இந்த மென்பொருள் போர்ட்டபிள் மென்பொருளாகவும் கிடைப்பது என்பது இன்னும் ஒரு சிறப்பம்சம். சுட்டி
இந்த மென்பொருள் வழியாக பிடிஎப் கோப்புகளையும் திறக்க முடியும். திறக்க மட்டுமல்ல பிடிஎப் கோப்புகளில் எதை மாற்ற விரும்புகிறீர்களோ அதை எடிட் செய்து மாற்ற முடியும் என்பது இதன் சிறப்பு.
இந்த மென்பொருளின் ஸ்ப்ரெட் ஷீட்டில் ஒரு மில்லியன் (Row) வரிசை வரை உண்டு. ஆனால் மைக்ரோசாப்ட் எக்ஸலில் 65000 மட்டுமே உண்டு.
லோட்டஸ் வேர்ட் போன்ற கோப்புகளையும் இந்த மென்பொருளில் சுலபமாக கையாளலாம்.
இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை கோப்பு என்பதால் நீங்கள் ஒரு முறை தரவிறக்கம் செய்து எத்தனை கணினிகளில் வேண்டுமானலும் பயன்படுத்தலாம். அதே போல் எத்தனை காப்பி வேண்டுமானலும் எடுத்து உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் பயன்படுத்த தரலாம். நீங்கள் ஒரு மென்பொருள் வல்லுநராக இருந்தால் உங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி நிறைய மாற்றங்கள் செய்து கொள்ளலாம். யாரும் உங்களை கேள்வி கேட்க மாட்டார்கள்.
இந்த மென்பொருள் முப்பது வகை மொழிகளில் கிடைக்கிறது. இதில் நம் தாய்மொழி தமிழும் அடக்கம் என்பதில் நாம் பெருமைப்படலாம்.
இந்த மென்பொருளை நேரடியாக தரவிறக்காலாம். அல்லது டொரண்ட் வழியாகவும் தரவிறக்கலாம். அதற்கான வசதி அந்த வலைத்தளத்திலேயே உண்டு.
லிபேர் ஆபிஸ் மென்பொருள் தரவிறக்க சுட்டி
லிபேர் ஆபிஸ் போர்ட்டபிள் தரவிறக்க சுட்டி
டொரண்டாக தரவிறக்க தரவிறக்கம் அருகிள் ஒரு கட்டம் இருக்கும் Downloading using Bittorrent என்று அதை டிக் செய்தால் போதும்.
இந்த மென்பொருள் நிறுவ உங்களிடம் விண்டோஸ் 2000 (சர்வீஸ் பேக் 4), எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 இருந்தால் போதும்.
பென்டியம் 3 அல்லது அதற்கு மேல் இருந்தால் போதுமானது. அத்துடன் குறைந்த பட்சம் 256 எம்பி நினைவகம் போதும் 512 எம்பி இருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக செயல்படும். ( இப்பொழுதுதான் குறைந்தது 1 ஜிபி நினைவகம் இல்லாத கணினி இல்லையே )
இஅசூஸ் பார்டிசன் மென்பொருள் போலவே இன்னொரு மென்பொருள் Aomei Partition Assistant Professional Edition இந்த மென்பொருள் இன்று வரை (28-01-2011)இலவசமாக வழங்கப்படுகிறது. தேவையானவர்கள் தரவிறக்கிக் கொள்ளவும். சுட்டி
நண்பர் வேலன் அவர்கள் 500 பதிவை எட்டியிருக்கிறார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். என்னுடைய அடுத்த பதிவு 400 வது பதிவு நேரம் இல்லாததால் குறைவாகவே எழுதுகிறேன். உங்கள் ஆதரவு மட்டுமே என்னை மேன்மேலும் உயர்த்துகிறது.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...