சட்டரீதியான ஆபிஸ் கோப்புகள் மீட்டெடுக்கும் மென்பொருள் இலவசம்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே நாம் பிடிஎப் கோப்புகள் படிப்பதாக இருந்தால் பிடிஎப் ரீடரை நாடுவோம்.  அந்த ரீடரில் பெயர் போனது அடோப் ரீடர்.  அதற்கடுத்து மிகவும் அதிகமானவர்கள் உபயோகிப்பது பாக்ஸிட் ரீடர்.  அதன் வரிசையில் அடுத்து சேர இருப்பது நுயான்ஸ் ரீடர்  இந்த ரீடரில் மிகவும் அதிக வசதிகள் உள்ளது. இந்த ரீடரில் பிடிஎப் கோப்பில் உள்ள வார்த்தைகளை சுலபமாக கோடிட்டுக் காட்ட முடிகிறது.  கோப்பில் உள்ள படங்களை சுலபமாக எடுக்க முடிகிறது. மிகவும் சுலபமாக வசதியாக (Smooth) ஆக உள்ளது.  இந்த மென்பொருள் மூலமாக பிடிஎப் கோப்பை திறந்து வைத்துக் கொண்டு கோப்பினை வேர்ட் கோப்பாக கன்வெர்ட் செய்ய முடியாது.  ஆனால் அப்படி முயற்சி செய்தால் நேராக அவர்கள் தளத்திற்கு அழைத்து சென்று விடுகிறது.  அங்கு உங்களுக்கு எந்த மாதிரி கோப்பாக வேண்டும் என்று தேர்ந்தெடுத்தால் போதும்.  பிறகு உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து வந்தால் போதும் உடனே மின்னஞ்சல் முகவரிக்கு கோப்பினை அனுப்பி வைக்கின்றனர்  இணையத்தள சுட்டி


 


Wondershare நிறுவனத்தின் ஆபிஸ் ரெகவரி மென்பொருள் இலவசம்.   இந்த மென்பொருள் மூலம் தெரியாமல் நீக்கப்பட்ட வேர்ட் எக்ஸல் பவர்பாயிண்ட் கோப்புகளை திரும்ப பெற முடியும்.  இந்த மென்பொருள் மூலம் உங்களுடைய வன்தட்டு, மெமரி ஸ்டிக், பென் ட்ரைவ் போன்றவற்றில் இருந்தும் டெலிட் செய்யப்பட்ட ஆபிஸ் கோப்புகள் திரும்ப பெறலாம்.  இந்த மென்பொருள் ஆதரிக்கும்.  கோப்புகள்  DOC, DOCX, XLS, XLSX, PPT, PPTX, PST, DBX, ACCDB, MPP, PUB, ONE, XSN  மற்றும்  PDF கோப்புகள்.
ஆதரிக்கும் மென்பொருள் பதிப்புகள்  மைக்ரோசாப்ட் ஆபிஸ் 97, XP, 2000, 2003 மற்றும் 2007.

மென்பொருள் இயங்குதளங்கள்.  விண்டோஸ் 2000, 2003, XP, Vista மற்றும் விண்டோஸ் 7 இயங்குதளங்கள்

இது ஒரு சிறப்பு சலுகை என்பதால் ஏப்ரல் 10, 2010  வரை மட்டுமே சட்டரீதியாக தரவிறக்க முடியும்.


முதலில் இந்த சுட்டிக்கு செல்லுங்கள் சுட்டி

இங்கு பெயர் மற்றும் உண்மையான மின்னஞ்சல் முகவரி அளித்து விடுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு  இந்த மென்பொருளுக்கான கீ கிடைக்கும்.

மின்னஞ்சலில் மென்பொருள் தரவிறக்க சுட்டியும் இணைத்து அனுப்புவார்கள்


இங்கு இருந்தும் தரவிறக்கிக் கொள்ளலாம்.  சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

8 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை