சென்னை சங்கமத்துக்கு போட்டியாக மென்பொருட்களின் சங்கமம்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே இரண்டு தினங்களுக்கு முன்தான் நெருப்பு நரி உலாவி 3.6 பதிப்பு வெளியிடப்பட்டது அதன் போர்ட்டபிள் பதிப்பை தரவிறக்க இங்கே செல்லுங்கள் தரவிறக்க சுட்டி


நாம் நமது கணிணியில் ஒரு கோப்பை அழித்தால் குப்பைக்கூடையில் அது போய் குடியிருக்கும்.  அதே ( Shift + Delete ) ஷிப்ட் டெலிட் செய்தால் குப்பைக் கூடையில் இருக்காது.  ஆனால் ரெகவரி மென்பொருள் கொண்டு மீட்டெடுக்க முடியும். அது போல் ரெகவரி மென்பொருள் கொண்டு மீட்டெடுக்க முடியாமல் அழிக்க இந்த சிறு மென்பொருள் மிகவும் உபயோகமக இருக்கும்.  சுட்டி  இந்த மென்பொருளை நிறுவ தேவையில்ல்லை நேரடியாக இயக்கலாம்.


நோக்கியா செல்பேசி நிறுவனத்தினர் ஒவிஐ மேப்ஸ் என்ற மென்பொருளை இலவசமாக தருகின்றனர்.  இந்த மென்பொருள் மூலம் அனைத்து இடங்களுக்கும் துல்லியமாக சென்றடைய ஏதுவாகிறது.  இதை உங்கள் செல்பேசியில் உபயோகப்படுத்தலாம்.  ஆனால் இது அவர்களின் செல்பேசிகளான (Nokia X6, Nokia N97 mini, E72, E55, E52, Nokia 6730 classic, Nokia 6710 Navigator, Nokia 5800 Xpressmusic, Nokia 5800 Navigation Edition, Nokia 5230.)  இந்த மாடல்களுக்கு மட்டுமே இலவசம். தரவிறக்க சுட்டி


பத்து மென்பொருட்கள் திறந்து வைத்துக் கொண்டு முக்கியாமான ஒரு வேலை கணிணிகளில் வேலை செய்து கொண்டிருக்கும் போது என்னவென்று தெரியாமல் கணிணி ரீஸ்டார்ட் ஆகிவிடும் அப்பொழுது நாம் எந்த மென்பொருளை உபயோகப்படுத்தினோம் என்று நமக்கு வருகின்ற கோபத்தில் கணிணியை தூக்கி போட்டு உடைத்து விடலாம் என்று தோன்றும்.  அது எந்த குறிப்பட்ட மென்பொருட்கள் என்று தெரிந்து கொள்ள அல்லது ரீஸ்டார்ட் ஆனவுடன் தானாகவே அந்த மென்பொருட்கள் இயங்க இந்த மென்பொருள் உபயோகப்படுகிறது சுட்டி







இப்பொழுது உள்ள சமுதாய தளங்களில் பேஸ் புக் முதன்மையானதாக உள்ளது.  அதில் நிறைய புகைப்படங்கள் பரிமாறப்படுகிறது.  அவ்வாறு பரிமாறப்படும் புகைப்படங்களை தரவிறக்குவது அதற்கு உதவுகிறது பேஸ்புக் ஜேபிஜி பைன்டர் என்ற மென்பொருள் உள்ளது. தரவிறக்க சுட்டி

இதுவரை கூகிள் டாக்ஸில் எக்ஸல், வேர்ட், பிடிஎப், பவர்பாய்ண்ட் கோப்புகள் மட்டுமே தரவேற்ற முடியும். இப்பொழுது உங்கள் கோப்புகள் எதுவாக இருந்தாலும் இப்பொழுது கூகிள் டாக்ஸில் தரவேற்றலாம். 25 எம்பி வரை தரவேற்றலாம். அது ஒரு மென்பொருளாக கூட இருக்கலாம்.

அதே நேரத்தில் உங்கள் கோப்புகள் இரண்டு ஜிபி வரை இருந்தால் இந்த வலைத்தளத்தை நாடலாம்.  இந்த வலைத்தளத்தில் இரண்டு ஜிபி வரை தரவேற்றலாம்.  ரெஜிஸ்ட்ரேசன் தேவையில்லை.  இரண்டு வாரம் வரை உங்கள் கோப்புகள் பாதுகாக்கப்படும்.  உங்களுடைய கோப்புகள் மற்றும் இமெயில் முகவரி பாதுகாக்கப்படும்.   ஒரே நேரத்தில் 20 பேர் வரையில் பெறும் வகையில் அனுப்ப முடியும்.  தள முகவரி சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

3 ஊக்கப்படுத்தியவர்கள்:

கிரி said...

வேலன் தகவலுக்கு நன்றி

கூகிள் Docs ல் ஏற்றப்படும் தகவல்கள் நம்முடைய மின்னஞ்சல் Picasa கணக்கு 1 GB யில் வருமா! அல்லது இது வேறா!

கிரி said...

வேலன் தற்போது அதில் சென்று பார்த்தேன், இதற்கும் கூகிள் மின்னஞ்சல் கணக்கின் இருப்பிற்கும் சம்பந்தம் இல்லை.

இது உண்மையில் மிகவும் சிறப்பான சேவை. நமக்கு தேவையான தகவல்கள் அனைத்தையும் எங்கு இருந்து வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளலாம்.

// 25 எம்பி வரை தரவேற்றலாம்.//

25 MB அல்ல 250 MB

ஜோதிஜி said...

தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டுருக்கும் உங்கள் வாசகன் தெரிவிக்கும் வாழ்த்துகள்.

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

gouthaminfotech.blogspot.co..
44/100
Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை