நண்பர்களே பயாஸ் BIOS என்ன என்றால் அனைவருக்கும் தெரிந்திருக்கும். கணிணி ஆன் செய்தவுடன் இதன் வழியாக தான் POST Power on Self Test நடக்கும் அதாவது சுய பரிசோதனை செய்து விட்டு கணிணி பூட் ஆகும். இந்த சுய பரிசோதனையின் போது அனைத்தும் சரியாக இருந்தால் ஒரு பீப் சத்தம் வந்து விட்டு கணிணி திரை தெரிய ஆரம்பிக்கும். இரண்டு பீப் சத்தம் வந்தால் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம் இது போல் ஒவ்வொரு பீப் சத்தத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு. பயாஸ் உருவாக்குவதில் மொத்தமே மூன்று நிறுவனங்கள்தான் இவர்களிடம் இருந்து வாங்கிதான் தங்கள் மதர்போர்டில் பொருத்துகிறார்கள். அந்த நிறுவனங்கள் ஒன்று ஐபிஎம், பீனிக்ஸ், ஏஎம்ஐ மட்டுமே. இது போன்ற பீப் சத்தங்கள் வந்தால் என்ன அர்த்தம் எல்லோருக்கும் தெரியாது கணிணி வல்லுநருக்கு மட்டுமே புரியும். அனைவருக்கும் புரியும் வண்ணம் மிக அருமையாக விளக்கமாக ஒரு மென்பொருளில் கொண்டு வந்துள்ளனர். அந்த மென்பொருள் சுட்டி
நீங்கள் புதிய விஎல்சி ப்ளேயர் நிறுவி இருந்தால் இந்த வசதியை நீங்களும் உபயோகப்படுத்தலாம்.
டிவிடி ரிப் செய்ய முடியும்.
முதலில் Media என்பதனை தேர்வு செய்து அதில் Convert / Save என்பதை தேர்வு செய்யுங்கள். பிறகு Disk டேபை தேர்வு செய்து கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு தேவையான டைட்டிலை தேர்வு செய்து உங்களுக்கு தேவையான பெயரை கொடுத்து Start என்பதை கிளிக் செய்யுங்கள் முடிந்தது.
கூகிளின் நிறுவனத்தின் அதிகாரபூர்வமற்ற கூகிள் குரோம் ஒஎஸ் வெளிவந்துள்ளது.
இந்த மென்பொருளை நிறுவுவதும் உபயோகப்படுத்துவதும் உங்கள் விருப்பமே எக்காரணத்தை முன்னிட்டும் எங்கள் நிறுவனம் இதற்கு பொறுப்பேற்காது.
தரவிறக்க சுட்டி
உங்கள் கணிணி ஆன் செய்து எவ்வளவு நேரம் ஆனது என்பதை தெரிந்து கொள்ள இந்த மென்பொருள் உதவும் அது மட்டுமில்லை உங்கள் கணிணியை எந்த தேதியில் எந்த நேரத்தில் அணைக்க வேண்டும் என்பதை இந்த மென்பொருள் மூலம் செட் செய்து கொள்ளலாம். மென்பொருள் சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
5 ஊக்கப்படுத்தியவர்கள்:
நன்றி நண்பரே !
கூகிள் குரோம் ஒ.எஸ் எப்பொழுது வெளிவரும் என்று ஆவலோடு காத்திருந்தேன்.
தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.......
கூகுள் ஓஸ் உண்மையிலேயே பயனுள்ள குறிப்பு. இது பற்றி இன்னும் குறிப்புகள் எழுதினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தரவிறக்கி பாவித்த யாராவது கருத்து கூறுவார்களா?
ஹார்வெயர் குறிப்பும் அருமை. அம்மென்பொருளை பதிவிறக்கி பயன்படுத்திப் பார்க்க வேண்டும்
தொடரந்து பதிவிடுங்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்
அன்புடன்
கொல்வின்
இலங்கை
பயனுள்ள தகவல்
மிக்க நன்றி
நல்ல பதிவு , முயற்சிக்கு நன்றி
கிராமத்து பையன் டெக்னிக்கல்ல கலக்குறாரு...
அருமையா, பயனுள்ள இடுகை!
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்