நண்பர்களே தொடர்ந்து வேலைகள் அதிகரித்து வருவதால் முன்னெப்போதும் போல் தொடர்ந்து எழுத முடியவில்லை என்னை மன்னித்து உங்கள் ஆதரவை எப்போழுதும் தர வேண்டுகிறேன்.
ஹுலு என்ற இணையத்தளத்தை தெரியாதவர்கள் இணையத்தில் இருக்கவே முடியாது. தெரியாதவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம். இந்த தளத்தில் யூட்யூப் போன்றே நிறைய வீடியோக்கள் உள்ளது. அது மட்டுமில்லை டிவியில் ஒளிபரப்பாகும் ஆங்கில சீரியல்கள் முழு திரைப்படங்கள் அனைத்தும் உயர்தரத்தில் உள்ளது.
இந்த தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க இந்த மென்பொருள் உபயோகமாக இருக்கும். இதன் மென்பொருள் பெயர் ஹுலு வீடியோ டவுண்லோடர்
இந்த மென்பொருள் மூலம் தரவிறக்கும் வீடியோக்களை எம்பெக் 2, ஏவிஐ (MPEG 2) AVI) போன்ற கோப்புகளாக மாற்றி தரக்கூடிய வல்லமையுடையது
ஓலிகளை தேட
உங்கள் பவர்பாயிண்ட் பிரசன்டேசன்களில் பின்புல இசை கொடுக்க நீங்கள் புதிய இசையை தேடுபவரா நீங்கள் இங்கே செல்லுங்கள். இந்த தளத்தில் எந்தவித இசையாக இருந்தாலும் சரி ஒலியாக இருந்தாலும் சரி இங்கு கட்டாயம் கிடைக்கும். எந்தவித ஒலிக்கள் இங்கு உள்ளன என்பதை இவர்கள் இங்கு வரிசைப்படுத்திருக்கிறார்கள் சுட்டி
இணையத்தள சுட்டி
பவர் பாயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்ற
நீங்கள் வைத்திருக்கும் பவர் பாயிண்ட் கோப்புகளை வீடியோவாக மாற்றி யூட்யுபில் வெளியிட ஆசையா உங்களுக்கு இந்த மென்பொருள் உதவும். இந்த மென்பொருள் உங்களிடம் உள்ள பவர் பாயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்றி தரும். பிறகு நேரடியாக யூட்யுப் தளத்திற்கு சென்று உங்கள் கணக்கினுள் நுழைந்து நீங்கள் மாற்றி வைத்திருக்கும் வீடியோ கோப்பை பதிவேற்றுங்கள் முடிந்தது. இனி உங்கள் பவர் பாயிண்ட் கோப்புகளை வீடியோவாக யூட்யூபில் பார்க்கலாம். மென்பொருள் தரவிறக்க சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்.
» Read More...