நண்பர்களே உங்கள் அனைவரது ஆதரவினால் நம்முடைய வலைப்பூ விகடனில் குட் ப்ளாக்ஸ் பகுதியில் வெளி வந்துள்ளது. இதற்காக விகடன் நிறுவனத்திருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முழு காரணமும் நம் நண்பர்கள் ஆதரவும் அவர்களின் தினசரி பங்களிப்பும்தான் என்று பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இன்று நண்பர்களே ஆன்லைனில் புகைப்பட கோப்புகளை எடிட் செய்ய பத்து வகையான இணையத்தளங்கள் கொடுக்க போகிறேன்.
இணையத்தளங்களிலிலும் குப்பைகள் இருக்கிறது என்று கூறுகிறது ஆன்டிவைரஸுக்கு புகழ் பெற்ற நிறுவனமான நார்டன் அவர்கள் குப்பையான இணையத்தளங்கள் என்று சிலவற்றை பட்டியல் போட்டு வெளியிட்டுள்ளது. பட்டியலில் சில தளங்கள்
உங்கள் கணிணியை வேறு யாருக்காவது கொடுக்க அல்லது விற்பனை செய்வதற்கு முன் இந்த மென்பொருள் உங்கள் கணிணியி சுத்தமாக துடைத்து விடுங்கள் மிகவும் நல்லது சுட்டி
இந்த மென்பொருள் குறித்த வீடியோ
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். விநாயகர் சதுர்த்தி நன்னாளில் அனைவரும் அனைத்தும் பெற விநாயகரை பிரார்த்திக்கிறேன்.
குறிப்பு - படங்களை பெரிதாக பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்.
பதிவுகள் பிடித்திருந்தால் தமிழிசிலும் தமிழ்10லும் தமிழ்மணத்திலும் ஒட்டுக்களை குத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன். சில பல விளம்பரங்களை கிளிக் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர்களே அனைவருக்கும் வணக்கம் தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் மிகவும் நன்றிகள் பல
இதற்கு முன் சட்டரீதியான பிடிஎப் டூ வேர்ட் மாற்றி கொடுத்த நான் மீண்டும் ஒரு இலவச பிடிஎப் டூ வேர்ட் மாற்றி உங்களுக்காக தருகிறேன். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் காப்பி ப்ரொடெக்ட் (Copy Protect) செய்யப்பட்ட பிடிஎப் கோப்பிலிருந்தும் வேர்டுக்கு மாற்றலாம். இதை ஒரு முறை ரெஜிஸ்டர் செய்தால் வாழ்நாள் முழுவதும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இதை ரெஜிஸ்டர் செய்ய இங்கு செல்லுங்கள். இங்கு ஒரு எளிய கணக்கு கேள்வி கேட்பார்கள். அதற்கு பதில் அளித்தால் போதும் உடனே ரெஜிஸ்ட்ரேசன் கீ (Registration Key) கொடுத்து விடுவார்கள். மென்பொருள் தரவிறக்க சுட்டி
சில நேரம் உங்கள் குப்பைத்தொட்டியை (Recycle Bin) தெரியாமல் காலி (Empty Recycle Bin) செய்து விடுவீர்கள். பிறகுதான் தோன்றும் அதில் ஒரு கோப்பை தவறுதலாக அழித்து விட்டோமே என்று. அந்த மாதிரி சமயத்தில் கை கொடுக்கிறது இந்த மென்பொருள். இந்த மென்பொருள் உங்கள் கணிணியில் இருந்து மட்டுமல்ல உங்களது யுஎஸ்பி பென் ட்ரைவ், மற்றும் மெமரி கார்டு போன்றவற்றிலும் இருந்து மீட்டெடுக்கும்.
நம் குழந்தைகள் புகைப்படத்தை சாதரணமாக பார்த்தாலே நமக்கு மிகவும் சந்தோசம் வரும். நம் குழந்தை முகத்தை ஒரு ஒவியர் வரைந்து கொடுத்தால் எவ்வளவு சந்தோசம் இரண்டு மடங்காகும். ஆனால் ஒரு ஒவியரை தேட வேண்டும். அவர் முன் ஆடாமல் அசையமால் அமர்ந்து இருக்க வேண்டும் குழந்தைகளிடம் இதை எதிர்பார்க்க முடியாது. அதை நாமே கையால் வரைந்தால் நமக்கு வரையத் தெரியாது. அதற்கு ஒரு மென்பொருள் இருந்தால் எப்படி இருக்கும். இருந்தால் என்ன இருக்கிறது. அதை இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள் சுட்டி.
நீங்கள் வைத்திருக்கும் வீடியோக்களை .WMV கோப்பாக (விண்டோஸ் மீடியா வீடியோ கோப்பாக ) மாற்ற இந்த இலவச மென்பொருள் தரவிறக்க சுட்டி
(படங்களை பெரிதாக்க படத்தின் மேல் கிளிக் செய்து பார்க்கவும்)
பதிவு பிடித்திருந்தால் தமிழிலிசிலும் தமிழ்10லும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடவும். சில பல விளம்பரங்களை கிளிக் செய்யவும்.
இன்னும் நிறைய மென்பொருட்கள் இணையத்தளங்களுடன் திரும்பவும்
நண்பர்களே கூகிள் ரீடர் என்றால் என்ன என்று தெரியுமா?
நீங்கள் ஒவ்வொரு முறையும் என்னுடைய வலைத்தளத்திற்கு வராமால் நேரடியாக கூகிள் ரீடர் மூலம் படிக்க முடியும். அதாவது ஒவ்வொரு புதிய பதிவு வெளி வரும் போது உங்கள் கூகிள் ரீடரில் நேரடியாக பதிவு வெளிவந்த பதினைந்து நிமிடத்திற்குள்ளாக உங்கள் கூகிள் ரீடரில் என்னுடைய பதிவின் காப்பி வந்து விடும். இதனால் நீங்கள் என் வலைத்தளத்திற்கு வாராமால் என்னுடைய பதிவுகளை படிக்க முடியும். வலைப்பூக்கள் மட்டுமல்ல அநேக இணையத்தளங்களை இதன் மூலம் படிக்க முடியும்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கூகிள் கணக்கு உங்களுக்கு வேண்டும்.
உங்களிடம் கூகிள் கணக்கு இருந்தால் இங்கு செல்லவும். சுட்டி
இதில் உங்கள் கூகிள் யூசர் நேம் (User Name) கடவுச் சொல் (Password) கொடுக்கவும்.
பின்னர் இது போல் உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும்.
அதில் இடது பக்கம் +Add to Subscribtion என்ற பொத்தான் இருக்கும் அதை அழுத்தினால் அதன் கீழே ஒரு பெட்டி தோன்றும்.
அந்த பெட்டியில் உங்களுக்கு பிடித்த வலைத்தளத்தின் பெயரை கொடுக்கவும். பிறகு Add என்ற பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் நீங்கள் கொடுத்த வலைத்தளத்தில் உள்ள பதிவுகள் வலது பக்கம் தோன்றியிருக்கும்.
இந்த கூகிள் ரீடரில் நிறைய வசதிகள் உண்டு. உங்களுக்கு பிடித்த பதிவுகளை உங்களுக்கு நண்பர்களுக்கு தெரிவிக்கலாம். பகிர்ந்து கொள்ளலாம்.
காஸ்பர்ஸ்கை ஆன்டி வைரஸ் Uninstall செய்தாலும் சில நேரம் சரியாக நீக்க முடியாது. இதை கருத்தில் கொண்டு அந்த நிறுவனமே காஸ்பர்ஸகை நீக்க மென்பொருள் கொடுத்துள்ளனர். தரவிறக்க சுட்டி
மின் புத்தகங்களை தேட புதிய ஒரு தேடு பொறி இதன் பெயர் இபுக்ட்யுபர்
நண்பர்களே புதியதாக கணிணி கற்க வருபவர்களுக்கு அவ்வளவு எளிதில் சில கட்டளைகள் தெரியாது. அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த மென்பொருள் மூலம் 70 வகையான கட்டளைகளை மவுஸ் மூலம் கட்டளையிட முடியும். உதராணத்திற்கு உங்கள் சிடியை திறக்க Eject எஜக்ட் பட்டன் மூலம் திறக்கலாம் அதற்கு சிடியில் வலது கிளிக் செய்து Eject தேர்வு செய்வீர்கள். இதையே ஒரு கிளிக் மூலம் தேர்வு சிடியைத் திறக்கவும் / மூடவும் முடியும்.
இது போல நிறைய வேலைகளை இந்த மென்பொருள் மூலம் செய்யலாம்.
இந்த மென்பொருள் மூலம் நேரடியாக டாஸ்க் மேனஜர் திறந்து வேலை செய்யாத ப்ரோக்ராம்களை மூடலாம்.
மெமரி கீளின் செய்யலாம்.
உங்கள் சிபியு மெமரி செயல்பாட்டினை தெரிந்து கொள்ளலாம்.
உங்களிடம் உள்ள புகைப்பட கோப்புகளை .png, .jpg, .tif போன்ற கோப்புகளாக மாற்றிக் கொள்ளலாம்.
எந்த ஒரு அப்ளிகேசனில் இருந்தும் ஐகானை தனியாக பிரித்தெடுக்கலாம்.
யூஎஸ்பி பாதுகாப்பாக நிறுத்த இதுபோல் சொல்லிகொண்டே போகலாம். உபயோகித்து பாருங்கள் நீங்களே சொல்வீர்கள்.