Advance System Care சட்டரீதியான மென்பொருள் இலவசமாக

நண்பர்களே உங்கள் கணிணியில் உள்ள வன்தட்டுகளை டிபிராக் செய்தல், ரெஜிஸ்டரி கிளீன் செய்தல் இதையெல்லாம் செய்யும் Advance System Care Pro மென்பொருள் இலவசமாக சட்ட ரீதியானது உங்களுக்காக.



இங்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள் நேரடியாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தரவிறக்க இணைப்பும் லைசென்ஸ் கோடும் வந்து விடும்.

இணையதள சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

வீடியோ பார்க்க, வெட்ட, மாற்ற புகைப்படம் மாற்ற அனைத்திற்கும் ஒரே மென்பொருள் இலவசமாக

நண்பர்களே நாம் எப்பொழுதும் வீடியோக்களை பார்க்க ஒரு ப்ளேயர் அந்த வீடியோவை கட் செய்ய வேறோரு மென்பொருள் வீடியோவை வேறொரு கோப்பின் வடிவாக மாற்ற ஒரு மென்பொருள்   உங்கள் போட்டோவினை வேறொரு அளவிற்கு மாற்ற போட்டோவினை ஸ்லைடு ஷோவாக மாற்ற என்று பலதரப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்துவோம்.


இதன்மூலம் காலநேரமும் கணிணியில் செய்திறன் மற்றும் வன் தட்டின் இடமும் அதிகரிக்கும் ஸ்டார்ட் மெனுவில் அது ஒரு நீளத்திற்கு தனியாக இடத்தினை அடைத்துக் கொண்டிருக்கும்.  இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஒரு நான்கு மென்பொருள் என்ஜினியர் சேர்ந்து ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருளை உருவாக்கி இலவசமாக கொடுத்திருக்கின்றனர். இந்த மென்பொருளின் பெயர் மீடியா கோப்.


இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்பின் வடிவங்கள்

வீடியோ - mp3, wav, aac, wma, flac, m4a, ac3, rmvb, mp4, 3gp, wmv, mov, avi, divx, mpg, flv, mkv, vob இது சில மட்டுமே இன்னும் நிறைய

சப்டைட்டில் இல்லாத திரைப்படங்களில் சப்டைட்டில் தனியாக சேர்க்க முடியும்.

மேற்கூறிய அனைத்து கோப்புகளும் வீடியோ மாற்றியாக செயல்படும்.  இந்த கோப்புகளிலிருந்து எம்பி3 பிரித்தெடுக்க முடியும்.

புகைப்படங்கள் -  jpg, bmp, gif, tiff, png, emf, wmf

மென்பொருளின் அளவு 7.92 எம்பி மட்டுமே.

முற்றிலும் இலவசம் மென்பொருள்

மென்பொருள் தரவிறக்க சுட்டி 




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

சட்ட ரீதியான Win X DVD Author மென்பொருள் இலவசமாக அக்டோபர் 31 வரை மட்டுமே

நண்பர்களே நீங்கள் ஒரு அசைவ சாப்பாடு பிரியரா விதம் விதமாக அசைவம்  சமைத்து சாப்பிட ஆசையா இதோ ஒரு தோழி மிகவும் அழகாக தினம் ஒரு அசைவ சமையலை எப்படி செய்வது என்று மிகவும் அழகாக விளக்கி எழுதுகிறார் அவர் தளத்திற்கு செல்ல சுட்டி



சட்ட ரீதியான WinX DVD Author மென்பொருள் இலவசமாக  அக்டோபர் 31 வரை இந்த சலுகை இந்த மென்பொருள் மூலம் என்னவெல்லாம் செய்யலாம்

எந்த ஒரு வீடியோவிலிருந்தும் டிவிடி ஆக மாற்றி நேரடியாக டிவிடியில் வீடியோ டிவிடியாக பதியலாம்.

டிவிடியில் சப் டைட்டில் சேர்க்கலாம்.

டிவிடி மெனு உருவாக்கலாம்.

வீடியோ டிவிடி உருவாக்கலாம்.

நேரடி மென்பொருள் தரவிறக்க சுட்டி

இணையத்தள சுட்டி


நாம் ஒவ்வொரு முறை ஒரு கோப்பை உருவாக்கி ஒரு போல்டரில் போட்டு வைப்போம். பிறகு அந்த கோப்பை நீக்கி விடுவோம். பிறகு அந்த போல்டர் மட்டும் அந்தரத்தில் தொங்கும்.  அது போல் அதிகமாக உள்ள காலி போல்டர்களை நீக்க இந்த மென்பொருள் சுட்டி



யூஎஸ்பி டிரைவில் உபயோகப்படுத்தக்கூடிய சிறு மென்பொருள் இது இதற்கு பல சிறு மென்பொருட்கள் உள்ளன.  உதாரணத்திற்கு  கடைசியாக உங்கள் கணிணியில் எந்த  யூஎஸ்பி வன் பொருள் உபயோகப்படுத்தப்பட்டது என்று கண்டறியலாம்.

Blue Screen பிழைக்கு என்ன காரணங்கள் உள்ளது என்று அறியலாம்.

உங்கள் கணிணியில் நிறுவியுள்ள மென்பொருள்களின் Product Key கண்டுபிடிக்கலாம்.  இது போல நூறு வகையான குட்டி மென்பொருட்கள் உள்ளன.

மென்பொருள் தரவிறக்க சுட்டி



உங்கள் கணிணியில் சிடி ட்ரைவை வெளியே எடுக்க தள்ள நேரடியாக கணிணியில் இருந்து இயக்க மென்பொருள் சுட்டி


நீங்கள் எழுதும் ஆங்கில எழுத்துக்களை அப்படியே பின்னாளிலிருந்டுஎழுத வேண்டுமா உதராணத்திற்கு http://gouthaminfotech.blogspot.com  என்பதை moc.topsgolb.hcetofnimahtuog//:ptth  என்று வரவழைக்க வேண்டுமா அதற்கு இந்த மென்பொருள் உதவும் மென்பொருள் சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

300வது பதிவையொட்டி சிறப்பு சட்டரீதியான மென்பொருட்கள் ஆன்டிவைரஸ்கள்


நண்பர்களே தொடர்ந்து எழுத முடியாமல் அலுவலக வேலைப்பளு அதிகரித்திருப்பதால் பிப்ரவரிக்கு பிறகு தொடர்ந்து தினம் ஒரு பதிவு எழுதுவேன். முடியும் பொழுதெல்லாம் ஒரு பதிவு என்று எழுதுகிறேன்  தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  தொடர்ந்து பதிவுகள் எழுதமுடியததால் மன்னிக்கவும்.

அக்டோபர்  இருபத்திரண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியிடுவதை கொண்டாடுவதற்காக பாண்டா ஆன்டிவைரஸ் நிறுவனத்தினர் 22-10-2009 அன்று மட்டும் இலவசமாக ஒருவருடத்திற்கான Panda Internet Security 2010 இலவசமாக கொடுக்கின்றனர்.


இதேபோல் காஸ்பர்ஸ்கை ஆன்டி வைரஸ் நிறுவனத்தினரும் அதே தேதியில் இலவசமாக ஒருவருடத்திற்கான ஆன்டிவைரஸ் வழங்குகின்றனர்.  இணையத்தள சுட்டி

22-10-2009 மறவாதீர் அனைவருக்கும் இலவசங்களை வாரிக் கொடுக்க போகிறது அனைத்து மென்பொருள் நிறுவனங்களும்

பேஸ்புக் என்னும் வலைத்தளத்தில் உங்கள் கணக்கினுள் ஏதாவது ஒரு நண்பரின் கோரிக்கை, செய்திகள் வந்தால் உடனே உங்கள் கணிணியில் டெஸ்க்டாபில் தெரிய இந்த மென்பொருள் போதும்.  இதற்காக உங்கள் வலைஉலாவியில் நுழைய தேவையில்லை.  மென்பொருள் சுட்டி


உங்கள் கணிணியில் உள்ள வன்தட்டுகளின் சூட்டினை தெரிந்து கொள்ள இந்த மென்பொருள்.  ஒவ்வொரு வன்தட்டும் எவ்வளவு சூடு ஆகிறது என்று தெரிந்து கொள்ளலாம். இது பழைய DOS மோடில் இயங்குகிறது இந்த மென்பொருள்.  சுட்டி இதை தரவிறக்கிய பின் Winzip மூலம் Unzip செய்யுங்கள். பிறகு எங்கு வேண்டுமோ. அங்கு சேமியுங்கள் பிறகு Start மெனு கிளிக் செய்து அதில் Run தேர்வு செய்து அதில் CMD என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள். நீங்கள் சேமித்த போல்டர் பகுதிக்கு disktemp.exe என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள் உங்கள் வன்தட்டின் சூட்டினை தெரிந்து கொள்ளலாம்.



இலவச ஆடியோ வீடியோ கன்வெர்ட்டர் உங்களுக்காக சுட்டி
இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்புகள்

VOB, FLV, MPG, AVI, MPEG, MOV, WAV, MP3 into MP3, AVI, WAV, WMV, MPEG, FLV, MKV, RM, 3GP, 3GPP2, MOV and iPod video format.



இணையத்தளத்தில் சிறு கோப்புகளை வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் மூலம் ஸ்கேன் செய்ய இந்த வலைத்தளம் உதவும்.  இந்த வலைத்தளத்தில் 40 வகையான ஆன்டிவைரஸ் மென்பொருள் மூலம் சோதிக்கப்படுகிறது.  இணையத்தள சுட்டி


கீழ்கண்ட நாற்பது வகையான ஆன்டிவைரஸ்கள் மூலம்தான் சோதிக்கப்படுகிறது.

A-squared, AhnLab-V3, AntiVir , Antiy-AVL, Authentium, Avast, AVG, BitDefender, CAT-QuickHeal, ClamAV, Comodo, DrWeb, eSafe, eTrust-Vet, F-Prot, F-Secure, Fortinet , Gdata, Ikarus, Jiangmin, K7AntiVirus, Kaspersky, McAfee, McAfee+Artemis, McAfee-GW-Edition, Microsoft, NOD32, Norman, nProtect, Panda, PCTools, Rising, Sophos, Sunbelt, Symantec, TheHacker, TrendMicro, VBA32, ViRobot, VirusBuster.

இந்த பதிவு என்னுடைய 300வது பதிவு இந்த பதிவை என் பதிவுகளை படித்து பெரும் ஆதரவு தரும் நண்பர்களுக்கும் தமிழ் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கும் தமிழ்10, தமிழ்மணம், தமிழிஸ், திரட்டி, அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.  இது உங்களால் மட்டுமே முடிந்தது.  நன்றி நன்றி நன்றி.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை