் போன்றவைகளிலும் தேடித்தரும் வல்லமை இதற்கு மட்டுமே உண்டு. அத்துடன் மிகக் குறைவான நினைவகத்தையே கையாளுகிறது. இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் என்பது இதன் சிறப்பு
மென்பொருளை தரவிறக்க சுட்டி
நாம் விண்டோஸில் அதிக முறை நோட்பேட் உபயோகித்திருப்பீர்கள். அப்படியே இந்த நோட்பேடையும் உபயோகித்து பாருங்கள். இந்த நோட்பேட் உங்கள் டெஸ்க்டாப்பில் என்ன உள்ளது அப்படியே கண்ணாடி போன்று காட்டும் திறமை படைத்தது. சுட்டி
என்னுடைய திருமண நாளன்று வாழ்த்திய அனைவருக்கும் என் குடும்பத்தினர் சார்பாக நன்றி நன்றி நன்றி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே இது நேற்றே எழுதி வைத்தது இன்றுதான் வெளியிடு்கிறேன். இன்று திருமணநாளை முன்னிட்டு தங்கமணியை வெளியில் கூட்டி செல்லாவிடில் எனக்கு சாப்பாடுக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான். சரி விஷயத்திற்கு வருவோம் கூகிள் ஜிமெயில் கணக்கு இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஏன் என்றால் கூகிள் ஜிமெயிலில் எத்தனையோ வசதிகள் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கூகிளின் ஜிமெயில் முன் யாகூ மெயில் , மைக்ரோசாப்டின் ஹாட்மெயில் ஆகிய இரண்டும் இரண்டாமிடத்தை பிடிக்கிறது. கூகிளின் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பார்கள் சிலர் இரண்டு மூன்று ஏன் ஐந்து கூட வைத்திருப்பார்கள். அவர்களுக்கான பதிவுதான் இது
ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு அஞ்சல் வந்திருக்கிறதா என்று ஒவ்வொரு முறையும் திறந்து பார்த்து சோதனை செய்ய வேண்டாம். அதற்காகவே மூன்று வெவ்வேறு மென்பொருட்கள் உள்ளது அதன் வரிசைகள் கீழே கொடுத்துள்ளேன்.
1. ஜிமெயில் Notifier
இது கூகிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இது மட்டுமே மிகவும் தரமானது என்று கூறப்படுகிறது. ஆனால் இதன் மூலம் ஒரு கணக்கினை மட்டுமே பயன்படுத்த இயலும். இந்த மென்பொருள் வழியாக நீங்கள் ஜிமெயில் Login செய்தவுடன் சிறிய ஐகானாக டாஸ்க்பார் ட்ரேவில் அமர்ந்து கொள்ளும் ஏதாவது அஞ்சல் வந்தால் உங்களுக்கு பாப் - அப் செய்து தெரிவிக்கும்.
2.
நெருப்பு நரி உலாவியில் ஜிமெயில் Notifier
நெருப்பு நரியில் உலாவில் இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது அஞ்சல் வந்தால் தெரிவிக்கும் இதன் மூலம் ஒரு கணக்கினை மட்டுமே பயன்படுத்த இயலும்.
3.
ஜிமெயில் Notifier 5
இந்த மென்பொருள் மூலம் ஒரே நேரத்தில் ஐந்து கணக்கினை கையாளலாம்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...