நண்பர்களே நம்முடைய கூகிள் ஜிமெயில் ஒரு இலவச சேவை என்பது எல்லோருக்கும் தெரியும். திடீரென்று இந்த இலவச சேவையை நிறுத்த கூகிளுக்கு முழு அதிகாரம் உண்டு!!!!! (நிறுத்தமாட்டார்கள் என்று நம்புவோம்.) அப்படி நிறுத்திவிட்டால் நாம் ஜிமெயில் வழியாக அனுப்பிய மெயில் அதன்வழியாக நமக்கு வந்த மெயில் அட்டாச்மென்டுகள் கோப்புகள் இவைகள் அனைத்தும் போய் விடும். இதுமட்டுமா சில நேரங்களில் ஜிமெயில் சர்வர் படுத்து விடும் அப்பொழுதும் இந்த தரவிறக்கி வைத்த மெயில்கள் கைகொடுக்கும் உங்களுக்கு. இது போல் ஒன்று நடந்தால் நிறைய பேர் தலை வெடித்துவிடும். அதுமட்டுமல்லா உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்கள் விழி பிதுங்கிவிடும் அதனால் இது நடக்ககூடாது என்று கூகிள் ஆண்டவரை பிரார்த்திப்போம். அப்படி நடக்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லது. எப்பொழுதும் வரும்முன் காப்போம் நடவடிக்கை நல்லது. இந்த மென்பொருள் மூலம் ஜிமெயில் கணக்கில் உள்ள அஞ்சல்களை (அட்டாச்மென்ட் கோப்பு) உட்பட தரவிறக்கி கொடுத்து விடும். அதுவும் சாதாராண அவுட்லுக் கோப்புகள் வடிவத்தில். அதுவும் முற்றிலும் இலவசமாக
முதலில் இந்த மென்பொருளை இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள். சுட்டி
பின்னர் இந்த மென்பொருளை சாதாரண மென்பொருள் நிறுவிக் கொள்ளுங்கள்
பிறகு நிறுவிய மென்பொருளை இயக்குங்கள்.
அதில் Gmail Login என்ற இடத்தில் உங்கள் ஜிமெயில் மெயில் முகவரி கொடுக்கவும்
அதற்கு கீழே Gmail Password என்ற இடத்தில் உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்டை கொடுக்கவும்.
அதற்கு கீழே நீங்கள் உங்களுடைய அஞ்சல்களை எங்கு சேமிக்க விரும்புகிறீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்யுங்கள்.
அதன் கீழே எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை வேண்டுமென்று தேர்வு செய்து கொண்டு Backup என்பதனை கிளிக் செய்யுங்கள்.
தானாகவே நீங்கள் தேர்வு செய்த போல்டரில் உங்களுடைய அஞ்சல்கள் தரவிறக்கமாகும்.
உங்கள் இணைய இணைப்பை பொறுத்து அஞ்சல் தரவிறக்கும் வேகம் மாறுபடும்.
சில நேரங்கள் உங்கள் இணைய இணைப்பு விட்டு போனால் பரவாயில்லை இணைய இணைப்பு வந்தவுடன் திரும்பவும் Backup கிளிக் செய்டால் விட்ட இடத்தில் இருந்து தொடரும்.
இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் அதுமட்டுமில்லை மாதம் ஒருமுறை இந்த பொருள் இலவசமாக அப்டேட் செய்யப்படுகிறது.
நண்பர்களே உங்கள் ஒட்டுக்களை தமிலிசில் ஒட்டு போடுங்கள். அத்துடன் விளம்பரங்களி கிளிக் செய்யுங்கள். பின்னூட்டம் இடுங்கள்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...