நண்பர்களே மைக்ரோசாப்ட் வேர்டில் நேரடியாக ஒரு வார்த்தையை Capital Letter & Small Letter ஆக மாற்ற முதலில் அந்த வார்த்யை தேர்ந்தெடுத்து ஷிப்ட் + எப்3 ( Shift + F3 ) அழுத்தினால் போதும் இது போல ஒரு பத்தி ஒரு பக்கத்தையும் மாற்ற உபயோகப்படுத்தலாம்.
உங்கள் கணிணியில் அன்றைய வானிலையை தெரிந்து கொள்ள என்ன செய்வோம். கூகிளில் தேடுவொம் பிறகு அதில் எந்த நாட்டில் எந்த மாநிலத்தில் என்று தேர்வு செய்வோம். பிறகுதான் நமக்கு அன்றைய வானிலை தெரிய வரும். இதற்கு இந்த சுட்டியை புக்மார்க் செய்து கொள்ளுங்கள். சுட்டி இது எப்படி செயல்படுகிறது என்றால் உங்களுடைய ஐபியை அடிப்படையாக வைத்து நீங்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அந்த இடத்தின் வானிலையை காட்டுகிறது. உங்களுக்கு குறிப்பிட்ட இடத்தின் வானிலை வேண்டுமானாலும் இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம். அன்றைய இரவு எப்படி இருக்கும் என்றும் இந்த தளம் மேகமூட்டம் அதிகமாக இருக்குமா அல்லது குறைவாக இருக்குமா என்றும் தெரிவிக்கிறது. இந்த தளம் செல்ல சுட்டி
நீங்கள் ஒரு வீடியோ கோப்பு தரவிறக்கும் பொழுது அதை பார்க்க முடியாது அது முழுவதும் தரவிறக்கிய பிறகே பார்க்க முடியும். நீங்கள் தரவிறக்கும் வீடியோ சரியானதுதான என்று தரவிறக்கும் பொழுதே ப்ளே செய்து பார்க்க இந்த மென்பொருள் உபயோகப்படுகிறது. சுட்டி
இந்த மென்பொருள் மூலம் வீடியோ தரவிறக்கும் பொழுது பார்ப்பதால் தரவிறக்கும் செயல் பாதிக்கப்படாது.
இந்த மென்பொருள் P2P மற்றும் FTP தளங்களில் சோதிக்கப்பட்டது.
இது முழுவதும் இலவசம்.
ஏமாற்றும் அடாவடிக் கும்பல்
இதை என்ன வென்று சொல்வது இதற்கு ஒரு பதில் எங்கிருந்து கிடைக்கும். இதை செய்ய போவது யார்? எங்கு சொல்வது? நண்பர்களே ஐந்தாம் தேதி காலை வெளியூர் செல்வதற்காக சென்னை சிஎம்பிடி CMBT Bus Stand வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் கொடுத்த சீட்டு.நிறைய பொது மக்கள் இது போல ஏமாற்றம் அடைகின்றனர். அத்துடன் நேரம் அதிகமான காசு மட்டும் வாங்குகிறார்கள். அதற்கு சீட்டு கொடுப்பதில்லை இதற்கெலாம். யார் காரணம். அத்துடன் இந்த சீட்டில் குத்தகை எடுத்தவர் பெயரும் இல்லை அப்படியானால் இதை அரசே நடத்துகிறதா? அப்படி என்றால் இதனுடைய அரசாங்கத்திற்கு செல்கிறதா? இதுவரை ட்ராபிக் ராமசாமி கண்களில் இது தெரியவில்லை அவருக்கு தெரிந்திருந்தால் ஒரு பொது மன நல வழக்கு போட்டிருப்பார்????? பார்ப்போம் நிறைய நல்ல விஷயங்கள் பதிவர்களிடம் இருந்து நடப்பதால் இதற்கு ஒரு வழி காட்டுங்கள் பதிவர்களிடம் இருந்து என்ன பதில் வருகிறது. உங்கள் பதிலில்தான் இதை எப்படி முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று யோசிப்பேன்....
முடிந்தால் ஒரு பிரதி எடுத்து உங்கள் வலைப்பதிவில் பிரசுரிக்கவும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...