நண்பர்களே இன்றைய உலகில் போனில் அதிக அளவு விற்பனையாவது ஸ்மார்ட் போன்கள்
அதுவும் ஆன்ட்ராய்டு வகை போன்கள் மிக அதிகமாக விறபனையாவதை அனைவரும்
அறிந்ததே. ஆன்ட்ராய்ட் ஒரு இலவச இயங்குதளமாகும். இந்த வகை இயங்குதள
போன்களுக்கு என்று வைத்திருந்த கூகிளின் ஆன்ட்ராய்ட் மார்கெட்டினை கூகிள்
ப்ளே என்று பெயர் மாற்றியது சில நாட்களுக்கு முன்புதான் என்பதையும்
அறிவீர்கள். சரி இந்த வகை ஆன்ட்ராய்ட் இயங்குதள போன்களுக்கு கூகிள் ப்ளே
மட்டும்தான் உள்ளதான் என்று பார்த்தால் கூகிளை போன்ற சில தளங்கள்
இருக்கதான் செய்கின்றன இதில் ஒரு தளத்தின் எப் ட்ராய்டு F-Droid.
இந்த
தளத்தில் என்ன ஒரு சிறப்பு என்று பார்த்தால் இதில் உள்ள அனைத்து
அப்ளிகேசன்களும் இலவசமானவை மட்டுமே. அதுவும் அனைத்தும் Full Version ஆக
கிடைக்கிறது.
அது மட்டுமல்லாமல் F-Droid நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் பிரவுஸர் வழியாக
F-Droid இணையத்தளத்தில் ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை தேடி உங்கள் மொபைலுக்கு
தரவிறக்க முடியும்.
இந்த தளத்தின் மூலம் வெளியிடப்படும் அப்ளிகேசன்கள் உங்கள் ஆன்ட்ராய்ட்
மொபைலுக்குள் நிறுவி விட்டாலே ஒவ்வொரு முறையும் தானாக அப்டேட் செய்து
கொள்ளும்.
அது போல இதோ ஒரு புதிய இலவசமாக பல் துலக்கும் பேஸ்ட் இலவசமாக
உங்களுக்காக வழங்குகிறார்கள். கோல்கேட் சென்ஸிடிவ் ப்ரோ ரீலிஃப் Colgate
Sensitive Pro-Relief 80கிராம் பேக் இலவசமாக வழங்குகிறார்கள்.
நீங்கள்
செய்ய வேண்டியது உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி போன்றவை
மட்டுமே அவ்வளவுதான் உங்கள் வீடு தேடி வரும் உங்களுக்கான Colgate
Sensitive Pro Relief 80கிராம் பேக். இந்த டூத் பேஸ்ட் குறித்த வீடியோ கீழே
வீடியோ தெரியவில்லை என்றால் இங்கு கிளிக் செய்யவும் சுட்டி
இது இரண்டாவது முறையாக அனைவருக்கும் இலவசமாக வழங்கபடுகிறது. இதற்கு முன் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
நண்பர்களே இந்தியாவில் இணைய
சேவை கொடுப்பதில் முண்ணணி நிறுவனமாக BSNL
இருக்கிறது. இதன் இணைய
சேவையை பயன்படுத்தும் பலருக்கு இதன் வேகம் நாம் தேர்வு செய்த திட்டத்தின் படி
வருகிறதா என்பது தெரியாது. இணைய வேகம் என்பது சர்வரின் செயல்திறன், இணைந்துள்ள
கணிணிகள், நமது கணிணியின் ஹார்ட்வேர் போன்றவற்றைப் பொறுத்து சில நேரம் கூடலாம்
அல்லது குறையலாம். இணைய வேகத்தை அளவிட Speedtest.netபோன்ற இணையதள
சேவைகளைப் பயன்படுத்திப் பார்ப்போம்.
ஆனால் இணைய வேகத்தை
அளவிட BSNL சர்வர்களை வைத்தே சரிபார்த்தால் வேறு வழிகளில் அளவிடுவதை
விட துல்லியமாக இருக்குமல்லவா? இதற்கு தான் BSNL தற்போது Bandwidth Meter என்ற இணைய சேவையை கொண்டு வந்துள்ளது. இதில் நீங்கள் இணைய
வேகத்தை அளவிட உங்கள் இணையக் கணக்கு பற்றிய விவரங்களை ஏதும் கொடுக்கத் தேவையில்லை.
கீழிருக்கும் மூன்று சுட்டிகளில் கிளிக் செய்தாலே உங்கள் இணைய வேகம் அளவிடப்படும்.
இதில் உங்கள் ஐபி எண்
(IP number) , கொடுக்கப்படும் Bandwidth அளவு, ஒரு விநாடியில் கிடைக்கும் டவுன்லோடு வேகம் ஆகியவை பட்டியலிடப்படும்.
இதன் மூலம் உங்களின் சரியான இணைய வேகத்தை அறிந்து கொள்ளலாம். இந்தியாவில்
எங்கிருப்பினும் BSNL இணையம் வைத்திருப்பவர்கள் இந்த சேவையைப்
பயன்படுத்தலாம்.
இன்றைய பதிவினை எழுதியிருப்பது செல்வி. பொன்மலர் அவர்கள் நம் தளத்தில் அவ்வப்போது புதிய பதிவுகள் மற்றும் புதிய
எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவரை பற்றியும் இவர் வலைபதிவை பற்றியும் தெரியாதவர்கள் யாரும் அறியாமல்
இருக்க முடியாது. இவர் எழுதிய பல பதிவுகள் பலருக்கு மிகவும் உபயோகமாக
இருக்குமாறுதான் இவர் எழுதுவார். இவர் வலைப்பூவிற்கு செல்ல சுட்டி
இந்த வலைமனை தொடர்ந்து எழுதுவதும் எழுதவைப்பதும் உங்களின் தொடர்ந்து ஆதரவினால் மட்டுமே. உங்கள் ஆதரவும் பின்னூட்டங்கள் தொடர்ந்து எங்களுக்கு வேண்டும்.
நண்பர்களே உங்கள் கணினி திரையினை படம் பிடிக்க எடுக்க பல்வேறு வகையான
மென்பொருட்களை பயன்படுத்துவீர்கள். அனைத்து மென்பொருட்களுமே ஒரு வகையில்
சிறந்ததாக இருக்கும். ஆனால் அதில் உள்ள அனைத்திலும் ஒரு குறை கணினி
திரையினை படம்பிடித்தால் மவுஸின் அம்பு குறி இருக்கும். இதை தவிர்க்க
என்ன செய்வீர்கள் சிலர் மவுஸினை திரையின் ஒரு ஓரத்திற்கு கொண்டு போய்
வைத்துவிட்டு திரையினை படம் பிடிப்பார்கள். இப்படி செய்யாமல் இந்த
மென்பொருளை பயனபடுத்தினால் உங்களுக்கு வேண்டும் என்றால் மவுஸின்
அம்புக்குறியோடும் இல்லாவிடில் அம்புக்குறியை வேறு கலருக்கோ அல்லது அம்புக்
குறி இல்லாமலும் கணினி திரையினை படம் பிடிக்க முடியும். இந்த
மென்பொருளின் பெயர் AeroShot நீங்கள் ஏதாவது ஒரு கோப்பினை படம்பிடிக்க வேண்டும் என்றால் அதை திறந்து
வைத்து கொண்டு எது வேண்டுமோ அதை நேரடியாக படம்பிடித்து கொள்ளலாம்.
இந்த மென்பொருளின் சிறப்புகள்
நீங்கள் படம்பிடிக்கும் கணினி திரையினை நேரடியாக உங்கள் யுஎஸ்பி ட்ரைவினில் சேமிக்க முடியும்.
எந்த வகை ரெசொல்யூசனில் வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்க முடியும்.
நீங்கள் வழக்கம் போல இந்த மென்பொருளை நிறுவி விட்டு உங்கள்
விசைப்பலகையில் ( விசைப்பலகை = Key Board) விண்டோஸ் கீ + பிரிண்ட்
ஸ்கீரின் பட்டன்களை கொடுத்தால் இந்த மென்பொருள் இயங்கி நீங்கள் எங்கு
சேமிக்க விரும்புகிறீர்களோ அங்கு சேமித்து விடும்.
இது ஒரு திறந்தநிலை மூல பொருள் என்பதால் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்ற கவலையில்லை
இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, மற்றும் 7 ஆகியவற்றில் இயங்கும்.
இந்த மென்பொருளின் அளவு வெறும் 256கேபி மட்டுமே.
இது ஒரு போர்டபிள் மென்பொருளாகும். தரவிறக்கி நேரடியாக உபயோகபடுத்த வேண்டியதுதான்