ஒரு வருடத்திற்கான ஆன்டி வைரஸ் இலவசம் & டிப்ஸ்கள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே சாதரணமாக நீங்கள் டெலிட் செய்யும் கோப்புகள் நேரடியாக உங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லும் அந்த மாதிரி செல்ல வேண்டாம் என்றால் நீங்கள் சில மாற்றங்கள் செய்தால் போதும் நேரடியாக ரீசைக்கிள் பின்னுக்கு செல்லாமல் நீக்கப்படும்.  
4rwcpx.png
முதலில் உங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள Recycle Bin ல் வலது கிளிக் தேர்வு அதில் பிராப்பர்டிஸ் தேர்வு செய்யுங்கள்.  அங்கு "Do not move files to the Recycle Bin. Remove files immediately when deleted”  என்று ஒரு வாசகத்திற்கு முன் ஒரு பெட்டி அதை கிளிக் செய்து விட்டு கீழே Apply OK என்று தேர்வு செய்து வெளியேறுங்கள்.  இதன் மூலம் நீங்கள் இனி டெலிட் செய்யும் கோப்புகள் ரீசைக்கிள் பின்னில் சேமிக்கப்படாது.



ஒரு வருடத்திற்கான ட்ரென்ட் மைக்ரோ ஆன்டி வைரஸ் தொகுப்பை இலவசமாக சட்டரீதியாக தரவிறக்க இங்கே செல்லுங்கள் சுட்டி
sxm4gn.jpg
மேலுள்ள படத்தில் கூறியுள்ள படி எந்த இயங்குதளம் மென்பொருள் வேண்டுமோ தரவிறக்கி பயன்படுத்தலாம்.   இதற்காக எந்த ஒரு ரெஜிஸ்ட்ரேசன் மற்றும் பணம் எதுவும் கிடையாது.




விளம்பரச் சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

சட்டரீதியான ஆபிஸ் கோப்புகள் மீட்டெடுக்கும் மென்பொருள் இலவசம்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே நாம் பிடிஎப் கோப்புகள் படிப்பதாக இருந்தால் பிடிஎப் ரீடரை நாடுவோம்.  அந்த ரீடரில் பெயர் போனது அடோப் ரீடர்.  அதற்கடுத்து மிகவும் அதிகமானவர்கள் உபயோகிப்பது பாக்ஸிட் ரீடர்.  அதன் வரிசையில் அடுத்து சேர இருப்பது நுயான்ஸ் ரீடர்  இந்த ரீடரில் மிகவும் அதிக வசதிகள் உள்ளது. இந்த ரீடரில் பிடிஎப் கோப்பில் உள்ள வார்த்தைகளை சுலபமாக கோடிட்டுக் காட்ட முடிகிறது.  கோப்பில் உள்ள படங்களை சுலபமாக எடுக்க முடிகிறது. மிகவும் சுலபமாக வசதியாக (Smooth) ஆக உள்ளது.  இந்த மென்பொருள் மூலமாக பிடிஎப் கோப்பை திறந்து வைத்துக் கொண்டு கோப்பினை வேர்ட் கோப்பாக கன்வெர்ட் செய்ய முடியாது.  ஆனால் அப்படி முயற்சி செய்தால் நேராக அவர்கள் தளத்திற்கு அழைத்து சென்று விடுகிறது.  அங்கு உங்களுக்கு எந்த மாதிரி கோப்பாக வேண்டும் என்று தேர்ந்தெடுத்தால் போதும்.  பிறகு உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து வந்தால் போதும் உடனே மின்னஞ்சல் முகவரிக்கு கோப்பினை அனுப்பி வைக்கின்றனர்  இணையத்தள சுட்டி


 


Wondershare நிறுவனத்தின் ஆபிஸ் ரெகவரி மென்பொருள் இலவசம்.   இந்த மென்பொருள் மூலம் தெரியாமல் நீக்கப்பட்ட வேர்ட் எக்ஸல் பவர்பாயிண்ட் கோப்புகளை திரும்ப பெற முடியும்.  இந்த மென்பொருள் மூலம் உங்களுடைய வன்தட்டு, மெமரி ஸ்டிக், பென் ட்ரைவ் போன்றவற்றில் இருந்தும் டெலிட் செய்யப்பட்ட ஆபிஸ் கோப்புகள் திரும்ப பெறலாம்.  இந்த மென்பொருள் ஆதரிக்கும்.  கோப்புகள்  DOC, DOCX, XLS, XLSX, PPT, PPTX, PST, DBX, ACCDB, MPP, PUB, ONE, XSN  மற்றும்  PDF கோப்புகள்.
ஆதரிக்கும் மென்பொருள் பதிப்புகள்  மைக்ரோசாப்ட் ஆபிஸ் 97, XP, 2000, 2003 மற்றும் 2007.

மென்பொருள் இயங்குதளங்கள்.  விண்டோஸ் 2000, 2003, XP, Vista மற்றும் விண்டோஸ் 7 இயங்குதளங்கள்

இது ஒரு சிறப்பு சலுகை என்பதால் ஏப்ரல் 10, 2010  வரை மட்டுமே சட்டரீதியாக தரவிறக்க முடியும்.


முதலில் இந்த சுட்டிக்கு செல்லுங்கள் சுட்டி

இங்கு பெயர் மற்றும் உண்மையான மின்னஞ்சல் முகவரி அளித்து விடுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு  இந்த மென்பொருளுக்கான கீ கிடைக்கும்.

மின்னஞ்சலில் மென்பொருள் தரவிறக்க சுட்டியும் இணைத்து அனுப்புவார்கள்


இங்கு இருந்தும் தரவிறக்கிக் கொள்ளலாம்.  சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

விண்டோஸ் கீ தொலைந்தால் கவலையில்லை

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே எத்தனையோ ப்ளேயர்களில் கணினியில் படம் மற்றும் பாடல்கள் கேட்டிருப்போம்.  ஆனால் ஒவ்வொன்றிலும் ஒரு வித பிடிப்பு அனைவருக்கு இருக்கிறது.  அப்படி உள்ள ப்ளேயர்களில் எஸஎம் ப்ளேயர் SM Player ஒரு மிகவும் வேகமான ப்ளேயர் என்பதில் வேற்று கருத்து இருக்க முடியாது.   இந்த ப்ளேயர் ஒரு திறந்த நிலை மென்பொருள் என்பது ஒரு சிறப்பு.  அது மட்டுமில்லாமல் விண்டோஸ் மற்றும் லினக்ஸில் இயங்க கூடியது.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி  இந்த மென்பொருள் கூடிய வரை அனைத்து வகையான ஆடியோ வீடியோ கோப்புகளை கையாள்கிறது.

உங்களிடம் விண்டோஸ் நிறுவப்பட்ட பிறகு உங்கள் விண்டோஸில் என்ன சிடி கீ நிறுவினோம் என்று தெரியவில்லையா அல்லது உங்களின் விண்டோஸ் கீ தொலைந்து விட்டதா  கவலை வேண்டாம்.  உங்கள் விண்டோஸ் இந்த மென்பொருளை தரவிறக்குங்கள். நிறுவ வேண்டிய தேவையில்லை நேரடியாக இயக்கலாம்.  இந்த மென்பொருளை திறந்தால் போதும் உங்கள் விண்டோஸ் கீ மற்றும் ஆபிஸ் கீ என்ன நிறுவி உள்ளீர்கள் என்று உங்களுக்கு தெரிந்து விடும்..  இதன் மூலம் இதை ஒரு நோட் பேட் கோப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.  சுட்டி  இது இயங்கும் தளங்கள்
விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2003, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7, ஆபிஸ் எக்ஸ்பி ,  ஆபிஸ் 2003 ஆபிஸ் 2007.


கூகிளின் பிகாஸா வலைத்தளத்திலிருந்து ஒரு ஆல்பத்தையோ அல்லது மொத்த ஆல்பத்தையோ தரவிறக்க இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும்.  இந்த மென்பொருள் விண்டோஸ், லினக்ஸ், மேக் இயங்குதளங்களில் இயங்கும். இது ஒரு திறந்த நிலை மென்பொருள் தரவிறக்க சுட்டி

நீங்கள் வெளியில் போய் காசு கொடுத்து கார் கற்றுக் கொள்ளாமல் நமக்கு ஒரு ஆசிரியர் உதவியுடன் கணினி வழியாக கார் ஒட்ட கற்றுக் கொடுத்தால் எப்படியிருக்கும்.  அதற்கு இந்த தளங்கள் உதவுகிறது.  இந்த தளத்தில் சென்று ஆசிரியரை தேர்ந்தெடுத்து கொண்டால் நீங்கள் கார் எப்படி ஓட்ட வேண்டும் எந்த நிறுத்தக் குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறது. 

இணையத்தள சுட்டி ஒன்று

இணையத்தள சுட்டி இரண்டு



உங்கள் ஆண்டி வைரஸ் சரிவர இயங்குகிறதா என்று தெரிந்து கொள்வது இதோ ஒரு எளிய வழி கீழுள்ள வழிமுறைகளின் படி இயங்கினால் போதும்.

முதலில் நோட்பேடை திறந்து கொள்ளுங்கள்.

பிறகு கீழுள்ள சிகப்பு வண்ணமிட்ட வரியை  காப்பி செய்து கொள்ளுங்கள்

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

பிறகு "checkantivirus.com"  என்று பெயர் சூட்டி சேமித்துக் கொள்ளுங்கள். 

உங்கள் ஆண்டி வைரஸ் தொகுப்பு இயங்கு நிலையில் இருந்தால் நீங்கள் கோப்பை சேமித்து வெளி வந்த உடனே உங்கள் கணிணியில் வைரஸ் இருக்கிறது என்று காட்டிக் கொடுத்து விடும்.

கூகிள் பஸ்ஸிற்கான விசைப்பலகை குறுக்கு வழிகள் (Keyboard Shortcuts)
முதலில் கூகிள் ஜிமெயிலில் நுழையுங்கள். பின்னர் Settings கிளிக் செய்து அதில் General Tab தேர்வு செய்யுங்கள் பிறகு keyboard shortcuts ON என்பதை தேர்வு செய்யுங்கள்.  பிறகு Save Changes என்ற பட்டனை தேர்வு செய்து வெளியேறுங்கள்.  இனி கூகிள் பஸ்ஸில் விசைப்பலகை குறுக்கு வழிகள் வேலை செய்ய ஏதுவாகயிருக்கும்.  இனி அதற்கான குறுகுக் வழிகள்  கீழே

n -    to goto newer or next conversation [n stands for new]

p  -  t o goto previors or older conversation [p stands for previous]

j  -   to scroll through displayed conversations or items. [j for jump]

o - to open or expand any conversation [o stands for open]

r  -  to add comment to any conversation [r stands for response]\

m  -  to mute a conversation [it removes specific conversation from listing]

Shift + l  - to like a conversation [l stands for like, same as in Google Reader]

Spacebar for page down action.

Shift + Spacebar -  for page up action.

நண்பர் உள்மனசு என்பவர் மிகவும் அழகாக அனைவருக்கும் புரியும் வகையில் தெளிவாக புதியவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் கணினியை அசெம்பிள் செய்வது எப்படி? என்று இதுவரை பன்னிரென்டு பாகங்கள் எழுதி உள்ளார்.  அதை படித்து கணினி அசெம்பிள் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.  சுட்டி  வாழ்த்துக்கள் உள்மனசு

பதிவை படிக்கும் நண்பர்களே உங்களால் முடிந்த சிறு உதவி Paid to Promote என்ற விளம்பரத்தை கிளிக் செய்து அதன் மூலம் யூஎஸ் டாலார் $0.11 கிடைத்துள்ளது.  இது உலகத்திலேயே மிகவும் சிறிய உதவிதான் என்றாலும் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது எனது கடமை நண்பர்களே  இது போல படிக்கும் நம் வலைத்தளத்தை படிக்கும் வெளிநாட்டு நண்பர்கள் உள்நாட்டு நண்பர்கள் அனைவரும் அந்த விளம்பரத்தையாவது கிளிக் செய்து எனக்கு உதவி செய்யுங்கள் அந்த விளம்பரம் நிறுவனம் மட்டுமே இதுவரை பணம் அனுப்பி உள்ளது.   உங்களின் உதவி மட்டுமே.  ஒரு நாளைக்கு பதிவில்லாத போது 150 பேர் சராசரியாக வருகிறார்கள்.  புதிய பதிவின் போது 600லிருந்து 800 வரை  வருகின்றனர்.  ஆனால் விளம்பரங்கள் கிளிக் செய்பவர்கள்  இருவர் அல்லது ஒருவர் மட்டுமே ஏன் என் பதிவு பிடிக்கவில்லையா நாங்களும் கஷ்டப்பட்டு எழுதுறோம்.  ஒன்னுமே இல்லாத பதிவிற்கும் அடல்ட் ஒன்லி பதிவிற்கும்  விளம்பரத்தை கிளிக் செய்து தள்றீங்க அதே ஒரு நல்ல பதிவு மைனஸ் ஒட்ட போட்டு அத கீழ கொண்டு போறிங்க என்ன செய்யறது.  ஒன்னுமேயில்லாதது நல்லா போகுது எல்லாம் இருக்கிறது போகவே மாட்டேங்குது.


Get paid To Promote at any Location


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

கூகிள் பஸ்ஸிற்கான நீட்சி மற்றும் மென்பொருட்கள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே நம் கணிணியில் ஒரே மாதிரி கோப்புகள் நிறைய இருக்கும் உதாரணத்திற்கு ஒரு புகைப்படம் அதில் உள்ள பிக்ஸல் மற்றும் அளவு போன்றவை ஒன்றாக ஒன்று சி ட்ரைவிலும் இன்னொன்று மை டாக்குமென்ட்சிலும் இருந்தால் நம்மால் கண்டுபிடிக்க முடியாது இது போன்று ஏராளமான கோப்புகள் நாம் இரண்டு இடத்தில் சேமித்து வைத்திருப்போம் இதனால் வன்தட்டில் இடம்தான் அடைத்துக் கொள்ளுமே தவிர வேறு உபயோகம் இல்லை இது போன்று அனைத்து கோப்புகளையும் கண்டுபிடிக்க இந்த மென்பொருள் உங்களுக்காக சுட்டி இதன் சிறப்பம்சங்கள் இதன் மூலம தேவையில்லாத கோப்பை நீக்கலாம். ஒரு குறிப்பிட்ட டிஸ்க் அல்லது போல்டருக்குள் தேட முடியும்.
 கூகிள் நிறுவனத்தின் புதிய செயலி கூகிள் பஸ் (buzz) இதனுடைய சிறப்பம்சம் இது ஜிமெயில் உள்ளேயே இணைந்து இருப்பது சிறப்பாக இருக்கிறது.  நீங்கள் உங்கள் ட்விட்டரில் ட்விட் செய்தால் இங்கும் தெரியுமாறு அமைக்கலாம்.  இந்த செயலி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கூட நிறுத்தி வைக்க முடியும்.  உங்கள் ஜிமெயில் கணக்கினை திறந்து நேரே கீழே சென்றால் அங்கு Turn off buzz என்று ஒரு லின்க் அதை அழுத்துங்கள் முடிந்தது. வேண்டும் என்றால் அதை மறுபடி அழுத்தினால் போதும். 


இதற்கான பயர்பாக்ஸ் உலாவி நீட்சி வெளிவந்துள்ளது அதை தரவிறக்க இங்கு செல்லுங்கள் சுட்டி


கூகிள் குரோமிற்கான நீட்சி தரவிறக்க சுட்டி


மிக சிறந்த வலை உலாவிகளில் ஒபராவிற்கு என்று ஒரு இடம் உண்டு.  அந்த பிரவுசரில் ஒரு ஒன்பது கட்டங்கள் கொண்ட டேப் இருக்கும். அதில் நம் விரும்பும் இணையத்தளங்களின் பெயர்களை இட்டுக் கொள்ளலாம்.  அது நம் கணிணியில் மட்டுமே செயல்படும் வகையில் இருந்தது. இப்பொழுது அவர்கள் ஒரு தளம் தந்திருக்கிறார்கள் அதன் மூலம் அங்கு நம் ஒரு கணக்கினை திறந்து விட்டால் போதும் எங்கு சென்றால் நேரடியாக நம் தளத்தை அணுகலாம். ஒரு தடவை நீங்கள் கணக்கினை திறந்து விட்டால் அங்கு என்ன யூசர் நேம் கொடுத்திர்களோ அதனுடன் homepagestartup.com என்று சேர்த்தால் போதும்.  இனி உங்களுக்கு பிடித்த புக்மார்க்குகளை எங்கிருந்தாலும் அணுகலாம்.  உங்கள் நண்பர்களுடன் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.

http://.homepagestartup.com

இணையத்தள சுட்டி


மைக்ரோசாப்டிற்கு நிகரான திறந்த நிலை இலவச ஒபன் ஆபிஸ் 3.2 புதிய பதிப்பு வெளிவந்துள்ளது அதனை தரவிறக்க இங்கு செல்லுங்கள் சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை