நண்பர்களே (FAX) பேக்ஸ் என்ற வார்த்தை ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால் இன்றைய கணிணி உலகில் பேக்ஸ் என்ற வார்த்தை இன்றும் உயர்ந்து நிற்கிறது. ஆனால் ஒரு பேக்ஸ் மெசினிலிருந்து இன்னொரு பேக்ஸ் மெசினுக்கு பேக்ஸ் அனுப்பும் காலம் போய் இணையத்தில் இருந்து உங்கள் கோப்பை நேரடியாக பேக்ஸ் மெசினுக்கு அனுப்பும் முறை வந்துள்ளது ஆனால் அதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இலவசமாக எப்படி அனுப்புவது அதற்கு உதவும் இணையத் தளங்கள் எவை எவை என்றும். எப்படி இலவசமாக அனுப்புவது என்றும் பார்க்கலாம்.
முதலில் பேக்ஸ் பற்றிய சிலவற்றை காண்போம். பேக்ஸில் ஒரு ஸ்கேனர், ப்ரிண்டர், மற்றும் மோடம் உள்ளது. முதலில் அனலாக் பேக்ஸ் மெசின் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு அதை மேம்படுத்தி தற்போதைய டிஜிட்டல் பேக்ஸ் மெசின் கண்டுபிடிக்கப்பட்டது. முதல் பேக்ஸ் மெஷின் 1842ல் அலெக்ஸான்டர் பெய்ன் (Alexander Bain) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. Facsimile machine என்பதன் சுருக்கமே Fax ஆகும்.
முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பேக்ஸ் மெசினின் புகைப்படங்களை இங்கு சென்று காணலாம். சுட்டி
முதல் பேக்ஸ் லண்டலிருந்து லிவர்புல் என்ற நகருக்கு அனுப்பபட்டது
இந்த புகைப்படத்தில் இருப்பவர் தான் அலெக்ஸான்டர் பெய்ன்.
இணையத்தில் இருந்து பேக்ஸ் அனுப்பு வசதி அமெரிக்க மற்றும் கனடாவில் மட்டுமே இந்த வசதி செயல்படுத்தப்படுகிறது. அதனால் மற்ற நாட்டினருக்கு பின் குறிப்பிடும் வசதி செயல்படாது. இந்த வசதி வெகு வரைவில் இதர நாட்டினருக்கும் வரும் தூரம் வெகு அருகில் உள்ளது.
FaxZero
இந்த தளத்தின் மூலம் இணையத்தில் இருந்து இலவசமாக பேக்ஸ் அனுப்ப முடியும். ஒரு நாளுக்கு இரண்டு முறை மட்டுமே இலவசமாக அனுப்ப முடியும். ஆனால் இந்த வசதி அமெரிக்க கனடா வாழ் மக்களுக்கு மட்டுமே உபயோகபடுத்த முடியும். வேர்ட், மற்றும் பிடிஎப் கோப்புகளை ஏற்றுக் கொள்ளும். நேரடியாக செய்திகளை உள்ளீடு செய்யும் வசதியும் உண்டு. கோப்புகளில் மூன்று பக்கங்கள் வரை அனுமதி உண்டு.
நிறைய நண்பர்களுக்கு கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று பாடுவார்கள் அந்த அளவுக்கு கருப்பு மேல் சிலருக்கு ஈடுபாடு இருக்கும். அவர்களுக்கு கருப்பு வெள்ளை படங்கள் தேட இந்த இணையத்தளம் உதவுகிறது. அதுவும் பிளிக்கரில் உள்ள புகைப்படங்களில் இருந்து தேடி தருகிறது. கருப்பு வெள்ளை படங்கள் மட்டும் அல்ல உங்களுக்கு பிடித்த வண்ணம் நீலம் என்றால் அந்த வண்ணத்தில் உள்ள படங்களை மட்டும் தேடி தருகிறது. இது போல் பத்து வகையான வண்ணங்களை கலந்து புகைப்படங்களை தேட இதில் வசதி உண்டு.
முதலில் இந்த தளத்திற்குள் செல்லுங்கள் சுட்டி
அங்கு வலது பக்கம் வண்ணங்கள் பகுதியில் உங்களுக்கு தேவையான வண்ணங்கள் தேர்ந்தெடுங்கள் அவ்வளவு தான் ஒவ்வொரு வண்ணங்களாக நீங்கள் தேர்ந்தெடுக்க தேர்ந்தெடுக்க படங்கள் மாறி மாறி உங்களுக்கு காண்பிக்கப்படும்.
நான் இங்கு மூன்று வகையான வண்ணங்கள் தேர்ந்தெடுத்துள்ளேன் பாருங்கள்.
இது போல உங்கள் புகைப்படங்களை தரவேற்றி அதில் உள்ள வண்ணங்களை வைத்தும் தேட முடியும் அவ்வாறு நீங்கள் தேட இங்கே செல்லுங்கள் சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...