இலவச டிப்ஸ்கள் இணையத்தளங்கள் உங்களுக்காக

நண்பர்களே நிறைய வேலைகள் உங்களுக்கு சில டிப்ஸ்கள் மட்டும் இன்று

உங்கள் கணிணியில் விண்டோஸ் எக்ஸ்பி நிறுவியிருந்தால் Start மெனு கிளிக் செய்து அதில் Run என்பதை தேர்வு செய்யுங்கள்

அதில் ஒரு புள்ளி Dot வைத்து என்டர் தட்டினால் நீங்கள் எந்த யூசராக நுழைந்தீர்களோ அதன் போல்டர்  திறக்கும்.


இரண்டு புள்ளி வைத்தால் டாக்குமென்ட்ஸ் அன்ட் செட்டிங்க்ஸ் Documents and Settings போல்டர் திறக்கும்.

மூன்று புள்ளி வைத்து என்டர் தட்டினால் My Computer மை கம்ப்யூட்டர் திறக்கும்.

வெறும் \ பேக் ஸ்லாஷ் கொடுத்து என்டர் தட்டினால் உங்களுடைய C ட்ரைவ் திறக்கும்.



படங்களை பார்த்தால் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.


கணிணியில் பழக ஆரம்பித்த விளையாட்டுகளில் முதல் விளையாட்டு Mario மற்றும் Dave என்பதுதான் இது இரண்டும் எனக்கு மிகவும் பிடிக்கும்.  இது போன்ற விளையாட்டுகளை இன்றும் விரும்பி விளையாடி வருகிறார்கள் என்பதுதான் முக்கிய விஷயம். அவர்களுக்காக தரவிறக்க பழைய டாஸ் விளையாட்டுக்களை தரவிறக்க சில இணையத்தளங்கள்.

Abandonia


Dos Museum

Wikipedia Dos Games


Remain Play





நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

யூட்யூப் கோப்புகளை ஒன்று சேர்த்து ஒரு முழு படமாக்கலாம் வாங்க

நண்பர்களே இன்று சர்வதேச எழுத்தறிவு தினம் படிக்கத் தெரிந்தவர்கள் தெரியதாவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.  உங்களுக்கு தெரிந்தவைகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். 1965ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி தெஹ்ரான் நகரில் உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம் மகாநாட்டில் உலகளாவிய ரீதியில் எழுத்தறிவின்மையால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமுகமாக பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு நாளாக அனுசரிக்க வேண்டும்.  அனைவருக்கும் எழுத்தறிவு தின வாழ்த்துக்கள். 


நாம் யூட்யுபிலிருந்து தரவிறக்கும் வீடியோ கோப்புகள் முழு படங்களை பிரித்து தரவிறக்கம் செய்து இருப்போம். அதை தனித்தனியாக  பார்த்தால் படம் பார்த்த மாதிரி இருக்காது.  அதற்கு என்ன செய்வது அனைத்து வீடியோ கோப்புகளையும் ஒன்று சேர்க்க வேண்டும். அதற்கு மென்பொருள் காசு கொடுத்து வாங்க வேண்டுமே.  அதுவும் அதிகமாக இருக்குமே.  இலவசமான மென்பொருள் இருக்க கவலை ஏன் பிடியுங்கள் இந்த மென்பொருளை கொண்டு யுட்யுப் மட்டுமல்ல  FLV1, VP6F, H264 இது போன்ற பார்மெட்டுகளையும் ஒன்று சேர்க்க முடியும். முழு வீடியோவாக சேர்த்த பிறகு வீடியோ தரமும் நன்றாகவே இருக்கிறது.  இந்த மென்பொருளை நிறுவ தேவையில்லை நேரடியாக இயக்கலாம்.  மென்பொருள் தரவிறக்க சுட்டி



கூகிள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் நிறுவ ஆன்லைனில் இணையத்தில் இருந்து தான் நிறுவ வேண்டும் என்று பலர் நினைத்துக் கொண்டுள்ளனர் இணையம் இல்லாத கணிணியில் கூட குரோம் நிறுவலாம். அதற்கு இணைய நிலையத்திற்கு சென்று அங்கு இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கிக் கொள்ள வேண்டும்.  அதை ஒரு யுஎஸ்பி பென் ட்ரைவில் சேமித்துக் கொண்டு இணையம் இல்லாத கணிணியில் நிறுவ வேண்டியதுதான்.  இதன் மூலம் இந்த ஒரு கோப்பைக் கொண்டு பல கணிணியில் குரோம் நிறுவலாம்.

ஆப்லைன் இன்ஸ்டாலர் கூகிள் குரோம். சுட்டி


நெருப்பு நரி உலாவி உபயோகிப்பவர்கள் இந்த் ஆடு ஆன் மூலம் பிஎஸ்என்எல் அகண்ட அலைவரிசை இணையம் உபயோகிப்பவர்கள் எவ்வளவு தரவிறக்கம் மற்றும் தரவேற்றம் செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.  ஆடு -  ஆன் சுட்டி

AVI வீடியோ கோப்பு தரவிறக்கி கொண்டிருக்கும் பாதியேலேயே இணையம் விட்டு போய் விடும். அந்த கோப்பு ரிப்பேர் ஆகிவிடும். அந்த கோப்பினை இயக்கி படம் பார்க்க இயலாது. அப்படியே இயங்கினாலும் உங்களால் முன்னால் பின்னால் ஒட்ட இயலாது அது போன்ற கோப்புகளை இந்த சிறிய மென்பொருள் மூலம் சரி செய்ய முடியும்.  மென்பொருள் சுட்டி






நண்பர்கள் அனைவரும் சில பல விளம்பரங்களை கிளிக் செய்து எனக்கு உதவும்படி கேட்டுக் கொள்கின்றனர்.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

உங்கள் கணிணியில் உள்ள எழுத்துருக்களை பார்க்க ஒரு எளிய வழி

நண்பர்களே உங்கள் கணிணியில் வைத்திருக்கும் எழுத்துருக்களை காண்பதற்கு இந்த மென்பொருள்  மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த மென்பொருள் வெவ்வேறு அளவுகளில் உங்கள் எழுத்துருவை காண்பிக்கிறது.  இந்த மென்பொருளில் உங்கள் எழுத்துருவை Bold, Italics, Underline செய்தால் எப்படியிருக்கும் என்பதையும் இதன் மூலம் பார்க்க முடியும்.  மென்பொருள் சுட்டி



நீங்கள் இணையம் வழியாக அடிக்கடி தரவிறக்கம் செய்யக்கூடியவரா அதுவும் முக்கியாமாக கீழ்கண்ட தளங்களில் அடிக்கடி தரவிறக்கம் செய்பவரா
Bitroad.net, DepositFiles.com, EasyShare.com, FileFactory.com, Hotfile.com, Klurk.com, Letitbit.net, Load.to, MegaUpload.com, Rapidshare.com, SendSpace.com, Uploading.com and zShare.net  அப்படியென்றால் உங்களுக்குதான் பிடியுங்கள் இந்த மென்பொருளை சுட்டி





படிக்கும் அனைவருக்கும் ஒர் வேண்டுகோள் தாங்கள் சில பல விளம்பரங்களை கிளிக் செய்தால் இன்னும் நிறைய உற்சாகம் கிடைக்கும் நண்பர்களே உதவுங்கள்.




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம்? எளிய வழி

நண்பர்களே வேலை பளு காரணமாக  இரண்டு நாட்களாக கடைப்பக்கம் வர முடியவில்லை என்ன ஆனாலும் சரி ஒரு பதிவு போட்டு விடுவோம் என்று இன்று உடனே வந்து விட்டேன்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தினர் விண்டோஸ் 7 இன்னும் முழுமையாக வெளியிடவில்லை அதற்குள் விண்டோஸ் 8 ன் வேலைகளை ஆரம்பித்து விட்டனர்.  2012 மத்தியில் வெளிவரும் என்று தகவல்.

விஎல்சி மீடியா ப்ளேயரின் புதிய பதிப்பு 1.0 வெளிவந்து விட்டது.  இதில் நிறைய குறைகள் களையப்பட்டு வெளிவந்துள்ளது. தரவிறக்கி நிறுவி செயல்படுத்தி பாருங்கள்.  விஎல்சி தரவிறக்க சுட்டி
விஎல்சி இணையத்தளம் சுட்டி


பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவ்களை இந்த முறையில் பார்மெட் செய்து பாருங்கள் கட்டாயம் கைமேல் பலன் கிடைக்கும். 

முதலில் ஸ்டார்ட் மெனு  Start Menu கிளிக் செய்யுங்கள்.

ரன் Run தேர்வு செய்யுங்கள்.  அந்த பெட்டியில் CMD என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள்.

பிறகு   Format/x J: என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள்.  இதில் J:  என்பது உங்கள் யுஎஸ்பி ட்ரைவின் எழுத்தாகும்.










நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை