இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் குறித்து விபரம் தெரிந்து கொள்ள giblogs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

விண்டோஸ் சிடி கீ அந்த சிடிக்குள்ளே இருக்கிறது

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே இப்பொழுதெல்லாம் அனைத்தும் கணினி மயம் வீட்டிலிருந்தபடியே வங்கி பரிவர்த்தனை, மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம் இது போன்று அனைத்து கணினி வழியாக மேற்கொள்ளும் பொழுது சில நேரங்களில் நம் கணினி வழியாக பணம் பரிவர்த்தனை செய்து இருப்போம் பிறகு சிறிது நாட்களுக்கு பிறகு நம் பணம் நம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கும்.  இவ்வாறு நடப்பது எதனால் சில நேரங்களில் நமது ஆன்டி வைரஸ் மென்பொருள் சரிவர இயங்கமால் தடைப்பட்டிருக்கும் காலங்களில் ஏதாவது ஒரு இணையத்தளம் வழியாக நம் கணினிக்கு கீலாகர் மென்பொருள் நிறுவப்பட்டிருக்கும்.  இதன் வேலை என்ன தெரியுமா.  நம் கணினியில் நாம் தட்டச்சு செய்யும் அனைத்தையும் ஒரு காப்பி எடுத்து அனுப்பிக் கொண்டிருக்கும்  இதை நிறுவிய நபருக்கு இதனால்தான் நாம் வங்கி பரிவர்த்தனை செய்தவுடன் நம் வங்கி கணக்கின் முழு தகவல்களையும் சேமித்து அதன் மூலம் அவர்கள் நம் கணக்கிலிருந்து பணம் எடுத்து விடுவார்கள்.  இது போல நடக்காமல் இருக்க ஆன்டி கீ லாகர் மென்பொருள் உபயோகிக்கலாம்.  இதற்கான சட்டரீதியான இலவச மென்பொருள் Zemana நிறுவனத்தினர் தருகிறார்கள்.  இந்த சட்டரீதியான இலவச சலுகை எத்தனை நாள் நீடிக்கும் என்று தெரியவில்லை இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கும் என்று தெரிகிறது. முடிந்தவரை தரவிற்க்கிக் கொள்ளுங்கள்.

மென்பொருளை நேரடியாக தரவிறக்க சுட்டி

மென்பொருளை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இணைய தள சுட்டி

ஒலி ஐகான் மாற்ற

உங்கள் கணினியில் ஒலியை குறைக்கும் ஐகான் விண்டோஸில் இணைந்து வரும் ஒரே மாதிரி பார்த்து போரடித்து போயிருக்கும் .
இணையத்தள சுட்டி

இந்த வலைத்தளத்தில்  நமக்கு தேவையான ஐகானை தேர்ந்தெடுத்து அந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவினால் போதும். உங்கள் ஒலியை குறைக்கும் ஐகான் விண்டோஸில் மாறியிருக்கும்.


விண்டோஸ் சிடி கீ சிடிக்குள்ளே இருக்கிறது

உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி சிடி ஒரிஜினல் இருக்கிறது அதனுடைய ப்ரோடக்ட்  ( சிடி)  கீ தொலைந்துவிட்டதா கவலை வேண்டாம்.  அதை மீட்டெடுக்க எளிய வழி உள்ளது.   அந்த விண்டோஸ் சிடியை வேறொரு சிஸ்டத்தின் சிடி ட்ரைவில் போடுங்கள்.  பிறகு மை கம்ப்யூட்டர் சென்று அங்கு அந்த சிடியை எக்ஸ்ப்ளோரர் வழியாக திறக்கவும்.  பிறகு அதற்குள் i386  போல்டரினுள் சென்று  Unattend.txt என்ற கோப்பினை திறக்கவும் பிறகு அந்த கோப்பின் கீழே கடைசியாக செல்லுங்கள் அங்கு அந்த சிடிக்கான கீ இருக்கும் குறித்துக் கொண்டு உபயோகப்படுத்துங்கள்.  ( இந்த குறிப்பு ஏற்கனவே எழுதி ட்ராப்டில் இருந்தது இன்று காலை தினமலரில் பார்த்தவுடன் ஞாபகம் வந்து இன்றைய பதிவுடன் சேர்த்துவிட்டேன்.)

அத்துடன் படித்தவர்கள் மற்றவர்களுக்கு சொல்லுங்கள்.  பிடித்தவர்கள் விளம்பரங்களையும் பின்னூட்டங்களையும் வாரி வழங்குங்கள்.  நன்றி


நன்றி மீண்டும் வருகிறேன்

14 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும்,800க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும்
நன்றி..நன்றி..நன்றி

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Free Offer

Google Translator

Recent Post

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை