நண்பர்களே உங்கள் கணினிக்கு ஆன்டி வைரஸ் மென்பொருள் ஆறுமாதத்திற்கான இலவச மென்பொருள் வேண்டுமா. இந்த மென்பொருள் பெயர் புல்கார்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி BullGuard Internet Security 10 இந்த மென்பொருள் ஆன்டிவைரஸ், ஆன்டிஸ்பைவேர், பயர்வால், ஸ்பம்பில்டர், உங்கள் கணினி டேட்டாக்களை அவர்கள் தளத்தில் பேக் - அப் எடுத்து வைக்க 5 ஜிபி இலவச இடம் போன்றவை இலவசமாக தருகிறார்கள்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த தளத்திற்கு சென்று உங்கள் பெயர் மற்றும் உண்மையான மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் போதும். அக்டோபர் பதினைந்தாம் தேதி உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஆறு மாத்திற்கான புல்கார்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் இலவ்சமாக அனுப்பி வைப்பார்கள்.

இன்றே உங்களுக்கான மென்பொருளுக்கு உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
உங்கள் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு பனி விலங்கான பெங்குவின் தீம் இலவசமாக பெற இங்கே சொடுக்குங்கள்.
சுட்டி
நீங்கள் சில நேரம் உங்கள் கணினி இல்லாமல் உங்கள் கணினியில் அல்லது இணையதள மையங்களில் உலாவும் போது சில மென்பொருட்கள் இல்லாமல் தவிக்க நேரிடலாம். இந்த மாதிரி நேரங்களில் உங்களுக்கு ஆபாத்பாந்தவனாக உதவிக்கு ஓடி வருகிறது ஒரு இனிய இணைய தளம். இந்த இணையதளத்தில் உங்களுக்காக அனைத்து வகையான மென்பொருட்களும் உள்ளது.
இணையதள சுட்டி இதற்கு முதலில் 26 எம்பி அளவுள்ள ஒரு பிரவுசர் ப்ளக் இன் நிறுவ வேண்டும். இப்பொழுது எல்லாம் எல்லா இணையதள மையங்களிலும் மிக நல்ல வேகத்தில் இணையம் இருப்பதால் 26 எம்பி என்பது பெரிய விசயமே இல்லை என்பதால் முயற்சி செய்து பார்க்கலாம்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே நேற்று இரவு என் உறவினர் ஒருவருக்கு 7 பாட்டில் ரத்தம் தேவை என்று பஸ் மற்றும் ட்விட்டரில் போட்டிருந்தேன். நம் வலைப்பதிவர்கள் வால்பையன் மற்றும் கேபிள்ஷங்கர் அவர்களிடம் உதவுமாறு கேட்டிருந்தேன். அனைவரும் கட்டாயம் உதவுகிறோம் என்று வாக்களித்து அது போலவே செய்தனர். வால் பையன் ட்விட்டரில் போட்டு எனக்காக உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இரவு 11 மணி வரை அனைவரும் உதவுவதற்காக நட்புக் கரம் நீட்டினர். இறைவன் அருளாலும் நம் வலைப்பதிவர்களாலும் நம் வாசகர்களாலும் தேவையான ரத்தம் கிடைத்துள்ளது. எமக்கு உதவிய வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர்கள், மற்றும் பெயர் தெரியாத நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..
இந்த நல்ல நேரத்தில் என்னுடைய பழைய இணையதளத்திற்கு புதியதாக டொமைன் வாங்கி அதையும் புதிய இணையதளமாக மெருகேற்ற இருக்கிறேன். புதிய வலைத்தளத்தில் தொழில்நுட்பம் தவிர அனைத்தும் பதிவேற்றப்படும். நான் பஸ்ஸில் ரசித்தது ட்விட்டரில் படித்தது பிகாஸா மற்றும் மற்ற இணையதளங்களில் இருந்து எடுத்த புகைப்படங்கள் மட்டுமே அங்கே இடம் பெற போகிறது. வித்தியாசத்தை விரும்புபவர்கள் அங்கே வரலாம். புதிய இணையத்தள
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே ஐபேட் வெளிவந்து சக்கை போடு போடுகின்றது. அனைத்து மென்பொருட்களும் ஐபேடில் உபயோகிக்க முடியாது. அவர்கள் ஆதரவு அளிக்கும் மென்பொருட்கள் மட்டுமே உபயோகபடுத்த முடியும். அனைத்து வகை வீடியோ ஆடியோ கோப்புகளையும் ஐபேடில் பார்க்க கேட்க விஎல்சி ப்ளேயர் இப்பொழுது ஐபேடிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை தரவிறக்க
சுட்டி
டிவிடி ரிப்பர் மென்பொருள்
வொன்டர்ஷேர் நிறுவனத்தின் டிவிடி ரிப்பர் மென்பொருள். முற்றிலும் இலவசமாக 3500 ` மதிப்புள்ள மென்பொருள் இது.
இந்த மென்பொருளின் சிறப்பியல்புகள்
டிவிடி வீடியோவை பின்வரும் கோப்புகளாக மாற்ற முடியும். MP4, MPG, WMV, FLV, SWF
உயர்தர வீடியோ (HD), வீடியோ கேமராவிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோக்களை சாதராண வீடியோவாக மாற்ற முடியும்.
வீடியோ டிவிடிக்களை இந்த வகை கோப்பாகவும் மாற்றலாம். QuickTime, iMovie, iDVD, iTunes, Final Cut Pro, Adobe Premiere Pro.
இது போல் எண்ணற்ற சிறப்பியல்புகள் கொண்டது.
இந்த இலவசமாக வழங்கும் சலுகை செப்டம்பர் 20 - 26 வரை மட்டுமே. முடிந்தவரை விரைவாக தரவிறக்குங்கள். அத்துடன் பேஸ்புக்கில் நீங்கள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே இதை தரவிறக்க முடியும். மென்பொருள் தரவிறக்க
சுட்டி
எம்பி3 தேடியந்திரம்
அனைவருக்கும் பிடித்த எம்பி3 பாடல்கள் கேட்க ஒரு தளம் தரவிறக்க ஒரு தளம் என்று உபயோகிப்பார்கள் ஆனால் இது இரண்டு மட்டுமல்லாம் எம்பி3யை தேடி தந்து நாம் விருப்பபட்டால் அந்த தளத்திலேயே அந்த பாடலை கேட்டு வேண்டும் என்றால் அந்த தளத்திலேயே தரவிறக்கம் செய்தால் எப்படியிருக்கும். இதைதான் செய்கிறது இது எம்பி3யை தேடும் தேடியந்திரமாகவும் தேடிய பாடல்களை இசைக்கும் தளமாகவும் தேடிக் கேட்ட பாடல்களை தரவிறக்கும் தளமாகவும் இயங்குகிறது. ஆங்கிலம் தமிழ் இந்த அனைத்து மொழிகளிலும் இருந்து பாடல்கள் தேட முடிகிறது. இது இசை பிரியர்களுக்கான தளம் என்றால் மிகையில்லை. இணையத்தள
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...