நண்பர்களே முல்லைப்
பெரியாறு பிரச்சினையை முழுமையாகப் புரிந்து கொள்ள ஆவணப் படம் ஒன்றைத்
தயாரித்துள்ளது தமிழக அரசின் பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம்.
முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய
தளத்திலும் காணக்
கிடைக்கிறது. படித்தவர்-பாமரர், தமிழர் – மலையாளி என்ற பேதமின்றி,
யோசிக்கத் தெரிந்த அத்தனைப் பேரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம்
இந்தப் படம் அமைந்துள்ளது.
இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும்
புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம்
தமிழக அரசுக்கு இல்லை. 42 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக வெளிவந்திருக்கிறது.
கீழே உள்ள படத்தினை பாருங்கள்
The Mullai Periyar DAM Problem
இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு
முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத்
தனியார் தொலைக்காட்சிகளையும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள்
தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்
.
அனைத்து இணையதளங்களும் தங்களின் தலையாய கடமையாக இந்தப் படத்தை வெளியிட வேண்டும். என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே உங்கள் பின்னூட்டமும் உற்சாகமும் எவ்வளவு வேலைகளுக்கிடையிலும் ஒரு பதிவு போட வேண்டும் என்று போட்டு வருகிறேன் இதற்கு உங்கள் உற்சாகமும் வேண்டும் அத்துடன் முடிந்த்வரை படிப்பவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். முடிந்த்வரை விளம்பரக் கணைகளை தொட்டு பாருங்கள். நன்றி இனி பதிவிற்கு செல்வோம்.
புதிய யூட்யூப் இன்டெர்பேஸ்
இதுவரை கூகிள் நிறுவனம் தன்னுடைய ஜிமெயில்
மற்றும் கூகிள் ரீடருக்கு மட்டும் இடைமுகப்பை (Interface)
மாற்றியிருந்தது. அடுத்ததாக தன்னுடைய வீடியோ தளமான யூட்யூப் தளத்திற்கும்
புதிய பொலிவினை வழங்குகிறது. ஆனால் இது இன்னும் நடைமுறைக்கு வர இன்னும்
சிறிது நாட்களாகும் என்று தெரிகிறது. சில கோடிங் மாற்றத்தின் மூலம் நாமும்
அந்த புதிய இடைமுகப்பை பெற முடியும். இதற்கு நீங்கள் உங்கள் கூகிள்
மூலம் யூட்ய்பில் நுழைந்து கொள்ளுங்கள்.
பிறகு நீங்கள் பயர்பாக்ஸ் உபயோகிப்பவர்கள் என்றால் Ctrl+Shift+K
அழுத்தினால் பயர்பாக்ஸ் மேலே டெவலப்பர்களுக்கான Console Box வரும் அங்கு
கீழுள்ள வார்த்தையை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள். பிறகு ஒரு என்டர்
தட்டுங்கள். உங்கள் youtube பக்கத்தினை F5 கொடுத்து Refresh செய்து
பாருங்கள்.
document.cookie="VISITOR_INFO1_LIVE=ST1Ti53r4fU";
இதே நீங்கள் கூகிள் குரோம் உபயோகிப்பவர்கள் என்றால் Ctrl+Shift+J கொடுத்து Console Box செல்லலாம்.
உங்களின் புதிய அனுபவத்திற்கு தயாரகுங்கள்.
ஒரு குறுஞ்செய்தி
அடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிடப் போவது விண்டோஸ் 8 இதில் இலவசமக
மைக்ரோசாப்டின் விண்டோஸ் செக்யூரிட்டி எஸ்ஸென்டியல்ஸ் ஆன்டி வைரஸ் இணைத்து
வழங்க போவதாக அறிவித்துள்ளது. இது மைக்ரோசாப்ட் உபயோகிப்பவர்களுக்கு ஒரு
மகிழ்ச்சியான செய்தி இந்த செய்தி ஆன்டிவைரஸ் தயாரித்து வழங்கும்
நிறுவனத்திற்கு அதிர்ச்சியான செய்தியும் ஆகும்.
கீழே Grand Theft Auto V Trailer உங்களுக்காக
Grand Theft Auto என்பது மிகவும் அனைவராலும் விரும்பபடக்கூடிய ஒரு
விளையாட்டாக இருக்கிறது. இதன் ஐந்தாம் பாகம் விரைவில் வெளியாக
இருக்கிறது. இந்த விளையாட்டின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. செம
சூப்பராக இருக்கிறது கிராபிக்ஸ்.
கணினி ஆன் மற்றும் ஆப் செய்யப்பட்டது எப்பொழுது
உங்கள் கணினி எந்த நேரத்தில் இருந்து உங்கள் ஆன் மற்றும் ஆப் செய்யப்பட்டது
என்பதை தெரிந்து கொள்ள இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். இது
கடந்த மூன்று வாரங்கள் வரை உங்கள் கணினி எந்த நேரத்தில் ஆன் செய்து
வைக்கப்பட்டது எந்த நேரம் உபயோகப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டது என்ற
தகவல்கள் காட்டும். இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே யுஎஸ்பி ட்ரைவ் மற்றும் யுஎஸ்பி சம்பந்தப்பட்ட பொருட்களை
நிறுத்துவதற்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். இது ஒரு
திறந்த நிலை மென்பொருள் என்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது. அத்துடன் இது
விண்டோஸ் அனைத்திலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.. இதை
இன்னும் மேம்படுத்த நினைப்பவர்கள் இவர்கள் தளத்தில் இருந்து Source Code
எடுத்து மாற்றங்கள் செய்தும் கொள்ளலாம். இந்த மென்பொருள் வெறும் 1
எம்பிக்குள் அடங்கிவிடும். அத்துடன் இது ஒரு போர்ட்டபிள் மென்பொருளாகும்.
இந்த மென்பொருளின் பெயர் USB Disk Ejector இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
இன்று மொபைல் போன்கள் இல்லாதவர்களை பார்ப்பது அரிதான ஒன்றாக இருக்கும்
நேரத்தில் இதுவரை வெளிவந்த மொபைல் போன்களில் தவிர்க்க முடியாத இடத்தை
பிடித்த மொபைல் போன்கள் குறித்த வரலாற்று தகவலகள் இந்த புகைப்படத்தில்
உள்ளது. இதில் 1973ல் வெளிவந்த மொபைலில் இருந்து தற்பொழுது வெளியான
எல்ஜியின் 3டி ஸ்மார்ட் போன் வரை பட்டியலிடப்பட்டுள்ளது. 1999ல் வெளி
வந்த 3210 மொபைல் எனக்கு பிடித்த மாடலாகும்.
இப்பொழுதுதான் பயர்பாக்ஸின் உலாவி புதுப்பிக்கப்பட்டு Firefox 8.0
வெளிவந்தது. அதற்குள் அடுத்த பதிப்பு வெளியிட தயாராகி வருகிறது பயர்பாக்ஸ்
நிறுவனம். அடுத்த Firefox 9.0 பீட்டா வெர்சனை உபயோகித்து பார்க்க சுட்டி இது ஒரு பீட்டா வெர்சன் என்பதினை மனதில் கொண்டு தரவிறக்கம் செய்து உபயோகப்படுத்தவும்.
நவம்பர் பதினைந்து என் வாழ்வில் மறக்கவே முடியாத நாள் நான் மிகவும்
எதிர்பார்த்த விசயம் நடந்தேறிய நாள் அன்று என்ன நாள் என்று நினைக்கீறீர்கள்
போன வருடம் நவம்பர் 15 2010 அன்று எனக்கு பெண் குழந்தை வடிவில் தேவதை
அவதரித்த நாள் ஆம் என் பெண்ணின் முதல் வருட பிறந்தநாள் நண்பர்களின்
ஆசிர்வாதமும் வாழ்த்துக்களும் என் பெண்ணை இந்த உலகில் தைரியத்துடன்
மகிழ்ச்சியுடனும் வாழ வைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அண்ணனும் தங்கையும் எவ்வளவு மகிழ்வாக இருக்கும் புகைப்படம் இவர்களுக்காகவே என் அனைத்து கஷ்டங்களையும் தாங்கும் பக்குவம் வந்துவிட்டது.
படங்களை பெரிதாக பார்க்க கிளிக் செய்து பார்க்கவும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...