நண்பர்களே வேலை அதிகம் இருந்த காரணத்தால் பதிவுகள் போட இயலவில்லை மன்னிக்கவும்.
அத்துடன் ஆர் எஸ் எஸ் பீட் முழு வலைப்பதிவும் தெரியுமாறு இருந்ததை சிறிது மட்டுமே தெரியுமாறு மாற்றியமைத்துள்ளேன். இதனால் நிறைய பேருக்கு சிரமம் இருக்கும் இருந்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள். விரைவில் இதை மாற்றியமைக்க முயற்சிக்கிறேன்.
இன்றைய பதிவிற்கு செல்வொம். உங்கள் நிறுவனத்திற்கு அல்லது உங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு லோகோக்கள் வடிவமைக்க விரும்பினால் இந்த இணையத்தின் வழியாக தாரளமாக வடிவமைக்கலாம். இந்த இணையத்தின் மூலமாக முற்றிலும் இலவசமாக தருகிறார்கள். இதற்காக நீங்கள் செய்யவேண்டியது ஒன்று மட்டுமே உங்கள் மெயில் முகவரி கொடுத்து கணக்கு ஒன்றை திறந்து கொள்ள வேண்டும் அவ்வளவே. வலைத்தள முகவரி சுட்டி
விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான தீம்கள் இலவசமாக இங்கு கிடைக்கிறது அதுவும் விளையாட்டு பிரியர்களுக்கான தீம்கள் அதிக ரெசொல்யூசனுடன் அதிகமாக கிடைக்கிறது.
வலைத்தள முகவரி
சுட்டி1
வலைத்தள முகவரி
சுட்டி2
கடலுக்கடியில் இருக்கும் உயிரினங்கள் கடற்தாவரங்கள் பவழபாறைகள் போன்ற அழகான புகைப்படங்கள உங்கள் டெஸ்க்டாப்பில் போட்டு வைக்க இதை தரவிறக்கிக் கொள்ளுங்கள்
சுட்டி
உங்கள் கணினியில் உள்ள சில நகாசு வேலைகளை செய்ய அதாவது ரூட்கிட் ரெவ்யூலர், ப்ரோசஸ் மானிட்டர் இது போன்ற சிறு மென்பொருட்கள் இணைந்த ஒரு மென்பொருளை மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது டெக்நெட் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த மென்பொருள் மூலம் நிறைய வேலைகளை நாம் செய்ய முடியும்.
உதாரணத்திற்கு ஒரு வலைத்தள டொமைன் உரிமையாளர் யார் என்று கண்டுபிடிக்க நாம் ஒரு உலாவியை திறந்து அதன் பிறகு
www.Whois.com சென்று அங்கு அந்த டொமைன் பெயரை தட்டச்சு செய்து பிறகு என்டர் தட்டினால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருள் மூலம் நேரடியாக டொமைன் பேரை தட்டச்சு செய்து தெரிந்து கொள்ளலாம். இது போன்று எண்ணற்ற செயல்கள் இந்த மென்பொருள் மூலம் செய்யலாம். மென்பொருள் தரவிறக்க
சுட்டி இந்த கூட்டுமென்பொருளை முழு மென்பொருளாகவும் தரவிறக்கலாம். அல்லது உங்களுக்கு தேவையான மென்பொருள் தனியாகவும் தரவிறக்கி கொள்ளலாம்.
உங்கள் லேப்டாப்பின் எல்சிடி திரையை மட்டும் ஒரே கிளிக்கில் அணைக்க இந்த மென்பொருள் உபயோகப்படும்.
சுட்டி இந்த மென்பொருளின் அளவு 64கேபி மட்டுமே.
லினக்ஸ் புதியதாக கற்கும் நண்பர்களுக்கு இந்த வால்பேப்பர் மிகவும் உதவியாக இருக்கும். இதில் அடிப்படை கட்டளைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு வால்பேப்பராக வெளியிடப்பட்டுள்ளது அந்த வால்பேப்பர் உங்களுக்காக கீழே
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே இதுவரை 370 பதிவுகளுக்கு மேல் பதிவிட்டிருக்கிறேன். பாலோயர்களும் 500க்கு மேல் தொடர்கிறார்கள். அலெக்ஸா மதிப்பு பட்டியலும் மேலே சென்று கொண்டிருக்கிறது. ஹிட்ஸ் இரண்டு லட்சத்தை தொடர போகிறது. என்று நினைத்துக் கொண்டிருக்கையில் திங்கள் காலை 9:30 மணி அளவில் சூர்யா கண்ணன் தொலைபேசுகிறார்.
சூர்யா கண்ணன் : வணக்க்ம் சார் என்ன சார் ஆச்சு உங்க தளத்திற்கு?
நான் : ஏன் எனக்கு தெரிந்து இதுவரை ஒன்றுமில்லையே? ஏன் என்ன ஆச்சு பிரச்சனையா கண்ணன்?
சூர்யா கண்ணன்: இல்ல உங்க வலை தளத்தை ஒபன் செய்ய முடியலை அதான்???
நான் : என்ன எர்ரர் வருது?
சூர்யா கண்ணன்: உங்கள் தளம் ரிமூவ் செய்யப்பட்டுள்ளது என்று வருகிறது.
நான் : அப்படியா?? (வாய்விட்டு சிரிக்கிறேன்) அப்படி எல்லாம் இருக்காது கண்ணன்.
சூர்யா கண்ணன்: இல்லை சார் நிஜம் தான் நீங்க வேணும்னா திறந்து பாருங்கள் என்றார்
நான்: நான் ட்ரைவிங்கல இருக்கேன் நீங்களே ஒபன் பண்ணி பாருங்க என்று என் பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம் கொடுக்கிறேன்.
சூர்யா கண்ணன்: வெரிபிகேசன் கோடு கேட்கிறது. கொடுக்கட்டுமா
நான் : ம்ம் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு பார்த்துவிட்டு கூப்பிடுகிறேன் என்றார்.
பிறகு கூப்பிட்டு பரவாயில்லை பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்தீர்கள் இல்லை என்றால் உங்கள் கூகிள் அக்கவுண்ட் அனைத்தும் கண்டமாயிருக்கும் என்றார். பாஸ்வேர்ட் மாற்றிவிட்டேன் அதை SMS செய்கிறேன்
அப்புறம் அலுவலகத்திற்கு வந்து என் மெயில் ஐடியை திறந்து பார்த்த பிறகுதான் விபரீதம் புரிந்தது. என் மெயில ஐடியை ஹேக் செய்து என் ஐடி வழியாக என்னிடம் உள்ள அனைத்து மின்னஞ்சல் முகவரிகளுக்கும் ஆபாச மெயில்கள் அனுப்ப பட்டிருந்தது. அதற்கு ரிப்ளை வேறு எப்பா தாங்க முடியல எல்லாரும் என்ன அசிங்க அசிங்கமா திட்டி வேற மெயில் அனுப்பியிருந்தாங்க. ஒரு நண்பி செருப்பு பிஞ்சிடும்னு வேற மெயில் அனுப்பிருந்தாங்க. என்ன பண்றது எல்லாம் என் நேரம் நினைச்சி போய்க்கிட்டு இருக்கறேன்.
இவ்வளவு விளக்கமா ஏன் சொல்றேனா என் வலைத்தளம் திருட்டு போச்சி ஆனா மீட்டுட்டேன் இதற்கு காரணம் நண்பர் சூர்யா கண்ணன் மற்றும் முத்துவேல் தான். முத்துவேல் தொடர்பு கொள்ள வேண்டும் உங்கள் செல்பேசி எண் தரவும்.
நண்பர்கள் பதிவர்கள் பிளாக்கர்கள் அனைவரும் ஒரு பேக் - அப் மற்றும் மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை உங்கள் பாஸ்வேர்டை மாற்றுங்கள்.
(ஆபாச மின்னஞ்சல் வர நான் காரணம் அல்ல எந்த ஒரு கபோதியோ என் வெப்சைட் ஹேக் பண்ணிட்டான் அவன் மட்டும் கிடைச்சான் அவன ஒரு கேள்வி நான் அந்த அளவு என்னடா சம்பாதிச்சிட்டேனு கேட்பேன். இதன் மூலமா வர வருவாய் என் பத்து நாள் பெட்ரோல் செலவுக்கு மட்டுமே சரியாக இருக்கிறது. இந்த நிலையில இத ஏன் பண்ணேனு ஒரு கேள்வி மட்டுமே. இருந்தாலும் இவன் மூலமா நாமளும் இந்த உலகத்தில ஒரு பிரபல பதிவர் என்ற அடையாளம் நிலை நிறுத்தப்பட்டிருப்பதால் மன்னித்து விடுவோம்.)
என் வலைத்தளம் திருடப்பட்டது பிரான்ஸ் என்ற நகரத்தில் இருந்து ஏன் என்றால் நான் ஜிமெயில் உபயோகித்த பிறகு அங்கிருந்து உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதை நிரூபிக்கும் படம் மேலே
செப்டம்பர் 1 எனது பிறந்த நாள் உங்கள் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களுக்காக தலை வணங்கி நிற்கின்றேன்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே நீங்கள் ஆங்கில திரைப்படங்களை விரும்பி பார்ப்பவரா அத்துடன் அந்த படத்தை பார்த்தவுடன் உடனே உங்கள் கணினி திரையில் அந்த ஆங்கில படத்தின் வால்பேப்பரை தரவிறக்கி உடனே மாற்றிவிடுவீர்களா?? அப்படி என்றால் உங்களுக்குதான் இது அதிகம் உபயோகப்படும்.
இந்த தளத்திலிருந்து நிறைய புதிய ஆங்கில படங்களின் வால் பேப்பர்கள் அனைத்தும் ஒரே தளத்தில் இருந்து தரவிறக்க இந்த தளத்திற்கு செல்லுங்கள்.
மேலுள்ள படங்கள் போல ஆயிரக்கணக்கில் அனைத்து ஆங்கில படங்களின் வால்பேப்பர்கள் இங்கு கிடைக்கும். இணையதள
சுட்டி
ஜிமெயில் குரல் சேவை ஆரம்பித்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் 1,000,000 கால்கள் பேசப்பட்டுள்ளன என்பது இணையம் புழங்குபவர்களிடைய ஆச்சரியப்பட வைத்து வாய் பிளக்க வைத்துள்ளது. இந்த வேகத்தில் சென்றால் கூகிளின் குரல் சேவை ஸ்கைப்பை பின்னுக்கு தள்ளி விடும் என்பது கண்கூடாக தெரிகிறது. கூகிளின் குரல் சேவை பெற மற்றும் மேலும் அறிந்து கொள்ள
சுட்டி
நீங்கள் ஒரு தளத்திற்கு செல்கிறீர்கள் அந்த தளத்தில் மால்வேர் அல்லது ஸ்பைவேர் என்பதை தெரிந்து கொள்ள அந்த இணையத்தளத்தில் நுழையாமல் கண்டுபிடிக்க முடியாது. அப்படி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். இந்த மென்பொருளை யுஎஸ்பி மூலம் எங்கு எடுத்து செல்லலாம்.
மென்பொருளை திறந்தால் URL என்ற பெட்டியில் நீங்கள் நுழைய போகும் தளத்தின் முகவரியை கொடுங்கள். பின்னர் Go என்ற பட்டனை அழுத்துங்கள் இனி கீழுள்ள பெட்டியில் நீங்கள் கொடுத்த தளத்தில் உள்ள லின்க்குகள் அனைத்தும் நல்லவையா அல்லது உங்கள் கணினிக்கு தீங்கு விளைவிக்க கூடியவையா என்று காட்டி கொடுத்து விடும். நல்லவை என்றால் நீல வண்னத்திலும். கெட்டவை என்றால் சிகப்பு நிறத்திலும் இருக்கும்.
நம்மில் நிறைய பேர் சிறப்பு எழுத்துக்களை (Special Character) பார்த்திருப்போம் உதாரணத்திற்கு © இந்த எழுத்துக்கு நாம் Copy Right என்று கூறுவோம். இது அனைவருக்கும் தெரியும். இது போன்ற சிறப்பு எழுத்துக்களுக்கு என்ன பெயர் என்று தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.
இணையதள சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே குழந்தைகளுக்கு கணித பாடம் மட்டும் சில குழந்தைகளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் பிடிபடாது? இதற்கு காரணம் என்னவென்றால் மன திண்மை இல்லாததே காரணம் உதாரணத்திற்கு 2+1 = என்ன வென்று கண்டுபிடிக்க வேண்டும் என்றால் மூன்றில் இருந்து 6 வயது குழந்தைகள் விரல் விட்டு எண்ணி சொல்வார்கள். இதே 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உடனே 3 என்பார்கள் இது எப்படி மனதிற்குள்ளேயே 2 + 1 என்பதை கூட்டி விடை 3 என்று கூறுவார்கள்.
இது பள்ளிக்கூடங்களிலும் நாம் குழந்தைகளுக்கு சொல்லி தருவதாலும் வருகிறது. இதையே குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலம் கணிதம் சொல்லிக் கொடுத்தால் விரைவாக விளையாட்டும் விளையாடுவார்கள் கணிதமும் கற்றுக் கொள்வார்கள். இதற்கு இந்த கணித விளையாட்டு மென்பொருள் உதவுகிறது.
இந்த மென்பொருள் ஒரு சுதந்திர கட்டற்ற மென்பொருள் என்பதால் இன்னும் பலரால் மேம்படுத்தப்படும் என்று திண்ணமாக நம்பலாம். இந்த மென்பொருளை நிறுவி குழந்தைகளுக்கு விளையாட்டாக கணிதமும் கணினியும் சொல்லி தாருங்கள்.
இந்த மென்பொருள் விண்டோஸ் 2000க்கு மேற்பட்ட அனைத்து வெர்சன்களும் ஆதரிக்கும். அத்துடன் லினக்ஸ், மேக் இயங்குதளங்களிலும் இயங்கும்.
மென்பொருள் தரவிறக்க
சுட்டி
குடும்ப மருத்துவர் நம் வீட்டில்
நம் வீட்டில் பெரியவர்கள் மற்றும் வயதானவர்கள் இருப்பார்கள். நிறைய வீட்டில் வயதானவர்களுக்கு என்று தனி மருத்துவ உணவுகள் மற்றும் மருந்துகள் இருக்கும். அது போன்ற மருந்து மருத்துவ உணவு மருத்துவரின் குறிப்புகளை கணினியில் சேமித்து வைக்க இந்த மென்பொருள் உதவும் அத்துடன் மருத்துவரை குறிப்பிட்ட நாளில் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் மற்றும் இன்சூரன்ஸ், அவசர கால தொலைபேசி எண்கள் போன்றவற்றையும் இதில் குறித்து வைக்க வசதி உண்டு.
இந்த மென்பொருளில் எந்த நோயாயின் குறிப்புகளை ஏற்றுகிறீர்களோ அவர்களின் புகைப்படத்தையும் சேமித்து வைக்கலாம். இதன் மூலம் பலதரப்பட்ட நோயாளிகளின் குறிப்புகளை ஏற்றி வைக்கலாம். இந்த மென்பொருளின் பெயர் ஹேடாக். மென்பொருளை தரவிறக்க
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...