நண்பர்களே சில நேரங்களில் நாம் உபயோகிக்கும் ஆன்டி வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் லைசென்ஸ் முடியும் பொழுது புதியதாக புதுப்பிக்க சொல்லி வரும் ஆனால் நாம் வேறொரு மென்பொருளுக்கு தாவ காத்துக் கொண்டிருப்போம். அந்த மாதிரி நேரத்தில் ஆன்டிவைரஸை அன் இன்ஸ்டால் செய்தால் சரியாக அன் இன்ஸ்டால் ஆகாமால் ரெஜிஸ்டரிக்குறிப்புகள் மற்றும் டிஎல்எல் கோப்புகள் அமர்ந்து விடும். இதனால் நம்மல் புதிய ஆன்டி வைரஸ் பதிய பெரிய தடங்கலாக இருக்கும். இது போன்ற ஆன்டி வைரஸ்களை நீக்க ஒரு மென்பொருள்
சுட்டி இது போல் அனைத்து வகையான மென்பொருட்களையும் நீக்கலாம்.
ஒசிஆர் ( OCR ) என்பது ஒரு மென்பொருள் அந்த மென்பொருள் நீங்கள் வாங்கும் ஸ்கேனருடன் இணைந்து தரப்படும். இந்த மென்பொருள் ஒரு நிறுவனம் பல காலமாக தனியாக தயாரித்து விற்பனை செய்துவருகிறது அந்த மென்பொருளின் பெயர் அபி பைன் ரீடர். இந்த மென்பொருள் இலவசமாக சட்டரீதியாக தரப்படுகிறது இந்த மென்பொருளை பெற நீங்கள் செய்ய வேண்டியது கீழே தருகிறேன் பின்பற்றுங்கள். இந்த சலுகை எவ்வளவு நாட்கள் என்று தெரியாது அதனால் முடிந்தவரை விரைவாக செயல்படுங்கள்.
முதலில் இங்கே செல்லுங்கள்
சுட்டி
பிறகு அங்கே கீழே பார்த்தால் ஒரு விண்ணப்பம் இருக்கும் அங்கு உங்கள் பெயர் முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள். உடனே உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அபிபைன் ரீடரின் சீரியல் கீ வந்துவிடும். அதை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். மிக முக்கியம் இங்கு கொடுக்கப்படும் பெயர் முகவரி மின்னஞ்சல் மென்பொருள் நிறுவும் பொழுது கொடுக்க வேண்டியிருக்கும். பத்திரமாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இந்த சுட்டியை பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்குங்கள்.
சுட்டி பிறகு மென்பொருளை நிறுவிய பிறகு எப்படி ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பதை கீழ் உள்ள படங்கள் விளக்கும்.
இருநூறு வகையான போர்டபிள் மென்பொருட்கள் உங்களுக்காக இங்கே ஒருங்கிணைந்த மென்பொருளுக்குள் கிடைக்கிறது.
சுட்டி இதில் இரண்டு வகையான மென்பொருள் உள்ளது லைட் மற்றும் புல் இதில் உங்களுக்கு எது உதவுமோ அதை எடுத்துக் கொண்டு எங்கு வேண்டுமானலும் சென்று உபயோகப்படுத்தலாம்.
இதில் இணைந்துள்ள மென்பொருட்களின் அணிவரிசையை இங்கு காணலாம்.
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே ஒரு அனானி நண்பர் என்னை ஒரு கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதில் அளிக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது.
Anonymous has left a new comment on your post "டிஜெயுவி என்ற கோப்பும் அதன் பயன்களும்":
சிலநாட்களுக்குமுன் திரு சைபர்சிம்மன் தனது பதிவுகள் அப்படியே பிறர் வலைத் தளங்களில் பதிவு செய்யப்படுவதைப் பற்றி எழுதியிருந்தபோது அதை வன்மையாகக் கண்டித்தவர்களில் நீங்களும் ஒருவர். ஆனால், நீங்கள் இடும் பதிவுகள் பல ஆங்கிலத்தில் வரும் தொழில்துட்ப பதிவுகளின் தமிழாக்கம்தானே! அவற்றைத் தமோழில் நீங்கள் தருவதைக்கூடப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஆந்த ஆங்கிலப் பதிவுகளுக்கு நீங்கள் நன்றி கூடச் சொல்வதில்லயே! அதுவும் அந்தப் பதிவுகளில் உள்ள படங்களைக்கூட உங்கள் பதிவுகளில் அப்படியே பயன்படுத்தும்போது! உதாரணமாக இன்று நீங்கள் வெளியிட்டிருக்கும் இந்த DJVU பதிவு இன்று வந்திருக்கும் www.tothepc.com பதிவின் நகல்தானே!
ஆனால் அவர் கூறுவது உண்மைதான்!!! இது மற்ற வலைத்தளங்களின் தமிழாக்கம் மட்டுமல்ல!! என் கணிணியில் உபயோகித்து பார்த்து விட்டு எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது மற்றவர்களுக்கு சிறந்தது என்று கூறுகிறேன் இது தவறா ?? இது தவறில்லை என்றே தோன்றுகிறது. கருத்துகளை காப்பி அடிப்பதற்கும் வேறு மொழியில் மொழிபெயர்த்து எம் மொழி மக்களுக்கு கூறுவதற்கும் வித்தியாசம் நிறைய உண்டு. இந்த மென்பொருள் நமக்கு சொந்தம் என்று நாம் இதுவரை எந்த மென்பொருளை கூறியதில்ல உதாரணத்திற்கு ஒரு திரைப்படம் முதல்தர தியேட்டருக்கு வந்துவிட்டு இரண்டாம் தர தியேட்டருக்கு வருவதில்லையா?? அதுபோல் வேற்று மொழி திரைப்படங்கள் இங்கு திரையிடுவதில்லையா?? ஒரு நல்ல திரைப்படம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வேறு மொழிகளில் மாற்ற்ப்படுவதில்லையா இதனால் திரைப்படம் எடுத்தவருக்கு மட்டுமே பெருமை அவரவர் மொழிகளில் எடுப்பதால் அவரவருக்கு பெருமை. எப்படி பார்த்தாலும் அனைவருக்கும் அந்த திரைப்படம் பெயரை பெற்றுக் கொடுப்பதில்லையா ஒரு திரைப்படம் நூறு நாட்கள் ஒடினால் திரைப்படத்தை கூறுவோமே தவிர ஒடுகின்ற திரையரங்கை கூறுவதில்லை அதுபோல ஒரு மென்பொருள் பற்றி விளக்கி எம் மொழி மக்களுக்கு தெரிவதால்தான் வடிவமைத்தவருக்கு மட்டுமே நான் எழுதும் பெருமை அனைத்தும் போய் சேருமே தவிர மொழி மாற்றம் செய்து எழுதும் என்னை சேராது. அதை மொழி மாற்றுவதால் என் மொழி மக்கள் என்னை பாராட்டுகிறார்கள் அதனால் ஆங்கிலத்தில் எழுதுகிறவர்கள் உலகத்தில் உள்ள அனைவரையும் சென்றடைகிறது. எம் மொழியில் எழுதுவதால் எம் மொழி மக்கள் அனைவரையும் சென்றடைகிறது. எம் மொழி மக்கள் வேண்டும் என்பதால்தான் இப்பொழுது உருவாக்குகிற மிக முக்கிய மென்பொருட்கள் அனைத்தும் தமிழ் மொழியை தாங்கி வருகிறது. மொழி மாற்றம் செய்யும் நான் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. நிறைய ஆங்கில பதிவுகள் வேறு வெளி நாட்டு தளங்களை பார்த்து படித்தே எழுதுகிறார்கள் சொந்தமாக தேடி எழுதுவதில்லை அது எத்தனை பேருக்கு தெரியும். சொல்லுங்கள்
என் வலைப்பதிவுகளை படித்து இதுவரை மென்பொருளை பற்றி தெரியாதவர்கள் கூட ஒரளவுகு புரிந்து கொண்டுள்ளார்கள். நான் கூறும் மென்பொருள்கள் அதிகபட்சம் அனைவரும் எடுத்தாளக்கூடிய உரிமம் கொண்ட சுதந்திர இலவச கட்டற்ற மென்பொருளாகதான் இருக்கிறது. அது மட்டுமில்லை சட்டரீதியான இலவச மென்பொருட்கள் மட்டும்தான் கொடுக்கிறேன். அவர் கூறியுள்ள DJUV என்ற வகை கூட சுதந்திர இலவச கட்டற்ற மென்பொருள்தான்.
அவருக்கு நன்றி கூறவில்லை என்பதுதான் பிரச்சனை என்பதால் இதுவரை உதவிய அனைத்து இணையத்தளங்களுக்கும் இணைய எழுத்தாளர்களுக்கும் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கும் இனிமேல் உதவ போகிற அனைத்து இணையத்தளங்களுக்கும் இணைய எழுத்தாளர்களுக்கும் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி போதுமா? அனானி அவர்களே!!!
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே DJUV என்று ஒரு கோப்பு உள்ளது தெரியாதவர்கள் இங்கு போய் தெரிந்து கொள்ளலாம்.
சுட்டி
இது ஒரு .jpeg போன்ற ஒரு கோப்பு வகையாகும். இதனுள் மிகவும் அதிகமாக உயர்திறன் மிக்க புகைப்படங்களை மிகவும் சிறிய கோப்பாக்கி சுருக்கி வைத்து காட்டும் கோப்பாகும். இன்னும் இதை பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்
சுட்டி
உங்கள் புகைப்படம் மற்றும் பிடிஎப் கோப்புகளை DJUV கோப்பாக மாற்ற இங்கே செல்லுங்கள்
சுட்டி
சரி ஜேபிஜி கோப்பை டிஜுவி கோப்பாக மாற்றியாகி விட்டது இதை எப்படி திறந்து பார்ப்பது இதற்கு உதவ வருகிறது இந்த மென்பொருள்
சுட்டி இது ஒரு திறந்த நிலை கட்டற்ற மென்பொருளும் கூட என்பது இதன் சிறப்பு.
உங்களிடம் ஒரு எம்கேவி வகை வீடியோ கோப்பு இருக்கிறது. தரவிறக்கும் போது பாதியிலேயே நின்று விட்டுவிட்டது அல்லது பழுது ஆகிவிட்டது திறக்க வில்லை என்ன செய்யலாம் இங்கு சென்று இந்த மென்பொருளை தரவிறக்கி நேரடியாக இயக்குங்கள். இதை நிறுவ வேண்டிய அவசியமில்லை. அந்த பழுது ஆன எம்கேவி கோப்பை Drag and Drop மவுஸால் இழுத்து கொண்டு வந்து விடுங்கள். இந்த மென்பொருள் பழுது பார்த்து கொடுத்து விடும். இதுவும் ஒரு திறந்த நிலை கட்டற்ற மென்பொருளும் கூட என்பது இதன் சிறப்பு. மென்பொருள்
சுட்டி
» Read More...