நண்பர்களே எந்த ஒரு கோப்பிலிருந்தும் பிடிஎப் ஆக மாற்ற சட்டரீதியான இலவச மென்பொருள் ஒன்று உங்களுக்காக. இந்த மென்பொருளை நிறுவினால் சாதாரண பிரிண்டர் போலவே நிறுவப்படும் நீங்கள் எந்த ஒரு கோப்பிலிருந்தும் ப்ரிண்ட் கொடுக்கும் பொழுது பிடிஎப் கோப்பாக மாற்றிக் கொள்ளலாம். இந்த மென்பொருள் இலவசமாக பெற நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டுமே உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரி மட்டும் கொடுத்தால் போதுமானது.
உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அவர்கள் ஒரு லைசென்ஸ் அடங்கிய மெயில் அனுப்புவார்கள். அதில் Registration name மற்றும் Registration Key அனுப்பி இருப்பார்கள். முக்கியமாக அதில் உள்ள Registration name என்ன இருக்கிறதோ அதைதான் கொடுக்க வேண்டும் வேறு பெயர் கொடுத்தால் பதிவு ஆகாது.
முதலில் இந்த பக்கத்திற்கு செல்லவும்
Nova PDF Promo Page
சென்ற பதிவில் யுஎஸ்பி பென் ட்ரைவ் எப்படி பாதுகாக என்று சில தகவல்கள் கொடுத்து இருந்தேன். முக்கியமான தகவல் ஒன்று விட்டு போனது. அதை கீழே கூறியிருக்கிறேன். மனதில் கொள்ளுங்கள்.
உங்கள் பென் ட்ரைவினை ஹார்ட்டிஸ்கில் செய்யும் டிபிராக் செய்யவே கூடாது. ஏன் என்றால் உங்கள் பென் ட்ரைவில் தகவல்கள் தொடர்ச்சியாக ஒரு ஒழுங்குமுறையோடு இருக்கும். ஹார்ட் டிஸ்க்கில் அப்படி கிடையாது வேறு வேறு இடங்களில் உங்கள் கோப்புகள் துண்டு துண்டாக பதியப்படும். அதனால் ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் செய்யலாம். பென் ட்ரைவினை டிபிராக் செய்யவே கூடாது.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே உங்களிடம் இருக்கும் யூஎஸ்பி பென் ட்ரைவை பாதுகாக்க சில வழிகள் இங்கே கூறுகிறேன். முடிந்தவரை இந்த வழிகளை உபயோகித்து பென் ட்ரைவினை அதிக நாட்கள் உபயோகியுங்கள்.
இப்பொழுதெல்லாம் யூஎஸ்பி பென் ட்ரைவ் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. கணினி எப்படி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதோ அது போல் பென் ட்ரைவினையும் தெரியும் ஏன் என்றால் இப்பொழுது வரும் ம்யூசிக் சிஸ்டங்கள் எல்லாம் யூஎஸ்பி பென் ட்ரைவ் ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது. அது போலவே எல்சிடி, எல்இடி டிவிக்களும் டிவிடி ப்ளேயர்களும் பென் ட்ரைவினை ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது. அதனால் எல்லோருக்கும் பென் ட்ரைவினை பாதுகாக்கும் வழிகள் தெரிந்து கொள்ள ஆசை வருகிறது. பென் ட்ரைவ் மட்டுமலாலம் யூஎஸ்பி பொருட்களை பாதுக்காக்க வழிகள் சில கீழே கொடுத்துளேன்.
Disabled Autorun ஆட்டோ ரன் நிறுத்தம்
பென் ட்ரைவினை கணினியில் செருகியவுடன் ஆட்டோ ரன் ஆகும். இதனால் இதில் உள்ள கோப்புகள் எந்த மென்பொருள் மூலம் திறக்க வேண்டும் என்று விண்டோஸ் காட்டும். இதன் மூலம் வைரஸ்களும் எளிதாக தொற்றும் பென் ட்ரைவினில். இதை முதலில் தடுக்க வேண்டும். இதற்கு AutoRun Disable செய்ய வேண்டும்.
இதற்கு மைக்ரோசாப்டிலேயே தனியாக பேட்ச் மென்பொருள் கிடைக்கிறது. இதை நிறுவினால் உங்கள் கணினியில் சிடி, டிவிடி, பென் ட்ரைவ் எது போட்டாலும் தானாக ப்ளே செய்யாது. அதாவது Auto Play Run தானாக நடக்காது.
Microsoft Auto Run Disabled Patch Download Link
Scan Your Pen Drive - பென்ட்ரைவினை சோதித்தல்
ஒவ்வொரு முறை உங்கள் பென் ட்ரைவினை கணினியில் செருகும் பொழுது உங்கள் கணினியில் உள்ள ஆன்டிவைரஸால் கட்டாயம் சோதிக்க வேண்டும். இதன் மூலம் கணினியிலும் வைரஸ் வராமல் தடுக்க முடியும். அத்துடன் பென் ட்ரைவினில் வைரஸ் இருந்தாலும் தடுக்க முடியும்.
அதற்கு உங்கள் கணினியில் நல்ல ஆன்டிவைரஸ் கட்டாயம் நிறுவி இருக்க வேண்டும். ஆன்டிவைரஸ் நிறுவுவதோடு நின்று விடாமல் உங்கள் ஆன்டி வைரஸ் தினமும் அப்டேட் ஆகிறதா என்றும் சோதித்துக் கொள்ளுங்கள். பென் ட்ரைவினை செருகியவுடன் உங்கள் கணினியில் Go To > My Computer > சென்று அங்கு உங்களுடைய பென் ட்ரைவினை Right Click செய்து Scan செய்யவும்.
Avira Free Antivirus Download Link
Safely Remove Your Pen Drive பென் ட்ரைவினை பாதுகாப்பாக நிறுத்துதல்
இது முக்கியமான ஒன்று நிறைய நண்பர்கள் எப்பொழுதும் இந்த தவறினை செய்கிறார்கள். அது என்னவென்றால் பென் ட்ரைவில் இருக்கும் கோப்புகளை நேரடியாக பென் ட்ரைவ் வழியாக திறப்பது. சரி திறப்பது கூட பரவாயில்லை அந்த கோப்பினை பென் ட்ரைவில் வைத்து கொண்டே வேலை செய்வது. இதனால் என்னாகிறது பென் ட்ரைவ் தொடர்ந்து வேலை செய்ய வேண்டி வரும். இதனால் சீக்கிரம் பென் ட்ரைவ் பழுதாகிறது. இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் பென் ட்ரைவில் எந்த கோப்பினை எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அதை கணினியில் சேமித்து விட்டு பிறகு கணினியில் இருந்து எடிட் செய்யுங்கள். அதுவே மிகவும் சிறந்தது.
அடுத்து யூஎஸ்பியை நிறுத்தாமல் அப்படியே பென் ட்ரைவினை பிடுங்குவது. எல்லோருமே யூஎஸ்பி பொருட்களான பென்ட்ரைவ், டிவிடி ட்ரைவ் பாக்கெட் ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவற்றை விண்டோஸில் இணைந்திருக்கும் மென்பொருட்கள் வழியாக நிறுத்திய பிறகே எடுக்க வேண்டும்.
அப்படி இல்லாவிடில் சிறு மென்பொருட்கள் இருக்கிறது. யூஎஸ்பியை நிறுத்துவதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் நமக்கு தேவையான யூஎஸ்பி பென்ட்ரைவ் அல்லது வேறு எந்த யூஎஸ்பி வன் பொருட்களையும் இந்த மென்பொருட்கள் மூலம் நிறுத்திய பிறகு எடுக்கலாம்.
USB Removal or Ejector Tool Download Link
General Tips - சில பொதுவான வழிமுறைகள்
அடுத்து நம் உபயோகிக்கும் பென்ட்ரைவினை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வதற்காக வைத்திருக்கிறோம் என்பதற்காக அதை எப்பொழுதும் கழுத்திலேயே மாட்டி வைத்திருப்பது அல்லது மிகவும் சூடான பகுதிகளில் வைப்பது போன்றவைகளை கட்டாயம் தவிருங்கள் அத்துடன் வீட்டினுள் கணினி ஸ்பீக்கர் அல்லது ஹோம் தியேட்டர்கள் மீது பென் ட்ரைவினை வைப்பதையும் தவிர்த்து விடுங்கள். ஏன் என்றால் இதில் எல்லாமே காந்தசக்தி இருப்பதால் சுலபத்தில் உங்கள் டேட்டாக்கள் யூஎஸ்பி பென்ட்ரைவில் இருந்து காணாமல் போய் விடும். சில நேரங்களில் யூஎஸ்பி பென் ட்ரைவ் தண்ணீரில் விழுந்து விட்டால் உடனே எடுத்து துடைத்து விட்டு கணினியில் உபயோகப்படுத்தாதீர்கள். தண்ணீரில் விழுந்த பென் ட்ரைவினை 48 மணி நேரங்கள் கழித்தே உபயோகிக்கவும்.
அந்த இடைவெளியில் உங்கள் பென் ட்ரைவினை சமையல் செய்து வைத்த பாத்திரத்தில் மிதமான சூடு இருக்கும் பட்சத்தில் அதன் மேல் வைத்தால் ஓரளவு தண்ணீர் இழுக்கும் அது போல உங்கள் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு வைத்தால் உங்கள் பென் ட்ரைவில் இருக்கும் நீர் சுலபமாக வெளியேற்றப்படும். ஏன் என்றால் அரிசி நீரினை அதிகளவு உறிஞ்சும் தன்மை உடையது.
இந்த பதிவின் மூலம் அனைவரும் தங்கள் பென்ட்ரைவ் மட்டுமல்லாமல் யூஎஸ்பி பொருட்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் உற்சாகமிக்க பின்னூட்டங்கள் என்னை இன்னும் புதிய பதிவுகள் எழுத ஊக்கப்படுத்தும்.
நன்றி மீண்டும் வருகிறேன்.
» Read More...
நண்பர்களே உங்களுக்கு யூட்யூபில் இருக்கும் வீடியோவை தரவிறக்க எத்தனையோ மென்பொருட்கள் வலைத்தளங்கள் தெரியும். இருந்தாலும் யூட்யூப் வீடியோ இல்லாமல் வெறும் எம்பி3 ஆக தரவிறக்க ஒரு சூப்பரான வலைத்தளம் இருக்கிறது. இதில் வெறும் யூட்யூப் லின்க் மற்றும் உங்கள் மெயில் முகவரி கொடுத்தால் போதும்.
அத்துடன் அதில் நான்கு வகையான அவுட்புட் பார்மெட்டில் எடுக்கலாம். MP3, OGG, AAC, WMA
மூன்று விதமான குவாலிட்டிகள் உண்டு. Worst, Medium மற்றும் Best
யூட்யூப் வீடியோக்களை வெறும ஆடியோ கோப்புகளாக மாற்ற இந்த வலைத்தளம் மிகவும் உதவியாக இருக்கும். நேரடியாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடுகிறார்கள்.
குறிப்பு இந்த தளத்தில் விளம்பரங்கள் அந்த தளத்தினை போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படத்தில் உள்ளது போல தேர்வு செய்யுங்கள்.
Mobile Media Converter Online Link
தினம் ஒரு புதிய ஸ்கீரின் சேவர் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்வதாக இருந்தால் இந்த வலைத்தளம் உதவியாக இருக்கும். இந்த தளத்தில் புதிய புதிய ஸ்கீரின் சேவர்கள் தினமும் கிடைக்கிறது.
இதில் விண்டோஸ் மட்டுமல்லாமல் மேக் கணினிகளுக்கும் ஸ்கீரின் சேவர்கள் உள்ளது.
இந்த தளத்தில் உள்ள வகைகளில் நீங்கள் தேர்ந்தெடுத்து தரவிறக்கிக் கொள்ளலாம்.
இந்த தளத்தில் ரெஜிஸ்டர் செய்ய தேவையில்லை.
எந்த ஒரு தீங்கும் இல்லாத ஸ்கீரின் சேவர்கள்.
நீங்கள் தேர்ந்தெடுத்த ஸ்கீரின் சேவரை ஒரே கிளிக்கில் டவுன்லோடு செய்யும் வசதி உள்ளது.
இந்த தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்தால் புதிய ஸ்கீரின் சேவர் வரும் பொழுது உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்படும்.
இந்த ஸ்கீரின் சேவர் தளத்திற்கு செல்ல Daily New Free ScreenSaver Link
உங்களிடம் உள்ள புகைப்படங்களை வைத்து நீங்கள் GIF Animation பைல்கள் உருவாக்க வேண்டும் என்றால் நீங்கள் செல்ல வேண்டிய தளம் இது. இந்த தளத்தில் உங்கள் கோப்புகளை அப்லோடு செய்து உங்கள் தேவைக்கேற்ப GIF Animation கோப்பாக மாற்றி பெற்றுக் கொள்ளலாம். இதில் GIF Animation கோப்பாக உருவாக்கிய பிறகு நேரடியாக உங்கள் கணினியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அல்லது உங்கள் வலைப்பூவில் லின்க்கும் கொடுக்கலாம்.
இந்த தளத்தில் இருக்கும் சில வசதிகள் Avatar எனப்படும் போரம்களில் உபயோகப்படுத்தும் அளவுக்கு போட்டோக்களை உருவாக்கித் தரும் வசதி.
புகைப்படங்களை ரீசைஸ் செய்யும் வசதி.
இதில் ஏற்கனவே GIF Animation ஆக உருவாக்கி வைத்திருக்கும் கோப்புகளை தரவிறக்க வசதியும் உள்ளது.
உங்கள் கோப்புகளையும் GIF Animation அவர்களுடைய தளத்தில் வேண்டும் என்றால் மட்டும் சேமித்து வைக்கும் வசதியும் உள்ளது.
உங்கள் GIF Animation செய்த கோப்புகளை நண்பர்களுக்கு நேரடியாக அனுப்பும் வசதியும் உள்ளது.
இது போன்ற பல வசதிகள் உள்ளது.
இந்த் தளத்திற்கு செல்ல PICASION Site Link
Google நிறுவனம் தற்பொழுது Google Translate பகுதியில் நம் தமிழும் சேர்ந்திருக்கிறது. இதனால் ஓரளவுக்கு பிழைகள் இல்லாமல் தமிழில் இருந்து வேறு மொழிகளுக்கு மாற்ற்ம் செய்ய முடிகிறது. நன்றி கூகிள்
Google Translate Link
தமிழர்களின் சார்பாக நன்றி கூகிள் நிறுவனத்திற்கும் இதற்காக உழைத்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் நன்றி Thanks To Google & Google Team
நன்றி மீண்டும் வருகிறேன்.
» Read More...