வண்ணங்கள் மூலமாகவும் புகைப்படங்கள் தேடலாம்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே (FAX) பேக்ஸ் என்ற வார்த்தை ஒரு காலத்தில் மிகவும்  பிரபலமாக இருந்தது.  ஆனால் இன்றைய கணிணி உலகில் பேக்ஸ் என்ற வார்த்தை இன்றும் உயர்ந்து நிற்கிறது.  ஆனால் ஒரு பேக்ஸ் மெசினிலிருந்து இன்னொரு பேக்ஸ் மெசினுக்கு பேக்ஸ் அனுப்பும் காலம் போய் இணையத்தில் இருந்து உங்கள் கோப்பை நேரடியாக பேக்ஸ் மெசினுக்கு அனுப்பும் முறை வந்துள்ளது ஆனால் அதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.  ஆனால் இலவசமாக எப்படி அனுப்புவது அதற்கு உதவும் இணையத் தளங்கள் எவை எவை என்றும்.  எப்படி இலவசமாக அனுப்புவது என்றும் பார்க்கலாம்.



முதலில் பேக்ஸ் பற்றிய சிலவற்றை காண்போம்.  பேக்ஸில் ஒரு ஸ்கேனர், ப்ரிண்டர்,  மற்றும்  மோடம்  உள்ளது.  முதலில் அனலாக் பேக்ஸ் மெசின் கண்டுபிடிக்கப்பட்டது.  பிறகு அதை மேம்படுத்தி தற்போதைய டிஜிட்டல் பேக்ஸ் மெசின் கண்டுபிடிக்கப்பட்டது.  முதல் பேக்ஸ் மெஷின் 1842ல் அலெக்ஸான்டர் பெய்ன் (Alexander Bain) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.  Facsimile machine என்பதன் சுருக்கமே Fax ஆகும். 

முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பேக்ஸ் மெசினின் புகைப்படங்களை இங்கு சென்று காணலாம்.  சுட்டி

முதல் பேக்ஸ் லண்டலிருந்து லிவர்புல் என்ற நகருக்கு அனுப்பபட்டது



இந்த புகைப்படத்தில் இருப்பவர் தான் அலெக்ஸான்டர் பெய்ன்.


இணையத்தில் இருந்து பேக்ஸ் அனுப்பு வசதி அமெரிக்க மற்றும் கனடாவில் மட்டுமே இந்த வசதி செயல்படுத்தப்படுகிறது. அதனால் மற்ற நாட்டினருக்கு பின் குறிப்பிடும் வசதி செயல்படாது.  இந்த வசதி வெகு வரைவில் இதர நாட்டினருக்கும் வரும் தூரம் வெகு அருகில் உள்ளது.

FaxZero

இந்த தளத்தின் மூலம் இணையத்தில் இருந்து இலவசமாக பேக்ஸ் அனுப்ப முடியும்.  ஒரு நாளுக்கு இரண்டு முறை மட்டுமே  இலவசமாக அனுப்ப முடியும்.  ஆனால் இந்த வசதி அமெரிக்க கனடா வாழ் மக்களுக்கு மட்டுமே உபயோகபடுத்த முடியும். வேர்ட், மற்றும் பிடிஎப் கோப்புகளை ஏற்றுக் கொள்ளும்.  நேரடியாக செய்திகளை உள்ளீடு செய்யும் வசதியும் உண்டு.  கோப்புகளில் மூன்று பக்கங்கள் வரை அனுமதி உண்டு.




நிறைய நண்பர்களுக்கு கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று பாடுவார்கள் அந்த அளவுக்கு கருப்பு மேல் சிலருக்கு ஈடுபாடு இருக்கும்.  அவர்களுக்கு கருப்பு வெள்ளை படங்கள் தேட இந்த இணையத்தளம் உதவுகிறது.  அதுவும் பிளிக்கரில் உள்ள புகைப்படங்களில் இருந்து தேடி தருகிறது.  கருப்பு வெள்ளை படங்கள் மட்டும் அல்ல உங்களுக்கு பிடித்த வண்ணம் நீலம் என்றால் அந்த வண்ணத்தில் உள்ள படங்களை மட்டும் தேடி தருகிறது.  இது போல் பத்து வகையான வண்ணங்களை கலந்து புகைப்படங்களை தேட இதில் வசதி உண்டு. 



முதலில் இந்த தளத்திற்குள் செல்லுங்கள் சுட்டி

அங்கு வலது பக்கம் வண்ணங்கள் பகுதியில் உங்களுக்கு தேவையான வண்ணங்கள் தேர்ந்தெடுங்கள் அவ்வளவு தான் ஒவ்வொரு வண்ணங்களாக நீங்கள் தேர்ந்தெடுக்க தேர்ந்தெடுக்க படங்கள் மாறி மாறி உங்களுக்கு காண்பிக்கப்படும். 



நான் இங்கு மூன்று வகையான வண்ணங்கள் தேர்ந்தெடுத்துள்ளேன் பாருங்கள்.



இது போல உங்கள் புகைப்படங்களை தரவேற்றி அதில் உள்ள வண்ணங்களை வைத்தும் தேட முடியும் அவ்வாறு நீங்கள் தேட இங்கே செல்லுங்கள் சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

சென்னை சங்கமத்துக்கு போட்டியாக மென்பொருட்களின் சங்கமம்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே இரண்டு தினங்களுக்கு முன்தான் நெருப்பு நரி உலாவி 3.6 பதிப்பு வெளியிடப்பட்டது அதன் போர்ட்டபிள் பதிப்பை தரவிறக்க இங்கே செல்லுங்கள் தரவிறக்க சுட்டி


நாம் நமது கணிணியில் ஒரு கோப்பை அழித்தால் குப்பைக்கூடையில் அது போய் குடியிருக்கும்.  அதே ( Shift + Delete ) ஷிப்ட் டெலிட் செய்தால் குப்பைக் கூடையில் இருக்காது.  ஆனால் ரெகவரி மென்பொருள் கொண்டு மீட்டெடுக்க முடியும். அது போல் ரெகவரி மென்பொருள் கொண்டு மீட்டெடுக்க முடியாமல் அழிக்க இந்த சிறு மென்பொருள் மிகவும் உபயோகமக இருக்கும்.  சுட்டி  இந்த மென்பொருளை நிறுவ தேவையில்ல்லை நேரடியாக இயக்கலாம்.


நோக்கியா செல்பேசி நிறுவனத்தினர் ஒவிஐ மேப்ஸ் என்ற மென்பொருளை இலவசமாக தருகின்றனர்.  இந்த மென்பொருள் மூலம் அனைத்து இடங்களுக்கும் துல்லியமாக சென்றடைய ஏதுவாகிறது.  இதை உங்கள் செல்பேசியில் உபயோகப்படுத்தலாம்.  ஆனால் இது அவர்களின் செல்பேசிகளான (Nokia X6, Nokia N97 mini, E72, E55, E52, Nokia 6730 classic, Nokia 6710 Navigator, Nokia 5800 Xpressmusic, Nokia 5800 Navigation Edition, Nokia 5230.)  இந்த மாடல்களுக்கு மட்டுமே இலவசம். தரவிறக்க சுட்டி


பத்து மென்பொருட்கள் திறந்து வைத்துக் கொண்டு முக்கியாமான ஒரு வேலை கணிணிகளில் வேலை செய்து கொண்டிருக்கும் போது என்னவென்று தெரியாமல் கணிணி ரீஸ்டார்ட் ஆகிவிடும் அப்பொழுது நாம் எந்த மென்பொருளை உபயோகப்படுத்தினோம் என்று நமக்கு வருகின்ற கோபத்தில் கணிணியை தூக்கி போட்டு உடைத்து விடலாம் என்று தோன்றும்.  அது எந்த குறிப்பட்ட மென்பொருட்கள் என்று தெரிந்து கொள்ள அல்லது ரீஸ்டார்ட் ஆனவுடன் தானாகவே அந்த மென்பொருட்கள் இயங்க இந்த மென்பொருள் உபயோகப்படுகிறது சுட்டி







இப்பொழுது உள்ள சமுதாய தளங்களில் பேஸ் புக் முதன்மையானதாக உள்ளது.  அதில் நிறைய புகைப்படங்கள் பரிமாறப்படுகிறது.  அவ்வாறு பரிமாறப்படும் புகைப்படங்களை தரவிறக்குவது அதற்கு உதவுகிறது பேஸ்புக் ஜேபிஜி பைன்டர் என்ற மென்பொருள் உள்ளது. தரவிறக்க சுட்டி

இதுவரை கூகிள் டாக்ஸில் எக்ஸல், வேர்ட், பிடிஎப், பவர்பாய்ண்ட் கோப்புகள் மட்டுமே தரவேற்ற முடியும். இப்பொழுது உங்கள் கோப்புகள் எதுவாக இருந்தாலும் இப்பொழுது கூகிள் டாக்ஸில் தரவேற்றலாம். 25 எம்பி வரை தரவேற்றலாம். அது ஒரு மென்பொருளாக கூட இருக்கலாம்.

அதே நேரத்தில் உங்கள் கோப்புகள் இரண்டு ஜிபி வரை இருந்தால் இந்த வலைத்தளத்தை நாடலாம்.  இந்த வலைத்தளத்தில் இரண்டு ஜிபி வரை தரவேற்றலாம்.  ரெஜிஸ்ட்ரேசன் தேவையில்லை.  இரண்டு வாரம் வரை உங்கள் கோப்புகள் பாதுகாக்கப்படும்.  உங்களுடைய கோப்புகள் மற்றும் இமெயில் முகவரி பாதுகாக்கப்படும்.   ஒரே நேரத்தில் 20 பேர் வரையில் பெறும் வகையில் அனுப்ப முடியும்.  தள முகவரி சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

இலவச சட்டரீதியான ஆல் இன் ஒன் வீடியோ மென்பொருள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே தினமும் வேலையில் பளு அதிகரித்த நிலையில் வாரம் ஒரு பதிவு போடுவது என்பது குதிரைக் கொம்பாகிப் போகி விட்டது.  அதனால் புதிய பதிவுகளுக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவுதான் நமது புதிய தளம் நிலைத்திருக்க உதவ போகிறது.  இதற்காக செய்ய வேண்டியது சில உதவிகள் மற்றும் ஆதரவுக்கரம் மட்டுமே இது என்னுடைய வேண்டுகோள் மற்றும் விண்ணப்பமும் கூட.   கணிணி பற்றி புதியதாக தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு இந்த தளத்தை சுட்டிக் காட்டுங்கள்.  நம் வலைத்தளம் பற்றி தெரிந்தவர்கள் புதியவர்களுக்கு கூறுங்கள்.  அத்துடன் மற்ற திரட்டிகளிலும் ஒட்டு போடுங்கள். கூகிளில் விளம்பரங்கள் தமிழ் வலைப்பதிவிற்கு கொடுப்பதே கிடையாது.  அவர்களை போன்ற சில இந்திய நிறுவனங்கள் நம் தமிழ் வலைப்பதிவிற்கு விளம்பரங்கள் தந்து உயிர் கொடுத்து வருகின்றனர்.  அதனால் படிக்க வருகிற அனைவரும் ஒரு விளம்பரத்தையாவது கிளிக் செய்து படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  இதனால் எங்களை போன்ற சிறு வலைப்பதிவருக்கும் ஏதோ வருடத்திற்கு ஒரு முறை வருமானம் பெற வாய்ப்பு ஏற்படுகிறது. உங்களால் எங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கிடைப்பதால்தான் தரமான பதிவுகளை தர முடிகிறது

அனைத்து வேலைகளையும் ஒரே மென்பொருளில் செய்தால் என்ன விதமான பலன்கள் கிடைக்கும்.   நேரம் மிச்சமாகும்.  வன் தட்டுகளில் இடம் மிச்சமாகும்.  அத்துடன் ஐகான் அதிகமாக இடத்தை அடைத்துக் கொள்ளாது.

நான் இங்கு குறிப்பிட போகும் மென்பொருள் என்னென்ன வேலைகள் செய்யும் என்று முதலில் தெரிந்து கொள்வோம்.

யூட்யூபில் இருந்து வீடியோக்களை தரவிறக்கலாம்.

யூட்யூபில் இருந்து தரவிறக்கிய வீடியோக்களை MP3 அல்லது iPOD மற்றும் iPhone PSP வகைகளுக்கு மாற்றலாம்.

யூட்யூபிற்கு நேரடியாக தரவேற்றலாம்.

எந்த ஒரு வீடியோவையும் டிவிடி ஆக மாற்றலாம்.

எந்த ஒரு வீடியோவையும்  .FLV கோப்பாக மாற்றலாம்.

3gp கோப்பிலிருந்து வேறு வீடியோ கோப்பாக மாற்றலாம்.

எந்த ஒரு வீடியோவையும்  MP3 ஆக மாற்றலாம்.

எந்த ஒரு வீடியோவிலிருந்து JPG படமாக மாற்றலாம்.

ஆடியோ மாற்றியும் இணைந்து இருக்கிறது.

டிவிடி வீடியோ மற்றும் ஆடியோ எரிக்கும் வசதி

டிவிடி டிகிரிப்ட் செய்யும் வசதி

வீடியோ தலைகீழாக இருந்தால் நேராக மாற்றும் வசதி (Rotate & Flip)


இத்தனை வசதியும் ஒரே மென்பொருளில் இருந்தால் கட்டாயம் குறைந்தது 50 டாலராவது கேட்பார்கள் நிறுவனத்தினர்.  ஆனால் இவர்கள் முற்றிலும் இலவசமாக அளிக்கின்றனர்.  இதன் Free Studio.  ஆனால் மென்பொருளில் தரவிறக்க அளவு 30 எம்பி மட்டுமே இதன் வசதிகளை பார்க்கையில் தரவிறக்கலாம்.  நேரடியாக தரவிறக்க சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

புதிய வலைமுகவரி

நண்பர்களே இனி நம் வலைத்தளம் புதிய முகவரியான http://www.gouthaminfotech.com என்ற பெயரில் இயங்கும் என்று மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த அரிய முயற்சிக்கு உதவிய நமது நண்பர் கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.  தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடும் உங்கள் நண்பர் வடிவேலன்.




» Read More...

நிறைய மென்பொருட்கள் மற்றும் குறும் மென்பொருட்கள் உங்களுக்காக

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 250க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே தினமும் ஒரு புதிய தொழில்நுட்பம் வெளிவந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.  அந்த வியப்பு அடுத்த புதிய தொழில்நுட்பம் வரும் வரை மட்டுமே. இது வரை மடிக்கணிணி உபயோகப்படுத்தும் பொழுது மடிக்கணிணி பின்னே என்ன இருக்கிறது என்னவென்று தெரியாது ஆனால் இப்பொழுது கண்டுபிடித்திருக்கிற மடிக்கணிணி சாம்சங் நிறுவனத்தினரின் புதிய கண்டுபிடிப்பு திரைக்கு பின்னே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். அதாவாது Transparent Laptop இது குறித்த படங்கள் கீழே






கூகிள் நிறுவனத்தினரின் பெரிய வலைத்தள முகவரிகளை சிறியதாக சுருக்கும் முறை இப்பொழுதுதான் வெளியிடப்பட்டது அதற்கான நெருப்பு நரி உலாவி ஆடு ஆன் தரப்பட்டுள்ளது. தரவிறக்க சுட்டி



இசை பிரியர்களுக்கான மென்பொருள் இதோ உங்களுக்கான மென்பொருள். இந்த மென்பொருளின் பெயர் LMMS (Linux MultiMedia Studio) இந்த மென்பொருள் மூலம் நீங்கள் வைத்திருக்கும் பாடல்களை எடிட் செய்யலாம்.  Beats மற்றும் Baseline  போன்றவற்றை உருவாக்கலாம்.  Fruity Loops ப்ரொஜெக்ட் கோப்புகளை தரவிறக்கி மாற்றம் செய்யலாம்.  இது போன்ற எண்ணற்ற செயல்களை செய்யக்கூடியது.  இது போன்ற ஒரு மென்பொருள் வாங்க வேண்டுமானல் குறைந்த பட்சம் 15,000 வரை செலவழிக்க வேண்டும்.  FruityLoop Studio, Apple's Garage Band, Logic Studio, Beat Machine Pro போன்ற மென்பொருளுக்கு சவால் விடக்கூடியவையாக உள்ளாது.  அது மட்டுமில்லாமல் இந்த மென்பொருள் விண்டோஸ் மற்றும் லினக்ஸ், மேக் போன்ற இயங்குதளங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இது ஒரு திறந்த நிலை மென்பொருள் என்பதால் இன்னும் தரம் உயர்த்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.  மென்பொருள் தரவிறக்க சுட்டி



Lan நெட்வொர்க் உள்ள அலுவலகங்களில் நிறைய வன் தட்டுகளை ஷேர் செய்து வைத்து இருப்பார்கள் அது போன்ற நெட்வொர்க்கில் எவை எவை ஷேர் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய இந்த மென்பொருள் உதவுகிறது. Class B, Class C போன்ற ஐபி முகவரிகளிலும் தேடித்தருகிறது.  மென்பொருளை தரவிறக்க சுட்டி


நீங்கள் தரவிறக்கும் மென்பொருள் முப்பது நாள் வரை மட்டுமே செயல்படும்.  இதை ஒரு வருடம் வரை சட்டரீதியாக நீட்டிக்க நேரடியாக இங்கே செல்லுங்கள் சுட்டி இங்கு உங்கள் பெயர் முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் இரண்டு நாட்களில் உங்களுக்கு Serial Key உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள். 

உங்கள் கணிணியின் திரை பிக்சல்களை கண்க்கீடு செய்ய இந்த தளம் உதவுகிறது சுட்டி இது இணையம் வழியாக கணக்கீடு செய்ய. 



இதையே உங்கள் கணிணியில் இணைய இணைப்பு இல்லாமல் போர்ட்டபிள் மென்பொருள் மூலம் அறிந்து கொள்ள போர்ட்டபிள் மென்பொருள் தரவிறக்க சுட்டி

தெனாலி படத்தில் கமலஹாசன் தெனாலி படத்தில் கமல் சொல்லுவாரே எலியைப் பார்த்தால் பயம் புலியைப் பார்த்தால் பயம் அதைப் பார்த்தால் இதைப் பார்த்தால் பயம் என்று அடுக்கிக் கொண்டு போவார் அந்த பயங்களுக்குப் போபியா என்று பெயர் இது போன்ற போபியாக்கள் எத்தனை உள்ளன அதன் வகைகள் என்னவென்று தெரிந்து கொள்ள இங்கு செல்லுங்கள் சுட்டி  அப்படி இல்லை என்றால் கீழே படத்தை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.



மீண்டும் புதிய பதிவுகளுடன் புதிய மென்பொருட்களுடன் விரைவில் சந்திக்கிறேன்.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

நெட்வொர்க் போல்டர்களை சுலபமாக தேட எளிய வழி மென்பொருள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 250க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி
நண்பர்களே அனைவருக்கு சிசி கீளினர் தெரியும் அது போலவே இன்னும் ஒரு கீளினர் உண்டு அதன் பெயர் என் கீளினர் (NCleaner)  இந்த மென்பொருள் மிகவும் அருமையாக உள்ளது. என்பது வகையான மென்பொருட்களின் ஹிஸ்டரிகளை நீக்க கூடியது.  உங்கள் ரெஜிஸ்டரியில் உள்ள பிழைகளை வேகமாக நீக்க கூடியது.  இது குறித்த ஆங்கிலத்தில் உள்ள சிறப்புகள் கீழே  நேரமின்மை காரணத்தால் அப்படியே இங்கு கொடுத்துள்ளேன்.  மென்பொருள் தரவிறக்க சுட்டி





  1. Monitor your system resources to maintain a certain amount of free disk space and optimize memory usage.
  2. Monitor you system using the System Advisor and correct critical Windows errors.
  3. Optimize system memory usage.
  4. Protect your privacy by shredding all deleted clean items (using professional algorithms), so they cannot be recovered using specialized recovery software.
  5. Add custom files and folders to be cleaned on each system clean.
  6. Choose which cookies you want to keep and which you want removed.
  7. Shred free space on all hard disks and partitions, so that previous deleted files cannot be recovered using specialized recovery software.
  8. Tweak your system to protect your privacy by enabling or disabling hidden Windows features that could have allowed intruders on your system.
  9. Tweak your system to make it faster and stable by disabling unnecessary features and services and recover resources.
  10. Use predefined Tweak profiles to enable the best Tweak configurations.
  11. Use the advanced Startup Manager to see ALL objects launched at startup including services and system objects.
  12. This powerful module allows you to spot hidden viruses or unwanted applications and disable them.
  13. Use the advanced Startup Manager to save a list file with all objects that are launched at startup.
  14. Find unnecessary files on your system (backup files, log files, invalid shortcuts and many other) and remove them.
  15. You can also add your own files you want to scan for and remove.
  16. Schedule cleans at startup, shutdown, on browser close at specific time based intervals.
  17. Maintain log file with all actions and the time when they occurred.
  18. Maintain advanced statistics on how you use nCleaner and its effect.
  19. Choose one of 4 shredding algorithms for best privacy protection or clean speed.
  20. Password protect key, sensitive features in the application while still allowing cleaning the system.
  21. Clean your Windows Vista based system.
  22. Manage system Services. Disable, start, stop Services.



உங்கள் கணிணி ஒரு நெட்வொர்க்கில் (Network) இணைக்கப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம்.  அந்த நெட்வொர்க்கில் எந்தெந்த கணிணியின் எந்தெந்த போல்டர்கள் ஷேரிங் (Sharing) செய்யப்பட்டுள்ளது என்று கண்டறிய இந்த மென்பொருள் உதவும் மென்பொருள் சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

கூகிளின் புது வருட கொண்டாட்டம் - புதிய மென்பொருட்களுடன்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 250க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே உங்கள் கணிணி தானாகவே குறிப்பிட்ட நேரத்தில் அணைக்க இந்த மென்பொருள் உதவும்.  இந்த மென்பொருளில் எந்த நேரம் அணைக்க வேண்டும் என்று நேரத்தை குறித்து விட்டு எவ்வளவு நேரத்திற்கு முன் நினைவூட்ட வேண்டும் என்று செட் செய்யலாம். மென்பொருள் தரவிறக்க சுட்டி



உங்களிடம் இருக்கும் ஒரு புகைப்படத்தை ஒரு குறிப்பட்ட கலருக்கு மாற்ற அல்லது கருப்பு வெள்ளை புகைப்படமாக்க இந்த மிக சிறிய மென்பொருள் உதவும்.  இந்த மென்பொருளின் அளவு 1 எம்பிக்கும் குறைவு என்பதால் வேகமாக தரவிறக்கி விடலாம் சுலபமாக அனைவரும் உபயோகிக்கலாம்.  சுட்டி


உங்கள் புகைப்படத்தை கையால் வரைந்த ஓவியமாக மாற்ற இந்த மென்பொருள் உதவுகிறது மென்பொருள் தரவிறக்க சுட்டி  இந்த மென்பொருள் வெறும் 60 கேபி மட்டுமே.



நெருப்பு நரி உலாவி நிறுவனத்தினர் வெளியிட்ட காலண்டர் இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளவும். கலர் பிரிண்டரில் அச்சடித்தால் அழகாக இருக்கும்.  கருப்பு என்றாலும் ஒகே  சுட்டி




பிடிஎப் பாஸ்வேர் நீக்க மென்பொருள் பிப்ரவரி 14 2010 உடன் முடிவடைகிறது. இந்த மென்பொருளை நான் ஏற்கனவே நம் தளத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.  பழைய சுட்டி



கூகிள் நிறுவனத்தினர் தங்கள் வலைத்தளத்தில் அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.



இதை பார்ப்பது எப்படி என்ற பழைய சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை