நண்பர்களே வீடியோவை எடிட் செய்ய எத்தனை இலவச மென்பொருள் இருந்தாலும் தொழில்ரீதியாக வீடியோ எடிட் செய்பவர்களுக்கு சில ப்ரொபசனல் மென்பொருட்கள்தான் பிடிக்கும்.. இன்று நான் அறிமுகப்படுத்தும் மென்பொருள் வீடியோவை எடிட் செய்யக் கூடிய மென்பொருள் MAGIX Movie Edit Pro 15 இந்த மென்பொருள் வீடியோ மற்றும் படங்கள் புகைப்படங்கள் போன்றவற்றை எடிட் செய்யக்கூடியது. திரையரங்குகிளில் காணக்கூடிய திரைப்படங்கள் எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ அந்த தெளிவை வீடியோக்களில் கொண்டு வர முடியும் இதன் மூலம் படங்களை திரையரங்கு தரத்தை வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சிகளில் காண முடியும்.
இதில் தனியாக சப் டைட்டில்கள் இணைக்க முடியும். உங்கள் ஹேண்டி கேம் மற்றும் டேப்களில் உள்ள படங்களை டிவிடியாக மாற்றி டிவிடி மற்றும் ப்ளூ ரே டிவிடியாக எரிக்க( Burn) முடியும். மிக உயர்ந்த தொழில்நுட்பம் இந்த மென்பொருளில் உபயோகபடுத்தப்பட்டிருக்கிறது. இந்த மென்பொருள் கையாள்வதற்கு மிகவும் எளிமையானது. வீடியோ எடிட்டிங் தெரியாதவர்கள் கூட இதை உபயோகப்படுத்த முடியும். மென்பொருள்
தரவிறக்க சுட்டிசட்டரீதியான ஆபிஸ் ரெகவரி மென்பொருள் ஏப்ரல் 10, 2010 உடன் முடிகிறது. புதிய வாசகர்கள் மற்றும் தரவிறக்காத நண்பர்கள் அனைவரும் உடனே தரவிறக்கிக் கொள்ளவும். இதுகுறித்த நமது முந்தைய பதிவு
உங்கள் இணையத்தின் வேகத்தை அறிய கீழ்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
Airtel பயனாளர்கள்
Tata Indicom பயனாளர்கள்
Bsnl பயனாளர்கள்
எந்த பயனாளர்களுக்கும்
எந்த பயனாளர்களுக்கும்
மைக்ரோசாப்ட் ஆபிஸ் முகப்பை போன்ற இருக்கும் ஒரு ஆடியோ மென்பொருள். இந்த மென்பொருள் எல்லாமே செய்யக்கூடியது. பாடல்கள் ப்ளே செய்யும். பாடல்களை எடிட் செய்யலாம். ஒரு இசை மேனஜராக பயன்படுத்தலாம். நம்மிடம் உள்ள பாடல்களை கொண்டு ஆடியோ சிடி தயாரிக்கலாம். ஆன்லைன் ரேடியோ கேட்கலாம்.
இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்பு வடிவங்கள்
MP3, WMA, Wave, MP1, MP2, MP4, AIFF, OGG, M4A, M4V, M4P, AAC, AC3, APE, TTA, OFR, SPX, FLAC. CDA
இலவச தொகுப்பாக சில ஆல்பங்களை அமேசான் வலைத்தளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.
» Read More...
இந்த பதிவு என்னுடைய 351வது பதிவு இதுவரை என்னை எழுத வைத்த என் குருநாதர் பிகேபி அவர்களுக்கும் அனைத்து பதிவர்களுக்கும் நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் திரட்டிகளுக்கும் பத்திரிகைகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி
நண்பர்களே கூகிள் டாக்ஸில் கோப்புகள் தரவேற்ற பிரவுஸரை திறந்து அதன் பிறகு கூகிள் டாக்ஸ் தளத்தில் நுழைந்து பிறகு நம் பெயர் கடவுச் சொல் கொடுத்த பிறகு Upload தேர்ந்தெடுத்த பின்னர்தான் நம் கோப்பை தரவேற்ற இயலும். அதற்கு பதில் இந்த மென்பொருளை தரவிறக்கி இந்த மென்பொருளில் உங்கள் கூகிள் நுழைவுப் பெயர் கடவுச்சொல் கொடுத்து விட்டு Upload அல்லது Drag & Drop முறையிலும் தரவேற்றுங்கள். இது நேரடியாக உங்கள் கோப்புகளை உங்கள் கூகிள் டாக்ஸில் தரவேற்றப்பட்டிருக்கும். மென்பொருள்
சுட்டி
கூகிள் பிக்காசவில் இருந்து கோப்புகளை தரவிறக்க இந்த மென்பொருளில் அதனுடைய RSS Feed முகவரி கொடுத்தால் போதும் அந்த RSS Feedல் உள்ள புகைப்படங்களை தரவிறக்கி கொடுத்து விடும். மென்பொருள்
சுட்டி இது மிகவும் எளிய வழி உங்களுக்கு.
இப்பொழுது கிரிக்கேட் சீசன் என்பதால் நம் தொலைக்காட்சியில் மிகவும் வோடாபோனின் ஜு ஜு வின் டெஸ்க்டாப் ஸ்கோர்கார்ட் மென்பொருள் இங்கே
சுட்டி இதில் எந்த ஒரு பேட்ஸ் மேனாவது நான்கு ரன் அடித்தால் எழுந்து ஆடுவதும் அவுட் ஆனால் அழுவதும் மிகவும் கலக்கலாக இருக்கிறது.
ஒரே மாதிரி இரண்டு படங்கள் உங்கள் கணினியில் நிறைய உள்ளதா??? இதை எவ்வாறு கண்டுபிடித்து நீக்குவது அதற்கு இந்த மென்பொருள் உதவும் உங்களுக்கு. இந்த மென்பொருளின் அளவு வெறும் 656 கேபி மட்டுமே.
மேலுள்ள படத்தில் உள்ள மஞ்சள் கலரில் உள்ள போல்டர் ஐகானை தேர்ந்தெடுத்து எந்த போல்டரை ஸ்கேன் செய்ய வேண்டும் என்று கொடுங்கள். பிறகு பக்கத்தில் உள்ள பச்சைக் கலர் ப்ளே பட்டனை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு இப்பொழுது இரண்டும் ஒரேமாதிரி உள்ள புகைப்படங்கள் காட்டப்படும். அதில் தேவையானவை தேர்ந்தெடுத்துக் கொண்டு நீக்கி விடுங்கள் முடிந்தது. இனி உங்கள் கணினியில் ஒரே மாதிரியான இரண்டு புகைப்படங்கள் இருக்காது. மென்பொருள்
சுட்டி
இவ்வளவு பயனுள்ள மென்பொருளை படித்து தரவிறக்கிய நீங்கள் எனக்காக ஒரு ஒட்டு போடமாட்டிங்களா என்ன??
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே நமக்கு தேவையான வலை உலாவிகளை தரவிறக்க நேரடியாக அந்த தளத்திற்கு சென்று அங்கு டவுண்லோடு பிரிவிக்கு சென்ற பிறகே தரவிறக்க முடியும்.
» Read More...