நண்பர்களே Wondershare Fantashow போட்டியில் பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அத்துடன் இந்த மென்பொருள் போட்டியில்
நேற்று மதியம் 12 மணி வரை நேரம் கொடுத்திருந்தேன். ஆனால் என்ன காரணமோ
தெரியவில்லை 841 பேர் நேரடியாக வலைத்தளம் வந்து படித்திருக்கின்றனர் ஆனால்
50 பேர் கூட கலந்து கொள்ளவில்லை. மொத்தம் 41 பேர் மட்டுமே கலந்து
கொண்டனர். வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க அனைவரது பெயர்களையும் சீட்டு
எழுதி குலுக்கி என் மகன் மூலம் பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்கள் பெயர் பின்வருமாறு:
நண்பர்களே மாதம் ஒரு பதிவாது எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதினால்தான் இந்த பதிவு இன்று எழுதி பதிவிட்டிருக்கிறேன். நம் பதிவினை மேம்படுத்த எண்ணியுள்ளேன். அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும் பதிவின் கடைசியில் ஒரு சிறு போட்டி ஆரம்பித்திருக்கிறேன். பங்கு கொள்ளுங்கள் வெற்றி பெறுங்க. பதிவிற்கு செல்வோம்.
நம்
வொண்டர்ஷேர் நிறுவனத்தின் நண்பர்கள் தொடர்ந்து அவர்களுடைய மென்பொருட்களை
நம்மிடம் கொடுத்து அதன் பலன்களை எழுத சொல்கின்றனர் அவர்களுக்கு என் நன்றி
என் எழுத்துக்கள் அவர்களுக்கு பிடித்திருப்பதால்தான் தொடர்ந்து
அவர்க்ளுடைய் மென்பொருட்களை நம் வாசக நண்பர்களிடம்
அறிமுகப்படுத்துகின்றனர்.
இதோ அவர்களின் அடுத்த மென்பொருள் Wondershare Fantashow
இந்த Wondershare Fantashow மென்பொருளால் நமக்கு என்ன உபயோகம்.
உங்கள் வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி உதாரணத்திற்கு மகனின் முதல் பிறந்தநாள்
அதற்காக வீட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடுகிறீர்கள். அப்பொழுது வாடகைக்கு
புகைப்படக்காரர் அமர்த்தி புகைப்படங்களையும் எடுப்பீர்கள். அப்படியே
உங்களிடம் உள்ள டிஜிட்டல் புகைப்பட கேமிரா மூலம் நீங்களும் சில
புகைப்படங்களை எடுப்பீர்கள். அந்த புகைப்படங்களை கணினியில் தரவேற்றிய பிறகு
வெறும் போட்டோ கோப்புகளாக உங்கள் கணினியிலேயே சேமித்து
வைத்திருப்பீர்கள். அவ்வாறு சேமித்து வைத்திருக்கும் போட்டோக்களை
உங்களுக்கு பிடித்த மாதிரி வடிவமைக்கதான் இந்த மென்பொருள் உதவுகிறது.
உங்கள் போட்டொக்களை ஒரு போட்டோ ஸ்லைடாக காட்டும் பொழுது அதன் பின்னே
உங்களுக்கு பிடித்த பாடல்களை ஒலிக்க வைக்கலாம். அல்லது இந்த மென்பொருளில்
கொடுத்துள்ள ஒலி கோப்புகளையும் உபயோகப்படுத்தலாம்.
உங்களுக்கு கவிதை எழுத தெரிந்தால் ஒவ்வொரு போட்டோவிற்கும் ஒரு கவிதை எழுதலாம். அல்ல்து உங்களுக்கு பிடித்த வார்த்தைகளை எழுதலாம்.
இதில் உள்ள பலவகையான் தீம்கள் உங்கள் போட்டோக்களுக்கு கூடுதல் அழகைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அத்துடன் உங்கள் வேலை முடிந்த பிறகு அந்த வீடியோ கோப்பினை உங்கள் கணினியில் சேமிக்கலாம்.
செல்பேசியில் சேமித்துக் கொள்ள முடியும் அல்லது நேரடியாக யூட்யூபில் அல்லது டிவிடியிலோ சேமித்துக் கொள்ளலாம்.
சென்னை - பெங்களூர் இடையே டாய்லெட் மற்றும் சமையலறை வசதியுடன் கூடிய
பேருந்து அற்முகப்படுத்தியிருக்கிறது KSRTC நிறுவனம். அது குறித்த வீடியோ
கீழே
எப்ப நம்ம கவர்மென்ட் இந்த மாதிரி பஸ் விட போகுதோ
Pac-Man விளையாட்டு அனைவருமே விளையாடி இருப்போம். அந்த பேக்-மேன் விளையாட்டினை கூகிள் கூட ஒரு டூடுலாக போட்டிருந்தது ஞாபகம் இருக்கலாம். அது போல இது ஒரு பேக் மேன் வீடியோ பார்த்து ரசியுங்கள்
பத்து அதிர்ஷ்டசாலிகளுக்கு இலவசமாக Wondershare Fantashow மென்பொருள் வழங்க இருக்கிறேன். முழு பதிப்பும் இலவசமாக பெற கீழுள்ள சில கேள்விகளுக்கு விடையளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
போட்டி இனிதே முடிந்தது போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். நாளை மதியம் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள். நன்றி
நண்பர்களே நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு புதிய பதிவுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இதோ இன்றைய பதிவிற்கு செல்வோம்.
ஒவ்வொரு
மிகபெரிய கோப்பை மின்னஞ்சலில் இணைத்து அனுப்புகையில் முடிந்த்வரை Zip
சுருக்கி மூலம் சுருக்கியமைத்தே அனுப்புவோம். அதற்கு உதவுவதில் மிகவும்
பிரபலமானது சில Winzip, WinRar, 7-zip. இதன் வரிசையில் புதியதாக
சேர்ந்திருப்பது Hao Zip ஆகும். இது ஐம்பதிற்கும் மேற்பட்ட ஜிப் கோப்புகளை
கையாள்கிறது. அதில் சில பின்வருவன RAR, ZIPX, ISO, UDF, ISZ, ACE, ALZ,
CAB, BZIP2, ARJ, JAR, LZH, RPM, Z, LZMA, NSIS, CHM, DMG, HFS, WIM, DEB,
MSI, CPIO, XAR, UUE.
இந்த மென்பொருளுக்குள்ளேயே File Format Converter, மற்றும் Image
Viewer, சேதமடைந்த ஜிப் கோப்பினை சீரமைக்கும் மென்பொருளும்
அடங்கியிருப்பது இதன் சிறப்பு.
இதனுடன் ஆன்டி வைரஸ் ஸ்கேனரும் அடங்கியிருக்கிறது. இதன் மூலம் உங்கள் கோப்புகளை ஆன்டி வைரஸ் மூலம் சோதித்த பிறகே சுருக்கும்.
அத்துடன் இந்த மென்பொருள் சீன தேசத்திலிருந்து வெளிவந்துள்ளது. இந்த
மென்பொருள் சீனாவின் மிகவும் அதிகமாக உபயோகிக்கும் ஒரு Zip Compression
மென்பொருளாகும்.
கடந்த ஐந்தாம் தேதி மற்றும் ஆறாம் தேதிகளில் சூரியனுக்கும்
பூமிக்கும் இடையே வெள்ளி கிரகம் கடந்தது இதனை தவறவிட்டவர்கள் அடுத்த 105
ஆண்டுகளுக்கு பிறகு மட்டுமே காண முடியுமாம். அது குறித்த அனிமேசன் விளக்க
குறிப்பு சுட்டி
நீங்கள் ஒவ்வொரு மென்பொருள் நிறுவும் பொழுது EULA ( Endu Users License Agreement ) என்பதை நீங்கள் Accept செய்தால் மட்டுமே அந்த மென்பொருளை நிறுவ முடியும். EULA என்பதை யாரும் படிக்க கூட மாட்டார்கள். இதில் கூறப்பட்ட கொள்கைகள் என்ன வென்றால் பெரும்பாலும் விளம்பரங்கள் வரும். அத்துடன் மென்பொருளில் வைரஸ் வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல இது மாதிரி.
இதை எப்படி தெரிந்து கொள்வது. இதற்கு EULA Analyzer என்ற மென்பொருள் கை கொடுக்கும். இந்த மென்பொருளை நிறுவிய பிறகு நீங்கள் நிறுவும் மென்பொருளின் EULA Agreement இதில் சேமிக்கப்படும் அத்துடன் நீங்கள் எப்போது வேண்டுமானலும் படிக்க முடியும். அல்லது அதில் உள்ள Analyzer EULA Agreement னை ஆராய்ந்து எந்த விதமான ரிஸ்க்குகள் உள்ளன என்பதை தெளிவுபடுத்தும். இந்த மென்பொருள் தரவிறக்க சுட்டி
கடந்த பதிவில் என் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் மெயிலிலும் பின்னூட்டத்திலும் பேஸ்புக்கிலும் வாழ்த்திய அனைத்து உள்ளங்களும் கோடான கோடி நன்றிகள்.
விரைவில் ஒரு போட்டி ஒன்றினை நடத்த இருக்கிறேன் வெல்பவர்களுக்கு மிக அருமையான மென்பொருள் இலவசமாக தர போகிறேன். என்ன போட்டி என்று அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்.
நண்பர்களே மே 13ஆம் தேதி அம்மாக்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அம்மாக்கள்
தினத்தினை கொண்டாடும் வகையில் வொன்ட்ர்ஷேர் நிறுவனம் புதியதாக ஒரு சலுகை
தந்திருக்கிறது. அதுதான் வொன்டர்ஷேர் நிறுவனத்தின் Wondershare Slideshow
Builder Standard இந்த மென்பொருளை இலவசமாக தருகிறது. இதை நீங்கள் பெறுவது
மிகவும் சுலபமான வழியாகும்.
இந்த சுட்டியை கிளிக் செய்து இந்த பக்கத்திற்கு செல்லுங்கள் சுட்டி
அந்த
பக்கத்தில் கடைசியில் Get Keycode என்ற ஒரு வாசகம் இருக்கும் அதை கிளிக்
செய்தால் உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி குடுத்தால் போதுமானது.
உங்கள்
மின்னஞ்சல் முகவரிக்கு மென்பொருள் தரவிறக்க சுட்டியும். மென்பொருளை
நிறுவிய பிறகு தேவையான லைசென்ஸ் கீ கோடும் அனுப்பியிருப்பார்கள்.
இனி உங்களுக்கான Wondershare Slideshow Builder Standard முற்றிலும் இலவசமாக பயன்படுத்தாலாம்.
இந்த மென்பொருளின் விலை $49.95 இந்திய மதிப்பில் 2500 ரூபாய்
மதிப்புள்ளது. இந்த மென்பொருளின் அடுத்த வெர்சன் Wondershare Slideshow
Builder Deluxe ஆகும். இந்த மென்பொருளை நிறுவிய பிறகு $12.95 மட்டும்
செலுத்தினால் போதுமானது. இதை உங்களுக்கு வேண்டுமானால் மேம்படுத்திக்
கொள்ளலாம். தேவையில்லை எனில் விட்டு விடலாம்.
இந்த மென்பொருள் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை இந்த சுட்டியில் காணலாம். சுட்டி
இந்த மென்பொருள் தரவிறக்க இன்னும் பதினொரு நாட்களே உள்ளது. உடனே முந்துங்கள்.
இன்று 04/05/2012 என் மகன் பிறந்து ஆறாவது வருடம் முடிவடைந்து ஏழாவது
வருடம் தொடங்குகிறது. ஆறு வருடத்திற்கு முன் RSRM மருத்துவமனையில் வாசலில்
தவம் கிடந்தேன் எப்பொழ்து குழந்தை பிறக்கும். தாயும் சேயும் நலமாக இருக்க
வேண்டும் எதிரில் உள்ள அம்மன் கோவிலில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு வந்து
காத்துக் கொண்டிருந்தேன் இதோ அதோ என்று மாலை நான்கு மணி பத்து
நிமிடத்திற்கு வெளி உலகை பார்த்துவிட்டான் என் மகன். தாயும் சேயும் நலம்
என்று கூறிய செவிலிக்கு ஒரு 500ரூபாயை கொடுத்து என் சந்தோசத்தை பகிர்ந்து
கொண்டேன்.
அவனுடைய பெயரில் தான் இந்த வலைப்பதிவையே தொடங்கினேன். இன்று
வரை என் மகனை போலவே இந்த வலைப்பூவும் வளர்ந்து கொண்டு வருகிறது. அவன்
கணினியில் அமர்ந்து தட்டச்சு செய்து பழக்காமன பிறகு இந்த வலைப்பூவினை
அவனுக்கு அன்பளிப்பாக கொடுக்க எண்ணியிருக்கிறேன். அவனுடைய ஒவ்வொரு பிறந்த
நாளின் போதும் கோயம்பேட்டில் உள்ள குறுங்கலீசுவரர் கோவில் வாசலில் உள்ள
ஆதரவற்றவர்களுக்கு ஒரு வேளை உணவினை வீட்டில் செய்து கொண்டு போய் அவன்
கையால் கொடுத்து வருகிறேன். அவர்களுடைய வாழ்த்தும் நண்பர்களின்
வாழ்த்தும் என் மகனை நோய் நொடியில்லாமல் வாழ வைக்க இறைவனை வேண்டிக் கொண்டு
இந்த பதிவினை முடிக்கிறேன்.