நண்பர்களே கூகிள் நாள்தோறும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்று ஜிமெயில் வைத்திருப்போர் மின்னஞ்சல் மூலம் படங்களை இணைத்து அனுப்பலாம். அதற்கு செய்ய வேண்டி வழிமுறைகள் கீழே
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கிணுள் நுழைந்து கொள்ளுங்கள்.
பின்னர் வலதுபக்கம் மூலையில் மேலே உள்ள மாதிரி இருக்கும் ஐகானை கிளிக் செய்யுங்கள்.
பின்னர் படத்தில் காட்டியுள்ளது போல்
Enable கிளிக் செய்து
கீழே வாருங்கள் அதில் Save Changes என்று கிளிக் செய்து வெளியேறுங்கள்.
பின்னர் கம்போஸ் செய்தீர்கள் என்றால் இது போன்று தெரிய வரும்.
இந்த இடத்தை கிளிக் செய்தால் இது போன்று தெரியும்
அதில் உங்கள் கணணியில் இருந்தும் படத்தை தரவேற்றலாம். அல்லது இணையத்தில் உள்ள லிங்க்கையும் கொடுக்கலாம்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்கள் உங்கள் கணணியை பாதுகாக்க கீழே உள்ள வழிகளை பின்பற்றினால் உங்கள் கணணி உங்களுக்கு உற்ற நண்பனாக எப்போதும் உங்களை கைவிடாது இருக்கும்.
1. உங்கள் கணணியில் தேவையில்லாத டெம்ப், ஜங்க் கோப்புகளை அழிக்கவும்.
அழிக்க உதவும் மென்பொருள் சுட்டி
2. மாதம் ஒரு முறை உங்கள் டிபிராக் செய்யுங்கள்.
டிபிராக் செய்ய உங்கள் கணனியிலே மென்பொருள் உள்ளது. அதைவிட இது மிகவும் வேகமாகவும் சுலபமாகவும் இருக்கும் சுட்டி
3. உங்கள் கணணி ஆன்டி வைரஸை தினமும் அப்டேட் செய்யுங்கள்.
அவ்வாறு செய்ய முடியாதவர்கள் வாரம் ஒருமுறை ஆன்லைன் ஆன்டிவைரஸ் ஸ்கேன் செய்யவும். இலவச ஆன்லைன் ஸ்கேன் கீழே
காஸ்பர்ஸ்கை
ஈசெட் நோட்32
ட்ரென்ட் மைக்ரோ
பாண்டா
கம்ப்யுட்டர் அசோசியட்ஸ்
4. உங்கள் கணனியில் பயர்வால் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். விண்டோஸ் எக்ஸ்பி பயர்வாலை விட திறமையான சில இலவச பயர்வால்கள் உள்ளன.
கொமடோ
ஜோன் அலாரம்
அவுட்போஸ்ட்
5. தேவையில்லாத ப்ரோகிராம்களை நீக்குங்கள்.
முற்றிலுமாக நீக்க ரெவோ அன் இன்ஸ்டாலர் பயன்படுத்தலாம்.
சுட்டி
6. உங்கள் கணனியை ஆன் செய்யும் முன் உங்கள் கணனி மானிட்டர் கீபோர்டு மவுஸ் போன்றவற்றை காய்ந்த பருத்தி துணியால் துடைக்கவும் (தண்ணீர் போடக்கூடாது (அந்த தண்ணி மட்டுமல்ல எந்த தண்ணியும்)
7. உங்கள் கணனியின் சிபியு வெப்ப அளவு குறைந்த அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் கணனியின் வெப்ப அளவை சோதிக்க இந்த மென்பொருள் உதவும்.
32பிட் கணணி சுட்டி 64பிட் கணணி சுட்டி
8. கணனியின் நினைவகத்தை அதிகமாக இருந்தால் நல்லது. இப்பொழுது இருக்கும் கணணிகளில் குறைந்த பட்சம் 2 ஜிபி இருந்தால் நல்லது.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே என்னுடைய நண்பர் மின்னஞ்சல் மூலம் சில புகைப்படங்கள் அனுப்பியிருந்தார். அப்புகைப்படத்தை பார்த்து நெஞ்சம் பதைபதைத்துப் போனது இதற்கு காரணமானவர்கள் கட்டாயம் ஒரு நாள் தர்மத்தின் நீதிமன்றத்திற்கு பதில் சொல்லியாகி வேண்டும். இவர்கள் இவ்வளவு கல்நெஞ்சக்காரன். நாம் பக்கத்து வீட்டுக்காரன் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தால் பார்த்து போங்கள் என்று சொல்வோம். நம் பக்கத்து நாட்டில் நம் தமிழ் மக்கள் கொத்து கொத்து மடிகிறார்கள். நாம் இங்கு டிவியில் பார்த்து உச் உச் என்று உச்சு கொட்டுவதோடு நின்று விடுகிறார்கள். இதற்கு நாம் அனைவரும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த புகைப்படங்களை தங்கள் வலைப்பதிவுகளில் வலையேற்றுங்கள். வலைப்பதிவு இல்லாதவர்கள் மின்னஞ்சல் மூலம் அனைவருக்கும் அனுப்புங்கள்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே நாம் தினந்தோறும் இணையத்தில் வரும் ஒவ்வொரு சுட்டிகளையும் சுட்டி எத்தனையோ மென்பொருட்களை வீடியோக்கள் தரவிறக்குவோம். அவ்வகையான சுட்டிகள் சில நேரம் நம்மை வேற இடத்திற்கு அழைத்துச் சென்று அவ்வழியாக கணணிகளுக்கு வேண்டாத விருந்தாளிகளான வைரஸ்களை அழைத்து வந்துவிடும். இதுபோன்ற நேரத்தில் நீங்கள் சொடுக்கும் சுட்டி நல்லவைதானா என்று கண்டறிய இந்த இணையத்தளம் வழி செய்கிறது.
இந்த இணையத்தளம் பிஸ்டேங்க், ஏவிஜி, சைட்ட்ருத், கூகிளின் சேப்சைட் பிரவுஸிங் மூலம் சோதனை செய்து நூறு சதம் உண்மைதானா என்று கண்டறிந்து சொல்கிறது.
சுட்டி
இலவச மென்பொருள்
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...