இதுவரை தெரியாத புதிய மீடியா ப்ளேயர்கள்

நண்பர்களே மீடியா ப்ளேயர் என்றால் நமக்கு வருவது  விண்டோஸ் மீடியா ப்ளேயர் தான் இது மட்டுமல்லாமல் எத்தனையோ மீடியா மென்பொருட்கள் இருக்கிறது.   யாரும் இதுவரை பார்த்திராத மென்பொருட்கள் கூட மிகவும் அருமையாக இருக்கும்.   ஆனால் அறிமுகப்படுத்தும் வரைதான்  அது அறிமுகப்படுத்தி விட்டால் நம் வாசகர்கள் அதை பிடித்து ஒரு ரோடே போட்டு விடுவார்கள்.  எனக்கு தெரிந்த சிலமீடியா ப்ளேயர்கள் கீழே.  விஎல்சி, விண்டோஸ் மீடியா ப்ளேயர் போன்றவை எல்லாருக்கும் தெரிந்தது இது மட்டுமல்லாமல் நிறைய பேருக்கு தெரியாத சில மீடியா ப்ளேயர்கள் கொடுத்துள்ளேன்.




 AL Player

இந்த ப்ளேயர் பெயர் AL Player இந்த் AL என்பது Always அதாவது எதையும் ப்ளே செய்ய கூடியது என்பதாகும்.  இந்த மென்பொருள் நீங்கள் ப்ளே செய்யும் வீடியோ கோப்பின் கோடெக் என்பது இல்லை என்றால் கூட தானாகவே இணையத்தில் இருந்து தரவிறக்கி பதிந்து கொண்டு ப்ளே செய்ய கூடியது.

ஒரு கீ மூலம் நாம் சத்தத்தை Mute செய்ய முடியும்.  அந்த கீ ESC கீ ஆகும்.
திரும்ப அந்த கீயை உபயோகிப்பதன் மூலம் சத்தத்தினை திரும்ப பெற முடியும்.

இது ப்ளேயர் மட்டுமல்லாமல் ஆடியோ மற்றும் வீடியோக்களை எளிதாக ரெகார்ட் செய்யவும் செய்கிறது.

இந்த AL Player தரவிறக்க சுட்டி

AL Player குறித்த மேலதிக தகவல்கள் அறிய சுட்டி


DA Player

DA Player or DigiArty Player  இந்த ப்ளேயர் அனைத்து வகை பார்மெட் ப்ளே செய்கிறது.  இது உயர்தர கோப்புகள் 1080p கோப்புகளை ப்ளே செய்யும் பொழுதும் குறைந்த மின்சக்தியினை உபயோகிக்கிறது..




இந்த மென்பொருள் ப்ளூரே, டிவ் எக்ஸ், எம்கேவி போன்ற அனைத்து வகை கோப்புகளையும் கையாள்கிறது.

இதை தரவிறக்க சுட்டி

DA Player குறித்த மேலதிக தகவல்கள் அறிய சுட்டி


Daum Pot Player

இந்த மென்பொருளும் அனைத்தையும் ப்ளே செய்கிறது.  இந்த மென்பொருள் தொடர்ச்சியாக அப்டேட் செய்யப்பட்டு வருகிறது என்பதுவே இதன் சிறப்பு.
Daum Pot Player மென்பொருளை தரவிறக்க சுட்டி

Daum Pot Player மென்பொருள் குறித்த மேலதிக தகவல்கள் அறிய சுட்டி


MPCSTAR Player

இந்த மென்பொருள் அனைத்து வகையான கோப்புகளையும் கையாள்கிறது.  நாம் வீடியோ ப்ளே செய்யும் பொழுது ஒரு சப்டைட்டில் மட்டுமே ப்ளே செய்து பார்ப்போம். ( பார்க்கவும் முடியும் )  இதில் இரண்டு சப்டைட்டில்களை தேர்வு செய்து பார்க்க முடியும்.

நீங்கள் எம்பி3 பாடல்களை கேட்கும் பொழுது இணையத்தில் இருந்து பாடல் வரிகளை தானாக இறக்கி காட்டும்.

MPCStar Media Player மென்பொருள் தரவிறக்க சுட்டி

MPCStar Media Player மென்பொருள் குறித்த மேலதிக தகவல்கள் அறிய சுட்டி

 Google Trick ஒன்று


நன்றி மீண்டும் வருகிறேன்.

படிக்கின்ற அனைவரும்  பிடித்திருந்தால் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.  பதிவில் வருகின்ற விமபரங்களை கிளிக் செய்யவும்.


» Read More...

Vivideo Editor இலவசம் அனைவருக்கும்

நண்பர்களே ஒவ்வொரு முறையும் ஒரு புதிய மென்பொருளை உங்களிடத்தில் அறிமுகப்படுத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.  இந்த மென்பொருள் கட்டாயம் இணைய உலகில் யாரேனும் சிலருக்காவது திருப்தியை தரும் என்றே எண்ணி மென்பொருளை அறிமுகப்படுத்துகிறேன்.


இதோ ஒரு புத்தம் புதிய மென்பொருளுடன் உங்களை சந்திக்கிறேன் இந்த பதிவின் மூலம்.

நாம் எத்தனை வீடியோ எடிட்டர் இருந்தாலும் நமக்கென்று ஒரு தனியாக லைசென்சுடன் கூடிய ஒரு வீடியோ எடிட்டிங் மென்பொருள்  இருந்தால் எப்படி இருக்கும்.  ஒரு தளம் எம்மை அணுகி உங்கள் வாசகர்களுக்காக ஒரு வீடியோ எடிட்டர் மென்பொருளை தருகிறோம் அதுவும் இலவசமாக என்று கூறி அணுகினார்கள்.  அந்த வீடியோ எடிட்டர் குறித்து நீங்கள் உங்கள் பதிவில் அறிமுகப்படுத்துங்கள் உங்கள் வாசகர்களுக்கு சிறு போட்டி வைத்து அதில் வெல்பவர்கள் அனைவருக்கும் ஒரு வீடியோ எடிட்டர் லைசென்ஸ் கொடுக்கிறோம் என்றார்கள்.  எனக்கு என்று தனியாக ஒரு மென்பொருளினையும் அனுப்பி வைத்து அது குறித்து எழுதுமாறு கூறினார்கள்.  அதன் பிறகு எனக்கு சில தனிப்பட்ட காரணங்க்ளால் உடனே எழுத முடியவில்லை.    அதனால்  இப்பொழுது எழுதியிருக்கிறேன்.  இந்த மென்பொருளின் சலுகை கிறிஸ்துமஸ் தினத்தினை முன்னிட்டு அனைவருக்கும் தரப்படுகிறது.   இந்த சலுகை இந்த மாதம் 15 முதல் கிறிஸ்துமஸ் தினமான 25 வரை மட்டுமே! பொருந்தும்.


இது ஒரு விளையாட்டு அதுவும் ஆன்லைனில் விளையாடும் விளையாட்டு சுலபமாக எந்த ஒரு விளையாட்டையும் நிறுவ தேவையில்லை



இந்த சுட்டிக்கு செல்லுங்கள்  Vivideo Editor  நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிங்க இந்த சுட்டி நீக்கப்படுகிறது.


இந்த பக்கத்தில் 1 என்று குறிப்பிட்டு வட்டமிட்டிருக்கும் பகுதியில் Play Now என்பதை கிளிக் செய்யுங்கள்.  அது உங்களை Wondershare யூட்யூப் வீடியோ சானலுக்கு அழைத்து செல்லும்.  அங்கு முதலில் Save Santa என்று Part 1 விளையாட்டு ஆரம்பிக்கும்.  இதில் வரும் வீடியோ அனைத்தும் 30 முதல் 40 நொடிகள் வரை மட்டுமே வீடியோவை கவனமாக கவனியுங்கள்.
 
பின்னர் வீடியோவின் முடிவில் கேட்கும் கேள்விக்கு விடையை கிளிக் செய்யுங்கள்.  சரியான விடையினை கிளிக் செய்தால் Part 2 வீடியோவிற்கு செல்லும்.  இதற்கும் சரியான விடையை சொன்னால் அடுத்த பகுதியான Part 3க்கு செல்லும் இங்கு சரியாக விடை சொன்ன பிறகு நான்காவது வீடியோ பகுதிக்கு செல்லும்.  இங்கு உங்களுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா ஒரு பரிசு தருவார்.  
 
அது ஒரு பாஸ்வேர்ட்  ( Passcode  or Password )  அதை குறித்துக் கொள்ளுங்கள் பின்னர்  மறுபடியும் மேலுள்ள கொடுத்த சுட்டியினை கிளிக் செய்து அந்த பக்கத்தில் Enter Passcode என்ற பெட்டியில் உங்களுக்கு கொடுத்த பாஸ்கோடினை கொடுத்தால் போதும் உடனே உங்களுடைய பெயர் மின்னஞ்சல் முகவரியை கொடுத்தால் உங்களுக்கான லைசென்ஸ் மற்றும் Vivideo Editor மென்பொருள் கிடைக்கும்.  தரவிறக்கி உபயோகிக்க வேண்டியதுதான்.


இதில் உள்ள சிறப்பம்சங்கள் கீழே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன்.

1. Support importing photo like BMP, JPG, PNG, GIF, TIF, ICO, etc.
2. Support importing videos from camcorders and external hard drives directly.
3. Support record videos, audio and add voiceover.
4. Support adding filters and titles to videos and multi-trimming.
5. Crop, rotate photos and set photo duration, titles, motions and filters.
6. Add transitions, titles, filters and motions to Favorite so that you can find them quickly later.
7. Set text position, font, size, color, typeface, etc.
8. Send the video sharing message to your Facebook and Twitter account when sharing the videos to YouTube.
9. Support burning videos to DVD for better video preservation.
10. Support 5.1 sound track output.
11. Support parameters customization: video resolution, video bitrate, video sample rate and audio bitrate.
12. Redesign the storyboard.


Vivideo Editor ஆதரிக்கும் கோப்புகள் இந்த பக்கத்தில் உள்ளன.  சுட்டி

இந்த மென்பொருள் ஆதரிக்கும்  ஆபரேட்டிங் சிஸ்டம்கள் Windows XP/Vista/Windows 7

இந்த மென்பொருளினை உபயோகித்து பார்த்ததில் ஒவ்வொரு மென்பொருள் ஒவ்வொரு வித தனித்தன்மையுடன் இருக்கிறது.  நீங்களும் முயன்று பாருங்கள் உங்களுக்கும் அந்த அனுபவம் கிடைக்கும்.


 என் பதிவில் வரும் விம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் ஏதோ தினம் 0.20 $ வரை வருகிறது.  இதுவரை கிளிக் செய்தவர்களுக்கும். இனி கிளிக் செய்ய போகிறவர்களுக்கும் மிக்க நன்றி




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

முல்லை பெரியாறு அணையின் உண்மை நிலை

நண்பர்களே முல்லைப் பெரியாறு பிரச்சினையை முழுமையாகப் புரிந்து கொள்ள ஆவணப் படம் ஒன்றைத் தயாரித்துள்ளது தமிழக அரசின் பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம்.
முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய தளத்திலும்  காணக் கிடைக்கிறது. படித்தவர்-பாமரர், தமிழர் – மலையாளி என்ற பேதமின்றி, யோசிக்கத் தெரிந்த அத்தனைப் பேரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்தப் படம் அமைந்துள்ளது.


இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை.  42 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக வெளிவந்திருக்கிறது.

 கீழே உள்ள படத்தினை பாருங்கள் 


The Mullai Periyar DAM Problem



இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளையும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்
.
அனைத்து இணையதளங்களும் தங்களின் தலையாய கடமையாக இந்தப் படத்தை வெளியிட வேண்டும்.  என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

கணினியின் ஆன் மற்றும் ஆப் செய்த நேரம் தெரிய மற்றும் யூட்யூபின் புதிய இடைமுகப்பு

நண்பர்களே உங்கள் பின்னூட்டமும் உற்சாகமும் எவ்வளவு வேலைகளுக்கிடையிலும் ஒரு பதிவு போட வேண்டும் என்று போட்டு வருகிறேன் இதற்கு உங்கள் உற்சாகமும் வேண்டும் அத்துடன் முடிந்த்வரை படிப்பவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.  முடிந்த்வரை விளம்பரக் கணைகளை தொட்டு பாருங்கள்.  நன்றி  இனி பதிவிற்கு செல்வோம்.

 புதிய யூட்யூப் இன்டெர்பேஸ்

இதுவரை கூகிள் நிறுவனம் தன்னுடைய ஜிமெயில் மற்றும் கூகிள் ரீடருக்கு மட்டும் இடைமுகப்பை (Interface) மாற்றியிருந்தது.  அடுத்ததாக தன்னுடைய வீடியோ தளமான யூட்யூப் தளத்திற்கும் புதிய பொலிவினை வழங்குகிறது.  ஆனால் இது இன்னும் நடைமுறைக்கு வர இன்னும் சிறிது நாட்களாகும் என்று தெரிகிறது.  சில கோடிங் மாற்றத்தின் மூலம் நாமும் அந்த புதிய இடைமுகப்பை பெற முடியும்.  இதற்கு நீங்கள்  உங்கள் கூகிள் மூலம் யூட்ய்பில் நுழைந்து கொள்ளுங்கள்.

பிறகு நீங்கள் பயர்பாக்ஸ் உபயோகிப்பவர்கள் என்றால் Ctrl+Shift+K  அழுத்தினால் பயர்பாக்ஸ் மேலே டெவலப்பர்களுக்கான Console Box வரும் அங்கு கீழுள்ள வார்த்தையை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.  பிறகு ஒரு என்டர் தட்டுங்கள்.  உங்கள் youtube பக்கத்தினை F5  கொடுத்து Refresh செய்து பாருங்கள்.


document.cookie="VISITOR_INFO1_LIVE=ST1Ti53r4fU";
        


இதே நீங்கள் கூகிள் குரோம் உபயோகிப்பவர்கள் என்றால்  Ctrl+Shift+J  கொடுத்து Console Box செல்லலாம்.

உங்களின்  புதிய அனுபவத்திற்கு தயாரகுங்கள்.  

ஒரு குறுஞ்செய்தி

அடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிடப் போவது விண்டோஸ் 8 இதில் இலவசமக மைக்ரோசாப்டின் விண்டோஸ் செக்யூரிட்டி எஸ்ஸென்டியல்ஸ் ஆன்டி வைரஸ் இணைத்து வழங்க போவதாக அறிவித்துள்ளது.  இது மைக்ரோசாப்ட் உபயோகிப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்த செய்தி ஆன்டிவைரஸ் தயாரித்து வழங்கும் நிறுவனத்திற்கு அதிர்ச்சியான செய்தியும்  ஆகும்.




கீழே Grand Theft Auto V Trailer உங்களுக்காக

Grand Theft Auto என்பது மிகவும் அனைவராலும் விரும்பபடக்கூடிய ஒரு விளையாட்டாக இருக்கிறது.  இதன் ஐந்தாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது.  இந்த விளையாட்டின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.  செம சூப்பராக இருக்கிறது கிராபிக்ஸ்.




கணினி ஆன் மற்றும் ஆப் செய்யப்பட்டது எப்பொழுது

உங்கள் கணினி எந்த நேரத்தில் இருந்து உங்கள் ஆன் மற்றும் ஆப் செய்யப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும்.  இது கடந்த மூன்று வாரங்கள் வரை உங்கள் கணினி எந்த நேரத்தில் ஆன் செய்து வைக்கப்பட்டது எந்த நேரம் உபயோகப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டது என்ற தகவல்கள் காட்டும்.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி







 நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை