யூட்யூப் 2 எம்பி3 சுலபமாக மாற்ற

நண்பர்களே நாம் தினந்தோறும் ஒருமுறையாவது யூட்யூபில் வீடியோ பார்க்கமால் தூங்க போவதில்லை. இப்போது  யூட்யூபில் ஹாலிவுட்டின் முழுபடங்களையும் காட்டுகிறார்கள்.  இன்னும் நிறைய படங்களை வெளியிட திட்டமிட்டு ஹாலிவுட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.  அதுமட்டுமில்லை அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சீரியல்கள் வெளியிட்டு வருகிறார்கள்.  இது கூடிய சீக்கிரம் இந்தியாவுக்கும் வர வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் வல்லுநர்கள்.  ஏன் என்றால் இந்தியாவில் தொலைக்காட்சி சீரியல் பார்க்க இந்தியாவில் ஒருவர் ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரத்திற்கும் மேலாக செலவிடுவதால்.



இப்போது விஷயத்துக்கு வருவோம் யூட்யூபில் பார்க்கும் வீடியோவை தரவிறக்க நாம் ஆயிரக்கணக்கான தளங்கள் உள்ளன.  ஆனால் யூட்யூபில் உள்ள வீடியோவில் இருந்து ஒலியை மட்டும் பிரிக்க ஒரு இணைய தளம் உள்ளது அந்த தளத்தின் பெயர் வீடியோ 2 எம்பி 3 இந்த தளத்தில் யூட்யூபில் நீங்கள் பார்க்கும் வீடியோவின் முகவரியை காப்பி செய்து பேஸ்ட் செய்தால் போதும் கன்வேர்ட் என்று பட்டனை கிளிக் செய்தால் போதும் உங்கள் எம்பி3 உடனே ரெடியாகி விடும்.


இணையதள சுட்டி

பயர்பாக்ஸ் ஆடு - ஆன் சுட்டி

 ஆன்லைனில் எம்பி3 கேட்க சுட்டி


நண்பர் வேலன் அவர்கள் போட்டோஷாப்பை அடிப்படையான பாகங்களை எழுதி வருகிறார் அதன் மூலம் போட்டோஷாப் எளிதா படித்து தெரிந்து கொள்ளலாம். சுட்டி 
அடுத்து அவர் ஆங்கிலம் எளிதாக கற்க எழுத ஆரம்பித்து இருக்கிறார் சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம்

நண்பர்களே   நீங்கள் உங்கள் மொபைல் போனை விற்பதாக இருந்தால் முதலில் உங்கள் மெமரி கார்டை ஒருமுறைக்கு நான்கு முறை பார்மெட் செய்து விட்டு கொடுங்கள். அதுபோல் உங்கள் மொபைலையும்  பாக்டரி ரீசெட் செய்து விட்டு கொடுங்கள் ஏன் என்றால் ஒரு முறை என் நண்பன் தன்னுடைய மொபைல் சரியாக வேலை செய்யவில்லை என்று ஒரு சர்வீஸ் சென்டரில் கொடுத்துள்ளான்.   அவர்கள் அந்த மொபைலில் உள்ள படங்கள் வீடியோக்கள் போன்றவைகளை காப்பி செய்து கொண்டு விட்டு கொடுத்துள்ளார்கள் இது தெரியவில்லை நம் நண்பருக்கு.   சில நாட்களுக்கு முன் நான் இணையத்தில் உலாவிய போது ஒரு தளத்தில் அந்த நண்பரின் மனைவியின் புகைப்படம் ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்டிருந்தது. நான் அதிர்ந்து போய் அவனிடம் கேட்டேன் அவனிடம் யாரிடமாவது மொபைலை அநாவசியமாக கொடுத்தாயா என்று இல்லை தன் மொபைல் சர்வீஸ் சென்டரில் மட்டும் கொடுத்து சர்வீஸ் செய்தேன் என்றான்.  நான் பின்னர் மேற்கூறியவாறு செய்த பிறகு விற்குமாறு கூறினேன்.  இவ்வாறு உங்கள் மொபைலை சர்வீஸ் செய்வீர்களானால் உங்கள் மொபைலில் உள்ள தகவல்களை  உங்கள் கணனிக்கு மாற்றி விட்டு மொபைலில் அழித்து விட்டு பின்னர் கொடுங்கள்.  
அல்லது உங்கள் மொபைலில் உள்ள முகவரிகளை சேமிக்க முன்னர் கூறிய பதிவு உபயோகமாக இருக்கும்.  

அது போல் உங்கள் கணனியை யாருக்காவது விற்பதாக இருந்தால் உங்கள் கணணியில் உள்ள ஹார்ட் டிஸ்கினை ஒன்றுக்கு நான்கு முறை பார்மெட் செய்து விட்டு  கொடுங்கள். அல்லது இந்த மென்பொருள் மூலம் பார்மெட் செய்து விட்டு கொடுங்கள் சுட்டி







உங்கள் மொபைலில் ஏர்டெல் மற்றும் வோடாபோன் போன்ற நிறுவன சிம்கார்டு உபயோகிப்பவர்கள் தேவையில்லாத வரும் விளம்பர அழைப்புகளை மற்றும் எஸ்எம்எஸ்களை தவிர்ப்பதற்கு உங்கள் மொபைலில் இருந்து START DND என்று மெஸேஜ்  டைப் செய்து 1909 என்ற் எண்ணிற்கு அனுப்பினால் உங்களுக்கு வரும் தேவையில்லாத விளம்பர அழைப்புகள் எஸ்எம்எஸ்கள்  நிறுத்தப்படும். 

அல்லது

வோடாபோன் உபயோகிப்பவர்கள் இந்த இணையத்தளத்தில் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, உங்கள் மொபைல் எண் போன்றவை கொடுத்தால் தேவையில்லாத அழைப்புகள் எஸ்எம்எஸ் நிறுத்தப்படும் சுட்டி 

ஏர்டெல் உபயோகிப்பவர்கள் பிரிபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு உபயோகிப்பவர்களுக்கான சுட்டி 

ஏர்டெல் லேண்ட்லை உபயோகிப்பவர்களுக்கான சுட்டி 
BPL Mobile - சுட்டி 
BSNL Mobile - சுட்டி
Aircel Chennai - சுட்டி
Aircel Tamilnadu - சுட்டி
TATA Indicom - சுட்டி
Idea Cellular - சுட்டி
MTNL Delhi - சுட்டி
MTNL Mumbai - சுட்டி
Relaince Mobile - சுட்டி
Spice Punjab - சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

பாடல் வரிகள் உங்கள் ப்ளேயரில்

நண்பர்களே சில நாட்கள் என்மகனுக்கு எனக்கும் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் பதிவுகள் தொடர்ந்து எழுத முடியவில்லை இது கூட அலுவலகத்தில் சிறிது வேலை இருக்கிறது என்று அழைத்தார்கள் அந்த கிடைத்த நேரத்தில் இந்த பதிவு எழுதுகிறேன்.

நாம் பாடல்கள் கேட்பதாக இருந்தால் நம் அனைவரது மனம் நிச்சயம் நாடுவது  விண்ஆம்ப் ப்ளேயராகதான் இருக்கும். ஆனால் பாடல்கள் ஒலிக்கும் போது வரிகள் தோன்றுமா தோன்றாது.  பாடல்கள் ஒலிக்கும்போது வரிகள் தோன்ற இந்த மென்பொருளை உபயோகிக்கலாம்.



இந்த மென்பொருள் விண்ஆம்ப் மட்டுமல்ல மீடியா ப்ளேயருக்கும் கொடுக்கிறார்கள் இலவசமாக .  இந்த மென்பொருள் நிறுவிய பிறகு நீங்கள் இயக்கும் பாடல் வரிகள் இணையத்தில் தேடி கொடுக்கும். அப்படி இல்லையென்றால் நீங்களாகவே பாடல் வரிகளை தரவேற்றலாம்.



பாடல் வரிகள் காட்டும் மென்பொருள் சுட்டி

தமிழ் பாடல் வரிகளுக்கு இந்த சுட்டி
இந்த தளத்தில் ஆயிரக்கணக்கான பாடல் வரிகள் உள்ளன.
பாடல் வரிகளை எடுத்து பயன்பெறுங்கள் அந்த தளத்திற்கு உங்கள் பாரட்டையும் தெரிவியுங்கள்.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

மென்பொருள் பாதுகாப்பு

நண்பர்களே சென்னையில் இருக்கும் நண்பர்களுக்கு எத்தனையோ வெளிநாடு வாழ் நண்பர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு தொலைபேச விரும்புவர்கள் முதலில் எவ்வாறு டயல் செய்ய வேண்டும் தெரியாது (நான் உட்பட) அவ்வாறு புதியவர்களுக்கு இந்த தளம் உதவி செய்யலாம்.  சுட்டி

 
மேலே உள்ள தளம் போன்றதுதான் இது உங்கள் மாநிலங்களையும்  கால் செய்பவருடைய இடத்தின் நேரத்தையும் கால் பெறுபவரின் இடத்தின் நேரத்தையும் சேர்த்து காட்டுகிறது .  சுட்டி
என் வலைப்பூவில் என் மகனின் புகைப்படத்தை தரவேற்றம் செய்து உள்ளேன். அது போல ஜும் விட்ஜெட் பெற இந்த தளம் உதவுகிறது சுட்டி
பிளிக்கரில் யார் சேமித்து வைத்திருந்தாலும் அந்த புகைப்படங்களை தேட இந்த தளம் உதவும் சுட்டி
நிறைய நண்பர்கள் தங்களுடைய சில அப்ளிகேசன்களை யாரும் உபயோகிக்ககூடாது என்று நினைக்கிறார்கள் அது எப்படி என்று தெரியாததால் டெஸ்க்டாப் மற்றும் ஸ்டார்ட் மெனுவில் உள்ள சார்ட்கட்டினை அழித்து விடுகிறார்கள் வேண்டும் என்றால் மட்டும் நேரே அந்த அப்ளிகேசன் போல்டருக்கு சென்று அந்த அப்ளிகேசனை இயக்கி வேலை செய்கிறார்கள். 
இவ்வாறு செய்வதற்கு பதில் அந்த மென்பொருளுக்கு ஒரு கடவுச்சொல் கொடுத்து பாதுகாத்து விட்டால் நன்றாக இருக்குமே என்று ஏங்குபவர்கள் பலர் அவர்களுக்கு ஒரு மென்பொருள் இதோ அவ்வாறு உங்கள் விண்டோஸ் ப்ரொகிராம் எதுவாயினும் அதை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க  இரண்டு மென்பொருட்கள் 
மென்பொருள் ஒன்று பிரொடெக்ட் இஎக்ஸ்இ 
 
மென்பொருள் இரண்டு எம்பதி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை