இலவச ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் மற்றும் சில சிறு மென்பொருட்கள்


ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி 

நண்பர்களே தொடர்ந்து பல வேலைகளின் நடுவே இந்த பதிவு எழுத காரணம் நம் நண்பர்களுக்கு புதிய மென்பொருள்களை அறிமுகப்படுத்த வேண்டும் அதன் மூலம் நம் தமிழ் மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என்பதே. ஆகையால் உங்கள் பெரும்ஆதரவை தர வேண்டுகிறோம். நன்றி

நண்பர்கள் அனைவருக்கும் உழைப்பாளிகள் தின வாழ்த்துக்கள்.



ஒரு ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் இருந்தால் எவ்வளவு சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா. இதோ இருக்கிறது ஒரு ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர். இதன் பெயர் ஏவிஎஸ் வீடியோ எடிட்டர்.

இதன் சிறப்பம்சங்கள்.

சுலபமாக ஒரு வீடியோவினை கட் செய்தல், இணைத்தல், பிரித்தல் மற்றும் தலைகீழ் வீடியோவினை திருப்புதல் (Rotate) செய்தல் போன்ற வேலையினை எளிதாக செய்ய முடியும்.


ஒரு வீடியோவினில் உள்ள ஒலி உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் அந்த ஒலியை நீக்கி விட்டு உங்களுக்கு பிடித்த ஒலியினை சேர்க்கலாம்.

உங்களுடைய ஹேண்டிகேம் மற்றும் அனைத்து வீடியோவினையும் ஏற்றுக் கொள்ளும்.

HD மற்றும் Blue Ray வீடியோவினையும் எடிட் செய்ய முடியும்.


இது போல் பலவகையான வேலைகள் செய்யலாம்.

இது ஆதரிக்கும் கோப்பு வகைகள் அதிகமாக இருப்பதால் நேரடியாக இங்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள் ஆதரிக்கும் கோப்புகள் சுட்டி

இது விண்டோஸ் 7ம் ஆதரிக்கிறது.

தரவிறக்க








உங்கள் கணிணியை ரீஸ்டார்ட் செய்ய ஷட்டவுண் செய்ய ஹைபர்னேட் செய்ய ஒவ்வொரு முறையும் ஸ்டார் மெனு கிளிக் செய்து பின்னர் ஷட்டவுன் ஐகான் செய்த பிறகு ஷட்டவுன் ஐகானை இன்னொரு முறை கிளிக் செய்தால் மட்டுமே ஷட் டவுன் ஆகும்.  இத்தனை கிளிக் பதில் ஒரு டபுள் கிளிக் செய்வதின் மூலம் ஷட்டவுன் மற்றும் ரீஸ்டார்ட், ஹைபர்னேட் செய்ய இந்த மென்பொருள் உதவும் உங்களுக்கு. சுட்டி

இந்த மென்பொருளின் அளவு வெறும் 556 கேபி மட்டுமே.


நேரம் பார்க்க இந்த மென்பொருள் இதில் வித்தியாசம் நாம் தரவிறக்கும் பொழுது எப்படி இருக்குமோ அது போல காட்டும். தரவிறக்க சுட்டி
இது விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ல் மட்டுமே வேலை செய்யும்.

டாட் நெட் நிறுவியிருக்க வேண்டும்.  டாட் நெட் தரவிறக்க சுட்டி


உபுண்டு புதிய பதிப்பு 10.4 இன்று அதிகாரபூர்வமாக இன்று வெளியிடப்பட்டது. புதிய பதிப்பின் பெயர் Ubuntu 10.04 LTS (Lucid Lynx) இலவசமாக தரவிறக்க கீழே செல்லுங்கள்.



டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் பதிப்பை தரவிறக்க இங்கு செல்லவும் சுட்டி

நோட்புக் பதிப்பை தரவிறக்க இங்கு செல்லவும் சுட்டி

சர்வர் பதிப்பை தரவிறக்க இங்கு செல்லவும்  சுட்டி

ஒரு பைசா இல்லாமல்இலவசமாக நம் வீட்டிற்கே உபுண்டு சிடி பெற்றிட இங்கு செல்லவும்.  சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஹார்னில் ஸ்டைல்பிக்ஸ் மற்றும் ஜூஜூ வீடியோ நிறைய மென்பொருட்கள் டிப்ஸ்கள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே நம் கூகிள் மெயில் ஒரு கோப்பை இணைக்கும் போது Attach a File என்பதை கிளிக் செய்து இணைப்போம்.  இந்த வசதியை மேம்படுத்தி டிராக் & ட்ராப் (Drog & Drop) முறையை செயல்படுத்தியிருக்கிறது.  இந்த வசதியை பெற எந்த ஒரு மென்பொருளையும், ப்ளக் இன்களையும் நிறுவ தேவையில்லை.  உங்களிடம் பயர்பாக்ஸ் 3.0 மேல் அல்லது கூகிள் குரோம் புதிய பதிப்பு நிறுவி இருந்தால் போதுமானது. 




நாம் கூகிள் குரோம் நிறுவ முயற்சி செய்தால் முதலில் 500 கேபி அளவுள்ள கோப்புகள் நம் தரவிறக்கிய பிறகு அதை இயக்கி பின்னர் அந்த மென்பொருள் மூலம் முழு கூகிள் குரோம் உலாவி நிறுவப்படும்.  ஆனால் இணைய இணைப்பு இருக்கின்ற கம்ப்யூட்டருக்கு சரி இணைய இணைப்பு இல்லாமல் இருப்பவர்கள் என்ன செய்வது அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சிறு அலுவலகம் பெரு அலுவலகத்தில் ஒவ்வொரு கணிணியிலும் 20 எம்பி என்று தரவிறக்கினால் 50 கணிணிகளுக்கு 1 ஜிபி தரவிறக்க வேண்டியிருக்கும்.   இவர்களுக்காக சில முழு மென்பொருளையும் தரவிறக்க கூடிய மென்பொருட்களின் சுட்டி கொடுத்துள்ளேன் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் மென்பொருள் ஒரு முறை தரவிறக்கி நெட்வொர்க்கில் பகிர்ந்து கொள்ளலாம்.

கூகிள் எர்த் முழு மென்பொருள் தரவிறக்க சுட்டி

கூகிள் குரோம் உலாவி மென்பொருள் தரவிறக்க சுட்டி


யாகூ மெஸஞ்சர் மென்பொருள் தரவிறக்க சுட்டி

லைவ் மெஸஞ்சர் மென்பொருள் தரவிறக்க சுட்டி


லைவ் போட்டோ கேலரி மென்பொருள் தரவிறக்க சுட்டி

விண்டோஸ் லைவ் மென்பொருள் தரவிறக்க சுட்டி


ZooZoo Videos

சென்ற பதிவில் ஐபிஎல் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு வோடாபோனின் ஜுஜு மென்பொருள் கொடுத்திருந்தேன்.  இது போல் ஜூஜூ வீடியோ இருந்தால் கொடுங்கள் என்று நண்பர்கள் கேட்டனர் அவர்களுக்காக ஜூஜூ வீடியோக்கள்

வோடாபோனின் ஜுஜு வீடியோ தரவிறக்க இங்கே செல்லுங்கள்

வீடியோக்கள் தரவிறக்க சுட்டி
இந்த தளத்தில் மொத்தம் 153 வீடியோக்கள் உள்ளன.  இதில் ஆரம்ப கட்ட பக் இன நாய் தோன்றும் விளம்பரம் முதல் தற்போதைய ஜூஜூ வீடியோ வரை உள்ளது தரவிறக்கி கொள்ளுங்கள்.  2007 முதல் வீடியோ முதல் இன்றைய வீடியோ வரை உள்ளது.

ஹார்னில் ஸ்டைல்பிக்ஸ்
ஒரு போர்டபிள் மென்பொருள் போட்டோஷாப் வேலைகளை செய்தால் யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள் சொல்லுங்கள்.  இன்று அறிமுகப்படுத்தும் இந்த மென்பொருள் ஒரு போர்டபிள் மென்பொருள் பெயர்
ஹார்னில் ஸ்டைல்பிக்ஸ்

இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்புகள் JPEG, PNG, GIF, TIF, TGA, BMP, TSP.

இந்த மென்பொருள் மூலம் ஸ்லைடுஷோ மூலம் படங்கள் பார்க்கலாம்.

சுலபமான படங்களை எடிட் செய்ய உதவும் டூல்கள்.

ஒரு புகைப்படத்திலிருந்து இன்னொரு புகைப்படத்திற்கு செல்ல குறுக்கு வழிகள் உதாரணம்  Ctrl + tab கொடுத்தால் அடுத்த புகைப்படத்திற்கு செல்லும் அதே Ctrl + Shift + Tab கொடுத்தால் முன்னால் உள்ள புகைப்படத்திற்கு செல்லும்.

லேயர் முறை மற்றும் குருப்பிங் ஆதரிக்கும் தன்மை

ஒரு புகைப்படத்தில் உள்ள நான்கு நபர்களில் ஒருவரை மட்டும் வெட்டி எடுக்கும் வகையான ( Selection ) செலக்ஷன் டூல்ஸ்கள்

முப்பது வகையான புகைப்பட பில்டர்கள்

படம் வரைய உதவும் (Drawing Tools)

இந்த மென்பொருள் ஐம்பது வகையான மொழிகளை ஆதரிக்கிறது இந்திய மொழிகளில் இந்தி மட்டுமே ஆதரிக்கிறது.  விரைவில் மாநில வாரியான மொழிகள் ஆதரிக்கும் என்று நம்பலாம்.

இது போல் நிறைய வசதிகள் நிறைந்த இந்த மென்பொருள் அனைவருக்கும் மிகவும் உபயோகமானது.


இந்த மென்பொருள் கணிணியில் நேரடியாக நிறுவும்படியான முறை மற்றும் சுலபமாக யுஎஸ்பி பென் ட்ரைவ்களில் எடுத்து சென்றும் எங்கும் உபயோகப்படுத்தும் முறை என்று இரண்டு கோப்புகள் தளத்தில் உள்ளது உங்கள் எது வேண்டுமோ அதை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

மென்பொருள் தரவிறக்கச் சுட்டி



தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவிற்கு நன்றி நன்றி நன்றி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

சட்டரீதியான வீடியோ எடிட்டர் மற்றும் இணைய வேகம் தெரிந்து கொள்ள இணைய தளங்கள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே வீடியோவை எடிட் செய்ய எத்தனை இலவச மென்பொருள் இருந்தாலும் தொழில்ரீதியாக வீடியோ எடிட் செய்பவர்களுக்கு சில ப்ரொபசனல் மென்பொருட்கள்தான் பிடிக்கும்.. இன்று நான் அறிமுகப்படுத்தும் மென்பொருள் வீடியோவை எடிட் செய்யக் கூடிய மென்பொருள்  MAGIX Movie Edit Pro 15  இந்த மென்பொருள் வீடியோ மற்றும் படங்கள் புகைப்படங்கள் போன்றவற்றை எடிட் செய்யக்கூடியது.  திரையரங்குகிளில் காணக்கூடிய திரைப்படங்கள் எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ அந்த தெளிவை வீடியோக்களில் கொண்டு வர முடியும் இதன் மூலம் படங்களை திரையரங்கு தரத்தை வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சிகளில் காண முடியும். 

இதில் தனியாக சப் டைட்டில்கள் இணைக்க முடியும்.  உங்கள் ஹேண்டி கேம் மற்றும் டேப்களில் உள்ள படங்களை டிவிடியாக மாற்றி டிவிடி மற்றும் ப்ளூ ரே டிவிடியாக எரிக்க( Burn) முடியும்.  மிக உயர்ந்த தொழில்நுட்பம் இந்த மென்பொருளில் உபயோகபடுத்தப்பட்டிருக்கிறது.  இந்த மென்பொருள் கையாள்வதற்கு மிகவும் எளிமையானது.  வீடியோ எடிட்டிங்  தெரியாதவர்கள் கூட இதை உபயோகப்படுத்த முடியும்.  மென்பொருள் தரவிறக்க சுட்டி
சட்டரீதியான ஆபிஸ் ரெகவரி மென்பொருள் ஏப்ரல் 10, 2010 உடன் முடிகிறது.   புதிய வாசகர்கள் மற்றும் தரவிறக்காத நண்பர்கள் அனைவரும் உடனே தரவிறக்கிக் கொள்ளவும்.   இதுகுறித்த நமது முந்தைய பதிவு


உங்கள் இணையத்தின் வேகத்தை அறிய கீழ்கண்ட  வலைத்தளங்கள் உதவும்.


Airtel பயனாளர்கள்

Tata Indicom பயனாளர்கள்

Bsnl பயனாளர்கள்

எந்த பயனாளர்களுக்கும்

எந்த பயனாளர்களுக்கும்






மைக்ரோசாப்ட் ஆபிஸ் முகப்பை போன்ற இருக்கும் ஒரு ஆடியோ மென்பொருள்.  இந்த மென்பொருள் எல்லாமே செய்யக்கூடியது.  பாடல்கள் ப்ளே செய்யும்.  பாடல்களை எடிட் செய்யலாம்.  ஒரு இசை மேனஜராக பயன்படுத்தலாம்.  நம்மிடம் உள்ள பாடல்களை கொண்டு ஆடியோ சிடி தயாரிக்கலாம்.  ஆன்லைன் ரேடியோ கேட்கலாம்.  

இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்பு வடிவங்கள்

MP3, WMA, Wave, MP1, MP2, MP4, AIFF, OGG, M4A, M4V, M4P, AAC, AC3, APE, TTA, OFR, SPX, FLAC. CDA

இலவச தொகுப்பாக சில ஆல்பங்களை அமேசான் வலைத்தளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

351வது பதிவு மற்றும் இரட்டை புகைப்படங்களை நீக்க எளிய வழி

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

இந்த பதிவு என்னுடைய 351வது பதிவு இதுவரை என்னை எழுத வைத்த என் குருநாதர் பிகேபி அவர்களுக்கும் அனைத்து பதிவர்களுக்கும் நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் திரட்டிகளுக்கும் பத்திரிகைகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  நன்றி நன்றி நன்றி

நண்பர்களே கூகிள் டாக்ஸில் கோப்புகள் தரவேற்ற பிரவுஸரை திறந்து அதன் பிறகு கூகிள் டாக்ஸ் தளத்தில் நுழைந்து பிறகு நம் பெயர் கடவுச் சொல் கொடுத்த பிறகு Upload தேர்ந்தெடுத்த பின்னர்தான் நம் கோப்பை தரவேற்ற இயலும்.  அதற்கு பதில் இந்த மென்பொருளை தரவிறக்கி இந்த மென்பொருளில் உங்கள் கூகிள் நுழைவுப் பெயர் கடவுச்சொல் கொடுத்து விட்டு Upload அல்லது Drag & Drop முறையிலும் தரவேற்றுங்கள்.  இது நேரடியாக உங்கள் கோப்புகளை உங்கள் கூகிள் டாக்ஸில் தரவேற்றப்பட்டிருக்கும்.  மென்பொருள் சுட்டி



கூகிள் பிக்காசவில் இருந்து கோப்புகளை தரவிறக்க இந்த மென்பொருளில் அதனுடைய RSS Feed முகவரி கொடுத்தால் போதும் அந்த RSS Feedல் உள்ள புகைப்படங்களை தரவிறக்கி கொடுத்து விடும்.  மென்பொருள் சுட்டி  இது மிகவும் எளிய வழி உங்களுக்கு.

இப்பொழுது கிரிக்கேட் சீசன் என்பதால் நம் தொலைக்காட்சியில் மிகவும் வோடாபோனின் ஜு ஜு வின் டெஸ்க்டாப் ஸ்கோர்கார்ட் மென்பொருள் இங்கே சுட்டி  இதில் எந்த ஒரு பேட்ஸ் மேனாவது நான்கு ரன் அடித்தால் எழுந்து ஆடுவதும் அவுட் ஆனால் அழுவதும் மிகவும் கலக்கலாக இருக்கிறது. 


ஒரே மாதிரி இரண்டு படங்கள் உங்கள் கணினியில் நிறைய உள்ளதா???  இதை எவ்வாறு கண்டுபிடித்து நீக்குவது அதற்கு இந்த மென்பொருள் உதவும் உங்களுக்கு.  இந்த மென்பொருளின் அளவு வெறும் 656 கேபி மட்டுமே.  
மேலுள்ள படத்தில் உள்ள மஞ்சள் கலரில் உள்ள போல்டர் ஐகானை தேர்ந்தெடுத்து எந்த போல்டரை ஸ்கேன் செய்ய வேண்டும் என்று கொடுங்கள்.  பிறகு பக்கத்தில் உள்ள பச்சைக் கலர் ப்ளே பட்டனை கிளிக் செய்யுங்கள்.  

உங்களுக்கு இப்பொழுது இரண்டும் ஒரேமாதிரி உள்ள புகைப்படங்கள் காட்டப்படும்.  அதில் தேவையானவை தேர்ந்தெடுத்துக் கொண்டு நீக்கி விடுங்கள் முடிந்தது.  இனி உங்கள் கணினியில் ஒரே மாதிரியான இரண்டு  புகைப்படங்கள் இருக்காது. மென்பொருள் சுட்டி

இவ்வளவு பயனுள்ள மென்பொருளை படித்து தரவிறக்கிய நீங்கள் எனக்காக ஒரு ஒட்டு போடமாட்டிங்களா என்ன??

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை