Direct to Home Satellite Television என்பதுதான் DTH சேவை என்று அழகாக ஆங்கில எழுத்துகளில் சுருக்கப்பட்டுள்ளது. தமிழில் இதனை ‘நேரடி துணைக்கோள் வழித் தொலைக்காட்சி’ என்று சொல்லவேண்டும்.
இதற்கு முந்தைய கேபிள் (வடம்) வழித் தொலைக்காட்சிச் சேவையில், நமக்கு சேவை வழங்குபவர், பெரிய குவி ஆண்டெனாக்கள்மூலம் சிக்னல்களைப் பெற்று, பல சானல்களை சேர்த்து, கேபிள்மூலம் நம் வீடுகளுக்கு அனுப்பினார். நேரடி துணைக்கோள் சேவையில் நம் வீட்டிலேயே சிறிய குவி ஆண்டெனா இருக்கும். இதன் விட்டம் ஒரு மீட்டருக்குக் குறைவானதாகவே இருக்கும்.
இந்தச் சேவையை வழங்கும் நிறுவனம் ஓர் இணைச்சுற்று செயற்கைக்கோள் (Geo-stationary Satellite) வழியாக சிக்னல்களை அனுப்பும். இந்த சிக்னல்களை நம் வீட்டில் உள்ள சிறிய ஆண்டெனா பெற்று, தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைக்கப்பட்டுள்ள செட்-டாப் பாக்ஸ் என்று சொல்லப்படும் கருவிக்கு அனுப்பும்.
இந்த செட்-டாப் பாக்ஸ் கருவி, சிக்னல்களைப் பிய்த்து எடுத்து, என்கிரிப்ட் செய்து வருபவற்றை (அதற்கான அனுமதி இருந்தால்) டி-கிரிப்ட் செய்து, நசுக்கி அனுப்பப்படும் சிக்னல்களை விரிவாக்கி (Mpeg uncompression), தொலைக்காட்சிப் பெட்டிக்கு அனுப்பும்.
இந்த நேரடித் துணைக்கோள் சேவையில் பல வசதி வாய்ப்புகள் விரைவில் கிடைக்கும். (இவற்றில் பல, பிற நாடுகளில் ஏற்கெனவே கிடைக்ககூடியவைதான்.)
1. நேரடித் துணைக்கோள் சேவை வழியாக பிராட்பேண்ட் இணைய இணைப்பைத் தரலாம்.
2. நல்ல இருவழிப் பாதை கிடைப்பதால், வீட்டில் இருந்தபடியே பொருள்களை வாங்குதல், டிக்கெட் பதிவுசெய்தல் போன்றவற்றை கம்ப்யூட்டர் உதவி நாடாமல், தொலைக்காட்சி கொண்டே செய்யமுடியும்.
3. மழை பெய்து, கேபிள் அறுந்து படம் தெரியாமல் கழுத்தை அறுக்காது. நமக்கு கேபிள் சேவை அளிப்பவரது அலுவலகத்தில் மின்சாரம் போய் நம்மை பாதிப்பது நடக்காது. வீடு மாற்றும்போது இந்தியா முழுமைக்கும் கையோடு கொண்டுபோகலாம்.
4. Narrow-casting, Personal-casting போன்றவற்றை அறிமுகப்படுத்தலாம். மிகச்சில வீடுகள் மட்டுமே பெற விரும்பும் சில சானல்களை இந்த மேடையின்வழியாக அறிமுகப்படுத்தமுடியும். இதனைக் கொண்டு பல புதுமையான சேவைகளைப் புகுத்தமுடியும்.
(அ) உதாரணத்துக்கு pay-per-view என்ற வழியில், புது சினிமாப் படங்களை, படம் வந்த ஓரிரு மாதங்களுக்குள்ளாக, ரூ. 100 அல்லது அதற்கு அதிகம் என்ற கட்டணத்தில் காண்பிக்கமுடியும்.
(ஆ) பிரீமியம் கட்டணத்தில் ஒரு சானலில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐஐடி கோச்சிங் போன்றவற்றைச் சொல்லித்தரமுடியும்.
5. பிராட்பேண்ட் சானலுக்கு அதிக அகலத்தை எடுத்துக்கொண்டால், முழுக்க முழுக்க ஸ்ட்ரீமிங் வழியிலான ஒளியோடைகளைத் தரமுடியும்.
6. மேலே சொன்ன அனைத்துக்குமான கட்டணங்களை செட்-டாப் பாக்ஸில் உள்ள ஒரு கடனட்டை வருடியின் வழியாகவே கட்டிவிடலாம்.
7. ஒரு சானலில் ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது அந்த நிகழ்ச்சி தொடர்பான அனைத்து விவரங்களையும் எழுத்து வடிவில் படிக்க, சேவை வழங்குனர்கள் வசதிகளை ஏற்படுத்தித்தரமுடியும். ஒரு கிரிக்கெட் மேட்சின்போது, ஸ்கோர்கார்டை நாம் விரும்பும்போதெல்லாம் பார்க்கமுடியும். வீடியோ சாளரத்தைச் சிறிதாக்கி எழுத்துகளைப் படித்துவிட்டு, மீண்டும் வீடியோவைப் பெரிதாக்கிக்கொள்ளலாம். இதேபோல சினிமாப் பாடல் ஒன்று ஓடும்போது, அதன் வரிகளை கீழே நாமே பார்க்குமாறு செய்துகொள்ளலாம். இவை அனைத்துக்கும் தேவையான ‘கண்டெண்ட்’ சேவை வழங்குனரால் கொடுக்கப்படவேண்டும்.
8. Personal Digital Recorder எனப்படும் சேவையை இரண்டு இந்திய சேவை வழங்கு நிறுவனங்கள் தரப்போவதாகச் சொல்கிறார்கள். கிரிக்கெட் ஆட்டம் நடக்கும்போது ஒரு நல்ல திரைப்படமும் காட்டப்பட்டால், ஒன்றைப் பார்த்துக்கொண்டு, மற்றதை ரெகார்ட் செய்துகொள்ளலாம். பிரகு மெதுவாக, விளம்பரங்களைத் தள்ளிவிட்டு, விரும்பியதை மட்டும் பார்க்கலாம். நாம் வீட்டில் இல்லாதபோது வரும் ஒரு நிகழ்ச்சியை ரெகார்ட் செய்யுமாறு முன்கூட்டியே செட்-டாப் பாக்ஸிடம் சொல்லிவிட்டுச் செல்லலாம்.
**
இப்போது இந்தியாவில் கீழ்க்கண்டவர்கள் இந்த சேவையை அளிக்கிறார்கள்.
1. தூரதர்ஷன் (அனைத்துமே இலவச சானல்கள். மாதக்கட்டணம் கிடையாது.)
2. ஜீ நிறுவனத்தின் டிஷ்
3. டாடா ஸ்கை
4. சன் டி.டி.எச்
5. அனில் அம்பானியின் பிக் டி.டி.எச் சேவை
6. புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஏர்டெல் டி.டி.எச்
**
இந்தத் துறையில் உலக அள்வில் முன்னோடியாக இருப்பது ரூப்பர்ட் மர்டாக்கின் நியூஸ் கார்ப், அதன் பல்வேறு நாடுகளில் தரும் சேவை. மர்டாக்கின் பி-ஸ்கை-பி என்ற பிரிட்டன் நாட்டுச் சேவை உலகில் முன்னோடி என்று சொல்லலாம். அமெரிக்காவில் டிரெக்-டிவி, எக்கோஸ்டார் ஆகிய இரு நிறுவனங்கள் இந்தச் சேவையை அளிக்கின்றன. மர்டாக் மிகவும் விரும்பினாலும் டிரெக்-டிவியை கையகப்படுத்த முடியவில்லை. அவரது கைக்கு வந்த நிறுவனம், மீண்டும் கையை விட்டு நழுவியுள்ளது. இந்தியாவின் டாடா-ஸ்கை அவருடையதே.
நன்றி தட்ஸ்தமிழ்
DTH சேவை பற்றி ஒரு பதிவு
Oct 22, 2008
எழுதியவர்
Vadielan R
Labels:
Computer
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
நண்பர்களே உங்களிடம் உள்ள பிடிஎப் கோப்புகளை வேர்ட் கோப்பிற்கு மாற்ற மிகவும் சுலபமான மென்பொருள் PDF TO Word Converter இந்த மென்பொருள் சட்ட...
-
நண்பர்களே இதுவரை எழுதிய பதிவுகள் அனைத்தையும் காண ஒரு சுட்டி உருவாக்கி வலது பக்கம் கொடுத்து வைத்துள்ளேன் புதியதாக நம் வலைத்தளத்திற்கு வரும் ...
-
நண்பர்களே தொடர்ந்து அலுவல் பணி காரணமாக வெளி இடங்களுக்கு பயணங்கள் தொடர்ந்து இருப்பதால் தொடர்ச்சியாக பதிவுகள் எழுத முடியவில்லை மன்னிக்கவும்....
-
நண்பர்களே அனைவருக்கும் உதவகூடிய 101 தொழில்நுட்ப தளங்களை இங்கே அறிமுகப்படுத்துகிறேன். அனைவருக்கும் இந்த தளங்கள் உபயோகமாக இருக்கும் என்பது த...
-
உங்களுக்கு ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யத்தெரியும் இன்ஸ்டால் செய்த சில நாட்களுக்கு பிறகு ஆண்டிவைரஸ் சரியில்லை என்று நினைக்கிறீர்கள் ஆனால் அன் இ...
-
நண்பர்களே இதுவரை வெளிவந்த தேடுபொறிகளை விட மிக அதிக வசதிகளுடன் புதிய தேடுபொறி ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட தீர்மானித்துள்ளது. அதுதான் ...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 480க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
நண்பர்களே கணிணி வந்தபிறகு புத்தகங்கள் படிப்பது வெகுவாக குறைந்திருப்பதாக ஒரு ஆய்வில் கூறப்படுகிறது. ஆனால் கணிணியில் மின் புத்தகங்கள் படிப்...
-
நண்பர்களே உங்களுக்கு கணனியில் நிறைய மாற்றங்களை கொண்டு வர இந்த சுட்டி உதவும் கடைசியில் உள்ளது. அதற்கான நீளமான குறிப்புகள் #DataVault, Irc...
3 ஊக்கப்படுத்தியவர்கள்:
வணக்கம் வடிவேலன்...
ஒரு டிஷ் ஆண்டனாவில் ஒரு டீவி தான் இணைக்க முடியுமா? இல்லை அதிகபட்சம் எத்தனை இணைக்க வழி உள்ளது?
இந்த வேர்டு வெரிபிகேசனை எடுத்துவிடுங்கள்...பின்னுட்டமிட மிக கஷ்டம்...
எல்லா நாடுகளிலும் இதை பயன் படுத்த முடியாதே!
கூடிய சீக்கிரம் அதற்கு விடை அளிக்கிறேன்
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்