நண்பர்களே இது நேற்றே எழுதி வைத்தது இன்றுதான் வெளியிடு்கிறேன். இன்று திருமணநாளை முன்னிட்டு தங்கமணியை வெளியில் கூட்டி செல்லாவிடில் எனக்கு சாப்பாடுக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான். சரி விஷயத்திற்கு வருவோம் கூகிள் ஜிமெயில் கணக்கு இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஏன் என்றால் கூகிள் ஜிமெயிலில் எத்தனையோ வசதிகள் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கூகிளின் ஜிமெயில் முன் யாகூ மெயில் , மைக்ரோசாப்டின் ஹாட்மெயில் ஆகிய இரண்டும் இரண்டாமிடத்தை பிடிக்கிறது. கூகிளின் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பார்கள் சிலர் இரண்டு மூன்று ஏன் ஐந்து கூட வைத்திருப்பார்கள். அவர்களுக்கான பதிவுதான் இது
ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு அஞ்சல் வந்திருக்கிறதா என்று ஒவ்வொரு முறையும் திறந்து பார்த்து சோதனை செய்ய வேண்டாம். அதற்காகவே மூன்று வெவ்வேறு மென்பொருட்கள் உள்ளது அதன் வரிசைகள் கீழே கொடுத்துள்ளேன்.
1. ஜிமெயில் Notifier
இது கூகிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இது மட்டுமே மிகவும் தரமானது என்று கூறப்படுகிறது. ஆனால் இதன் மூலம் ஒரு கணக்கினை மட்டுமே பயன்படுத்த இயலும். இந்த மென்பொருள் வழியாக நீங்கள் ஜிமெயில் Login செய்தவுடன் சிறிய ஐகானாக டாஸ்க்பார் ட்ரேவில் அமர்ந்து கொள்ளும் ஏதாவது அஞ்சல் வந்தால் உங்களுக்கு பாப் - அப் செய்து தெரிவிக்கும்.
2.
நெருப்பு நரி உலாவியில் ஜிமெயில் Notifier
நெருப்பு நரியில் உலாவில் இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது அஞ்சல் வந்தால் தெரிவிக்கும் இதன் மூலம் ஒரு கணக்கினை மட்டுமே பயன்படுத்த இயலும்.
3.
ஜிமெயில் Notifier 5
இந்த மென்பொருள் மூலம் ஒரே நேரத்தில் ஐந்து கணக்கினை கையாளலாம்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே எத்தனை ஞாபகங்கள் இருந்தாலும் முக்கிய வேலைகளை ஞாபகம் வைத்துக் கொள்ள நாம் திணறிக் கொண்டிருக்கு வேலையில் Remainder என்ற ஒரு கருவி வந்து நாம் வேலைகளை நினைவில் வைத்துக் கொண்டு நமக்கு திரும்ப நினைவூட்ட உதவியது. ஆனால் இந்த Remainder என்ற ஒன்று செல்பேசி வந்தவுடன்தான் அது கூடவே வந்தது என்றதாக நினைவு (தவறாக இருந்தால் பின்னூட்டம் இடவும்). இப்பொழுது இருக்கும் அனைவரும் வீட்டினுள் கணணி வெளியில் சென்றால் செல்பேசி இல்லாமல் இருப்பதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த இரண்டு ஊடகம் வழியாக நமக்கு நினைவூட்ட ஒரு தளம் இருந்தால் எப்படி இருக்குமோ என்று நினைப்பவர்களுக்காக இந்த் தளம் செயல்படுகிறது.
Superminder பெயரைப் போலவே சூப்பராக செயல்படுகிறது. இந்த தளத்தில் உங்களுக்கென்று ஒரு கணக்கை உருவாக்கிய பின் செட்டிங்க்ஸ் சென்று உங்கள் மெயில் முகவரி கொடுத்து Veryfied செய்து கொள்ளுங்கள். அது போலவே உங்கள் செல்பேசி எண்ணுடன் உங்கள் நாட்டின் கோடை கொடுத்து (உதராணம் நீங்கள் இந்தியாவில் இருந்தால் +919123456789 இதில் +91 என்பது இந்தியாவிற்கான தொலைபேசி கோடு.) உங்கள் கணக்கை Veryfied செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுக்குத் தேவையான நினைவூட்டலை புதியதாக எழுதிவிட்டு எந்த நேரத்துக்கு நினைவூட்ட வேண்டும் என்றும் மின்னஞ்சல் அல்லது செல்பேசி எதன் வழியாக நினைவூட்ட வேண்டும் என்று தேர்வு செய்து சேவ் செய்து வெளியேறுங்கள். நீங்கள் செட் செய்த நேரத்திற்கு உங்கள் செல்பேசி அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு டெலிவரி செய்து நினைவூட்டி விடும்.
இத்தளத்தின்
சுட்டி
விண்டோஸ் 7 சூப்பர் வால்பேப்பர்கள் உங்களுக்காக
சுட்டி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. அவர் பெயரில் அவருடைய ரசிகர்கள் ரத்ததானம் செய்கிறார்கள். இது ஒன்றும் புதிதில்லை என்று சொல்லலாம். இந்த் விஷயத்தில் புதியது என்னவென்றால் அதற்கென்று தனி வலைத்தளம் உருவாக்கி அதில் உங்களுக்கு எங்கு ரத்தம் தேவையோ அந்த ஊரில் உள்ள ரத்ததானம் செய்யும் நபரின் பெயர், விலாசம், மெயில் முகவரி, செல்பேசி எண் இவை அனைத்தையும் சேகரித்து Database உருவாக்கி வைத்தள்ளனர். ரத்ததானம் வலைத்தளம் மூலம் ரஜினி மட்டும் சூப்பர்ஸ்டார் அல்ல ரஜினியின் ரசிகர்களும் சூப்பர்ஸ்டார்களாக மாறிவிட்டார்கள். வலைத்தள
சுட்டி
நாளை எனக்கு ஐந்தாவது திருமண நாள் (17-06-2009) உங்கள் வாழ்த்துக்கள் மற்றும் பெரியவர்கள் ஆசிர்வாதங்கள் மட்டுமே எங்களை நலமுடன் இணைந்து வாழவைக்கும். வாழ்த்துங்கள் வளர்கிறோம்.
உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் ஒட்டை தமிலிசில் குத்துங்கள். விளம்பரங்களை கிளிக் செய்யுங்கள்
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே இரண்டு நாட்கள் எழுத முடியவில்லை என்னுடைய படைப்பு திருடப்பட்டதால் வந்த கோபம் இரண்டுமணி நேரத்தில் அந்த பாதிப்பு அடங்கி விட்டாலும். சரி விடு இவர்களெல்லாம் திருந்த போவதில்லை நாம் என்ன சொன்னாலும்.
அப்பொழுது இருந்த கோபத்தில் பிளாக்கன் அவர்களிடம் என் கோபதை வெளிபடுத்திருந்தேன். அவர் ஒரு பதிவாக எழுதிவிட்டார். சுட சுட கிழிந்ததென்ன தெரிஞ்சுக்கோ பிளாக்கன்னுக்கு நன்றி எங்கள் கஷ்டங்களை புரிந்து கொண்டு ஒருபதிவாக எழுதியமைக்கு நன்றி மற்றும் எனக்கு தமிழ்நெஞ்சம், சுபாங்கன், முத்துக்குமார் சிங்கப்பூர், சுரேஷ், சக்திவேல், யூர்கன் க்ருகியர், ரெபெல், சாய்தாசன், சுபாஷ், சித்து மற்றும் மெயில் மூலம் ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி.
இன்றைய பதிவிற்கு போகலாம். தினமும் வெயில் ஏறுகிறது இறங்குகிறது இருந்தாலும் நாம் அனைவரும் வெயிலில் சென்று வந்தவுடன் அடடா என்ன வெயில் வெயில் என்று மனம் அங்கலாய்க்கும். அப்படி செல்லும் முன் நம்மால் எவ்வளவு வெயில் இருக்கும் இன்று மேகம் மூட்டம் இருக்குமா என்று பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்.
இந்த மென்பொருள் மூலம் அதை செய்யலாம். அதற்குதான் எத்தனையோ மென்பொருட்கள் உள்ளதே அது மட்டும் இன்றுள்ள இணையத்தில் இதை சுலபமாக பார்க்கலாம் என்று கூறுவது எனக்கு கேட்கிறது. எத்தனை இருந்தாலும் இந்த மென்பொருளில் உங்கள் தலைக்கு மேலே உள்ள வானத்தை நேரடியாக பார்க்கலம். மேகங்கள் இப்பொழுது எப்படி உள்ளது என்று பார்க்கலாம். இந்த மென்பொருளுக்கான
சுட்டி
குறிப்பு: நண்பர்களே எங்களுடைய பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் தமிழிலிசில் ஒட்டு போடுங்கள் விளம்பரங்களை கிளிக் செய்யுங்கள் உங்கள் ப்ளாக்கில் போட வேண்டுமென்றால் எங்களை அணுகுங்கள். ஒரு நன்றி அறிவிப்பு கீழே போடுங்கள் எங்கள் தளத்தின் முகவரியை சேர்த்து போடுங்கள்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே நீங்கள் திருடுவது எங்கள் உழைப்பை மட்டுமல்ல எங்களுக்கு வரும் விசிட்டர்கள், பின்னூட்டங்கள் அனைத்தையும். ஏன் இந்த தவறான புத்தி உங்களுக்கு இந்த தவறினால் எத்தனை பேர் மனது கவலைப்படுகிறது.
இதனால் நிறைய முகம் தெரியாத பிளாக்கர்கள் ஆளுக்கு ஒரு பிளாக்கை திறந்து நாங்கள் கஷ்டப்பட்டு இணையத்தில் ரெபரன்ஸ் தேடி கட்டுரைகள் வலையில் அதை பதிவு செய்கிறோம். அந்த வலைப்பதிவு வரும் பின்னூட்டங்கள் மட்டுமே எங்களுக்கு உற்சாக டானிக். அந்த உற்சாக டானிக் கிடைப்பதை தடை செய்கிறீர்கள்.
அது மட்டும் இல்லை உங்களுக்கு எங்களுடைய பதிவு பிடித்துள்ளது. அதை உங்கள் பதிவில் இடம்பெற வேண்டும் ஆசை என்றால் எங்களுக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். ஒரு சில எளிய நிபந்தனைகளோடு. அது ஏற்கப்பட்டால் உடனே நாங்கள் அனுமதி தருகிறோம். அப்ப்டி ஏற்காமல் நீங்களாகவே எங்கள் பதிவை காப்பி பேஸ்ட் செய்தால் மிக பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
திருடுபவர்கள் இனி திருந்தனும் இல்லை என்றால் திருத்தப்படுவார்கள் முதலில் இதை
பிளாக்கன் என்பவரிடம் ஒப்படைக்கப் போகிறேன். அவர் பார்த்துக் கொள்வார்.
இது போல என் பதிவையும் ஒருவர் திருடியிருக்கிறார் அவராகவே வந்து மன்னிப்பு கேட்கவேண்டும். அந்த திருடிய பதிவின் சுட்டி அத்துடன் என் சுட்டியும் கூட கொடுத்துள்ளேன்.
திருடியவருடையது
http://therinjikko.blogspot.com/2009/06/blog-post_11.html
என்னுடையது
http://gouthaminfotech.blogspot.com/2009/06/blog-post_05.html
திருடாதே திருடாதே பதிவுகளை திருடாதே
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...