70 வகையான விண்டோஸ் கட்டளைகளுக்கு ஒரே மென்பொருள்


நண்பர்களே  புதியதாக கணிணி கற்க வருபவர்களுக்கு அவ்வளவு எளிதில் சில கட்டளைகள் தெரியாது. அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உருவாக்கியிருக்கிறார்கள்.

 இந்த மென்பொருள் மூலம் 70 வகையான கட்டளைகளை மவுஸ் மூலம் கட்டளையிட முடியும்.  உதராணத்திற்கு உங்கள் சிடியை திறக்க Eject எஜக்ட் பட்டன் மூலம் திறக்கலாம் அதற்கு சிடியில் வலது கிளிக் செய்து Eject தேர்வு செய்வீர்கள்.  இதையே ஒரு கிளிக் மூலம் தேர்வு சிடியைத் திறக்கவும் / மூடவும் முடியும்.

 இது போல நிறைய வேலைகளை இந்த மென்பொருள் மூலம் செய்யலாம். 

இந்த மென்பொருள் மூலம் நேரடியாக டாஸ்க் மேனஜர் திறந்து வேலை செய்யாத  ப்ரோக்ராம்களை மூடலாம்.

மெமரி கீளின் செய்யலாம்.

உங்கள் சிபியு மெமரி செயல்பாட்டினை தெரிந்து கொள்ளலாம்.

 உங்களிடம் உள்ள புகைப்பட கோப்புகளை .png, .jpg, .tif  போன்ற கோப்புகளாக மாற்றிக் கொள்ளலாம்.

எந்த ஒரு அப்ளிகேசனில் இருந்தும் ஐகானை தனியாக பிரித்தெடுக்கலாம். 

யூஎஸ்பி பாதுகாப்பாக நிறுத்த இதுபோல் சொல்லிகொண்டே போகலாம். உபயோகித்து பாருங்கள் நீங்களே சொல்வீர்கள்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்




» Read More...

உங்கள் மவுஸை எத்தனை மைல் இழுத்தீர்கள் தெரிந்து கொள்ள எளிய வழி

நண்பர்களே நாம் இதுவரை ஒரு முறையாவது நாம் கணிணியில் எத்தனை முறை A என்ற எழுத்தை டைப் செய்திருப்போம் என்று எண்ணியதுண்டா. அதே போல் நாம் மவுஸ் உபயோகிக்கும் போது எத்தனை கிளிக்குகள் கிளிக்குகிறோம் எத்தனை மைல்கள் அப்படியும் இப்படியும் இழுக்கிறோம் என்று தெரியுமா அப்படி நாம் எண்ணினால் எப்படி செயல்படுத்துவது எப்படி? அதற்கென்று சிறு மென்பொருள்கள் உள்ளது.




கீபோர்ட்டுக்கான மென்பொருள் தரவிறக்கிக் கொள்ளுங்கள் சுட்டி

மவுஸுக்கான மென்பொருள் தரவிறக்க சுட்டி


அபவுட்மீ

நீங்கள் கணிணியில் ஒவ்வொரு முறை இணையத்தில் உலாவும் போது அதிகமாக எந்த இணையத்தளத்திற்கு சென்றீர்கள் என்று அறிவீர்களா. கடைசியாக எந்த தளத்தில் உலாவினீர்கள் என்று அறிவீர்களா. தினமும் எவ்வளவு தரவிறக்கம் செய்தீர்கள் எதை தரவிறக்கம் செய்வீர்களா போன்ற அறிவீர்களாவின் வினாக்களுக்கு விடை இந்த் ஆடு - ஆன் நிறுவுவதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும். சுட்டி


ஆட் பிளாக் ப்ளஸ்

இந்த ஆடு ஆன் மூலம் பேனர் விளம்பரங்களை தடுக்க முடியும். இந்த ஆடு ஆனை உலகம் முழுவதும் வாரத்திற்கு எட்டு லட்சம் பேர் தரவிறக்கி உபயோகிக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுட்டி

உங்கள் ஒட்டுக்களை தமிழிசிலும் தமிழ்10 தமிழ்மணத்திலும் குத்துங்கள். சில பல விளம்பரங்களை கிளிக் செய்து எனக்கு உதவுங்கள்


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

கீறல் விழுந்த சிடி டிவிடிக்களை மீட்டெடுக்க சுதந்திர தினத்தில் ஒரு எளிய வழி

நண்பர்களே உங்களிடம் கீறல் விழுந்த சிடி டிவிடிக்கள் நிறைய வைத்திருப்பீர்கள்.  அந்த சிடி டிவிடிக்களை நிறைய மென்பொருட்கள் மூலம் மீட்டெடுக்க முடியும்.  அப்படியும் சில மீட்டெடுக்க முடியாத சிடி / டிவிடிக்களை இந்த எளிய வழி மூலம் ஓரளவு மீட்டெடுக்க இயலும்.






அதற்கு உங்களுக்கு தேவையான பொருட்கள்

ஒரு பருத்தி துணி / பஞ்சு
சிறிது தூய நீர்
சிறிது பல் விளக்கும் பற்பசை (Toothpaste)
சிறிது ஆல்ஹகால்

முதலில் கீறல் விழுந்த சிடி / டிவிடியை பருத்தி துணியால் துடைத்துக் கொள்ளவும்.

சில நேரங்களில் பருத்தித்துணி வைத்து சில சிடிக்களில் தேவையில்லாத கறைகள் இருக்கும் அதற்கு சிறிது ஆல்ஹகால் வைத்து துடைத்துக் கொள்ளவும். 

பின்னர் சிறிது நேரம் கழித்து சிறிது பற்பசையை எடுத்து எங்கெங்கு கீறல் உள்ளதோ அங்கெல்லாம் தடவுங்கள் பின்னர் பருத்தி துணி கொண்டு அப்படியே துடைத்து எடுக்கவும். பின்னர் தண்ணீர் கொண்டு துடைத்து விடுங்கள்.  ஈரம் இல்லாமல் துடைத்து விடுதல் மிகவும் முக்கியம்.

சிறிது நேரம் கழித்து சிடி டிரைவில் இட்டு மென்பொருட்கள் கொண்டு மீட்டெடுக்க முயன்று பாருங்கள்.


பிடிஎப் கோப்பிலிருந்து டெக்ஸ்டை பிரித்தெடுக்க

சில பிடிஎப் கோப்புகள் Copy Protected உடன் வரும்.  அந்த மாதிரி பிடிஎப் கோப்புகளில் இருந்து எந்த ஒரு வார்த்தையையும் காப்பி செய்து டெக்ஸ்டாக எடுக்க இயலாது.

அதற்கு இந்த மென்பொருள் உதவும்.  இந்த மென்பொருள் மூலம் பாதுகாக்கப்பட்ட பிடிஎப் கோப்புகளில் இருந்து டெக்ஸ்டை மட்டும் தனியாக உருவி தந்து விடும்.


(குறிப்பு இந்த மென்பொருள் ஆங்கில பிடிஎப் கோப்புகளுக்கு மட்டுமே)

மென்பொருள் தரவிறக்க சுட்டி



ஆகஸ்ட் 15 2009,  அன்று நாடு முழுவதும் அறுபத்திரண்டவாது சுதந்திர தினம் கொண்டாடப் படுகின்றது.  (முதலில் 52 என்று தவறாக எழுதியிருந்தேன் சுட்டிக்காட்டிய கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி)

இந் நேரத்தில் சீன வெளியுறவு வல்லுநர் ஒருவர் சீன இணையத்தளத்தில் இந்தியா ஜாதி மாநிலமாக பிரிந்திருப்பதை தனிநாடாக ஆக்க வேண்டும் என்றும் நம் நாட்டை இருபது துண்டுகளாக பிரிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.  அப்பொழுதுதான் சீனாஆசிய பகுதியில் வலுவாக இருக்க முடியும் என்று கூறியிருக்கின்றார். இது போல் பேசி வருபவர்களுக்கு நாம் நம் உழைப்பின் மூலம் நம் பாரத நாட்டை வளம் பெற வைத்து தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.  ஜெய் ஹிந்த்




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

உங்கள் வலைப்பூ வேலை செய்கிறதா??? எளிய வழி

நண்பர்களே சில தவிர்க்க இயலாத காரணத்தால் தொடர்ந்து எழுத இயலவில்லை அதில் ஒன்று என் அக்காவின் மகனுக்கு உப்புச்சத்து அதிகமாகி மருத்துவனமனையில் அனுமதித்திருப்பதால் வேறு சில காரணங்கள் வேலைகள் அநேகம் என்ற காரணத்தால் எழுத இயலவில்லை.


உங்கள் வலைப்பூ வேலை செய்கிறதா என்று தெரிந்து கொள்ள இந்த வலைத்தளம் உங்களுக்கு உதவும். வலைத்தளம் என்றில்லை எந்த ஒரு இணையத்தளமும் வேலை செய்கிறதா அல்லது வேலை செய்யவில்லையா என்று தெரிந்து கொள்ளலாம்.  சுட்டி



இன்று அனைவரும் விரும்பும் கார் வால்பேப்பர்கள் மட்டும் கொடுத்திருக்கின்றேன்.




தரவிறக்க சுட்டி

ஹம்மர் வகை கார்கள் சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்




» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை