டிவிடியை AVI கோப்பாக மாற்ற Ashampoo நிறுவனத்தின் 5 மென்பொருட்கள் இலவசமாக

நண்பர்களே உங்களிடம் உள்ள டிவிடி வீடியோவை சுலபமாக AVI கோப்பாக மாற்ற இந்த மென்பொருள் உபயோகப்படும்.  வேற மென்பொருள் மூலம் செய்தாலும் இதன் இடைமுகப்பு மற்றும் அதிகமான கேள்விகள் எதுவுமில்லை.  அதுதான் இந்த மென்பொருளின் சிறப்பே.

 
உங்கள் வீடியோ டிவிடி வன்தட்டை உங்கள் டிவிடி ட்ரைவில் இட்டுவிடுங்கள்.  பிறகு இந்த மென்பொருளை இயக்குங்கள்.  அதில் உங்கள் மாற்றம் செய்யப்பட்ட AVI கோப்புகள் எங்கு வேண்டும் என்று போல்டரில் சேமிக்க வேண்டும் என்று குறிப்பிடுங்கள்.  பிறகு Start ripping பட்டனை கிளிக் செய்தால் போதும். மென்பொருள் தரவிறக்க சுட்டி


Ashampoo நிறுவனத்தின் மென்பொருட்கள் மிகவும் பிரபலமான மென்பொருட்களாகும்.  இந்த மென்பொருட்களின் ஐந்து வகையான மென்பொருட்கள் இப்பொழுது முற்றிலும் இலவசமாக தரப்படுகிறது.  உடனே தரவிறக்குங்கள்.
Ashampoo Burning Studio 2010 Advanced
Ashampoo Home Designer
Ashampoo Snap 3
Ashampoo WinOptimizer 6
Ashampoo PhotoCommander 7



Ashampoo Burning Studio 2010 Advanced இந்த மென்பொருளின் மூலம் வீடியோ ஆடியோ ப்ளு-ரே டிவிடிக்கள் பதியலாம். மிக வேகமாகவும் துல்லியமாகவும் இந்த மென்பொருள் மூலம் பதிய முடியும்.



Ashampoo Home Designer இந்த மென்பொருள் மூலம் வீடு மற்றும் அலுவலகங்களை நமக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொள்ளலாம்.   அதன் மூலம் நம் நிஜ வீடு மற்றும் அலுவலகத்தை இந்த மென்பொருள் மூலம் உருவாக்கி நிஜத்தில் இன்னும் மெருகூட்ட உதவுகிறது. இது ஒரு 3டி மென்பொருள் என்பது இதன் சிறப்பம்சம்.

Ashampoo Snap 3  இந்த மென்பொருள் ஒரு திரையை படம்பிடிக்கும் மென்பொருள் ஆகும்.   இதன் மூலம் உங்கள் திரையில் எழும் பிரச்சனைகளை படம்பிடித்து அது குறித்த வல்லுநர்களிடம் இந்த படத்தை காட்டுவதால் எளிதில் உங்கள் பிரச்சனைகளை தீர்க்க இந்த மென்பொருள் ஏதுவாக இருக்கும். இது புகைப்படமாக மட்டுமல்ல வீடியோ கோப்பாகவும் படமெடுக்கலாம்.  மொத்ததில் நமது கணினியுடன் இணைந்த ஒரு கேமரா என்றால் மிகையில்லை.

Ashampoo WinOptimizer 6  விண்டோஸில் ஏற்படும் பிழைகள் மற்றும் ரெஜிஸ்டரியில் ஏற்படும் பிழைகளை இதன் மூலம் சரிப்படுத்தினால் உங்கள் விண்டோஸின் வேகம் கூடும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

Ashampoo Photo Commander 7  நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை எடிட் செய்து அழகாக பிரசண்டேசன் செய்ய மற்றும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். 


இந்த ஐந்து மென்பொருட்கள் தனித்தனியாக தருகிறார்கள் அதுவும் இலவசமாக.  அதை பெற இந்த வலைத்தளத்திற்கு விஜயம் செய்யவும்.  சுட்டி  அங்கு  ASH-444LW1  இந்த கோட்டினை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். அவ்வளவுதான் மேலுள்ள ஐந்து மென்பொருளில் எது வேண்டுமோ அதை தரவிறக்கிக் கொள்ளலாம்.



இது ஒரு வலைத்தளம் பார்த்து விட்டு கருத்து கூறுங்கள் சுட்டி

பிரிடெட்டர் படத்தை பார்க்கதாவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள் இந்த படத்தின் உயர்தர வால்பேப்பர்கள் உங்களுக்காக. சுட்டி


நீங்கள் விமானத்தில் பயணிப்பவராக இருந்தாலோ அல்லது உங்கள் நண்பர் பயணம் செய்யும் விமானம் எங்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள இந்த் நீட்சியை நிறுவிக் கொள்ளுங்கள். இந்த நீட்சியை நிறுவ கூகிள் எர்த் நிறுவி இருக்க வேண்டும்.  இது கூகிள் எர்த்திற்கான நீட்சி சுட்டி
 

நன்றி மீண்டும் வருகிறேன்.

7 ஊக்கப்படுத்தியவர்கள்:

சிட்டுக்குருவி said...

அருமையான பதிவு

பகிர்வுக்கு நன்றி

:)

வரதராஜலு .பூ said...

வழக்கம்போல் கலக்கல்.

பகிர்ந்தமைக்கு நன்றி

S.முத்துவேல் said...

வாழ்த்துக்கள் கூற வார்த்தைகள் இல்லை
என்றாலும் கடன் வாங்கியவது வாழ்த்துக்கள் கூறியே தீருவேன்....


வாழ்த்துகள்

வாழ்த்துகள்

வாழ்த்துகள்....

எஸ்.கே said...

ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு. அந்த இணையதளத்திற்கு சென்றேன். மிக அற்புதமாக உள்ளது.

M.Rishan Shareef said...

பயனுள்ள சுட்டி. மிகவும் நன்றி.
முதலில் சொல்லியிருக்கும் Bitribber மென்பொருளைத் தரவிறக்கக் கூடிய சுட்டி என்ன?

மாணவன் said...

அருமை நன்பரே,
அசத்தல் பதிவு மென்பொருள்கள் அனைத்துமே பயனுள்ளவை...
முதலில் சொல்லியிருக்கும் Bitribber மென்பொருளைத் தரவிறக்கக் கூடிய சுட்டி தருவதற்கு மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன் முடிந்தால் அதை சரி செய்யவும்...
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
நன்றி நண்பா.....

Vadielan R said...

சிட்டுக்குருவி, வரதராஜலு, முத்துவேல், எஸ்கே அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ரிஷான் மற்றும் மாணவன் கூறியது போல பிட்ரிப்பர் சுட்டி தருவதற்கு மறந்துவிட்டேன் இப்பொழுது சுட்டி கொடுத்துள்ளேன் தரவிறக்கிக் கொள்ளவும். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நண்பர்களே.

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை