வானம் பார்க்கலாம் வாங்க

நண்பர்களே இரண்டு நாட்கள் எழுத முடியவில்லை என்னுடைய படைப்பு திருடப்பட்டதால் வந்த கோபம் இரண்டுமணி நேரத்தில் அந்த பாதிப்பு அடங்கி விட்டாலும்.  சரி விடு இவர்களெல்லாம் திருந்த போவதில்லை நாம் என்ன சொன்னாலும்.

அப்பொழுது இருந்த கோபத்தில் பிளாக்கன் அவர்களிடம் என் கோபதை வெளிபடுத்திருந்தேன். அவர் ஒரு பதிவாக எழுதிவிட்டார். சுட சுட கிழிந்ததென்ன தெரிஞ்சுக்கோ பிளாக்கன்னுக்கு நன்றி எங்கள் கஷ்டங்களை புரிந்து கொண்டு ஒருபதிவாக எழுதியமைக்கு நன்றி மற்றும் எனக்கு தமிழ்நெஞ்சம், சுபாங்கன், முத்துக்குமார் சிங்கப்பூர், சுரேஷ், சக்திவேல், யூர்கன் க்ருகியர், ரெபெல், சாய்தாசன், சுபாஷ், சித்து மற்றும் மெயில் மூலம் ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி. 

இன்றைய பதிவிற்கு போகலாம்.  தினமும் வெயில் ஏறுகிறது இறங்குகிறது இருந்தாலும் நாம் அனைவரும் வெயிலில் சென்று வந்தவுடன் அடடா என்ன வெயில் வெயில் என்று மனம் அங்கலாய்க்கும்.  அப்படி செல்லும் முன் நம்மால் எவ்வளவு வெயில் இருக்கும் இன்று மேகம் மூட்டம் இருக்குமா என்று பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்.




இந்த மென்பொருள் மூலம் அதை செய்யலாம்.  அதற்குதான் எத்தனையோ மென்பொருட்கள் உள்ளதே அது மட்டும் இன்றுள்ள இணையத்தில் இதை சுலபமாக பார்க்கலாம் என்று கூறுவது எனக்கு கேட்கிறது. எத்தனை இருந்தாலும் இந்த மென்பொருளில் உங்கள் தலைக்கு மேலே உள்ள வானத்தை நேரடியாக பார்க்கலம்.  மேகங்கள் இப்பொழுது எப்படி உள்ளது என்று பார்க்கலாம். இந்த மென்பொருளுக்கான சுட்டி
குறிப்பு: நண்பர்களே எங்களுடைய பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் தமிழிலிசில் ஒட்டு போடுங்கள் விளம்பரங்களை கிளிக் செய்யுங்கள் உங்கள் ப்ளாக்கில் போட வேண்டுமென்றால் எங்களை அணுகுங்கள். ஒரு நன்றி அறிவிப்பு கீழே போடுங்கள் எங்கள் தளத்தின் முகவரியை சேர்த்து போடுங்கள்.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

பதிவுகள் திருடுபவர்களின் கவனத்திற்கு

நண்பர்களே நீங்கள் திருடுவது எங்கள் உழைப்பை மட்டுமல்ல எங்களுக்கு வரும் விசிட்டர்கள், பின்னூட்டங்கள் அனைத்தையும்.  ஏன் இந்த தவறான புத்தி உங்களுக்கு இந்த தவறினால் எத்தனை பேர் மனது கவலைப்படுகிறது.

இதனால் நிறைய முகம் தெரியாத பிளாக்கர்கள் ஆளுக்கு ஒரு பிளாக்கை திறந்து நாங்கள் கஷ்டப்பட்டு இணையத்தில் ரெபரன்ஸ் தேடி கட்டுரைகள் வலையில் அதை பதிவு செய்கிறோம்.  அந்த வலைப்பதிவு வரும் பின்னூட்டங்கள் மட்டுமே எங்களுக்கு உற்சாக டானிக். அந்த உற்சாக டானிக் கிடைப்பதை தடை செய்கிறீர்கள்.





அது மட்டும் இல்லை உங்களுக்கு எங்களுடைய பதிவு பிடித்துள்ளது. அதை உங்கள் பதிவில் இடம்பெற வேண்டும் ஆசை என்றால் எங்களுக்கு ஒரு மெயில் அனுப்புங்கள்.  ஒரு சில எளிய நிபந்தனைகளோடு.  அது ஏற்கப்பட்டால் உடனே நாங்கள் அனுமதி தருகிறோம். அப்ப்டி ஏற்காமல் நீங்களாகவே எங்கள் பதிவை காப்பி பேஸ்ட் செய்தால் மிக பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

திருடுபவர்கள் இனி திருந்தனும் இல்லை என்றால் திருத்தப்படுவார்கள் முதலில் இதை பிளாக்கன் என்பவரிடம் ஒப்படைக்கப் போகிறேன். அவர் பார்த்துக் கொள்வார். 

இது போல என் பதிவையும்  ஒருவர் திருடியிருக்கிறார் அவராகவே வந்து மன்னிப்பு கேட்கவேண்டும். அந்த திருடிய பதிவின் சுட்டி அத்துடன் என் சுட்டியும் கூட கொடுத்துள்ளேன்.

திருடியவருடையது http://therinjikko.blogspot.com/2009/06/blog-post_11.html

என்னுடையது   http://gouthaminfotech.blogspot.com/2009/06/blog-post_05.html


திருடாதே திருடாதே பதிவுகளை திருடாதே




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

லிபெர்கீ என்ற திறந்த நிலை மென்பொருள்

நண்பர்களே இரண்டு நாள் அலுவலக பயணமாக  சேலம் சென்றிருந்ததால் பதிவுகள் எழுத இயலவில்லை மன்னிக்கவும்.   போர்ட்டபிள் மென்பொருட்கள் பற்றி அனைவருக்கும் தெரியும்.  நமக்கு எந்த மென்பொருட்கள் வேண்டும் அந்த அனைத்தையும் அனைத்தும் ஒரு  யுஎஸ்பி டிரைவில் நிறுவிக் கொண்டு எந்த ஒரு கணணியில் வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம் என்பதே இதன் தனிச்சிறப்பு.  இதனால் எந்த ஒரு கணணியில் நமக்கு வேண்டிய மென்பொருள் இல்லை என்ற அங்கலாய்ப்பு இருக்காது.  இதனால் பிரவுஸிங் சென்டர், நண்பர்கள் வீடு, சொந்தகாரார்கள் வீடு, பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகம் போன்றவற்றில் உபயோகபடுத்திக் கொள்ளலாம். 
இந்த போர்ட்டபிள் மென்பொருட்கள் அனைத்தையும் இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். சுட்டி.  இது எல்லாம் தனித் தனி மென்பொருட்களாக இருக்கிறது.

இதுவே ஒரே மென்பொருளில் அனைத்தும் இருந்தால் எப்படி இருக்கும் அதுதான் லிபேர்கீ என்ற மென்பொருள்.


இந்த மென்பொருளை மூன்று வகையாக பிரித்து உள்ளார்கள்

1. பேஸிக்
2.  ஸ்டாண்டார்டு
3.  அல்டிமேட்

பேஸிக் வகையில் இத்தனை மென்பொருட்கள்


ஸ்டாண்டார்ட் வகையில் இத்தனை மென்பொருட்கள்



அல்டிமேட்  வகையில் இத்தனை மென்பொருட்கள்




இந்த மென்பொருட்களை தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் திறமை படைத்தவை

இந்த மென்பொருட்களை தரவிறக்க சுட்டிகள் கீழே

பேஸிக்

ஸ்டாண்டார்டு

அல்டிமேட்



குறிப்பு :  அனைத்து புகைப்படங்களையும் கிளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கவும்


படிக்கும் அனைவரும் விளம்பரங்களை கிளிக் செய்யவும்,  அப்படியே தமிலிஸில் ஒட்டளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஜிமெயில் காலை வாரினால் கூட ஜிமெயிலை சுலபமாக படிக்கலாம்

நண்பர்களே நம்முடைய கூகிள் ஜிமெயில் ஒரு இலவச சேவை என்பது எல்லோருக்கும் தெரியும்.  திடீரென்று இந்த இலவச சேவையை  நிறுத்த கூகிளுக்கு முழு அதிகாரம் உண்டு!!!!!  (நிறுத்தமாட்டார்கள் என்று நம்புவோம்.)  அப்படி நிறுத்திவிட்டால் நாம் ஜிமெயில் வழியாக அனுப்பிய மெயில் அதன்வழியாக நமக்கு வந்த மெயில் அட்டாச்மென்டுகள் கோப்புகள் இவைகள் அனைத்தும் போய் விடும்.  இதுமட்டுமா சில நேரங்களில் ஜிமெயில் சர்வர் படுத்து விடும் அப்பொழுதும் இந்த தரவிறக்கி வைத்த மெயில்கள் கைகொடுக்கும் உங்களுக்கு.  இது போல் ஒன்று நடந்தால் நிறைய பேர் தலை வெடித்துவிடும். அதுமட்டுமல்லா உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்கள் விழி பிதுங்கிவிடும்  அதனால் இது நடக்ககூடாது என்று கூகிள் ஆண்டவரை பிரார்த்திப்போம்.  அப்படி நடக்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லது.  எப்பொழுதும் வரும்முன் காப்போம் நடவடிக்கை நல்லது.  இந்த மென்பொருள் மூலம் ஜிமெயில் கணக்கில் உள்ள அஞ்சல்களை (அட்டாச்மென்ட் கோப்பு) உட்பட தரவிறக்கி கொடுத்து விடும்.   அதுவும் சாதாராண அவுட்லுக் கோப்புகள் வடிவத்தில். அதுவும் முற்றிலும் இலவசமாக


gmail-backup%5B5%5D.png


முதலில் இந்த மென்பொருளை இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.  சுட்டி

பின்னர் இந்த மென்பொருளை சாதாரண மென்பொருள் நிறுவிக் கொள்ளுங்கள்

பிறகு நிறுவிய மென்பொருளை இயக்குங்கள்.

அதில் Gmail Login என்ற இடத்தில் உங்கள் ஜிமெயில் மெயில் முகவரி கொடுக்கவும்

அதற்கு கீழே Gmail Password என்ற இடத்தில் உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்டை கொடுக்கவும்.

அதற்கு கீழே நீங்கள் உங்களுடைய அஞ்சல்களை எங்கு சேமிக்க விரும்புகிறீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்யுங்கள்.

அதன் கீழே எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை வேண்டுமென்று தேர்வு செய்து கொண்டு Backup என்பதனை கிளிக் செய்யுங்கள்.

தானாகவே நீங்கள் தேர்வு செய்த போல்டரில் உங்களுடைய அஞ்சல்கள் தரவிறக்கமாகும்.

உங்கள் இணைய இணைப்பை பொறுத்து அஞ்சல் தரவிறக்கும் வேகம் மாறுபடும்.

சில நேரங்கள் உங்கள் இணைய இணைப்பு விட்டு போனால் பரவாயில்லை இணைய இணைப்பு வந்தவுடன் திரும்பவும் Backup கிளிக் செய்டால் விட்ட இடத்தில் இருந்து தொடரும்.

இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் அதுமட்டுமில்லை மாதம் ஒருமுறை இந்த பொருள் இலவசமாக அப்டேட் செய்யப்படுகிறது.


நண்பர்களே உங்கள் ஒட்டுக்களை தமிலிசில் ஒட்டு போடுங்கள்.  அத்துடன் விளம்பரங்களி கிளிக் செய்யுங்கள்.  பின்னூட்டம் இடுங்கள். 


நன்றி மீண்டும் வருகிறேன்


» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை