நண்பர்களே இன்று பலவகையான Rescue Disk களை இணைத்து ஒரு USB Disk வழியாக Boot செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். இது போல் செய்வதால் என்ன பலன் என்றால் சுலபமாக எந்த கணினியிலும் Rescue Disk வழியாக Boot செய்யலாம். பலவகையான Anti Virus மற்றும் Utitlity களை எந்த கணினியில் Bootable ஆக கையாள முடியும். இந்த வகைய Rescue USB Disk களை கொண்டு எந்த ஒரு கணினியிலும் உள்ள பிரச்சனைகளை தீர்க்க மிகவும் உதவியாக இருக்கும். இது கணினி சர்வீஸ் என்ஜினியர்களுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும்.

இது போன்ற USB டிஸ்க் தயாரிக்க குறைந்த பட்சம் 2 ஜிபி பென் ட்ரைவ் இருத்தல் நலம்.
முதலில் பென்ட்ரைவை பார்மெட் செய்து கொள்ளுங்கள்.

பென்ட்ரைவை பார்மெட் செய்யும் போது FAT 32 ஆக பார்மெட் செய்து கொள்ளுங்கள்.

பிறகு இந்த சுட்டியில் இருந்து SARDU ( Shardana Antivirus Rescue Disk Utility) தரவிறக்கிக் கொள்ளுங்கள். SARDU தரவிறக்க சுட்டி
தரவிறக்கிய பிறகு அது ஒரு Zip கோப்பாக இருக்கும். அந்த கோப்பை Extract செய்து கொள்ளுங்கள்.
Extract செய்த போல்டரில் இருந்து SARDU மென்பொருளை திறக்கவும்.
அதில் உங்களுக்கு தேவையான அத்துடன் உங்கள் பென் ட்ரைவ் கொள்ளளவுக்குள் தேவையான ஆன்டி வைரஸ் மற்றும் யூட்டிலிட்டிகளை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
தரவிறக்கம் முடிந்தவுடன் ஒருமுறை மென்பொருளை மூடிவிட்டு திரும்பவும் திறக்கவும்.
( நீங்கள் தரவிறக்கிய கோப்புகள் எந்த ட்ரைவில் நீங்கள் SARDU மென்பொருளை இயக்கினீர்களோ அந்த போல்டரில் ஒரு ISO என்ற போல்டர் உருவாகி அதற்குள் அனைத்து ஆன்டிவைரஸ் ரெஸ்க்யூ கோப்புகள் மற்றும் மென்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். தேவையென்றால் அந்த கோப்புகளை தனி தனி சிடிக்களில் தனி தனி ரெஸ்க்யூ சிடிக்களாகவும் எரிக்கலாம்.)

மென்பொருளை திறந்த பிறகு Make USB என்று வலது புறத்தில் உள்ள பட்டனை அழுத்தவும்.

அவ்வளவுதான் முடிந்தவுடன் உங்கள் ரெஸ்க்யூ யூஎஸ்பி ட்ரைவை எங்கு வேண்டுமானாலும் பூட்டபிளாக உபயோகபடுத்தலாம்.

இதற்கு தேவையானவை உங்கள் கணினியில் USB பென் ட்ரைவ் குறைந்தது 2 ஜிபி, இணைய சேவை, மற்றும் SARDU மென்பொருள்.
இதுவரை பதிவு படித்தவர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு
நண்பர்களே இது என்னுடைய 400வது பதிவு இதுவரை என்னை ஊக்கமளித்து மேலே கொண்டுவந்த அனைத்து நண்பர்களுக்கும் பதிவர்களுக்கும் இன்ட்லி, தமிழ்10, திரட்டி, தமிழ்மணம் போன்ற திரட்டி நண்பர்களுக்கும். எந்த ஒரு நன்றியையும் கூறமால் என் பதிவுகளை தாங்களாகவே Republish அல்லது காப்பி பேஸ்ட் செய்த சக திருட்டு நண்பர்களுக்கும். ஒன்றுமே வருமானம் இல்லாத நிலையில் தமிழ் கம்ப்யூட்டர் என் வலைப்பூவில் வந்த பதிவுகளை தங்கள் புத்தகத்தில் வெளியிட்டு அதன் மூலம் சிறு வருமானம் தந்த தமிழ் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கும் அதன் நிறுவனருக்கும். என்னால் திரட்டிகளில் இணைக்க முடியாத பொழுது என் பதிவுகளை திரட்டிகளில் இணைத்த கேபிள்ஷங்கர் மற்றும் வால்பையன் அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள்.

இத்தனை பதிவுகளுக்கு பிறகு சில நூறு ரூபாய்கள் செலவு செய்து கூகிள் நிறுவனத்தின் கூகிள் ஆட்ஸ் வாங்கியிருக்கிறேன். இதன் மூலமாவது சிறு வருமானம் வர வழி வகுத்துக் கொடுங்கள். இந்தியா மட்டுமல்லாமல் வெளி நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் தங்கள் பதிவுகளை படிக்கும் பொழுது தாங்கள் ஒரு கிளிக் செய்தால் மிகவும் உதவியாக இருக்கும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். என்றும் உங்கள் ஆதரவையும் பங்களிப்பையும் நாடி நிற்கும் உங்களில் ஒரு நண்பன்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...