சுருக்கப்பட்ட வார்த்தைக்கு விவரிக்கப்பட்ட வார்த்தை மென்பொருள்

நண்பர்களே நான் எத்தனையோ திரையை படம்பிடிக்கும் மென்பொருள் கொடுத்திருந்தாலும் இந்த மென்பொருள் சில புதிய விஷயங்களையும் செய்வதால் இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.



நீங்கள் திரையை படம்பிடிக்கும் கோப்புகள் அனைத்தும் .AVI கோப்பாக மட்டுமே படம்பிடித்துத் தரும்.  ஆனால் இந்த மென்பொருள் .FLV, .WMV, .SWF போன்ற கோப்புகளாக படம் பிடித்து தரும் வசதி உள்ளது.


மென்பொருள் தரவிறக்க சுட்டி


நீங்கள் உங்களிடம் SWF வகை கோப்புகள் உள்ளதா அதில் இருந்து உங்களுக்கு தேவையான படங்களை மட்டும் பிரித்து எடுக்க வேண்டுமா?  ஆனால் முடியாது என்பர் சிலர் முடியும் என்று சொல்லுங்கள் இதோ அதற்கு என்று ஒரு மென்பொருள்.  இந்த மென்பொருள் மூலம் SWF கோப்புகளில் உள்ள புகைப்படங்களை தனியாகவோ மொத்தாமாகவோ பிரித்து எடுத்து கையாள முடியும். மென்பொருள் தரவிறக்க சுட்டி



உங்களிடம் USB என்பதற்கு அர்த்தம் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் உடனே Universal Serial Bus என்று கூறுவீர்கள். இது போன்ற ஒவ்வொரு  சுருக்கப்பட்ட வார்த்தைகளுக்கான விவரிக்கப்பட்ட வார்த்தைகள் கொண்ட டேட்டாபேஸ் மென்பொருள் ஒன்று தனி மனிதர்கள் ஒன்று கூடி உருவாக்கி இலவசமாக தந்திருக்கிறார்கள்.  உங்களுக்கு பிடித்திருந்தால் பணமும் கொடுக்கலாம்.

இந்த மென்பொருளில் 17,105 சுருக்கப்பட்ட வார்த்தைகளுக்கான விவரிக்கப்பட்ட வார்த்தைகள் உள்ளன.  இது அவ்வப்பொழுது புதிய வார்த்தைகள் பதியப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த மென்பொருளை அவ்வப்போது நீங்கள் அப்டேட் செய்தால் போதும். Smiley உபயோகபடுத்த ஒரு அகராதியும் இதில் உண்டு.


மென்பொருள் தரவிறக்க சுட்டி




உங்களிடம் யுஎஸ்பி டிரைவ் அது 8ஜிபி அளவுள்ளதா உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி விஸ்டா டிவிடி உள்ளதா அந்த டிவிடிக்களை ஒவ்வொரு முறையும் நிறுவ உபயோகப்படுத்துவீர்களா.  ஆம் என்றால் உங்களுக்குதான்  இந்த மென்பொருள்.  இந்த மென்பொருள் மூலம் சிடியிலிருந்து யுஎஸ்பி டிரைவிற்கு உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி டிஸ்கினை சேமித்துக் கொடுக்கும் இதனால் நீங்கள் உங்கள் விண்டோஸ் பார்மெட் செய்து நிறுவ சிடியை தேவையில்லை இந்த யுஎஸ்பி டிரைவினை வைத்து பூட்டபிளாக நிறுவ வேண்டும்.  மென்பொருள் சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்.

உங்கள் ஒட்டுக்களை தமிழிசிலும் தமிழ்10 லும், தமிழ்மணத்திலும் குத்துங்கள்.

» Read More...

பிரவுஸிங் சென்டரில் இணையம் வழியே உலாவும் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்

நண்பர்களே வீட்டுக் கணிணி வழியாக இணையத்தில் உலாவும் போது மட்டுமல்ல பொது கணிணிகளான சைபர் கபேக்கள், இண்டெர்நெட் பிரவுசிங் சென்டர்களில் உள்ள கணிணி வழியாக இணையத்தில் உலாவும் போதும் மிகவும் உஷாராகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். 

முதல் விஷயம் நீங்கள் பொதுக் கணிணியில் அமர்ந்து உங்கள் வேலைகளை முடித்தவுடன் கட்டாயம் அக்கவுண்டிலிருந்து  Logout அல்லது Sign Out செய்ய வேண்டும்.

நீங்கள் கணிணியில் உலாவிக் கொண்டிருக்கும் போது எக்காரணத்தைக் கொண்டும் அப்படியே போட்டுவிட்டு வெளியே செல்லக்கூடாது.  சில நேரம் செல்பேசி அழைக்கும் உள்ளே சிக்னல் கிடைக்க வில்லை என்றவுடன் அப்படியே சென்றுவிடுவார்கள். அதுபோல் எப்பொழுதும் செல்லக் கூடாது.

நீங்கள் பொதுக் கணிணியை உபயோகித்து முடித்தவுடன் மறக்காமல் குக்கீஸ், தற்காலிக இணைய கோப்புகள், (Temporary Internet Files) அனைத்தையும் துடைத்து விடுங்கள். 

முடிந்தவரை ஆன்லைன் பணபரிமாற்றங்களை பொதுக்கணிணியில் மட்டும் செய்வதை தவிருங்கள். அது மிகவும் நல்லது உங்களுக்கும்  உங்கள் பணத்திற்கும்.


நீங்கள் வைத்திருக்கும் சில டெக்ஸ்ட் கோப்புகள் அளவு அதிகமாக இருப்பது போல் தோன்றுகிறதா?  இந்த தளத்திற்கு செல்லுங்கள் நீங்கள் டைப் செய்து வைத்திருக்கும் கோப்புகளில் உள்ள எழுத்துக்களை காப்பி செய்து இந்த தளத்தில் பேஸ்ட் செய்யுங்கள் முடிந்தது சுலபமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம். சுட்டி








நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சவால் விடுங்கள் உன்னுடைய கடவுச் சொல்லை கண்டுபிடிப்பேன் என்று. எப்படி என்று வினவுவார். சுலபமாக முதலில் உங்கள் நண்பரை கடவுச் சொல்லை டைப் செய்ய சொல்லுங்கள் ஆனால் டைப் செய்ய மட்டுமே வேண்டும் என்டர் தட்டக்கூடாது. பிறகு கீழுள்ள ஜாவாஸ்கிரிப்ட் கோடை காப்பி செய்து அட்ரஸ்பாரில் பேஸ்ட் செய்து என்டர் தட்டுங்கள் என்ன கடவுச் சொல் என்று தானாக காட்டி விடும்.











நன்றி மீண்டும் வருகிறேன்




» Read More...

ஆன்லைனில் பிடிஎப் கோப்புகளை படிக்க சிறந்த இலவச தளங்கள்

நண்பர்களே நாம் ஒவ்வொரு முறை பிடிஎப் கோப்புகளை படிப்பதற்கு அடோப் அல்லது பாக்ஸிட் ரீடர் போன்ற மென்பொருள்களை நாடுகிறோம்.  ஆனால் நாம் வெளியில் இண்டெர்நெட் பிரவுஸிங் சென்டரில் இருக்கும் போது சில நேரம் இந்த மாதிரி மென்பொருள் இல்லாமல் இருக்கும்.  அப்பொழுது இந்த மாதிரி ஆன்லைன் தளங்கள் மிகவும் உதவியாக இருக்கு.  அது மட்டுமில்லாமல் ஒரு தளத்தில் ஒரு பிடிஎப் கோப்பு இருக்கும் அந்த கோப்பினை தரவிறக்கி படிக்காமல் நேரடியாக இந்த தளங்களில் உள்ளீடு செய்து படிக்கலாம்.  வேண்டும் என்றால் தரவிறக்கி கொள்ளலாம்.

பிடிஎப் மீ நாட்


வியுசிட்


சாம்ராஜ்டேட்டா



 யாஹூ நிறுவனம் தனது சாட்டிங் மென்பொருளான யாஹூ மெஸெஞ்சர் புதிய பதிப்பு 10 வெளியிட்டுள்ளது.  இந்த புதிய பதிப்பில் வெகு தெளிவான வீடியோ சாட்டிங் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.  புதிய பதிப்பு தரவிறக்க சுட்டி

போர்டபிள் விண்டோஸ் மீடியா ப்ளேயர் 12 (விண்டோஸ் எக்ஸ்பி
மற்றும் விஸ்டாவில் உபயோகிக்கலாம்) உங்களுக்காக மீடியா ப்ளேயர் 
தரவிறக்க சுட்டி
 
புடவை கட்டுவது எப்படி என்று ஒரு புகைப்படம்






நன்றி மீண்டும் வருகிறேன்




» Read More...

ஆல் இன் ஒன் பிடிஎப் டூல் உங்களுக்காக

நண்பர்களே அனைவரும் விநாயகர் சதுர்த்தியை மிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் கொண்டாடியிருப்பீர்கள் அந்த மகிழ்ச்சியுடன் இந்த வார முதல் நாளை தொடங்குவோம்.  இன்று நான் அறிமுகப்படுத்தப்படும் மென்பொருள் ஒரு பிடிஎப் கருவி ஆங்கிலத்தில் All in One PDF Tools இதன் பெயரும் இதுதான்.



இந்த மென்பொருள் மூலம் செய்யக்கூடியவை

ஒரு பிடிஎப் கோப்பை Encrypt (என்கிரிப்ட்) செய்ய முடியும்.

என்கிரிப்ட் செய்யப்பட்ட கோப்பை (டிகிரிப்ட்) Decrypt செய்ய முடியும்.

பல பிடிஎப் கோப்புகளை ஒரே கோப்பாக மாற்ற முடியும்.

ஒரு பிடிஎப் கோப்பில் உள்ள பக்கங்களை தனித்தனி பிடிஎப் கோப்புகளாக பிரிக்க முடியும்.


பிடிஎப் கோப்பில் ஸ்டாம்ப் செய்ய முடியும் (ஒரு வார்த்தையை பிடிஎப் கோப்பின் பக்கங்களின் மேல் ஸ்டாம்ப் போல குத்துவது)


XML எக்ஸ்எம்ல் கோப்புகள் வழியாக பிடிஎப் கோப்புகள் உருவாக்க முடியும். (வேர்ட், எக்ஸல் கோப்புகளை XML எக்ஸ்எம்ல் கோப்புகளாக உருவாக்க முடியும்)
 
ஆல் இன் ஒன் பிடிஎப் டூல்ஸை தரவிறக்க சுட்டி
பேட்டரி கேர்
நிறைய நண்பர்கள் தங்களுடைய லேப்டாப்கள் பேட்டரி எந்த நிறுவனத்தினருடையது அந்த பேட்டரி எந்தளவு சார்ஜ் ஆகும். முழு பேட்டரியும் சார்ஜ் ஆகிவிட்டதா என்று தெரிந்து கொள்ள.  பேட்டரி பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள என்று நிறைய விஷயங்களை  இந்த மென்பொருள்  செய்கிறது சுட்டி






நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை