போடோஷாப் கோப்பை படிக்க மற்றும் போர்ட்டபிள் மென்பொருட்கள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 400க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி 

நண்பர்களே நாம் யுஎஸ்பி பென் ட்ரைவில் நிறைய மென்பொருள் எடுத்து செல்வோம். ஆனால் அனைத்து மென்பொருளும் இருப்பதில்லை.  அவ்வாறான நேரங்களில் நாம் போர்ட்டபிள் மென்பொருள் என்பதினை நாடுகிறோம்.  அது போன்ற போர்ட்டபிள் மென்பொருள் அனைத்தும் ஒரே மென்பொருளில் இணைத்து ஒரு சிறு அப்ளிகேசனாக செய்திருக்கிறார்கள்.  ஆனால் பொழுது போகத நேரத்தில் விளையாட்டு விளையாட இதில் நிறைய போர்ட்டபிள்  விளையாட்டுக்கள் கொடுத்திருக்கிறார்கள். 


மொத்தம் 200 வகையான மென்பொருட்கள் & விளையாட்டுகள் அடங்கிய மென்பொருள்

ஸ்பைவேர் மற்றும் மால்வேர் சோதிக்கப்பட்டது.

மிகவும் சுலபமாக உங்களுக்கு பிடித்த மென்பொருளையும் இந்த மென்பொருளின் நிறுவிக் கொள்ளலாம்.

இதில் மூன்று வகை உண்டு

ஜீரோ, லைட் மற்றும் புல்

இதன் Skins மாற்றிக் கொள்ளலாம்.

முற்றிலும் இலவசம்.


இதன் பெயரை சொல்லவில்லையே இதன் பெயர் லூபோ பென் சூட்

மென்பொருளை தரவிறக்க இங்கே செல்லுங்கள் சுட்டி

இந்த மென்பொருள் அனைவருக்கும் பிடிக்கும் என்பது மட்டும் உண்மை.


SimplePSD

போட்டோஷாப்பில் உருவாக்கும் கோப்புகள் .PSD என்ற கோப்பாகதான் உருவாக்கப்படும்.  இந்த் கோப்பினை போட்டோஷாப் இல்லமால் படிக்க முடியாது. இதனை படிக்க இந்த மென்பொருள் உபயோகப்படும் இதன் பெயர் SimplePSD  அத்துடன் இதில் அந்த கோப்பு எத்தனை பிக்ஸலில் உருவாக்கப்பட்டுள்ளது அதன் நீளம் அகலம் என்ன என்பதையும் காட்டும்.


கூகிள் குரோம் 5.0 நிலையான பதிப்பின் முழுவதும் நிறுவக்கூடிய  மென்பொருள் இங்கே சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

பாஸ்போர்ட் போட்டோ வேண்டுமா இங்கே வாங்க இலவசமா எடுக்கலாம்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 400க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி 

நண்பர்களே நிறைய வேலை பளு இருப்பதால் தொடர்ந்து எழுத முடியவில்லை மன்னிக்கவும்.  இருந்தாலும் ஏதாவது புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தியிருப்பார் என்று நம்பி வந்த அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றி.  அத்துடன் ஒரு இனிப்பான வருகிற ஜூன் மாதம் 14ம் தேதி என் மனைவியின் தங்கைக்கு திருமணம் நடக்க இருக்கிறது. உங்கள் வாழ்த்துக்கள் வேண்டும்.  அத்துடன் என் திருமண வாழ்க்கை ஜூன் 17 அன்று ஆறாவது வருடத்தில் வெற்றிகரமாக எடுத்து வைக்கிறேன். அதற்கு என் வாழ்த்துக்கள்.  திருமண வேலைகள் அதிகம் இருப்பதால் வருவதற்கு தாமதமாகலாம். தாமதத்திற்கு மன்னிக்கவும்.



இன்றைய பதிவிற்கு செல்வோம் வாருங்கள்.  மிகப்பெரிய கோப்புகளை எத்தனை பாகங்களாக வேண்டுமானாலும் பிரிக்க சேர்க்க இந்த மென்பொருளை உபயோகிக்கலாம்.  இது ஒரு திறந்த நிலை மென்பொருள் இன்னும் மேம்படுத்த வாய்ப்பு இருக்கிறது.  கிரையோஜனிக்




வீட்டிலேயே பாஸ்போர்ட் பிரிண்ட் எடுக்கும் பிரிண்டர்கள் வந்தாலும் நாம் யாரும் அதை உபயோகப்படுத்துவதில்லை.  பாஸ்போர்ட் விசா எடுப்பதற்கு தேவையான அளவுகளில் பாஸ்போர்ட் மற்றும் தபால் தலை அளவு புகைப்படம் எடுக்க இந்த ஆன்லைன் தளத்தினை நாடலாம்.  இதில் 63 வகை நாடுகளின் பாஸ்போர்ட் விசா புகைப்பட அளவுகள்  கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவும் இணைந்திருக்கிறது.  வலைத்தளத்திற்கு செல்ல இங்கே இதில் ஆறு எம்பி வரை உள்ள புகைப்படத்தினை ஏற்றி பாஸ்போர்ட் அளவுகளில் மாற்றிக் கொள்ளலாம்.  இந்த தளம் JPG, PNG, BMP வகையான கோப்புகளை மட்டும் ஏற்றுக் கொள்ளும் என்பது ஒரு குறையே.


புகைப்படங்களை தேட இன்னொரு புதிய தளம் சுட்டி  இந்த தளத்தில் தேடும் போட்டோக்களை நேரடியாக இணைப்புக் கொடுக்கலாம். மற்றும் எச்டிஎம்எல் கோடிங்காக மாற்றி நம் தளத்திலேயே கூட இடலாம்.


நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 400க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி 


நண்பர்களே புதிய குரோமெ 5 பீட்டா பதிப்பு வெளிவந்திருக்கிறது அதை தரவிறக்க இங்கே செல்லுங்கள் புதிய பீட்டா பதிப்பில் தேவையில்லாத ப்ளக் இன்ஸ் (Plug ins) களை நிறுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது.  அதை செய்ய உங்களிடம் புதிய குரோம் 5 பீட்டா பதிப்பு நிறுவி இருக்க வேண்டு. 

முதலில் உங்கள் குரோம் வலை உலாவியில் அட்ரஸ் பாரில் about:plugins என்று டைப் செய்து என்டர் தட்டவும்.



இப்பொழுது உங்கள் குரோம் பிரவுசரில் நிறுவி உள்ள அனைத்து பிளக் இன்களும் காட்டப்படும்.  அனைத்து பிளக் இன்களுக்கும் கீழே Disabled என்ற பட்டந் இருக்கும் அதை கிளிக் செய்வதுன் மூலம் நிறுத்தி வைக்கலாம். வேண்டும் என்கிற பொழுது இதே போல சென்று Enabled செய்து கொள்ளுங்கள்.


நிறைய நண்பர்கள் போட்டோஷாப் கற்றுக் கொள்வதற்கு சிரமமாக இருக்கிறது என்கிறார்கள்.  இதை நிறைய பணம் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது எனவும் இதனால் போட்டோஷாப்பிற்கு பதில் வேறு ஏதும் மென்பொருள் இருக்கிறதா போட்டோஷாப் வேலைகள் அனைத்தும் செய்ய  என்று கேட்கிறார்கள் அவர்களுக்காக ஒரு இலவச போட்டோஷாப் போன்ற ஒரு மென்பொருள்  இதன் பெயர் ஜோனர் போட்டோ ஸ்டூடியோ.

இந்த மென்பொருள் மூலம் செய்யக்கூடிய வேலைகள் சிலவற்றை பட்டியலிடுகிறேன்.

டேப் முறையில் படங்களை பார்க்கலாம்.

உங்கள் புகைப்படங்கள் எந்த ஒரு வன்பொருளிலிருந்தும் நேரடியாக இறக்கிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு டிஜிட்டல் கேமாரவில் இருந்து நேரடியாக இந்த மென்பொருள் மூலம் படங்களை இறக்கி எடிட் செய்யலாம்.

உங்கள் போட்டோவில் Exif மற்றும் Meta டேட்டாக்களை எடிட் செய்யலாம்.

கூகிள் எர்த்திற்கு GPS கோப்பாக Import மற்றும் Export செய்ய முடியும்.

தேடு பொறி மிகவும் புகைப்படங்களை வேகமாக தேடி தரும்.

White Balance மற்றும் Satuaration போன்றவற்றை அட்ஜஸ்ட் செய்ய முடியும்.

ரெட் ஐ மற்றும் கிளோன் ஸ்டாம் உபயோகபடுத்த முடியும் இந்த மென்பொருளில்.

போட்டோ கோப்புகளை வேறு வகை கோப்பாக மாற்றிக் கொள்ளலாம்.

நீங்கள் எடிட் செய்த போட்டோக்களை பிளிக்கர் மற்றும் பேஸ்புக் தளங்களுக்கு நேரடியாக தரவேற்றலாம்.


விதவிதமான காலண்டரில் உங்களுக்கு பிடித்த  புகைப்படங்கள் அலல்து உங்கள் குடும்ப புகைப்படங்களை இணைக்கலாம்.

பழைய புகைப்படங்களை புதிய புகைப்படங்களாக மாற்றலாம்.


இதனுடன் ஒரு உதவிக் கையேடும் உள்ளது.

மென்பொருள் தரவிறக்கச் சுட்டி

இது விண்டோஸ் எக்ஸ்பி/விஸ்டா/7 (32Bit / 64 Bit) போன்றவற்றில் மட்டுமே இயங்கும்.  விண்டோஸ் 2000ல் இயங்காது.

குறைந்தபட்சம் 512எம்பி நினைவகம் வேண்டும்

ப்ரோஸஸர் 300 MHZ குறைந்தபட்சம் இருக்க வேண்டும்


நம் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு நண்பர் சைவகொத்துபரோட்டா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி சைவகொத்துபரோட்டா அவர்களுக்கும் வலைச்சரத்தின் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி   அந்த பதிவின் சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

இலவச ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் மற்றும் சில சிறு மென்பொருட்கள்


ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி 

நண்பர்களே தொடர்ந்து பல வேலைகளின் நடுவே இந்த பதிவு எழுத காரணம் நம் நண்பர்களுக்கு புதிய மென்பொருள்களை அறிமுகப்படுத்த வேண்டும் அதன் மூலம் நம் தமிழ் மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என்பதே. ஆகையால் உங்கள் பெரும்ஆதரவை தர வேண்டுகிறோம். நன்றி

நண்பர்கள் அனைவருக்கும் உழைப்பாளிகள் தின வாழ்த்துக்கள்.



ஒரு ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் இருந்தால் எவ்வளவு சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா. இதோ இருக்கிறது ஒரு ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர். இதன் பெயர் ஏவிஎஸ் வீடியோ எடிட்டர்.

இதன் சிறப்பம்சங்கள்.

சுலபமாக ஒரு வீடியோவினை கட் செய்தல், இணைத்தல், பிரித்தல் மற்றும் தலைகீழ் வீடியோவினை திருப்புதல் (Rotate) செய்தல் போன்ற வேலையினை எளிதாக செய்ய முடியும்.


ஒரு வீடியோவினில் உள்ள ஒலி உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் அந்த ஒலியை நீக்கி விட்டு உங்களுக்கு பிடித்த ஒலியினை சேர்க்கலாம்.

உங்களுடைய ஹேண்டிகேம் மற்றும் அனைத்து வீடியோவினையும் ஏற்றுக் கொள்ளும்.

HD மற்றும் Blue Ray வீடியோவினையும் எடிட் செய்ய முடியும்.


இது போல் பலவகையான வேலைகள் செய்யலாம்.

இது ஆதரிக்கும் கோப்பு வகைகள் அதிகமாக இருப்பதால் நேரடியாக இங்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள் ஆதரிக்கும் கோப்புகள் சுட்டி

இது விண்டோஸ் 7ம் ஆதரிக்கிறது.

தரவிறக்க








உங்கள் கணிணியை ரீஸ்டார்ட் செய்ய ஷட்டவுண் செய்ய ஹைபர்னேட் செய்ய ஒவ்வொரு முறையும் ஸ்டார் மெனு கிளிக் செய்து பின்னர் ஷட்டவுன் ஐகான் செய்த பிறகு ஷட்டவுன் ஐகானை இன்னொரு முறை கிளிக் செய்தால் மட்டுமே ஷட் டவுன் ஆகும்.  இத்தனை கிளிக் பதில் ஒரு டபுள் கிளிக் செய்வதின் மூலம் ஷட்டவுன் மற்றும் ரீஸ்டார்ட், ஹைபர்னேட் செய்ய இந்த மென்பொருள் உதவும் உங்களுக்கு. சுட்டி

இந்த மென்பொருளின் அளவு வெறும் 556 கேபி மட்டுமே.


நேரம் பார்க்க இந்த மென்பொருள் இதில் வித்தியாசம் நாம் தரவிறக்கும் பொழுது எப்படி இருக்குமோ அது போல காட்டும். தரவிறக்க சுட்டி
இது விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ல் மட்டுமே வேலை செய்யும்.

டாட் நெட் நிறுவியிருக்க வேண்டும்.  டாட் நெட் தரவிறக்க சுட்டி


உபுண்டு புதிய பதிப்பு 10.4 இன்று அதிகாரபூர்வமாக இன்று வெளியிடப்பட்டது. புதிய பதிப்பின் பெயர் Ubuntu 10.04 LTS (Lucid Lynx) இலவசமாக தரவிறக்க கீழே செல்லுங்கள்.



டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் பதிப்பை தரவிறக்க இங்கு செல்லவும் சுட்டி

நோட்புக் பதிப்பை தரவிறக்க இங்கு செல்லவும் சுட்டி

சர்வர் பதிப்பை தரவிறக்க இங்கு செல்லவும்  சுட்டி

ஒரு பைசா இல்லாமல்இலவசமாக நம் வீட்டிற்கே உபுண்டு சிடி பெற்றிட இங்கு செல்லவும்.  சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை