» Read More...
உங்களுக்கு பிடித்திருக்கிறதா இல்லையா தெரிந்து கொள்ள
400வது பதிவு மற்றும் SARDU உருவாக்குவது எப்படி?
நண்பர்களே இன்று பலவகையான Rescue Disk களை இணைத்து ஒரு USB Disk வழியாக Boot செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். இது போல் செய்வதால் என்ன பலன் என்றால் சுலபமாக எந்த கணினியிலும் Rescue Disk வழியாக Boot செய்யலாம். பலவகையான Anti Virus மற்றும் Utitlity களை எந்த கணினியில் Bootable ஆக கையாள முடியும். இந்த வகைய Rescue USB Disk களை கொண்டு எந்த ஒரு கணினியிலும் உள்ள பிரச்சனைகளை தீர்க்க மிகவும் உதவியாக இருக்கும். இது கணினி சர்வீஸ் என்ஜினியர்களுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும்.

இது போன்ற USB டிஸ்க் தயாரிக்க குறைந்த பட்சம் 2 ஜிபி பென் ட்ரைவ் இருத்தல் நலம்.
முதலில் பென்ட்ரைவை பார்மெட் செய்து கொள்ளுங்கள்.
![]()
பென்ட்ரைவை பார்மெட் செய்யும் போது FAT 32 ஆக பார்மெட் செய்து கொள்ளுங்கள்.

பிறகு இந்த சுட்டியில் இருந்து SARDU ( Shardana Antivirus Rescue Disk Utility) தரவிறக்கிக் கொள்ளுங்கள். SARDU தரவிறக்க சுட்டி
Extract செய்த போல்டரில் இருந்து SARDU மென்பொருளை திறக்கவும்.
மென்பொருளை திறந்த பிறகு Make USB என்று வலது புறத்தில் உள்ள பட்டனை அழுத்தவும்.

அவ்வளவுதான் முடிந்தவுடன் உங்கள் ரெஸ்க்யூ யூஎஸ்பி ட்ரைவை எங்கு வேண்டுமானாலும் பூட்டபிளாக உபயோகபடுத்தலாம்.
இதற்கு தேவையானவை உங்கள் கணினியில் USB பென் ட்ரைவ் குறைந்தது 2 ஜிபி, இணைய சேவை, மற்றும் SARDU மென்பொருள்.

நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
லிபேர் ஆபிஸ் மென்பொருள் திறந்த நிலை மென்பொருள் குறித்த கட்டுரை

இந்த மென்பொருள் போர்ட்டபிள் மென்பொருளாகவும் கிடைப்பது என்பது இன்னும் ஒரு சிறப்பம்சம். சுட்டி
இந்த மென்பொருள் வழியாக பிடிஎப் கோப்புகளையும் திறக்க முடியும். திறக்க மட்டுமல்ல பிடிஎப் கோப்புகளில் எதை மாற்ற விரும்புகிறீர்களோ அதை எடிட் செய்து மாற்ற முடியும் என்பது இதன் சிறப்பு.
இந்த மென்பொருளின் ஸ்ப்ரெட் ஷீட்டில் ஒரு மில்லியன் (Row) வரிசை வரை உண்டு. ஆனால் மைக்ரோசாப்ட் எக்ஸலில் 65000 மட்டுமே உண்டு.

லோட்டஸ் வேர்ட் போன்ற கோப்புகளையும் இந்த மென்பொருளில் சுலபமாக கையாளலாம்.
இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை கோப்பு என்பதால் நீங்கள் ஒரு முறை தரவிறக்கம் செய்து எத்தனை கணினிகளில் வேண்டுமானலும் பயன்படுத்தலாம். அதே போல் எத்தனை காப்பி வேண்டுமானலும் எடுத்து உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் பயன்படுத்த தரலாம். நீங்கள் ஒரு மென்பொருள் வல்லுநராக இருந்தால் உங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி நிறைய மாற்றங்கள் செய்து கொள்ளலாம். யாரும் உங்களை கேள்வி கேட்க மாட்டார்கள்.

இந்த மென்பொருள் முப்பது வகை மொழிகளில் கிடைக்கிறது. இதில் நம் தாய்மொழி தமிழும் அடக்கம் என்பதில் நாம் பெருமைப்படலாம்.
இந்த மென்பொருளை நேரடியாக தரவிறக்காலாம். அல்லது டொரண்ட் வழியாகவும் தரவிறக்கலாம். அதற்கான வசதி அந்த வலைத்தளத்திலேயே உண்டு.
லிபேர் ஆபிஸ் மென்பொருள் தரவிறக்க சுட்டி
லிபேர் ஆபிஸ் போர்ட்டபிள் தரவிறக்க சுட்டி
டொரண்டாக தரவிறக்க தரவிறக்கம் அருகிள் ஒரு கட்டம் இருக்கும் Downloading using Bittorrent என்று அதை டிக் செய்தால் போதும்.

இந்த மென்பொருள் நிறுவ உங்களிடம் விண்டோஸ் 2000 (சர்வீஸ் பேக் 4), எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 இருந்தால் போதும்.
பென்டியம் 3 அல்லது அதற்கு மேல் இருந்தால் போதுமானது. அத்துடன் குறைந்த பட்சம் 256 எம்பி நினைவகம் போதும் 512 எம்பி இருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக செயல்படும். ( இப்பொழுதுதான் குறைந்தது 1 ஜிபி நினைவகம் இல்லாத கணினி இல்லையே )
இஅசூஸ் பார்டிசன் மென்பொருள் போலவே இன்னொரு மென்பொருள் Aomei Partition Assistant Professional Edition இந்த மென்பொருள் இன்று வரை (28-01-2011)இலவசமாக வழங்கப்படுகிறது. தேவையானவர்கள் தரவிறக்கிக் கொள்ளவும். சுட்டி

நண்பர் வேலன் அவர்கள் 500 பதிவை எட்டியிருக்கிறார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். என்னுடைய அடுத்த பதிவு 400 வது பதிவு நேரம் இல்லாததால் குறைவாகவே எழுதுகிறேன். உங்கள் ஆதரவு மட்டுமே என்னை மேன்மேலும் உயர்த்துகிறது.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
சட்டரீதியான பிடிஎப் ஜில்லா மற்றும் காஸ்பர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி இலவசம்
நண்பர்களே பொங்கல் விடுமுறையை அனைவரும் கொண்டாடியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். புதிய படங்களை நிறைய பேர் பார்த்து இருப்பீர்கள் அதை விமர்சனமும் எழுதி இருப்பீர்கள். நாமும் நம் பங்குக்கு புதிய மென்பொருட்களை அதுவும் சட்டரீதியான மென்பொருட்களை அறிமுகபடுத்தவும் வந்து விட்டேன். அத்துடன் என் உடல்நலம் தேற பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி.

மைக்ரோசாப்ட் மேதமேடிக்ஸ்


இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்த நேரத்தில் தமிழ் கம்ப்யூட்டர் நிறுவனம் மட்டுமே எனக்கு சிறு உதவி செய்து வருகிறது. என் படைப்புகளை வெளியிட்டு அதன் மூலம் வரும் சிறு தொகையை எனக்கு அளித்து வருகின்றனர். நானும் கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன். அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன். இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன். ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள். அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள். அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர வாய்ப்பு கிடைக்கும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே நாம் நிறைய அனிமெட்டட் படங்கள் பார்த்திருப்போம் அதில் பெரும்பாலான படங்கள் பிக்ஸார் நிறுவனத்தினுடையுதாக இருக்கும். பிக்ஸார் நிறுவனம...
-
நண்பர்களே மாதம் ஒரு பதிவாது எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதினால்தான் இந்த பதிவு இன்று எழுதி பதிவிட்டிருக்கிறேன். நம் பதிவினை மேம்பட...
-
நண்பர்களே இதுவரை 370 பதிவுகளுக்கு மேல் பதிவிட்டிருக்கிறேன். பாலோயர்களும் 500க்கு மேல் தொடர்கிறார்கள். அலெக்ஸா மதிப்பு பட்டியலும் மேலே செ...
-
நண்பர்களே நீங்கள் திருடுவது எங்கள் உழைப்பை மட்டுமல்ல எங்களுக்கு வரும் விசிட்டர்கள், பின்னூட்டங்கள் அனைத்தையும். ஏன் இந்த தவறான புத்தி உங்கள...
-
நண்பர்களே நம் கணினி திரையினை படம்பிடிக்க எத்தனையோ டூலகள் இருந்தாலும் இலவசமாக அதுவும் ஒபன் சோர்ஸ் டூல் போல வராது என்பது என் கருத்து. ஏன் எ...
-
நண்பர்களே தொடர்ந்து எழுத முடியாமல் அலுவலக வேலைப்பளு அதிகரித்திருப்பதால் பிப்ரவரிக்கு பிறகு தொடர்ந்து தினம் ஒரு பதிவு எழுதுவேன். முடியும் பொ...
-
நண்பர்களே மிக அதிகமான வேலை இருந்ததால் தொடர்ந்து எழுத இயலவில்லை அதற்கு பதில்தான் நம் நண்பர்கள் 50க்கும் மேற்பட்டோர் தொழில்நுட்ப பதிவுகளை எழு...
-
நண்பர்களே உங்களுக்கு கணனியில் நிறைய மாற்றங்களை கொண்டு வர இந்த சுட்டி உதவும் கடைசியில் உள்ளது. அதற்கான நீளமான குறிப்புகள் #DataVault, Irc...
-
நண்பர்களே நாம் நிறைய வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகள் மற்றும் புத்தகங்களை தரவிறக்கம் செய்வோம். எந்த மாதிரி தளத்தில் செய்வோம் என்றால் Bittor...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...

